பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
poruḷalla vaṟṟaip poruḷeṉṟu uṇarum maruḷāṉām māṇāp piṟappu.
From the delusion of taking vanities for the Reality a man cometh by a life of sorrow.
அதிகாரம் 36 · மெய்யுணர்தல்
meyyuṇartal
Kurals 351–360, on realisation of the truth.
10 versesTamil with translation
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
poruḷalla vaṟṟaip poruḷeṉṟu uṇarum maruḷāṉām māṇāp piṟappu.
From the delusion of taking vanities for the Reality a man cometh by a life of sorrow.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
iruḷnīṅki iṉpam payakkum maruḷnīṅki mācaṟu kāṭci yavarkku.
Behold the man who is freed from delusion and who hath an unclouded vision : darkness ceaseth for him and joy cometh unto him.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.
aiyattiṉ nīṅkit teḷintārkku vaiyattiṉ vāṉam naṇiya tuṭaittu.
Behold the man who hath freed himself from uncertainties and who hath realised the Truth : heaven is nearer to him than the earth.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
aiyuṇarvu eytiyak kaṇṇum payamiṉṟē meyyuṇarvu illā tavarkku.
Though risen to human birth, nought is gained if the soul realiseth not the Truth.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
epporuḷ ettaṉmait tāyiṉum apporuḷ meypporuḷ kāṇpatu aṟivu.
To separate the true from the false in everything, whatever its nature may be, that is the part of a wise understanding.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.
kaṟṟīṇṭu meypporuḷ kaṇṭār talaippaṭuvar maṟṟīṇṭu vārā neṟi.
Behold the man who hath studied deeply and hath realised the Truth : he shall enter the path that leadeth not again into this world.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ōrttuḷḷam uḷḷatu uṇariṉ orutalaiyāp pērttuḷḷa vēṇṭā piṟappu.
Verily those that have meditated upon and attained to the Truth need not think at all of future incarnations.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.
piṟappeṉṉum pētaimai nīṅkac ciṟappeṉṉum cemporuḷ kāṇpatu aṟivu.
It is the part of Wisdom to desire to escape the folly called birth, and to aim at realising the Supreme and the Good.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.
cārpuṇarntu cārpu keṭaoḻukiṉ maṟṟaḻittuc cārtarā cārtaru nōy.
Behold the man who understandeth the means of his salvation and laboureth to conquer all attachments: the ills that he is yet to suffer depart from him.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
kāmam vekuḷi mayakkam ivaimūṉṟaṉ nāmam keṭakkeṭum nōy.
As desire and anger and delusion leave a man, his ills also follow their pace and slowly melt away.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).