அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
aṟivaṟṟaṅ kākkuṅ karuvi ceṟuvārkkum uḷḷaḻikka lākā araṇ.
The understanding is an armour against all surprise : it is a fortress which even enemies cannot storm.
அதிகாரம் 43 · அறிவு உடைமை
aṟivu uṭaimai
Kurals 421–430, on understanding.
10 versesTamil with translation
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
aṟivaṟṟaṅ kākkuṅ karuvi ceṟuvārkkum uḷḷaḻikka lākā araṇ.
The understanding is an armour against all surprise : it is a fortress which even enemies cannot storm.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.
ceṉṟa iṭattāl celaviṭā tītorīi naṉṟiṉpāl uyppa taṟivu.
It is the understanding that curbeth the senses from roving about, keepeth them from evil, and directeth them towards the Good.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
epporuḷ yāryārvāyk kēṭpiṉum apporuḷ meypporuḷ kāṇpa taṟivu.
To separate the true from the false in every utterance, whoever it be that speaketh, that is the part of a wise understanding.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.
eṇporuḷa vākac celaccollit tāṉpiṟarvāy nuṇporuḷ kāṇpa taṟivu.
What he speaketh, the wise man speaketh so as to be understood by all : and from the lips of others he gathereth their subtle meanings.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு.
ulakam taḻīiya toṭpam malartalum kūmpalum illa taṟivu.
The wise man is sociable with all the world : and his temper is ever even, expanding not nor contracting to excess.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.
evva tuṟaivatu ulakam ulakattōṭu avva tuṟaiva taṟivu.
It is a part of wisdom to conform to the ways of the world.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.
aṟivuṭaiyār āva taṟivār aṟivilār aḵtaṟi kallā tavar.
The man of understanding knoweth what is coming : but the fool foreseeth not what is before.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
añcuva tañcāmai pētaimai añcuvatu añcal aṟivār toḻil.
It is folly to rush headlong into danger : it is the part of the wise to fear what ought to be feared.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
etiratāk kākkum aṟiviṉārk killai atira varuvatōr nōy.
Behold the man of foresight who is armed for every contingency: he will never know the blow that causeth trembling.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
aṟivuṭaiyār ellā muṭaiyār aṟivilār eṉṉuṭaiya rēṉum ilar.
He that hath understanding hath everything: but the fool though he possess everything hath nothing.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).