ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
oṟṟum uraicāṉṟa nūlum ivaiyiraṇṭum teṟṟeṉka maṉṉavaṉ kaṇ.
Let the prince understand that Political Science and his Intelligence Corps are the eyes wherewith he seeth.
அதிகாரம் 59 · ஒற்றாடல்
oṟṟāṭal
Kurals 581–590, on service of intelligence.
10 versesTamil with translation
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
oṟṟum uraicāṉṟa nūlum ivaiyiraṇṭum teṟṟeṉka maṉṉavaṉ kaṇ.
Let the prince understand that Political Science and his Intelligence Corps are the eyes wherewith he seeth.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.
ellārkkum ellām nikaḻpavai eññāṉṟum vallaṟital vēntaṉ toḻil.
It is the duty of the prince to learn betimes everything that befalleth every man and every day.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்.
oṟṟiṉāṉ oṟṟip poruḷteriyā maṉṉavaṉ koṟṟaṅ koḷakkiṭantatu il.
Behold the prince that learneth not the happenings about him by means of scouts and spies : conquests are not for him.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
viṉaiceyvār tamcuṟṟam vēṇṭātār eṉṟāṅku aṉaivaraiyum ārāyvatu oṟṟu.
The prince shalt set spies to watch closely the officers of the realm, his own kindred, and his enemies.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.
kaṭāa uruvoṭu kaṇṇañcātu yāṇṭum ukāamai vallatē oṟṟu.
Behold the man who can wear an unsuspicious appearance, who will not know confusion before any man, and who can guard his secrets from ever leaking out : he is the proper man for the work of Intelligence.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று.
tuṟantār paṭivatta rāki iṟantārāyntu eṉceyiṉum cōrvilatu oṟṟu.
Spies and scouts shall disguise themselves as ascetics and holy men, and their investigation shall be thorough : and whatever is done them, they shall not let out their secrets.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.
maṟaintavai kēṭkavaṟ ṟāki aṟintavai aiyappāṭu illatē oṟṟu.
Behold the man who can draw out secrets from others and whose information is ever unconfused and clear: he is the man for the work of intelligence.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
oṟṟoṟṟit tanta poruḷaiyum maṟṟumōr oṟṟiṉāl oṟṟik koḷal.
Even the information that hath been obtained by a spy shall be tested by that of another.
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.
oṟṟeṟ ṟuṇarāmai āḷka uṭaṉmūvar coṟṟokka tēṟap paṭum.
See that no spy knoweth the others engaged in the same work : when three reports agree, thou mayest give credence to them.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.
ciṟappaṟiya oṟṟiṉkaṇ ceyyaṟka ceyyiṉ puṟappaṭuttāṉ ākum maṟai.
Reward not openly thy officers of Intelligence: for if thou do, thou merely lettest out thy own secret.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).