Skip to content

திருமுறை 1 — திருக்கடைமுடி · திருக்கடைமுடி

tirukkaṭaimuṭi

tirukkaṭaimuṭi

tirukkaṭaimuṭi, from book 1 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 1 of the Tirumurai.

அருத்தனை அறவனை அமுதனைநீர் விருத்தனைப் பாலனை வினவுதிரேல் ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங் கருத்தவன் வளநகர் கடைமுடியே.

aruttaṉai aṟavaṉai amutaṉainīr viruttaṉaip pālaṉai viṉavutirēl oruttaṉai yallatiṅ kulakamēttuṅ karuttavaṉ vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும் அரைபொரு புலியதள் அடிகளிடந் திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர் கரைபொரு வளநகர் கடைமுடியே.

tiraiporu tirumuṭi tiṅkaḷvimmum araiporu puliyataḷ aṭikaḷiṭan tiraiyoṭu nuraiporu teṇcuṉainīr karaiporu vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

ஆலிள மதியினொ டரவுகங்கை கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி ஏலநன் மலரொடு விரைகமழுங் காலன வளநகர் கடைமுடியே.

āliḷa matiyiṉo ṭaravukaṅkai kōlaveṇ ṇīṟṟaṉait toḻutiṟaiñci ēlanaṉ malaroṭu viraikamaḻuṅ kālaṉa vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி யரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடைமுடியே.

koyyaṇi naṟumalark koṉṟaiyantār maiyaṇi miṭaṟuṭai maṟaiyavaṉūr paiyaṇi yaravoṭu māṉmaḻuvāḷ kaiyaṇi pavaṉiṭaṅ kaṭaimuṭiyē.

Report an error

மறையவன் உலகவன் மாயமவன் பிறையவன் புனலவன் அனலுமவன் இறையவன் எனவுல கேத்துங்கண்டங் கறையவன் வளநகர் கடைமுடியே.

maṟaiyavaṉ ulakavaṉ māyamavaṉ piṟaiyavaṉ puṉalavaṉ aṉalumavaṉ iṟaiyavaṉ eṉavula kēttuṅkaṇṭaṅ kaṟaiyavaṉ vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

படவர வேரல்குற் பல்வளைக்கை மடவர லாளையொர் பாகம்வைத்துக் குடதிசை மதியது சூடுசென்னிக் கடவுள்தன் வளநகர் கடைமுடியே.

paṭavara vēralkuṟ palvaḷaikkai maṭavara lāḷaiyor pākamvaittuk kuṭaticai matiyatu cūṭuceṉṉik kaṭavuḷtaṉ vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல் அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங் கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர் கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

poṭipulku mārpiṉiṟ puripulkunūl aṭipulku paiṅkaḻal aṭikaḷiṭaṅ koṭipulku malaroṭu kuḷircuṉainīr kaṭipulku vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

நோதல்செய் தரக்கனை நோக்கழியச் சாதல்செய் தவனடி சரணெனலும் ஆதர வருள்செய்த அடிகளவர் காதல்செய் வளநகர் கடைமுடியே.

nōtalcey tarakkaṉai nōkkaḻiyac cātalcey tavaṉaṭi caraṇeṉalum ātara varuḷceyta aṭikaḷavar kātalcey vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

அடிமுடி காண்கிலர் ஓரிருவர் புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச் சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங் கடைமுடி யதனயல் காவிரியே.

aṭimuṭi kāṇkilar ōriruvar puṭaipulki yaruḷeṉṟu pōṟṟicaippac caṭaiyiṭaip puṉalvaitta caturaṉiṭaṅ kaṭaimuṭi yataṉayal kāviriyē.

Report an error

மண்ணுதல் பறித்தலு மாயமிவை எண்ணிய காலவை யின்பமல்ல ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

maṇṇutal paṟittalu māyamivai eṇṇiya kālavai yiṉpamalla oṇṇuta lumaiyaiyor pākamvaitta kaṇṇutal vaḷanakar kaṭaimuṭiyē.

Report an error

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர் சென்றடை கடைமுடிச் சிவனடியை நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன இன்றமி ழிவைசொல இன்பமாமே.

poṉṟikaḻ kāvirip porupuṉalcīr ceṉṟaṭai kaṭaimuṭic civaṉaṭiyai naṉṟuṇar ñāṉacam pantaṉcoṉṉa iṉṟami ḻivaicola iṉpamāmē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).