Skip to content

திருமுறை 2 — திருக்கேதீச்சரம் · திருக்கேதீச்சரம்

tirukkētīccaram

tirukkētīccaram

tirukkētīccaram, from book 2 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 2 of the Tirumurai.

Invocation

2.107.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரியம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளுங் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.

virutu kuṉṟamā mēruvil nāṇara vāvaṉal eriyampāp porutu mūveyil ceṟṟavaṉ paṟṟiniṉ ṟuṟaipati yennāḷuṅ karutu kiṉṟavūr kaṉaikaṭaṟ kaṭikamaḻ poḻilaṇi mātōṭṭaṅ karuta niṉṟakē tīccaraṅ kaitoḻak kaṭuviṉai yaṭaiyāvē.

Report an error

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈட மாவது இருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம் கேடி லாதகே தீச்சரங் கைதொழக் கெடுமிடர் வினைதானே.

pāṭal vīṇaiyar palapala caritaiyar erutukait tarunaṭṭam āṭal pēṇuvar amararkaḷ vēṇṭanañ cuṇṭiruḷ kaṇṭattar īṭa māvatu iruṅkaṭaṟ karaiyiṉil eḻiltikaḻ mātōṭṭam kēṭi lātakē tīccaraṅ kaitoḻak keṭumiṭar viṉaitāṉē.

Report an error

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக் குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.

peṇṇor pākattar piṟaitavaḻ caṭaiyiṉar aṟaikaḻal cilampārkkac cuṇṇa mātarit tāṭuvar pāṭuvar akantoṟum iṭupiccaik kuṇṇa lāvatōr iccaiyi ṉuḻalpavar uyartaru mātōṭṭat taṇṇal naṇṇukē tīccaram aṭaipavark karuviṉai yaṭaiyāvē.

Report an error

பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே.

poṭikoḷ mēṉiyar puliyata ḷaraiyiṉar viritaru karattēntum vaṭikoḷ mūvilai vēliṉar nūliṉar maṟikaṭal mātōṭṭat taṭika ḷātarit tiruntakē tīccaram parintacin taiyarāki muṭikaḷ cāyttaṭi pēṇaval lārtammēl moytteḻum viṉaipōmē.

Report an error

நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம் மடைந்தவர்க் கருளீய வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத் தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.

nalla rāṟṟavum ñāṉanaṉ kuṭaiyartam maṭaintavark karuḷīya vallar pārmicai vāṉpiṟap piṟappilar malikaṭal mātōṭṭat tellai yilpukaḻ entaikē tīccaram irāppakal niṉaintētti allal ācaṟut taraṉaṭi yiṇaitoḻum aṉparām aṭiyārē.

Report an error

பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம் மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக் கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.

pēḻai vārcaṭaip peruntiru makaḷtaṉaip poruntavait torupākam māḻai yaṅkayaṟ kaṇṇipā laruḷiya poruḷiṉar kuṭivāḻkkai vāḻai yampoḻil mantikaḷ kaḷippuṟa maruviya mātōṭṭak kēḻal veṇmarup paṇintanīḷ mārparkē tīccaram piriyārē.

Report an error

பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கை கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில் வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை நடமிடு மாதோட்டந் தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே தீச்சர மதுதானே.

paṇṭu nālvaruk kaṟamurait taruḷippal lulakiṉil uyirvāḻkkai kaṇṭa nātaṉār kaṭaliṭaṅ kaitoḻak kātalit tuṟaikōyil vaṇṭu paṇceyu māmalarp poḻilmaññai naṭamiṭu mātōṭṭan toṇṭar nāṭoṟun tuticeya aruḷceykē tīccara matutāṉē.

Report an error

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்டோ ள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத் துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.

teṉṉi laṅkaiyar kulapati malainalin teṭuttavaṉ muṭitiṇṭō ḷ taṉṉa laṅkeṭa aṭarttavaṟ karuḷceyta talaivaṉār kaṭalvāyap poṉṉi laṅkiya muttumā maṇikaḷum poruntiya mātōṭṭat tuṉṉi yaṉpoṭum aṭiyava riṟaiñcukē tīccarat tuḷḷārē.

Report an error

பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும் மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித் தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.

pūvu ḷāṉumap porukaṭal vaṇṇaṉum puviyiṭan teḻuntōṭi mēvi nāṭiniṉ aṭiyiṇai kāṇkilā vittaka meṉṉākum māvum pūkamuṅ kataliyum neruṅkumā tōṭṭanaṉ ṉakarmaṉṉit tēvi taṉṉoṭun tiruntukē tīccarat tiruntaem perumāṉē.

Report an error

புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர் எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேலேன்மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.

putta rāyccila puṉaituki luṭaiyavar puṟaṉuraic camaṇātar etta rākiniṉ ṟuṇpava riyampiya ēḻaimai kēlēṉmiṉ matta yāṉaiyai maṟukiṭa uriceytu pōrttavar mātōṭṭat tattar maṉṉupā lāviyiṉ karaiyiṟkē tīccaram aṭaimiṉṉē.

Report an error

மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத் தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப் பாட லாயின பாடுமின் பத்தர்காள் பரகதி பெறலாமே.

māṭe lāmaṇa muraceṉak kaṭaliṉa tolikavar mātōṭṭat tāṭa lēṟuṭai aṇṇalkē tīccarat taṭikaḷai yaṇikāḻi nāṭu ḷārkkiṟai ñāṉacam pantaṉcol naviṉṟeḻu pāmālaip pāṭa lāyiṉa pāṭumiṉ pattarkāḷ parakati peṟalāmē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).