Skip to content

திருமுறை 1 — திருப்பனையூர் · திருப்பனையூர்

tiruppaṉaiyūr

tiruppaṉaiyūr

tiruppaṉaiyūr, from book 1 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 1 of the Tirumurai.

அரவச் சடைமேல் மதிமத்தம் விரவிப் பொலிகின் றவனூராம் நிரவிப் பலதொண் டர்கள்நாளும் பரவிப் பொலியும் பனையூரே.

aravac caṭaimēl matimattam viravip polikiṉ ṟavaṉūrām niravip palatoṇ ṭarkaḷnāḷum paravip poliyum paṉaiyūrē.

Report an error

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் உண்ணின் றுமகிழ்ந் தவனூராம் கண்ணின் றெழுசோ லையில்வண்டு பண்ணின் றொலிசெய் பனையூரே.

eṇṇoṉ ṟiniṉain tavartampāl uṇṇiṉ ṟumakiḻn tavaṉūrām kaṇṇiṉ ṟeḻucō laiyilvaṇṭu paṇṇiṉ ṟolicey paṉaiyūrē.

Report an error

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் மலரும் பிறையொன் றுடையானூர் சிலரென் றுமிருந் தடிபேணப் பலரும் பரவும் பனையூரே.

alarum meṟiceñ caṭaitaṉmēl malarum piṟaiyoṉ ṟuṭaiyāṉūr cilareṉ ṟumirun taṭipēṇap palarum paravum paṉaiyūrē.

Report an error

இடியார் கடல்நஞ் சமுதுண்டு பொடியா டியமே னியினானூர் அடியார் தொழமன் னவரேத்தப் படியார் பணியும் பனையூரே.

iṭiyār kaṭalnañ camutuṇṭu poṭiyā ṭiyamē ṉiyiṉāṉūr aṭiyār toḻamaṉ ṉavarēttap paṭiyār paṇiyum paṉaiyūrē.

Report an error

அறையார் கழல்மே லரவாட இறையார் பலிதேர்ந் தவனூராம் பொறையார் மிகுசீர் விழமல்கப் பறையா ரொலிசெய் பனையூரே.

aṟaiyār kaḻalmē laravāṭa iṟaiyār palitērn tavaṉūrām poṟaiyār mikucīr viḻamalkap paṟaiyā rolicey paṉaiyūrē.

Report an error

அணியார் தொழவல் லவரேத்த மணியார் மிடறொன் றுடையானூர் தணியார் மலர்கொண் டிருபோதும் பணிவார் பயிலும் பனையூரே.

aṇiyār toḻaval lavarētta maṇiyār miṭaṟoṉ ṟuṭaiyāṉūr taṇiyār malarkoṇ ṭirupōtum paṇivār payilum paṉaiyūrē.

Report an error

அடையா தவர்மூ வெயில்சீறும் விடையான் விறலார் கரியின்தோல் உடையா னவனெண் பலபூதப் படையா னவனூர் பனையூரே.

aṭaiyā tavarmū veyilcīṟum viṭaiyāṉ viṟalār kariyiṉtōl uṭaiyā ṉavaṉeṇ palapūtap paṭaiyā ṉavaṉūr paṉaiyūrē.

Report an error

இலகும் முடிபத் துடையானை அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல் உலகில் லுயிர்நீர் நிலமற்றும் பலகண் டவனூர் பனையூரே.

ilakum muṭipat tuṭaiyāṉai alalkaṇ ṭaruḷcey tavemmaṇṇal ulakil luyirnīr nilamaṟṟum palakaṇ ṭavaṉūr paṉaiyūrē.

Report an error

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் சிரமுன் னடிதா ழவணங்கும் பிரமன் னொடுமா லறியாத பரமன் னுறையும் பனையூரே.

varamuṉ ṉimakiḻn teḻuvīrkāḷ ciramuṉ ṉaṭitā ḻavaṇaṅkum piramaṉ ṉoṭumā laṟiyāta paramaṉ ṉuṟaiyum paṉaiyūrē.

Report an error

அழிவல் லமண ரொடுதேரர் மொழிவல் லனசொல் லியபோதும் இழிவில் லதொர்செம் மையினானூர் பழியில் லவர்சேர் பனையூரே.

aḻival lamaṇa roṭutērar moḻival laṉacol liyapōtum iḻivil latorcem maiyiṉāṉūr paḻiyil lavarcēr paṉaiyūrē.

Report an error

பாரார் விடையான் பனையூர்மேல் சீரார் தமிழ்ஞா னசம்பந்தன் ஆரா தசொன்மா லைகள்பத்தும் ஊரூர் நினைவா ருயர்வாரே.

pārār viṭaiyāṉ paṉaiyūrmēl cīrār tamiḻñā ṉacampantaṉ ārā tacoṉmā laikaḷpattum ūrūr niṉaivā ruyarvārē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).