திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
திருமுறை 4 — குறைந்த - திருநேரிசை · குறைந்த - திருநேரிசை
kuṟainta - tirunēricai
kuṟainta - tirunēricai, from book 4 of the Tirumurai.
10 passagesTamil with transliteration
Invocation
திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன் நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன் ஈச னேயோ இன்றுளேன் நாளை யில்லேன் என்செய்வான் தோன்றி னேனே.
veṉṟilēṉ pulaṉka ḷaintum veṉṟavar vaḷākan taṉṉuḷ ceṉṟilē ṉāta lālē cenneṟi yataṟkuñ cēyēṉ niṉṟuḷē tuḷumpu kiṉṟēṉ nīcaṉēṉ īca ṉēyō iṉṟuḷēṉ nāḷai yillēṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும் உற்றிலே னாத லாலே உணர்வுக்குஞ் சேய னானேன் பெற்றிலேன் பெருந்த டங்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன் எற்றுளேன் இறைவ னேநான் என்செய்வான் தோன்றி னேனே.
kaṟṟilēṉ kalaikaḷ ñāṉaṅ kaṟṟavar taṅka ḷōṭum uṟṟilē ṉāta lālē uṇarvukkuñ cēya ṉāṉēṉ peṟṟilēṉ perunta ṭaṅkaṇ pētaimār tamakkum pollēṉ eṟṟuḷēṉ iṟaiva ṉēnāṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணர மாட்டேன் மூட்டிநான் முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன் பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை ஈட்டினேன் களைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
māṭṭiṉēṉ maṉattai muṉṉē maṟumaiyai uṇara māṭṭēṉ mūṭṭināṉ muṉṉai nāḷē mutalvaṉai vaṇaṅka māṭṭēṉ pāṭṭiṉāy pōla niṉṟu paṟṟatām pāvan taṉṉai īṭṭiṉēṉ kaḷaiya māṭṭēṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன் உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே அரைக்கிடந் தசையு நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக் கிரைக்கிடைந் துருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.
karaikkaṭan tōta mēṟuṅ kaṭalviṭa muṇṭa kaṇṭaṉ uraikkaṭan tōtu nīrmai yuṇarntilē ṉāta lālē araikkiṭan tacaiyu nākam acaippaṉē iṉpa vāḻkkaik kiraikkiṭain turuku kiṉṟēṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
செம்மைவெண் ணீறு பூசுஞ் சிவனவன் தேவ தேவன் வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக் கிம்மைநின் றுருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.
cemmaiveṇ ṇīṟu pūcuñ civaṉavaṉ tēva tēvaṉ vemmainōy viṉaikaḷ tīrkkum vikirtaṉuk kārva meyti ammainiṉ ṟaṭimai ceyyā vaṭivilā muṭivil vāḻkkaik kimmainiṉ ṟuruku kiṉṟēṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன் நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றி னேனே.
pēccoṭu pēccuk kellām piṟartamaip puṟamē pēcak kūccilē ṉāta lālē koṭumaiyai viṭumā ṟōrēṉ nāccoli nāḷum mūrtti naṉmaiyai yuṇara māṭṭēṉ ēccuḷē niṉṟu meyyē eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப் பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை ஈசனை அறிய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
tēcaṉait tēca mākun tirumālōr paṅkaṉ ṟaṉṉaip pūcaṉaip puṉitaṉ ṟaṉṉaip puṇarumpuṇ ṭarikat tāṉai nēcaṉai neruppaṉ ṟaṉṉai nivañcakat takaṉṟa cemmai īcaṉai aṟiya māṭṭēṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளந் திளைக்கின்ற முடியி னான்றன் திருவடி பரவ மாட்டா திளைக்கின்றே னிருமி யூன்றி என்செய்வான் தோன்றி னேனே.
viḷaikkiṉṟa viṉaiyai nōkki veṇmayir viravi mēlum muḷaikkiṉṟa viṉaiyaip pōka muyalkilēṉ iyala veḷḷan tiḷaikkiṉṟa muṭiyi ṉāṉṟaṉ tiruvaṭi parava māṭṭā tiḷaikkiṉṟē ṉirumi yūṉṟi eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து களைகணு மில்லேன் எந்தாய் காமரங் கற்று மில்லேன் தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த இளையனு மல்லேன் எந்தாய் என்செய்வான் தோன்றி னேனே.
viḷaivaṟi vilāmai yālē vētaṉaik kuḻiyi lāḻntu kaḷaikaṇu millēṉ entāy kāmaraṅ kaṟṟu millēṉ taḷaiyaviḻ kōtai nallār taṅkaḷō ṭiṉpa meyta iḷaiyaṉu mallēṉ entāy eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
வெட்டன வுடைய னாகி வீரத்தால் மலை யெடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைப்படக் கீதங் கேட்ட அட்டமா மூர்த்தி யாய ஆதியை ஓதி நாளும் எட்டனை எட்ட மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
veṭṭaṉa vuṭaiya ṉāki vīrattāl malai yeṭutta tuṭṭaṉait tuṭṭut tīrttuc cuvaippaṭak kītaṅ kēṭṭa aṭṭamā mūrtti yāya ātiyai ōti nāḷum eṭṭaṉai eṭṭa māṭṭēṉ eṉceyvāṉ tōṉṟi ṉēṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).