Skip to content

திருமுறை 5 — திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை · திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை

tirukkuraṅkāṭutuṟai - tirukkuṟuntokai

tirukkuraṅkāṭutuṟai - tirukkuṟuntokai

tirukkuraṅkāṭutuṟai - tirukkuṟuntokai, from book 5 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 5 of the Tirumurai.

Invocation

5.63.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப் புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான் தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக் குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.

iraṅkā vaṉmaṉat tārkaḷ iyaṅkumup puraṅkā vallaḻi yappoṭi yākkiṉāṉ taraṅkā ṭuntaṭa nīrppoṉṉit teṉkaraik kuraṅkā ṭutuṟaik kōlak kapāliyē.

Report an error

முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர் தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ் கொத்த லர்குரங் காடு துறையுறை அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.

mutti ṉaimaṇi yaippava ḷattoḷir totti ṉaiccuṭar cōtiyaic cōlaicūḻ kotta larkuraṅ kāṭu tuṟaiyuṟai atta ṉeṉṉaaṇ ṇittiṭ ṭiruntatē.

Report an error

குளிர்பு னற்குரங் காடு துறையனைத் தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந் தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.

kuḷirpu ṉaṟkuraṅ kāṭu tuṟaiyaṉait taḷirni ṟattaiyal paṅkaṉait taṇmati oḷiya ṉainniṉain tēṉukkeṉ uḷḷamun teḷivi ṉaitteḷi yatteḷin tiṭṭatē.

Report an error

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக் கணவன் காண்கலை ஞானிகள் காதலெண் குணவன் காண்குரங் காடு துறைதனில் அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.

maṇavaṉ kāṇmalai yāḷneṭu maṅkalak kaṇavaṉ kāṇkalai ñāṉikaḷ kātaleṇ kuṇavaṉ kāṇkuraṅ kāṭu tuṟaitaṉil aṇavaṉ kāṇaṉpu ceyyu maṭiyarkkē.

Report an error

ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் காலத் தானுயிர் போக்கிய காலினன் நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி கோலத் தான்குரங் காடு துறையனே.

ñālat tārtoḻu tēttiya naṉmaiyaṉ kālat tāṉuyir pōkkiya kāliṉaṉ nīlat tārmiṭaṟ ṟāṉveḷḷai nīṟaṇi kōlat tāṉkuraṅ kāṭu tuṟaiyaṉē.

Report an error

ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங் கூட்டி னான்குரங் காடு துறையனே.

āṭṭi ṉāṉmuṉ amaṇarō ṭeṉṟaṉaip pāṭṭi ṉāṉṟaṉa poṉṉaṭik kiṉṉicai vīṭṭi ṉāṉviṉai meyyaṭi yāroṭuṅ kūṭṭi ṉāṉkuraṅ kāṭu tuṟaiyaṉē.

Report an error

மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண் போத்தன் றானவள் பொங்கு சினந்தணி கூத்தன் றான்குரங் காடு துறையனே.

māttaṉ ṟāṉmaṟai yārmuṟai yāṉmaṟai ōttaṉ ṟārukaṉ ṟaṉṉuyi ruṇṭapeṇ pōttaṉ ṟāṉavaḷ poṅku ciṉantaṇi kūttaṉ ṟāṉkuraṅ kāṭu tuṟaiyaṉē.

Report an error

நாடி நந்தம ராயின தொண்டர்காள் ஆடு மின்னழு மின்தொழு மின்னடி பாடு மின்பர மன்பயி லும்மிடங் கூடு மின்குரங் காடு துறையையே.

nāṭi nantama rāyiṉa toṇṭarkāḷ āṭu miṉṉaḻu miṉtoḻu miṉṉaṭi pāṭu miṉpara maṉpayi lummiṭaṅ kūṭu miṉkuraṅ kāṭu tuṟaiyaiyē.

Report an error

தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் அன்ற வந்தக னையயிற் சூலத்தாற் கொன்ற வன்குரங் காடு துறையனே.

teṉṟal naṉṉeṭun tēruṭai yāṉuṭal poṉṟa veṅkaṉal poṅka viḻittavaṉ aṉṟa vantaka ṉaiyayiṟ cūlattāṟ koṉṟa vaṉkuraṅ kāṭu tuṟaiyaṉē.

Report an error

நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம் உற்ற நன்மொழி யாலருள் செய்தநற் கொற்ற வன்குரங் காடு துறைதொழப் பற்றுந் தீவினை யாயின பாறுமே.

naṟṟa vañceyta nālvarkku nallaṟam uṟṟa naṉmoḻi yālaruḷ ceytanaṟ koṟṟa vaṉkuraṅ kāṭu tuṟaitoḻap paṟṟun tīviṉai yāyiṉa pāṟumē.

Report an error

கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல் அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள் கொடுத்த வன்குரங் காடு துறையனே.

kaṭutta tērarak kaṉkayi laimmalai eṭutta tōḷtalai yiṟṟala ṟavviral aṭutta lumavaṉ iṉṉicai kēṭṭaruḷ koṭutta vaṉkuraṅ kāṭu tuṟaiyaṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).