திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
திருமுறை 6 — திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் · திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்
tiruppuṉkūr - tirunīṭūr - tiruttāṇṭakam
tiruppuṉkūr - tirunīṭūr - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.
10 passagesTamil with transliteration
Invocation
திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத் திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
piṟavātē tōṉṟiya pemmāṉ ṟaṉṉaip pēṇātār avartammaip pēṇā tāṉait tuṟavātē kaṭṭaṟutta cōti yāṉait tūneṟikkun tūneṟiyāy niṉṟāṉ ṟaṉṉait tiṟamāya etticaiyun tāṉē yākit tiruppuṉkūr mēviya civalō kaṉai niṟamā moḷiyāṉai nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
பின்றானும் முன்றானு மானான் றன்னைப் பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச் சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நின்றாய நீடூர் நிலாவி னானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
piṉṟāṉum muṉṟāṉu māṉāṉ ṟaṉṉaip pittarkkup pittaṉāy niṉṟāṉ ṟaṉṉai naṉṟāṅ kaṟintavarkkun tāṉē yāki nalviṉaiyun tīviṉaiyu māṉāṉ ṟaṉṉaic ceṉṟōṅki viṇṇaḷavun tīyā ṉāṉait tiruppuṉkūr mēviya civalō kaṉai niṉṟāya nīṭūr nilāvi ṉāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை இனியநினை யாதார்க் கின்னா தானை வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம் மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெல்லால் விளைகழனி நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
illāṉai evviṭattum uḷḷāṉ ṟaṉṉai iṉiyaniṉai yātārk kiṉṉā tāṉai vallāṉai vallaṭaintārk karuḷum vaṇṇam māṭṭātārk kettiṟattum māṭṭā tāṉaic cellāta cenneṟikkē celvip pāṉait tiruppuṉkūr mēviya civalō kaṉai nellāl viḷaikaḻaṉi nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக் கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப் பலவாய வேடங்கள் தானே யாகிப் பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச் சிலையாற் புரமெரித்த தீயா டியைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிலையார் மணிமாட நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
kalaiñāṉaṅ kallāmē kaṟpit tāṉaik kaṭunarakañ cārāmē kāppāṉ ṟaṉṉaip palavāya vēṭaṅkaḷ tāṉē yākip paṇivārkaṭ kaṅkaṅkē paṟṟā ṉāṉaic cilaiyāṟ purameritta tīyā ṭiyait tiruppuṉkūr mēviya civalō kaṉai nilaiyār maṇimāṭa nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை ஆக்காதே யாதொன்று மாக்கி னானை அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத் தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீக்காத பேரொளிசேர் நீடு ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
nōkkātē evvaḷavum nōkki ṉāṉai nuṇukātē yātoṉṟum nuṇuki ṉāṉai ākkātē yātoṉṟu mākki ṉāṉai aṇukātā ravartammai aṇukā tāṉait tēkkātē teṇkaṭalnañ cuṇṭāṉ ṟaṉṉait tiruppuṉkūr mēviya civalō kaṉai nīkkāta pēroḷicēr nīṭu rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த முடையானை முடைநாறும் புன்க லத்தில் ஊணலா வூணானை யொருவர் காணா உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச் சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
pūṇalāp pūṇāṉaip pūcāc cānta muṭaiyāṉai muṭaināṟum puṉka lattil ūṇalā vūṇāṉai yoruvar kāṇā uttamaṉai yoḷitikaḻum mēṉi yāṉaic cēṇulāñ ceḻumpavaḷak kuṉṟop pāṉait tiruppuṉkūr mēviya civalō kaṉai nīṇulā malarkkaḻaṉi nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
உரையார் பொருளுக் குலப்பி லானை ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப் புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப் புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத் திரையார் புனல்சேர் மகுடத் தானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிரையார் மணிமாட நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
uraiyār poruḷuk kulappi lāṉai oḻiyāmē evvuyiru māṉāṉ ṟaṉṉaip puraiyāyk kaṉamāyāḻn tāḻā tāṉaip putiyaṉavu māymikavum paḻaiyāṉ ṟaṉṉait tiraiyār puṉalcēr makuṭat tāṉait tiruppuṉkūr mēviya civalō kaṉai niraiyār maṇimāṭa nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார் ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர் அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச் சீரரவக் கழலானை நிழலார் சோலைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீரரவத் தண்கழனி நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
kūraravat taṇaiyāṉuṅ kuḷirtaṇ poykai malaravaṉuṅ kūṭicceṉ ṟaṟiya māṭṭār āroruva ravartaṉmai yaṟivār tēvar aṟivōmeṉ pārkkellā maṟiya lākāc cīraravak kaḻalāṉai niḻalār cōlait tiruppuṉkūr mēviya civalō kaṉai nīraravat taṇkaḻaṉi nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன் செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
kaiyelām neypāyak kaḻuttē kiṭṭak kālnimirttu niṉṟuṇṇuṅ kaiyar coṉṉa poyyelām meyyeṉṟu karutip pukkup puḷḷuvarā lakappaṭā tuyyap pōntēṉ ceyyelāñ ceḻuṅkamalap paḻaṉa vēlit tiruppuṉkūr mēviya civalō kaṉai neytalvāyp puṉaṟpaṭappai nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத் திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிகழுமா வல்லானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
ikaḻumā ṟeṅṅaṉē ēḻai neñcē ikaḻātu parantoṉṟāy niṉṟāṉ ṟaṉṉai nakaḻamāl varaikkīḻiṭ ṭarakkar kōṉai nalaṉaḻittu naṉkaruḷic ceytāṉ ṟaṉṉait tikaḻumā matakariyi ṉuripōrt tāṉait tiruppuṉkūr mēviya civalō kaṉai nikaḻumā vallāṉai nīṭū rāṉai nītaṉē ṉeṉṉēnāṉ niṉaiyā vāṟē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).