Skip to content

திருமுறை 6 — திருநள்ளாறு - திருத்தாண்டகம் · திருநள்ளாறு - திருத்தாண்டகம்

tirunaḷḷāṟu - tiruttāṇṭakam

tirunaḷḷāṟu - tiruttāṇṭakam

tirunaḷḷāṟu - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.

Invocation

6.20.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதோர்கூ றாயி னானை மாமலர்மே லயனோடு மாலுங் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

ātikkaṇ ṇāṉmukatti loṉṟu ceṉṟu allāta colluraikkat taṉkai vāḷāṟ cētitta tiruvaṭiyaic cella nalla civalōka neṟivakuttuk kāṭṭu vāṉai mātimaiya mātōrkū ṟāyi ṉāṉai māmalarmē layaṉōṭu māluṅ kāṇā nātiyai nampiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

படையானைப் பாசுபத வேடத் தானைப் பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம் அடையாமைக் காப்பானை அடியார் தங்கள் அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச் சடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச் சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின் நடையானை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

paṭaiyāṉaip pācupata vēṭat tāṉaip paṇṭaṉaṅkaṟ pārttāṉaip pāva mellām aṭaiyāmaik kāppāṉai aṭiyār taṅkaḷ arumaruntai āvāveṉ ṟaruḷcey vāṉaic caṭaiyāṉaic cantiraṉait tarittāṉ ṟaṉṉaic caṅkatta muttaṉaiya veḷḷai yēṟṟiṉ naṭaiyāṉai nampiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுதாக உண்டானை ஆதி யானை மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை மாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

paṭavarava moṉṟukoṇ ṭaraiyi lārtta parāparaṉaip paiññīli mēvi ṉāṉai aṭalaravam paṟṟik kaṭainta nañcai amutāka uṇṭāṉai āti yāṉai maṭalaravam maṉṉupūṅ koṉṟai yāṉai māmaṇiyai māṇikkāyk kālaṉ ṟaṉṉai naṭalaravañ ceytāṉai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக் கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச் சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச் சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப் பட்டங்க மாலை நிறையச் சூடிப் பல்கணமுந் தாமும் பரந்த காட்டில் நட்டங்க மாடியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

kaṭṭaṅka moṉṟutaṅ kaiyi lēntik kaṅkaṇamuṅ kātilviṭu tōṭu miṭṭuc cuṭṭaṅkaṅ koṇṭu tutaiyap pūcic cuntaraṉāyc cūlaṅkai yēnti ṉāṉaip paṭṭaṅka mālai niṟaiyac cūṭip palkaṇamun tāmum paranta kāṭṭil naṭṭaṅka māṭiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ் சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத் திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக் கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக் கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

ularntārtam aṅkaṅkoṇ ṭulaka mellām orunoṭiyil uḻalvāṉai ulappil celvañ cilantitaṉak karuḷceyta tēva tēvait tiruccirāp paḷḷiyeñ civalō kaṉaik kalantārtam maṉatteṉṟuṅ kātalāṉaik kacciyē kampaṉaik kamaḻpūṅ koṉṟai nalantāṅku nampiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக் குலவரையன் மடப்பாவை இடப்பா லானை மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச் சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

kulaṅkeṭuttuk kōḷnīkka vallāṉ ṟaṉṉaik kulavaraiyaṉ maṭappāvai iṭappā lāṉai malaṅkeṭuttu mātīrttam āṭṭik koṇṭa maṟaiyavaṉaip piṟaitavaḻceñ caṭaiyi ṉāṉaic calaṅkeṭuttut tayāmūla taṉma meṉṉun tattuvattiṉ vaḻiniṉṟu tāḻntōrk kellām nalaṅkoṭukkum nampiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப் புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை மாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத் தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ் சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

pūviriyum malarkkoṉṟaic caṭaiyi ṉāṉaip puṟampayattem perumāṉaip pukalū rāṉai māviriyak kaḷiṟuritta maintaṉ ṟaṉṉai maṟaikkāṭum valivalamum maṉṉi ṉāṉait tēviriyat tikaḻtakkaṉ vēḷvi yellāñ citaittāṉai utaittavaṉṟaṉ ciraṅkoṇ ṭāṉai nāviriya maṟainaviṉṟa naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற வில்லானை எல்லார்க்கு மேலா னானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங் கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக் காளத்தி யானைக் கயிலை மேய நல்லானை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

collāṉaic cuṭarppavaḷac cōti yāṉait tollavuṇar puramūṉṟu meriyac ceṟṟa villāṉai ellārkku mēlā ṉāṉai melliyalāḷ pākaṉai vētam nāṉkuṅ kallāliṉ nīḻaṟkīḻ aṟaṅkaṇ ṭāṉaik kāḷatti yāṉaik kayilai mēya nallāṉai nampiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக் குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச் சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச் சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும் நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

kuṉṟāta māmuṉivaṉ cāpam nīṅkak kuraikaḻalāṟ kūṟṟuvaṉaik kumaitta kōṉai aṉṟāka avuṇarpura mūṉṟum vēva āraḻalvā yōṭṭi yaṭarvit tāṉaic ceṉṟātu vēṇṭiṟṟoṉ ṟīvāṉ ṟaṉṉaic civaṉēyem perumāṉeṉ ṟiruppārk keṉṟum naṉṟākum nampiyai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம் நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

iṟavāmē varampeṟṟē ṉeṉṟu mikka irāvaṇaṉai irupatutōḷ neriya vūṉṟi uṟavāki iṉṉicaikēṭ ṭiraṅki mīṇṭē uṟṟapiṇi tavirttaruḷa vallāṉ ṟaṉṉai maṟavātār maṉatteṉṟum maṉṉi ṉāṉai māmatiyam malarkkoṉṟai vaṉṉi mattam naṟavārceñ caṭaiyāṉai naḷḷāṟ ṟāṉai nāṉaṭiyēṉ niṉaikkappeṟ ṟuynta vāṟē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).