Skip to content

திருமுறை 6 — திருவாரூர் - திருத்தாண்டகம் · திருவாரூர் - திருத்தாண்டகம்

tiruvārūr - tiruttāṇṭakam

tiruvārūr - tiruttāṇṭakam

tiruvārūr - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

6 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.
←
Go to verse
→

Invocation

6.26.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச் சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச் சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

pātittaṉ tiruvuruviṟ peṇkoṇ ṭāṉaip paṇṭorukāl tacamukaṉai aḻuvit tāṉai vātittut taṭamalarāṉ ciraṅkoṇ ṭāṉai vaṉkaruppuc cilaikkāmaṉ uṭalaṭ ṭāṉaic cōticcan tiraṉmēṉi maṟucceytāṉaic cuṭaraṅki tēvaṉaiyōr kaikkoṇ ṭāṉai ātittaṉ paṟkoṇṭa ammāṉ ṟaṉṉai ārūriṟ kaṇṭaṭiyēṉ ayartta vāṟē.

Report an error

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை அப்புறுத்த நீரகத்தே அழலா னானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

veṟpuṟutta tiruvaṭiyāṟ kūṟṟaṭ ṭāṉai viḷakkiṉoḷi miṉṉiṉoḷi muttiṉ cōti oppuṟutta tiruvuruvat toruvaṉ ṟaṉṉai ōtātē vēta muṇarntāṉ ṟaṉṉai appuṟutta kaṭalnañca muṇṭāṉ ṟaṉṉai amutuṇṭār ulantālu mulavā tāṉai appuṟutta nīrakattē aḻalā ṉāṉai ārūriṟ kaṇṭaṭiyēṉ ayartta vāṟē.

Report an error

ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை வருகாலஞ் செல்கால மாயி னானை வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப் பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப் புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

orukālat torutēvar kaṇkoṇ ṭāṉai ūḻitō ṟūḻi uyarntāṉ ṟaṉṉai varukālañ celkāla māyi ṉāṉai vaṉkaruppuc cilaikkāmaṉ uṭalaṭ ṭāṉaip poruvēḻak kaḷiṟṟurivaip pōrvai yāṉaip puḷḷaraiya ṉuṭaltaṉṉaip poṭicey tāṉai aruvēḷvi takartteccaṉ ṟalaikoṇ ṭāṉai ārūriṟ kaṇṭaṭiyēṉ ayartta vāṟē.

Report an error

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம் வைப்பானைக் களைவானை வருவிப் பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

meyppālveṇ ṇīṟaṇinta mēṉi yāṉai veṇpaḷiṅki ṉuṭpatitta cōti yāṉai oppāṉai oppilā oruvaṉ ṟaṉṉai uttamaṉai nittilattai ulaka mellām vaippāṉaik kaḷaivāṉai varuvip pāṉai valviṉaiyēṉ maṉattakattē maṉṉi ṉāṉai appālaik kappālaik kappā lāṉai ārūriṟ kaṇṭaṭiyēṉ ayartta vāṟē.

Report an error

பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப் பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத் துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச் சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக் கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

piṇṭattiṟ piṟantatoru poruḷai maṟṟaip piṇṭattaip paṭaittataṉaip periya vētat tuṇṭattiṉ tuṇiporuḷaic cuṭutī yākic cuḻalkālāy nīrākip pārā yiṟṟaik kaṇṭattil tītiṉañ camutu ceytu kaṇmūṉṟu paṭaittatoru karumpaip pālai aṇṭattuk kappuṟattār tamakku vittai ārūriṟ kaṇṭaṭiyēṉ ayartta vāṟē.

Report an error

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப் பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய் பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச் சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச் சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

nītiyāy nilaṉāki neruppāy nīrāy niṟaikālāy ivaiyiṟṟiṉ niyama mākip pātiyāy oṉṟāki iraṇṭāy mūṉṟāy paramāṇu vāyppaḻutta paṇka ḷākic cōtiyāy iruḷākic cuvaika ḷākic cuvaikalanta appālāy vīṭāy vīṭṭiṉ ātiyāy antamāy niṉṟāṉ ṟaṉṉai ārūriṟ kaṇṭaṭiyēṉ ayartta vāṟē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).