Tirumurai 6.29.p1
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் அருமணியை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
tirumaṇiyait tittikkun tēṉaip pālait tīṅkarumpiṉ iṉcuvaiyait teḷinta tēṟaṟ kurumaṇiyaik kuḻalmontai tāḷam vīṇai kokkaraiyiṉ caccariyiṉ pāṇi yāṉaip parumaṇiyaip pavaḷattaip pacumpoṉ muttaip paruppatatti laruṅkalattaip pāvan tīrkkum arumaṇiyai ārūri lammāṉ ṟaṉṉai aṟiyā taṭināyēṉ ayartta vāṟē.