Skip to content

திருமுறை 6 — திருவையாறு - திருத்தாண்டகம் · திருவையாறு - திருத்தாண்டகம்

tiruvaiyāṟu - tiruttāṇṭakam

tiruvaiyāṟu - tiruttāṇṭakam

tiruvaiyāṟu - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.

Invocation

6.37.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானே கூரார் மழுவாட் படையொன் றேந்திக் குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே பேரா யிரமுடையா யென்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே ஆரா வமுதேயென் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

ārār tiripuraṅkaḷ nīṟā nōkkum aṉalāṭi āramutē yeṉṟēṉ nāṉē kūrār maḻuvāṭ paṭaiyoṉ ṟēntik kuṟaṭpūtap palpaṭaiyā yeṉṟēṉ nāṉē pērā yiramuṭaiyā yeṉṟēṉ nāṉē piṟaicūṭum piññakaṉē yeṉṟēṉ nāṉē ārā vamutēyeṉ aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் தீர்த்தா புராணனே யென்றேன் நானே மூவா மதிசூடி யென்றேன் நானே முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே ஏவார் சிலையானே யென்றேன் நானே இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

tīvāyiṉ muppuraṅkaḷ nīṟā nōkkun tīrttā purāṇaṉē yeṉṟēṉ nāṉē mūvā maticūṭi yeṉṟēṉ nāṉē mutalvāmuk kaṇṇaṉē yeṉṟēṉ nāṉē ēvār cilaiyāṉē yeṉṟēṉ nāṉē iṭumpaik kaṭalniṉṟu mēṟa vāṅki āvāveṉ ṟaruḷpuriyum aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே அடியார்கட் காரமுதே யென்றேன் நானே நஞ்சணி கண்டனே யென்றேன் நானே நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது நிறையு மமுதமே யென்றேன் நானே அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

añcuṇṇa vaṇṇaṉē yeṉṟēṉ nāṉē aṭiyārkaṭ kāramutē yeṉṟēṉ nāṉē nañcaṇi kaṇṭaṉē yeṉṟēṉ nāṉē nāvalarkaḷ nāṉmaṟaiyē yeṉṟēṉ nāṉē neñcuṇara vuḷpuk kirunta pōtu niṟaiyu mamutamē yeṉṟēṉ nāṉē añcātē āḷvāṉē aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே எல்லை நிறைந்தானே யென்றேன் நானே ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே அல்லற் கடல்புக் கழுந்து வேனை வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

tollait toṭukaṭalē yeṉṟēṉ nāṉē tulaṅkum iḷampiṟaiyā yeṉṟēṉ nāṉē ellai niṟaintāṉē yeṉṟēṉ nāṉē ēḻnarampi ṉiṉṉicaiyā yeṉṟēṉ nāṉē allaṟ kaṭalpuk kaḻuntu vēṉai vāṅki yaruḷceytā yeṉṟēṉ nāṉē ellaiyām aiyāṟā veṉṟēṉ nāṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே இருசுடர் வானத்தா யென்றேன் நானே தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே கண்டங் கறுத்தானே யென்றேன் நானே கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

iṇṭaic caṭaimuṭiyā yeṉṟēṉ nāṉē irucuṭar vāṉattā yeṉṟēṉ nāṉē toṇṭar toḻappaṭuvā yeṉṟēṉ nāṉē turuttineyt tāṉattā yeṉṟēṉ nāṉē kaṇṭaṅ kaṟuttāṉē yeṉṟēṉ nāṉē kaṉalākuṅ kaṇṇāṉē yeṉṟēṉ nāṉē aṇṭattuk kappālām aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே கற்றார்கள் நாவினா யென்றேன் நானே கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

paṟṟār puramerittā yeṉṟēṉ nāṉē pacupati paṇṭaraṅkā veṉṟēṉ nāṉē kaṟṟārkaḷ nāviṉā yeṉṟēṉ nāṉē kaṭuviṭaiyoṉ ṟūrtiyā yeṉṟēṉ nāṉē paṟṟāṉār neñcuḷā yeṉṟēṉ nāṉē pārttaṟ karuḷceytā yeṉṟēṉ nāṉē aṟṟārk karuḷceyyum aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே ஏகம்பம் மேயானே யென்றேன் நானே பண்ணார் மறைபாடி யென்றேன் நானே பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே அண்ணாஐ யாறனே யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

viṇṇōr talaivaṉē yeṉṟēṉ nāṉē viḷaṅkum iḷampiṟaiyā yeṉṟēṉ nāṉē eṇṇā reyilerittā yeṉṟēṉ nāṉē ēkampam mēyāṉē yeṉṟēṉ nāṉē paṇṇār maṟaipāṭi yeṉṟēṉ nāṉē pacupati pālnīṟṟā yeṉṟēṉ nāṉē aṇṇāai yāṟaṉē yeṉṟēṉ nāṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

அவனென்று நானுன்னை அஞ்சா தேனை அல்ல லறுப்பானே யென்றேன் நானே சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச் செல்வந் தருவானே யென்றேன் நானே பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று பண்டை வினையறுப்பா யென்றேன் நானே அவனென்றே யாதியே ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

avaṉeṉṟu nāṉuṉṉai añcā tēṉai alla laṟuppāṉē yeṉṟēṉ nāṉē civaṉeṉṟu nāṉuṉṉai yellāñ collac celvan taruvāṉē yeṉṟēṉ nāṉē pavaṉāki yeṉṉuḷḷat tuḷḷē niṉṟu paṇṭai viṉaiyaṟuppā yeṉṟēṉ nāṉē avaṉeṉṟē yātiyē aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

கச்சியே கம்பனே யென்றேன் நானே கயிலாயா காரோணா வென்றேன் நானே நிச்சன் மணாளனே யென்றேன் நானே நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

kacciyē kampaṉē yeṉṟēṉ nāṉē kayilāyā kārōṇā veṉṟēṉ nāṉē niccaṉ maṇāḷaṉē yeṉṟēṉ nāṉē niṉaippār maṉattuḷā yeṉṟēṉ nāṉē uccampō tēṟēṟī yeṉṟēṉ nāṉē uḷkuvā ruḷḷattā yeṉṟēṉ nāṉē accam piṇitīrkkum aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

வில்லாடி வேடனே யென்றேன் நானே வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே சொல்லாய சூழலா யென்றேன் நானே சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

villāṭi vēṭaṉē yeṉṟēṉ nāṉē veṇṇīṟu meykkaṇintā yeṉṟēṉ nāṉē collāya cūḻalā yeṉṟēṉ nāṉē culāvāya toṉṉeṟiyē yeṉṟēṉ nāṉē ellāmā yeṉṉuyirē yeṉṟēṉ nāṉē ilaṅkaiyarkōṉ tōḷiṟuttā yeṉṟēṉ nāṉē allā viṉaitīrkkum aiyā ṟaṉē eṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).