Skip to content

திருமுறை 6 — திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் · திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்

tirukkayilāyam - pōṟṟittiruttāṇṭakam

tirukkayilāyam - pōṟṟittiruttāṇṭakam

tirukkayilāyam - pōṟṟittiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.

Invocation

6.55.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

vēṟṟāki viṇṇāki niṉṟāy pōṟṟi mīḷāmē āḷeṉṉaik koṇṭāy pōṟṟi ūṟṟāki uḷḷē oḷittāy pōṟṟi ōvāta cattat toliyē pōṟṟi āṟṟāki yaṅkē amarntāy pōṟṟi āṟaṅkam nālvēta māṉāy pōṟṟi kāṟṟāki yeṅkuṅ kalantāy pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

piccāṭal pēyō ṭukantāy pōṟṟi piṟavi yaṟukkum pirāṉē pōṟṟi vaiccāṭal naṉṟu makiḻntāy pōṟṟi maruviyeṉ cintai pukuntāy pōṟṟi poyccār puramūṉṟu meytāy pōṟṟi pōkāteṉ cintai pukuntāy pōṟṟi kaccāka nāka macaittāy pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

maruvār puramūṉṟu meytāy pōṟṟi maruviyeṉ cintai pukuntāy pōṟṟi uruvāki yeṉṉaip paṭaittāy pōṟṟi uḷḷāvi vāṅki yoḷittāy pōṟṟi tiruvāki niṉṟa tiṟamē pōṟṟi tēcam paravap paṭuvāy pōṟṟi karuvāki yōṭu mukilē pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

vāṉattār pōṟṟum maruntē pōṟṟi vanteṉṟaṉ cintai pukuntāy pōṟṟi ūṉattai nīkku muṭalē pōṟṟi ōṅki aḻalāy nimirntāy pōṟṟi tēṉattai vārtta teḷivē pōṟṟi tēvarkkun tēvaṉāy niṉṟāy pōṟṟi kāṉattī yāṭa lukantāy pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

ūrāki niṉṟa ulakē pōṟṟi ōṅki aḻalāy nimirntāy pōṟṟi pērāki yeṅkum parantāy pōṟṟi peyarāteṉ cintai pukuntāy pōṟṟi nīrāvi yāṉa niḻalē pōṟṟi nērvā roruvaraiyu millāy pōṟṟi kārāki niṉṟa mukilē pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

cilluruvāyc ceṉṟu tiraṇṭāy pōṟṟi tēva raṟiyāta tēvē pōṟṟi pulluyirkkum pūṭci puṇarttāy pōṟṟi pōkāteṉ cintai pukuntāy pōṟṟi palluyirāyp pārtōṟum niṉṟāy pōṟṟi paṟṟi ulakai viṭātāy pōṟṟi kalluyirāy niṉṟa kaṉalē pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

paṇṇiṉ icaiyāki niṉṟāy pōṟṟi pāvippār pāva maṟuppāy pōṟṟi eṇṇu meḻuttuñcol lāṉāy pōṟṟi eṉcintai nīṅkā iṟaivā pōṟṟi viṇṇum nilaṉuntī yāṉāy pōṟṟi mēlavarkkum mēlāki niṉṟāy pōṟṟi kaṇṇiṉ maṇiyāki niṉṟāy pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றி அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

imaiyā tuyirā tiruntāy pōṟṟi eṉcintai nīṅkā iṟaivā pōṟṟi umaipāka mākat taṇaittāy pōṟṟi ūḻiyē ḻāṉa oruvā pōṟṟi amaiyā arunañca mārntāy pōṟṟi āti purāṇaṉāy niṉṟāy pōṟṟi kamaiyāki niṉṟa kaṉalē pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

mūvāy piṟavāy iṟavāy pōṟṟi muṉṉamē tōṉṟi muḷaittāy pōṟṟi tēvāti tēvartoḻun tēvē pōṟṟi ceṉṟēṟi yeṅkum parantāy pōṟṟi āvā aṭiyēṉuk kellām pōṟṟi allal naliya alantēṉ pōṟṟi kāvāy kaṉakat tiraḷē pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றி அடியும் முடியும் இகலி போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

neṭiya vicumpōṭu kaṇṇē pōṟṟi nīḷa akala muṭaiyāy pōṟṟi aṭiyum muṭiyum ikali pōṟṟi aṅkoṉ ṟaṟiyāmai niṉṟāy pōṟṟi koṭiya vaṉkūṟṟa mutaittāy pōṟṟi kōyilā eṉcintai koṇṭāy pōṟṟi kaṭiya urumoṭu miṉṉē pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

uṇṇā tuṟaṅkā tiruntāy pōṟṟi ōtātē vēta muṇarntāy pōṟṟi eṇṇā ilaṅkaikkōṉ ṟaṉṉaip pōṟṟi iṟaiviralāl vaittukanta īcā pōṟṟi paṇṇā ricaiyiṉcoṟ kēṭṭāy pōṟṟi paṇṭēyeṉ cintai pukuntāy pōṟṟi kaṇṇā yulakukku niṉṟāy pōṟṟi kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).