Skip to content

திருமுறை 6 — திருவானைக்கா - திருத்தாண்டகம் · திருவானைக்கா - திருத்தாண்டகம்

tiruvāṉaikkā - tiruttāṇṭakam

tiruvāṉaikkā - tiruttāṇṭakam

tiruvāṉaikkā - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.

Invocation

6.63.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே தன்னானை யாப்பண்ணி யேறி னானைச் சார்தற் கரியானைத் தாதை தன்னை என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ் தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

muṉṉāṉait tōlpōrtta mūrtti taṉṉai mūvāta cintaiyē maṉamē vākkē taṉṉāṉai yāppaṇṇi yēṟi ṉāṉaic cārtaṟ kariyāṉait tātai taṉṉai eṉṉāṉaik kaṉṟiṉaiyeṉ īcaṉ ṟaṉṉai eṟinīrt tiraiyukaḷuṅ kāvi ricūḻ teṉṉāṉaik kāvāṉait tēṉaip pālaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத் திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக் கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக் கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர் திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

maruntāṉai mantirippār maṉattu ḷāṉai vaḷarmatiyañ caṭaiyāṉai makiḻnteṉ ṉuḷḷat tiruntāṉai iṟappiliyaip piṟappi lāṉai imaiyavartam perumāṉai umaiyā ḷañcak karuntāṉa matakaḷiṟṟi ṉuripōrt tāṉaik kaṉamaḻuvāṭ paṭaiyāṉaip palikoṇ ṭūrūr tirintāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும் உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம் பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப் பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ் செற்றானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

muṟṟāta veṇṭiṅkaṭ kaṇṇi yāṉai munnīrnañ cuṇṭimaiyōrk kamutam nalkum uṟṟāṉaip palluyirkkun tuṇaiyā ṉāṉai ōṅkārat tuṭporuḷai ulaka mellām peṟṟāṉaip piṉṉiṟakkañ ceyvāṉ ṟaṉṉaip pirāṉeṉṟu pōṟṟātār puraṅkaḷ mūṉṟuñ ceṟṟāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக் காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத் தாரானைப் புலியதளி னாடை யானைத் தானன்றி வேறொன்று மில்லா ஞானப் பேரானை மணியார மார்பி னானைப் பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட தேரானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

kārāru maṇimiṭaṟṟem perumāṉ ṟaṉṉaik kātilveṇ kuḻaiyāṉaik kamaḻpūṅ koṉṟait tārāṉaip puliyataḷi ṉāṭai yāṉait tāṉaṉṟi vēṟoṉṟu millā ñāṉap pērāṉai maṇiyāra mārpi ṉāṉaip piññakaṉait teyvanāṉ maṟaikaḷ pūṇṭa tērāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப் புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை ஏறமரும் பெருமானை இடமா னேந்து கையானைக் கங்காள வேடத் தானைக் கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச் செய்யானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

poyyētu millāta meyyaṉ ṟaṉṉaip puṇṇiyaṉai naṇṇātār puranī ṟāka eytāṉaic ceytavattiṉ mikkāṉ ṟaṉṉai ēṟamarum perumāṉai iṭamā ṉēntu kaiyāṉaik kaṅkāḷa vēṭat tāṉaik kaṭṭaṅkak koṭiyāṉaik kaṉalpōl mēṉic ceyyāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

கலையானைப் பாசுபதப் பாணி யானைக் கனவயிரத் திரளானை மணிமா ணிக்க மலையானை யென்றலையி னுச்சி யானை வார்தருபுன் சடையானை மயான மன்னும் நிலையானை வரியரவு நாணாக் கோத்து நினையாதார் புரமெரிய வளைத்த மேருச் சிலையானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

kalaiyāṉaip pācupatap pāṇi yāṉaik kaṉavayirat tiraḷāṉai maṇimā ṇikka malaiyāṉai yeṉṟalaiyi ṉucci yāṉai vārtarupuṉ caṭaiyāṉai mayāṉa maṉṉum nilaiyāṉai variyaravu nāṇāk kōttu niṉaiyātār purameriya vaḷaitta mēruc cilaiyāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

ஆதியனை எறிமணியின் ஓசை யானை அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச் சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச் சேதியனைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

ātiyaṉai eṟimaṇiyiṉ ōcai yāṉai aṇṭattārk kaṟivoṇṇā tappāl mikka cōtiyaṉait tūmaṟaiyiṉ poruḷāṉ ṟaṉṉaic curumpamarum malarkkoṉṟait toṉṉūl pūṇṭa vētiyaṉai aṟamuraitta paṭṭaṉ ṟaṉṉai viḷaṅkumala rayaṉciraṅkaḷ ainti loṉṟaic cētiyaṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப் புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப் பூதகணப் படையானைப் புறங்காட் டாடல் உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

makiḻntāṉaik kacciyē kampaṉ ṟaṉṉai maṟavātu kaḻalniṉaintu vāḻtti yēttip pukaḻntāraip poṉṉulakam āḷvip pāṉaip pūtakaṇap paṭaiyāṉaip puṟaṅkāṭ ṭāṭal ukantāṉaip piccaiyē yiccip pāṉai oṇpavaḷat tiraḷaiyeṉ ṉuḷḷat tuḷḷē tikaḻntāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

நசையானை நால்வேதத் தப்பா லானை நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின் மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும் மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத் திசையானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

nacaiyāṉai nālvētat tappā lāṉai nalkuravun tīppiṇinōy kāppāṉ ṟaṉṉai icaiyāṉai eṇṇiṟanta kuṇattāṉ ṟaṉṉai iṭaimarutum īṅkōyum nīṅkā tēṟṟiṉ micaiyāṉai virikaṭalum maṇṇum viṇṇum mikutīyum puṉaleṟikāṟ ṟāki yeṭṭut ticaiyāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப் பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ் சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத் தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

pārttāṉaik kāmaṉuṭal poṭiyāy vīḻap paṇṭayaṉmā liruvarkkum aṟiyā vaṇṇañ cīrttāṉaic centaḻalpō luruvi ṉāṉait tēvarkaḷtam perumāṉait tiṟamuṉ ṉātē ārttōṭi malaiyeṭutta ilaṅkai vēntaṉ āṇmaiyelāṅ keṭuttavaṉṟaṉ iṭarap pōtē tīrttāṉait tiruvāṉaik kāvu ḷāṉaic ceḻunīrt tiraḷaicceṉ ṟāṭi ṉēṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).