Tirumurai 6.78.p9
காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே கயிலை மலையை யுடையார் தாமே ஊரா வேகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே பாரார் புகழப் படுவார் தாமே பழனை பதியா வுடையார் தாமே தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
kārār kaṭalnañcai yuṇṭār tāmē kayilai malaiyai yuṭaiyār tāmē ūrā vēkampam ukantār tāmē oṟṟiyūr paṟṟi iruntār tāmē pārār pukaḻap paṭuvār tāmē paḻaṉai patiyā vuṭaiyār tāmē tīrāta valviṉainōy tīrppār tāmē tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē.