Skip to content

திருமுறை 6 — திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் · திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்

tiruccāykkāṭu - tiruttāṇṭakam

tiruccāykkāṭu - tiruttāṇṭakam

tiruccāykkāṭu - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.

Invocation

6.82.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

வானத் திளமதியும் பாம்புந் தன்னில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந் தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந் தில்லை நடமாடுந் தேவர் போலும் ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும் நன்மையுந் தீமையு மானார் போலுந் தேனொத் தடியார்க் கினியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

vāṉat tiḷamatiyum pāmpun taṉṉil vaḷarcaṭaimēl ātarippa vaittār pōlun tēṉait tiḷaittuṇṭu vaṇṭu pāṭun tillai naṭamāṭun tēvar pōlum ñāṉattiṉ oṇcuṭarāy niṉṟār pōlum naṉmaiyun tīmaiyu māṉār pōlun tēṉot taṭiyārk kiṉiyār pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும் வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும் அண்ணா மலையுறையும் அண்ணல் போலும் அதியரைய மங்கை யமர்ந்தார் போலும் பண்ணார் களிவண்டு பாடி யாடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலுந் திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

viṇṇōr paravanañ cuṇṭār pōlum viyaṉturutti vēḷvik kuṭiyār pōlum aṇṇā malaiyuṟaiyum aṇṇal pōlum atiyaraiya maṅkai yamarntār pōlum paṇṇār kaḷivaṇṭu pāṭi yāṭum parāyttuṟaiyuḷ mēya paramar pōlun tiṇṇār pukārmut talaikkun teṇṇīrt tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

கானிரிய வேழ முரித்தார் போலுங் காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும் வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும் வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும் ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும் உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந் தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

kāṉiriya vēḻa murittār pōluṅ kāvirippūm paṭṭiṉat tuḷḷār pōlum vāṉiriya varupuramūṉ ṟerittār pōlum vaṭakayilai malaiyatutam mirukkai pōlum ūṉiriyat talaikalaṉā vuṭaiyār pōlum uyartōṇi purattuṟaiyu moruvar pōlun tēṉiriya mīṉpāyun teṇṇīrp poykait tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும் ஊழி பலகண் டிருந்தார் போலும் மானுற்ற கரதலமொன் றுடையார் போலும் மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங் கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந் தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

ūṉuṟṟa veṇṭalaicēr kaiyar pōlum ūḻi palakaṇ ṭiruntār pōlum māṉuṟṟa karatalamoṉ ṟuṭaiyār pōlum maṟaikkāṭṭuk kōṭi makiḻntār pōluṅ kāṉuṟṟa āṭa lamarntār pōluṅ kāmaṉaiyuṅ kaṇṇaḻalāṟ kāyntār pōlun tēṉuṟṟa cōlai tikaḻntu tōṉṟun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங் காலனையும் ஓருதையாற் கண்டார் போலும் பார்மல்கி யேத்தப் படுவார் போலும் பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும் ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ் சீர்மல்கு பாட லுகந்தார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

kārmalku koṉṟaiyan tārār pōluṅ kālaṉaiyum ōrutaiyāṟ kaṇṭār pōlum pārmalki yēttap paṭuvār pōlum paruppatattē pallūḻi niṉṟār pōlum ūrmalku piccaik kuḻaṉṟār pōlum ōttūr orunāḷum nīṅkār pōluñ cīrmalku pāṭa lukantār pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும் மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூ ருடையார் போலுங் கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலுந் தேவாதி தேவர்க் கரியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

māvāyp piḷantukanta māluñ ceyya malaravaṉun tāmēyāy niṉṟār pōlum mūvāta mēṉi mutalvar pōlum mutukuṉṟa mūtū ruṭaiyār pōluṅ kōvāya muṉitaṉmēl vanta kūṟṟaik kuraikaḻalā laṉṟu kumaittār pōlun tēvāti tēvark kariyār pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

கடுவெளியோ டோரைந்து மானார் போலுங் காரோணத் தென்று மிருப்பார் போலும் இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் படியொருவ ரில்லாப் படியார் போலும் பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ் செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

kaṭuveḷiyō ṭōraintu māṉār pōluṅ kārōṇat teṉṟu miruppār pōlum iṭikuralvāyp pūtap paṭaiyār pōlum ēkampam mēvi yiruntār pōlum paṭiyoruva rillāp paṭiyār pōlum pāṇṭik koṭumuṭiyun tammūr pōluñ ceṭipaṭunō yaṭiyārait tīrppār pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும் வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும் மலையினார் மங்கை மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந் தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ் சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ் சிலையினார் செங்க ணரவர் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

vilaiyilā ārañcēr mārpar pōlum veṇṇīṟu meykkaṇinta vikirtar pōlum malaiyiṉār maṅkai maṇāḷar pōlum māṟpēṟu kāppāy makiḻntār pōlun tolaivilār puramūṉṟun tolaittār pōluñ cōṟṟut tuṟaiturutti yuḷḷār pōluñ cilaiyiṉār ceṅka ṇaravar pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

அல்ல லடியார்க் கறுப்பார் போலும் அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும் நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் முல்லை முகைநகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலுந் தில்லை நடமாடுந் தேவர் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

alla laṭiyārk kaṟuppār pōlum amarulakan tammaṭaintārk kāṭci pōlum nallamum nallūrum mēyār pōlum naḷḷāṟu nāḷum piriyār pōlum mullai mukainakaiyāḷ pākar pōlum muṉṉamē tōṉṟi muḷaittār pōlun tillai naṭamāṭun tēvar pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால் ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும் நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும் பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும் பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ் சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

uṟaippuṭaiya irāvaṇaṉpoṉ malaiyaik kaiyāl ūkkañcey teṭuttalumē umaiyā ḷañca niṟaipperuntōḷ irupatumpoṉ muṭikaḷ pattum nilañcēra viralvaitta nimalar pōlum piṟaippiḷavu caṭaikkaṇinta pemmāṉ pōlum peṇṇā ṇuruvāki niṉṟār pōluñ ciṟappuṭaiya aṭiyārkaṭ kiṉiyār pōlun tiruccāykkāṭ ṭiṉituṟaiyuñ celvar tāmē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).