Tirumurai 6.87.p8
கலையாரு நூலங்க மாயி னான்காண் கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண் தலையாய மலையெடுத்த தகவி லோனைத் தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
kalaiyāru nūlaṅka māyi ṉāṉkāṇ kalaipayiluṅ karuttaṉkāṇ tirutta māki malaiyāki maṟikaṭalēḻ cūḻntu niṉṟa maṇṇāki viṇṇāki niṉṟāṉ ṟāṉkāṇ talaiyāya malaiyeṭutta takavi lōṉait takarntuviḻa oruviralāṟ cātit tāṇṭa cilaiyārum maṭamakaḷōr kūṟaṉ ṟāṉkāṇ civaṉavaṉkāṇ civapuratteñ celvaṉ ṟāṉē.