திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
திருமுறை 6 — திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் · திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்
tirukkañcaṉūr - tiruttāṇṭakam
tirukkañcaṉūr - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.
10 passagesTamil with transliteration
Invocation
திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
mūvilaivēṟ cūlamvala ṉēnti ṉāṉai mūṉṟucuṭark kaṇṇāṉai mūrtti taṉṉai nāvalaṉai naraiviṭaiyoṉ ṟēṟu vāṉai nālvēta māṟaṅka māyi ṉāṉai āviṉilain tukantāṉai amarar kōvai ayaṉṟirumā lāṉāṉai aṉalōṉ pōṟṟuṅ kāvalaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மலையானை மற்றொப்பா ரில்லா தானை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
talaiyēntu kaiyāṉai eṉpārt tāṉaic cavantāṅku tōḷāṉaic cāmpa lāṉaik kulaiyēṟu naṟuṅkoṉṟai muṭimēl vaittuk kōṇāka macaittāṉaik kulamāṅ kailai malaiyāṉai maṟṟoppā rillā tāṉai matikatirum vāṉavarum mālum pōṟṟuṅ kalaiyāṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச் சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத் தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச் செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப் பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம் பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
toṇṭarkuḻān toḻutētta aruḷcey vāṉaic cuṭarmaḻuvāṭ paṭaiyāṉaic cuḻivāṉ kaṅkait teṇṭiraikaḷ porutiḻiceñ caṭaiyi ṉāṉaic cekkarvā ṉoḷiyāṉaic cērā teṇṇip paṇṭamarar koṇṭukanta vēḷvi yellām pāḻpaṭuttut talaiyaṟuttup paṟkaṇ koṇṭa kaṇṭakaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப் பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப் பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும் இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங் கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
viṇṇavaṉai mēruvillā vuṭaiyāṉ ṟaṉṉai meyyākip poyyāki vitiyā ṉāṉaip peṇṇavaṉai āṇavaṉaip pittaṉ ṟaṉṉaip piṇamiṭukā ṭuṭaiyāṉaip peruntak kōṉai eṇṇavaṉai eṇṭicaiyuṅ kīḻu mēlum iruvicumpu mirunilamu mākit tōṉṟuṅ kaṇṇavaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
உருத்திரனை உமாபதியை உலகா னானை உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப் பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப் பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
uruttiraṉai umāpatiyai ulakā ṉāṉai uttamaṉai nittilattai oruvaṉ ṟaṉṉaip paruppatattaip pañcavaṭi mārpi ṉāṉaip pakaliravāy nīrveḷiyāyp parantu niṉṟa neruppataṉai nittilattiṉ tottop pāṉai nīṟaṇinta mēṉiyarāy niṉaivār cintaik karuttavaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச் சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக் கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங் காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
ēṭēṟu malarkkoṉṟai aravu tumpai iḷamatiyam erukkuvā ṉiḻinta kaṅkaic cēṭeṟinta caṭaiyāṉait tēvar kōvaic cempoṉmāl varaiyāṉaic cērntār cintaik kēṭiliyaik kīḻvēḷū rāḷuṅ kōvaik kiṟipēci maṭavārpey vaḷaikaḷ koḷḷuṅ kāṭavaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
நாரணனும் நான்முகனு மறியா தானை நால்வேதத் துருவானை நம்பி தன்னைப் பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும் பால்வணனைத் தீவணனைப் பகலா னானை வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங் கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
nāraṇaṉum nāṉmukaṉu maṟiyā tāṉai nālvētat turuvāṉai nampi taṉṉaip pāriṭaṅkaḷ paṇiceyyap palikoṇ ṭuṇṇum pālvaṇaṉait tīvaṇaṉaip pakalā ṉāṉai vārpotiyum mulaiyāḷōr kūṟaṉ ṟaṉṉai māṉiṭaṅkai yuṭaiyāṉai malivār kaṇṭaṅ kārpotiyuṅ kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
வானவனை வலிவலமும் மறைக்காட் டானை மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை ஏனவனை இமவான்றன் பேதை யோடும் இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத் தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங் கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
vāṉavaṉai valivalamum maṟaikkāṭ ṭāṉai maticūṭum perumāṉai maṟaiyōṉ ṟaṉṉai ēṉavaṉai imavāṉṟaṉ pētai yōṭum iṉitirunta perumāṉai ēttu vārkkut tēṉavaṉait tittikkum perumāṉ ṟaṉṉait tītilā maṟaiyavaṉait tēvar pōṟṟuṅ kāṉavaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத் தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச் சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங் கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
neruppuruvu tirumēṉi veṇṇīṟ ṟāṉai niṉaippārtam neñcāṉai niṟaivā ṉāṉait tarukkaḻiya muyalakaṉmēṟ ṟāḷvait tāṉaic calantaraṉait taṭintōṉait takkōr cintai viruppavaṉai vitiyāṉai veṇṇīṟ ṟāṉai viḷaṅkoḷiyāy meyyāki mikkōr pōṟṟuṅ karuttavaṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச் சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத் தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக் கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
maṭalāḻit tāmaraiyā yiratti loṉṟu malarkkaṇiṭan tiṭutalumē malivāṉ kōlac cuṭarāḻi neṭumāluk karuḷcey tāṉait tumpiyuri pōrttāṉait tōḻaṉ viṭṭa aṭalāḻit tēruṭaiya ilaṅkaik kōṉai aruvaraikkīḻ aṭarttāṉai aruḷār karuṇaik kaṭalāṉaik kañcaṉū rāṇṭa kōvaik kaṟpakattaik kaṇṇārak kaṇṭuyn tēṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).