Skip to content

திருமுறை 1 — திரு இலம்பையங்கோட்டூர் · திரு இலம்பையங்கோட்டூர்

tiru ilampaiyaṅkōṭṭūr

tiru ilampaiyaṅkōṭṭūr

tiru ilampaiyaṅkōṭṭūr, from book 1 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 1 of the Tirumurai.

மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

malaiyiṉār paruppatan turutti māṟpēṟu mācilāc cīrmaṟaik kāṭuneyt tāṉam nilaiyiṉāṉ eṉaturai taṉaturai yāka nīṟaṇin tēṟukan tēṟiya nimalaṉ kalaiyiṉār maṭappiṇai tuṇaiyoṭun tuyilak kāṉalam peṭaipulkik kaṇamayi lālum ilaiyiṉār paimpoḻil ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை நிருமல னெனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும் இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

tirumalark koṉṟaiyāṉ niṉṟiyūr mēyāṉ tēvarkaḷ talaimakaṉ tirukkaḻip pālai nirumala ṉeṉaturai taṉaturai yāka nīṟaṇin tēṟukan tēṟiya nimalaṉ karumalark kamaḻcuṉai nīḷmalark kuvaḷai katirmulai yiḷaiyavar matimukat tulavum irumalart taṇpoykai ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங் காலனாம் எனதுரை தனதுரை யாகக் கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள் நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும் ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.

pālaṉām viruttaṉām pacupati tāṉām paṇṭuveṅ kūṟṟutait taṭiyavark karuḷuṅ kālaṉām eṉaturai taṉaturai yākak kaṉaleri yaṅkaiyil ēntiya kaṭavuḷ nīlamā malarccuṉai vaṇṭupaṇ ceyya nīrmalark kuvaḷaikaḷ tātuviṇ ṭō ṅkum ēlamnā ṟumpoḻil ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷ vatiyalpē.

Report an error

உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல் விளம்புவா னெனதுரை தனதுரை யாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன் குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

uḷaṅkoḷvār ucciyār kacciyē kampaṉ oṟṟiyū ruṟaiyumaṇ ṇāmalai yaṇṇal viḷampuvā ṉeṉaturai taṉaturai yāka veḷḷanīr viricaṭait tāṅkiya vimalaṉ kuḷampuṟak kalaituḷa malaikaḷuñ cilampak koḻuṅkoṭi yeḻunteṅkuṅ kūviḷaṅ koḷḷa iḷampiṟai tavaḻpoḻil ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில் வானுமா மெனதுரை தனதுரை யாக வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன் கானமான் வெருவுறக் கருவிர லூகங் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல் ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

tēṉumā yamutamāyt teyvamun tāṉāyt tīyoṭu nīruṭaṉ vāyuvān teriyil vāṉumā meṉaturai taṉaturai yāka variyarā varaikkacait tuḻitaru maintaṉ kāṉamāṉ veruvuṟak karuvira lūkaṅ kaṭuvaṉō ṭukaḷumūr kaṟkaṭuñ cāral ēṉamā ṉuḻitarum ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர் தனமிலா னெனதுரை தனதுரை யாகத் தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன் புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும் இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

maṉamulām aṭiyavark karuḷpuri kiṉṟa vakaiyalāṟ palitirin tuṇpilāṉ maṟṟōr taṉamilā ṉeṉaturai taṉaturai yākat tāḻcaṭai yiḷamati tāṅkiya talaivaṉ puṉamelām aruvikaḷ iruvicēr muttam poṉṉoṭu maṇikoḻit tīṇṭivan teṅkum iṉamelām aṭaikarai ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் ஊருளான் எனதுரை தனதுரை யாக ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன் பாருளார் பாடலோ டாடல றாத பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும் ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

nīruḷāṉ tīyuḷāṉ antarat tuḷḷāṉ niṉaippavar maṉattuḷāṉ nittamā ēttum ūruḷāṉ eṉaturai taṉaturai yāka oṟṟaiveḷ ḷēṟukan tēṟiya voruvaṉ pāruḷār pāṭalō ṭāṭala ṟāta paṇmuraṉ ṟañciṟai vaṇṭiṉam pāṭum ēruḷār paimpoḻil ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில் ஆருலா மெனதுரை தனதுரை யாக ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல் வாருலா நல்லன மாக்களுஞ் சார வாரண முழிதரும் மல்லலங் கானல் ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

vērulā māḻkaṭal varutirai yilaṅkai vēntaṉa taṭakkaikaḷ aṭarttava ṉulakil ārulā meṉaturai taṉaturai yāka ākamō raravaṇin tuḻitaru maṇṇal vārulā nallaṉa mākkaḷuñ cāra vāraṇa muḻitarum mallalaṅ kāṉal ērulām poḻilaṇi ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா உளமழை யெனதுரை தனதுரை யாக வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன் வளமழை யெனக்கழை வளர்துளி சோர மாசுண முழிதரு மணியணி மாலை இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

kiḷarmaḻai tāṅkiṉāṉ nāṉmuka muṭaiyōṉ kīḻaṭi mēlmuṭi tērntaḷak killā uḷamaḻai yeṉaturai taṉaturai yāka voḷḷaḻal aṅkaiyi lēntiya voruvaṉ vaḷamaḻai yeṉakkaḻai vaḷartuḷi cōra mācuṇa muḻitaru maṇiyaṇi mālai iḷamaḻai tavaḻpoḻil ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள் பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப் பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான் கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக் களிமுக வண்டொடு தேனின முரலும் இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

uriñcaṉa kūṟaikaḷ uṭampiṉa rāki uḻitaru camaṇaruñ cākkiyap pēykaḷ peruñcelva ṉeṉaturai taṉaturai yākap peypalik keṉṟuḻal periyavar perumāṉ karuñcuṉai mullainaṉ poṉṉaṭai vēṅkaik kaḷimuka vaṇṭoṭu tēṉiṉa muralum iruñcuṉai malkiya ilampaiyaṅ kōṭṭūr irukkaiyāp pēṇiyeṉ eḻilkoḷva tiyalpē.

Report an error

கந்தனை மலிகனை கடலொலி யோதங் கானலங் கழிவளர் கழுமல மென்னும் நந்தியா ருறைபதி நால்மறை நாவன் நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன் எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர் இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய் வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.

kantaṉai malikaṉai kaṭaloli yōtaṅ kāṉalaṅ kaḻivaḷar kaḻumala meṉṉum nantiyā ruṟaipati nālmaṟai nāvaṉ naṟṟamiḻk kiṉtuṇai ñāṉacam pantaṉ entaiyār vaḷanakar ilampaiyaṅ kōṭṭūr icaiyoṭu kūṭiya pattumval lārpōy ventuyar keṭukiṭa viṇṇava rōṭum vīṭupeṟ ṟimmaiyiṉ vīṭeḷi tāmē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).