Skip to content

திருமுறை 1 — திருக்கழுமலம் · திருக்கழுமலம்

tirukkaḻumalam

tirukkaḻumalam

tirukkaḻumalam, from book 1 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 1 of the Tirumurai.

அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் மயிலுறு சாயல் வனமுலை யொருபால் மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர் பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப் பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர் கயிலையும் பொதியிலும் இடமென வுடையார் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

ayiluṟu paṭaiyiṉar viṭaiyiṉar muṭimēl aravamum matiyamum viraviya aḻakar mayiluṟu cāyal vaṉamulai yorupāl makiḻpavar vāṉiṭai mukilpulku miṭaṟar payilvuṟu caritaiyar erutukan tēṟip pāṭiyu māṭiyum palikoḷvar valicēr kayilaiyum potiyilum iṭameṉa vuṭaiyār kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர் கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர் பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும் படர்சடை யடிகளார் பதியத னயலே வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும் மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற் கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

koṇṭalum nīlamum puraitiru miṭaṟar koṭumuṭi yuṟaipavar paṭutalaik kaiyar paṇṭala rayaṉciram arintavar poruntum paṭarcaṭai yaṭikaḷār patiyata ṉayalē vaṇṭalum vaṅkamuñ caṅkamuñ cuṟavum maṟikaṭal tiraikoṇarn teṟṟiya karaimēṟ kaṇṭaluṅ kaitaiyum neytaluṅ kulavuṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர் பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

eṇṇiṭai yoṉṟiṉar iraṇṭiṉa ruruvam eriyiṭai mūṉṟiṉar nāṉmaṟai yāḷar maṇṇiṭai aintiṉar āṟiṉa raṅkam vakuttaṉa rēḻicai eṭṭiruṅ kalaicēr paṇṇiṭai yoṉpatum uṇarntavar pattar pāṭiniṉ ṟaṭitoḻa mataṉaṉai vekuṇṭa kaṇṇiṭaik kaṉaliṉar karutiya kōyil kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித் திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள் தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

eriyoru karattiṉar imaiyavark kiṟaivar ēṟukan tēṟuvar nīṟumey pūcit tiritaru miyalpiṉar ayalavar puraṅkaḷ tīyeḻa viḻittaṉar vēypurai tōḷi varitaru kaṇṇiṇai maṭavara lañca mañcuṟa nimirntatōr vaṭivoṭum vanta kariyuri maruviya aṭikaḷuk kiṭamāṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர் பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற் படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம் நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம் நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக் காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

ūretirn tiṭupali talaikala ṉāka uṇpavar viṇpolin tilaṅkiya vuruvar pāretirn taṭitoḻa viraitaru mārpiṟ paṭaara vāmaiyak kaṇintavark kiṭamām nīretirn tiḻimaṇi nittila muttam niraicori caṅkamo ṭoṇmaṇi varaṉṟik kāretirn tōtamvaṉ tiraikaraik keṟṟuṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப் பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த பேரரு ளாளனார் பேணிய கோயில் பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ் சாந்தமு மேந்திய கையின ராகிக் கன்னியர் நாடொறும் வேடமே பரவுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

muṉṉuyirt tōṟṟamum iṟutiyu māki muṭiyuṭai amararkaḷ aṭipaṇin tēttap piṉṉiya caṭaimicaip piṟainiṟai vitta pēraru ḷāḷaṉār pēṇiya kōyil poṉṇiyal naṟumalar puṉaloṭu tūpañ cāntamu mēntiya kaiyiṉa rākik kaṉṉiyar nāṭoṟum vēṭamē paravuṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம் நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம் மலைக்கணித் தாவர வன்றிரை முரல மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக் கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

kolaikkaṇit tāvaru kūṟṟutai ceytār kuraikaḻal paṇintavark karuḷiya poruḷiṉ nilaikkaṇit tāvara niṉaiyaval lārtam neṭuntuyar tavirttavem nimalaruk kiṭamām malaikkaṇit tāvara vaṉṟirai murala matuviri puṉṉaikaḷ mutteṉa varumpak kalaikkaṇaṅ kāṉaliṉ nīḻalil vāḻuṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன் பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள் பயம்பல படவடர்த் தருளிய பெருமான் பரிவொடு மினிதுறை கோயில தாகும் வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும் வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக் கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

puyampala vuṭaiyateṉ ilaṅkaiyar vēntaṉ poruvarai yeṭuttavaṉ poṉmuṭi tiṇṭō ḷ payampala paṭavaṭart taruḷiya perumāṉ parivoṭu miṉituṟai kōyila tākum viyaṉpala viṇṇiṉum maṇṇiṉu meṅkum vēṟuvē ṟukaṅkaḷiṟ peyaruḷa teṉṉak kayampala paṭakkaṭaṟ ṟiraikaraik keṟṟuṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம் பலங்களால் நேடியும் அறிவரி தாய பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில் மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும் மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

vilaṅkaloṉ ṟēntivaṉ maḻaitaṭut tōṉum veṟikamaḻ tāmarai yōṉumeṉ ṟivartam palaṅkaḷāl nēṭiyum aṟivari tāya pariciṉaṉ maruviniṉ ṟiṉituṟai kōyil malaṅkivaṉ ṟiraivarai eṉapparan teṅkum maṟikaṭa lōṅkiveḷ ḷippiyuñ cumantu kalaṅkaṭaṉ carakkoṭu nirakkavan tēṟuṅ kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர் நோம்பல தவமறி யாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச் சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத் தையலா ரிடுபலி வையகத் தேற்றுக் காம்பன தோளியொ டினிதுறை கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

āmpala tavamuyaṉ ṟaṟavurai collum aṟivilāc camaṇarun tēraruṅ kaṇicēr nōmpala tavamaṟi yātavar noṭinta mūturai koḷkilā mutalvar tammēṉic cāmpalum pūciveṇ ṭalaikala ṉākat taiyalā riṭupali vaiyakat tēṟṟuk kāmpaṉa tōḷiyo ṭiṉituṟai kōyil kaḻumalam niṉaiyanam viṉaikari caṟumē.

Report an error

கலிகெழு பாரிடை யூரென வுளதாங் கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல் வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர் வருங்கலை ஞானசம் பந்தன தமிழின் ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும் உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல் மெலிகெழு துயரடை யாவினை சிந்தும் விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.

kalikeḻu pāriṭai yūreṉa vuḷatāṅ kaḻumalam virumpiya kōyilkoṇ ṭavarmēl valikeḻu maṉammika vaittavaṉ maṟaicēr varuṅkalai ñāṉacam pantaṉa tamiḻiṉ olikeḻu mālaiyeṉ ṟuraiceyta pattum uṇmaiyi ṉālniṉain tēttaval lārmēl melikeḻu tuyaraṭai yāviṉai cintum viṇṇava rāṟṟaliṉ mikappeṟu vārē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).