Skip to content

Tirumurai 8.1.4.15

இருள் கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி களம் கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி

iruḷ keṭa aruḷum iṟaivā pōṟṟi taḷarntēṉ aṭiyēṉ tamiyēṉ pōṟṟi kaḷam koḷak karuta aruḷāy pōṟṟi añcēl eṉṟu iṅku aruḷāy pōṟṟi nañcē amutā nayantāy pōṟṟi attā pōṟṟi aiyā pōṟṟi nittā pōṟṟi nimalā pōṟṟi pattā pōṟṟi pavaṉē pōṟṟi periyāy pōṟṟi pirāṉē pōṟṟi ariyāy pōṟṟi amalā pōṟṟi maṟaiyōr kōla neṟiyē pōṟṟi muṟaiyō tariyēṉ mutalvā pōṟṟi

Editor's note: Lines 169–180 of the complete continuous poem 8.1.4; a reading passage, not a separately numbered stanza.

Report an error