Tirumurai 8.1.4.5
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும் சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தம்தம் தங்களே அமைவது ஆக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதில் பெருமாயை எனைப்பல சூழவும் தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகு அது போலத்
paṟṟi aḻaittup pataṟiṉar perukavum viratamē param āka vētiyarum caratam ākavē cāttiram kāṭṭiṉar camaya vātikaḷ tamtam taṅkaḷē amaivatu āka araṟṟi malaintaṉar miṇṭiya māyā vātam eṉṉum caṇṭa mārutam cuḻintu aṭittut tāarttu ulōkāya tameṉum oḷ tiṟappāmpiṉ kalā pētatta kaṭuviṭam eyti atil perumāyai eṉaippala cūḻavum tappāmē tām piṭittatu caliyāt taḻalatu kaṇṭa meḻuku atu pōlat
Editor's note: Lines 49–60 of the complete continuous poem 8.1.4; a reading passage, not a separately numbered stanza.