Skip to content

திருமுறை 8 — புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் · புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்

puṇarccippattu -attuvita ilakkaṇam

puṇarccippattu -attuvita ilakkaṇam

puṇarccippattu -attuvita ilakkaṇam, from book 8 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 8 of the Tirumurai.

சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

cuṭarpoṟkuṉṟait tōḷāmuttai vāḷā toḻumpu kantu kaṭaipaṭṭēṉai āṇṭukoṇṭa karuṇālayaṉaik karumāl piramaṉ taṭaipaṭ ṭiṉṉuñ cāra māṭṭāt taṉṉait tanta eṉṉā ramutaip puṭaipaṭ ṭiruppa teṉṟukollōeṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப் போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

āṟṟa killēṉ aṭiyēṉ aracē avaṉi talattataip pulaṉāya cēṟṟi laḻuntāc cintaiceytu civaṉem perumāṉeṉṟētti ūṟṟu maṇalpōl nekkunek kuḷḷē uruki ōlamiṭṭup pōṟṟiniṟpa teṉṟukollōeṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன் வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப் பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

nīṇṭamālum ayaṉum veruva nīṇṭa neruppai viruppilēṉai āṇṭukoṇṭa eṉ āramutai aḷḷuṟuḷḷat taṭiyārmuṉ vēṇṭun taṉaiyum vāyviṭṭalaṟi viraiyār malar tūvip pūṇṭu kiṭappa teṉṟu kollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

allik kamalat tayaṉum mālum allā tavarum amararkōṉuñ collip paravum nāmat tāṉaic collum poruḷum iṟanta cuṭarai nellik kaṉiyait tēṉaip pālai niṟaiyiṉ amutai amutiṉ cuvaiyaip pullip puṇarva teṉṟukollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

tikaḻat tikaḻum aṭiyum muṭiyuṅ kāṇpāṉ kīḻmēl ayaṉum mālum akaḻap paṟantuṅ kāṇa māṭṭā ammāṉ immā nilamuḻutum tikaḻap paṇikoṇṭeṉṉai āṭkoṇṭu ā ā eṉṟa nīrmaiyelām pukaḻap peṟuva teṉṟu kollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

parintu vantu paramāṉantam paṇṭē aṭiyēṟ karuḷ ceyyap pirintu pōntu perumā nilattil arumā luṟṟēṉ eṉṟeṉṟu corinta kaṇṇīr coriya uḷnīr urōmañ cilirppa ukantaṉpāyp purintu niṟpateṉṟu kōllō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம் கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

niṉaiyappiṟaruk kariya neruppai nīraik kālai nilaṉai vicumpait taṉaiyop pārai yillāta taṉiyai nōkkit taḻaittut taḻu ttakaṇṭam kaṉaiyap kaṇṇīr aruvi pāyak kaiyuṅ kūppik kaṭimalarāṟ puṉaiyap peṟuvateṉṟu kollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

nekkunekkuḷ uruki uruki niṉṟum iruntum kiṭantum eḻuntum nakkum aḻutum toḻutum vāḻtti nāṉāvitattāṟ kūttum naviṟṟic cekkarpōlum tirumēṉitikaḻa nōkkic cilirci lirttup pukku niṟpa teṉṟukollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப் போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

tātāy mūvē ḻulakukkuṅ tāyē nāyēṉ taṉaiyāṇṭa pētāy piṟavip piṇikkōr maruntē peruntēṉ pilka eppōtum ētā maṇiyē eṉṟeṉṟētti iravum pakalum eḻilārpātap pōtāyn taṇaivateṉṟu kollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.

kāppāy paṭaippāy karappāy muḻutuṅ kaṇṇār vicumpiṉ viṇṇōrkkellām muppāya mūvā mutalāy niṉṟa mutalvā muṉṉē eṉaiyāṇṭa pārppāṉē emparamā eṉṟu pāṭip pāṭip paṇintu pātap pūppōtaṇaiva teṉṟu kollō eṉ pollā maṇiyaip puṇarntē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).