Skip to content

திருமுறை 8 — மதியுடம்படுத்தல் · மதியுடம்படுத்தல்

matiyuṭampaṭuttal

matiyuṭampaṭuttal

matiyuṭampaṭuttal, from book 8 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 8 of the Tirumurai.

எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்(று) ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானைஉன் னாரின்என்கண் தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே

eḷitaṉ(ṟu) iṉikkaṉi vāyvalli pullal eḻilmatikkīṟ(ṟu) oḷiceṉṟa ceñcaṭaik kūttap pirāṉaiuṉ ṉāriṉeṉkaṇ teḷiceṉṟa vēṟkaṇ varuvitta cellalel lāmteḷivittu aḷiceṉṟa pūṅkuḻal tōḻikku vāḻi aṟivippaṉē

Report an error

குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிக்கடைக்கண் உவளைத் தனதுயிர் என்றது தன்னோ(டு) உவமையில்லா தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல் துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே

kuvaḷaik karuṅkaṇ koṭiyēr iṭaiyik koṭikkaṭaikkaṇ uvaḷait taṉatuyir eṉṟatu taṉṉō(ṭu) uvamaiyillā tavaḷaittaṉ pālvaitta ciṟṟam palattāṉ aruḷilarpōl tuvaḷat talaivanta iṉṉaliṉ ṉēyiṉic colluvaṉē

Report an error

இருங்களி யாய்இன்(று) யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர் மருங்(கு)அளி யாஅனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்(கு) ஒருங்(கு)அளி யார்ப்ப உமிழ்மும் மதத்(து)இரு கோட்(டு)ஒருநீள் கருக்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே

iruṅkaḷi yāyiṉ(ṟu) yāṉciṟu māppaiṉ pampaṇivōr maruṅ(ku)aḷi yāaṉal āṭaval lōṉtillai yāṉmalaiyīṅ(ku) oruṅ(ku)aḷi yārppa umiḻmum matat(tu)iru kōṭ(ṭu)orunīḷ karukkaḷi yārmata yāṉaiyuṇ ṭōvarak kaṇṭatuvē

Report an error

கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர் இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின் மருங்கண் அனையதுண் டோவந்த(து) ஈங்கொரு வான்கலையே

karuṅkaṇ ṇaṉaiyaṟi yāmainiṉ ṟōṉtillaik kārppoḻilvāy varuṅkaḷ naṉaiyavaṇ ṭāṭum vaḷariḷa valliyaṉṉīr iruṅkaṇ aṉaiya kaṇaiporu puṇpuṇa rippuṉattiṉ maruṅkaṇ aṉaiyatuṇ ṭōvanta(tu) īṅkoru vāṉkalaiyē

Report an error

சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார் குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தான்அணியும் கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச் சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் செல்நெறியே

cilampaṇi koṇṭacēr cīṟaṭi paṅkaṉtaṉ cīraṭiyār kulampaṇi koḷḷa eṉaikkoṭut tōṉkoṇṭu tāṉaṇiyum kalampaṇi koṇṭiṭam ampalam koṇṭavaṉ kārkkayilaic cilampaṇi koṇṭanum cīṟūrk(ku) uraimiṉkaḷ celneṟiyē

Report an error

ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன் கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை இரும்கடம் மூடும் பொழில்எழில் கொம்பர்அன் னீர்களின்னே வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கு

oruṅ(ku)aṭa mūveyil oṟṟaik kaṇaikoḷciṟ ṟampalavaṉ karuṅkaṭam mūṉṟuku nālvāyk kariyurit tōṉkayilai irumkaṭam mūṭum poḻileḻil komparaṉ ṉīrkaḷiṉṉē varuṅkaḷtam ūrpakarn tālpaḻi yōiṅku vāḻpavarkku

Report an error

தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த காரென்ன ஆரும் கறைமிடற்(று) அம்பல வன்கயிலை ஊரென்ன என்னவும் வாய்திற வீர்ஒழி வீர்பழியேல் பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே

tāreṉṉa vōṅkum caṭaimuṭi mēltaṉit tiṅkaḷvaitta kāreṉṉa ārum kaṟaimiṭaṟ(ṟu) ampala vaṉkayilai ūreṉṉa eṉṉavum vāytiṟa vīroḻi vīrpaḻiyēl pēreṉṉa vōurai yīrvirai yīrṅkuḻaṟ pētaiyarē

Report an error

இரதம் உடைய நடம்ஆட்(டு) உடையவர் எம்முடையர் வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார் விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல் சரத முடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே

iratam uṭaiya naṭamāṭ(ṭu) uṭaiyavar emmuṭaiyar varatam uṭaiya aṇitillai aṉṉavar ippuṉattār viratam uṭaiyar viruntoṭu pēcciṉmai mīṭṭataṉṟēl carata muṭaiyar maṇivāy tiṟakkil calakkeṉpavē

Report an error

வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல் தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தன(து) அம்பலம்போல் மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர் பொன்னிற அல்குலுக்(கு) ஆமோ மணிநிறப் பூந்தழையே

viṉṉiṟa vāṇutal vēlniṟak kaṇmel liyalaimallal taṉṉiṟam oṉṟil iruttiniṉ ṟōṉtaṉa(tu) ampalampōl miṉṉiṟa nuṇṇiṭaip pēreḻil veṇṇakaip paintoṭiyīr poṉṉiṟa alkuluk(ku) āmō maṇiniṟap pūntaḻaiyē

Report an error

கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து) ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல்முற் றா(து)அன்(று) இலங்கையர்கோன் மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச் சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே

kalaikkīḻ akalalkul pārama(tu) āramkaṇ ārn(tu)ilaṅku mulaikkīḻc ciṟitiṉṟi niṟṟalmuṟ ṟā(tu)aṉ(ṟu) ilaṅkaiyarkōṉ malaikkīḻ viḻacceṟṟa ciṟṟam palavarvaṇ pūṅkayilaic cilaikkīḻk kaṇaiyaṉṉa kaṇṇīr etunuṅkaḷ ciṟṟiṭaiyē

Report an error

Illustration: Verse & Place (Project-owned).