Skip to content

திருமுறை 8 — குறை நயப்புக் கூறல் · குறை நயப்புக் கூறல்

kuṟai nayappuk kūṟal

kuṟai nayappuk kūṟal

kuṟai nayappuk kūṟal, from book 8 of the Tirumurai.

8 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 8 of the Tirumurai.
←
Go to verse
→

தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித் தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர் மாதே புனத்திடை வாளா மருவர்வந்(து) யாதும்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்தியே

tātēy malarkkuñci añciṟai vaṇṭutaṉ tēṉparukit tētē eṉumtillai yōṉcēy eṉacciṉ vēloruvar mātē puṉattiṭai vāḷā maruvarvan(tu) yātumcollār yātē ceyattak katumatu vārkuḻal ēntiyē

Report an error

வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத் தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இத் தேம்புனமே

varicēr taṭaṅkaṇṇi mammarkaim mikkeṉṉa māyaṅkōlō ericēr taḷireṉṉa mēṉiyeṉ īrntaḻai yaṉpuliyūrp puricēr caṭaiyōṉ putalvaṉkol pūṅkaṇai vēḷkoleṉṉat teriyēm uraiyaṉ piriyāṉ oruvaṉit tēmpuṉamē

Report an error

நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான் சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின் வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண்(டு) அனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே

nīkaṇ ṭaṇaiyeṉiṉ vāḻalai nēriḻai ampalattāṉ cēykaṇ ṭaṉai yaṉceṉ ṟāṅkōr alavaṉtaṉ cīrppeṭaiyiṉ vāykaṇ ṭaṉaiyatōr nāvaṟ kaṉinaṉi nalkakkaṇṭu pēykaṇ(ṭu) aṉaiyatoṉ ṟākiniṉ ṟāṉap peruntakaiyē

Report an error

சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே

caṅkam tarumutti yāmpeṟa vāṉvaḻi tāṉkeḻumip poṅkum puṉaṟkaṅkai tāṅkip polikaḻip pāṟulavu tuṅka malitalai yēntaliṉ ēntiḻai tollaippaṉmā vaṅkam malikali nīrtillai vāṉavaṉ nērvarumē

Report an error

புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து) இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன் ஈரடிக்(கு) என்இரண்டு கரங்கள்தந் தான் ஒன்று காட்டமற்(று) ஆங்கதும் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே

puraṅkaṭan tāṉaṭi kāṇpāṉ puviviṇṭu pukkaṟiyā(tu) iraṅki(ṭu)en tāyeṉ(ṟu) irappattaṉ īraṭik(ku) eṉiraṇṭu karaṅkaḷtan tāṉ oṉṟu kāṭṭamaṟ(ṟu) āṅkatum kāṭṭiṭeṉṟu varaṅkiṭan tāṉtillai ampala muṉṟil am māyavaṉē

Report an error

உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான் கள்ளப் படிறர்க்(கு) அருளா அரன்தில்லை காணலர்போல் கொள்ளப் படாது மறப்ப(து) அறிவிலென் கூற்றுக்களே

uḷḷap paṭuvaṉa vuḷḷi uraittak kavarkkuraittu meḷḷap paṭiṟu tuṇituṇi yēlitu vēṇṭuvalyāṉ kaḷḷap paṭiṟark(ku) aruḷā araṉtillai kāṇalarpōl koḷḷap paṭātu maṟappa(tu) aṟivileṉ kūṟṟukkaḷē

Report an error

மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில் ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்(று) உரையுளதால் தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான் பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே

mēviam tōl uṭuk kumtillai yāṉpoṭi meyyiṟkaiyil ōviyam tōṉṟum kiḻiniṉ eḻileṉ(ṟu) uraiyuḷatāl tūviyam tōkaiyaṉ ṉāyeṉṉa pāvamcol āṭalceyyāṉ pāvian tōpaṉai māmaṭal ēṟakkol pāvittatē

Report an error

பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய் என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார் சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே

poṉṉār caṭaiyōṉ puliyūr pukaḻār eṉappurinōy eṉṉāl aṟivillai yāṉoṉṟu uraikkilaṉ vantayalār coṉṉār eṉumit turikatuṉ ṉāmait tuṇaimaṉaṉē eṉāḻ tuyarvallai yēṟcollu nīrmai iṉiyavarkkē

Report an error

Illustration: Verse & Place (Project-owned).