Skip to content

Tirumurai 11.300.13

பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறு தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள் . ஆமென்பார் அன்றென்பார் ஐயறுவார் கையெறிவார்

poṟkalacat tuḷḷāl maṇinīr mukañcērtti naṟperuṅ kōlam mikappuṉaintu - poṟpuṭaiya pētai mutalākap pēriḷampeṇ īṟāka mātaravar cēra makiḻntīṇṭic - cōticēr cūḷikaiyuñ cūṭṭuñ cuḷikaiyuñ cuṭṭikaiyum vāḷikaiyum poṟṟōṭum miṉvilaka - māḷikaiyiṉ mēlēṟi niṉṟu toḻuvār tuyarkoṇṭu mālēṟi niṉṟu mayaṅkuvār - nūlēṟu tāmamē tantu caṭātāri nalkāṉēl yāmamēl emmai aṭumeṉpār - kāmavēḷ . āmeṉpār aṉṟeṉpār aiyaṟuvār kaiyeṟivār

Editor's note: Lines 145–156 of the complete continuous poem 11.300; a reading passage, not a separately numbered stanza.

Report an error