Skip to content

Tirumurai 11.300.7

விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார் கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய . சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் – மன்னிய மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடைய சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்

viṇṇōr paṇiya uyarnta viḷaṅkoḷicēr veṇṇōr maḻaviṭaiyai mēṟkoṇṭāṅ - keṇṇār karuttuṭaiya pāriṭaṅkaḷ kāppottuc ceyyat tirukkaṭaikaḷ ēḻkaḻinta pōtil - cerukkuṭaiya . cēṉā patimayilmēl muṉcella yāṉaimēl āṉāppōr intiraṉ piṉpaṭara - āṉāta aṉṉattē ēṟi ayaṉvalappāl kaipōtak kaṉṉavilun tiṇṭōṭ karuṭaṉmēl – maṉṉiya māliṭappāṟ cella malarār kaṇaiaintu mēliṭappāl meṉkaruppu villiṭappāl - ēlvuṭaiya caṅkaṇaiyum muṉkait taṭamulaiyār mēl eyvāṉ

Editor's note: Lines 73–84 of the complete continuous poem 11.300; a reading passage, not a separately numbered stanza.

Report an error