Skip to content

Tirumurai 11.500.7

அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப் போர்த்த இறைபோற்றி - தொடுத்தமைத்த நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க் கன் றால்நிழற்கீழ் வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம் எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசைய உடல்திரியா நின்று - வசையினால் பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால் வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க்

aṭarttiraittup pāyum aṭukaḷiṟṟaip pōka eṭutturittup pōrtta iṟaipōṟṟi - toṭuttamaitta nāṇmālai koṇṭaṇinta nālvark kaṉ ṟālniḻaṟkīḻ vāṇmālai ākum vakaiyaruḷit - tōḷmālai viṭṭilaṅkat takkiṇamē nōkki viyantakuṇam eṭṭilaṅka vaitta iṟaipōṟṟi - oṭṭi vicaiyaṉ vicaiyaḷappāṉ vēṭuruvam āki acaiya uṭaltiriyā niṉṟu - vacaiyiṉāl pēcu patappāṟ piḻaipoṟuttu maṟṟavaṟkup pācupatam īnta patampōṟṟi - nēcattāl vāyilnīr koṇṭu makuṭat tumiḻntiṟaicci āyacīr pōṉakamā aṅkamaittu - tūyacīrk

Editor's note: Lines 73–84 of the complete continuous poem 11.500; a reading passage, not a separately numbered stanza.

Report an error