நீடு மிருவினைகள் நேராக நேராதல் கூடுமிறை சத்தி கொளல்.
nīṭu miruviṉaikaḷ nērāka nērātal kūṭumiṟai catti koḷal.
அறியும் நெறி · அறியும் நெறி
aṟiyum neṟi
Ten source-numbered couplets of the Tiruvarutpayan.
10 versesTamil with transliteration
நீடு மிருவினைகள் நேராக நேராதல் கூடுமிறை சத்தி கொளல்.
nīṭu miruviṉaikaḷ nērāka nērātal kūṭumiṟai catti koḷal.
ஏக னநேக னிருள்கரும மாயையிரண் டாகவிவை யாறாதி யில்.
ēka ṉanēka ṉiruḷkaruma māyaiyiraṇ ṭākavivai yāṟāti yil.
செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு முய்வானு முளனென் றுணர்.
ceyvāṉuñ ceyviṉaiyuñ cērpayaṉuñ cērppavaṉu muyvāṉu muḷaṉeṉ ṟuṇar.
ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர் தானுணர்வோ டொன்றாந் தரம்.
ūṉuyirāl vāḻu morumaittē yūṉoṭuyir tāṉuṇarvō ṭoṉṟān taram.
தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும் பொன்னிறம்போல் மன்னிறமிப் பூ.
taṉṉiṟamum paṉṉiṟamun tāṉāṅkaṟ ṟaṉmaitarum poṉṉiṟampōl maṉṉiṟamip pū.
கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை யுண்டில்லை யல்ல தொளி.
kaṇṭollai kāṇuneṟi kaṇṇuyir nāppaṇṇilai yuṇṭillai yalla toḷi.
புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயல தாக மதி.
puṉceyali ṉōṭu pulaṉceyalpōl niṉceyalai maṉceyala tāka mati.
ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப் பாராதே பார்த்ததனைப் பார்.
ōrātē voṉṟaiyumuṟ ṟuṉṉātē nīmuntip pārātē pārttataṉaip pār.
களியே மிகுபுல மாய்க்கருதி ஞான வொளியே வொளியா வொளி.
kaḷiyē mikupula māykkaruti ñāṉa voḷiyē voḷiyā voḷi.
கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் கொண்டபடி யேகொண் டிரு.
kaṇṭapaṭi yēkaṇṭu kāṇāmai kāṇāmaṟ koṇṭapaṭi yēkoṇ ṭiru.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).