Skip to content

பத்து 3 · திருமொழி 1 · பத்து 3 · திருமொழி 1

Centum 3, Decad 1

pattu 3 · tirumoḻi 1

A source-numbered decad of Nammalvar’s Tiruvaymoli.

11 versesTamil with transliteration

A lotus and conch offered to Vishnu beside a Tamil manuscript.

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன் கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே

muṭic cōtiyāy uṉatu mukac cōti malarntatuvō? aṭic cōti nī niṉṟa tāmaraiyāy alarntatuvō? paṭic cōti āṭaiyoṭum pal kalaṉāy niṉ paim poṉ kaṭic cōti kalantatuvō? tirumālē kaṭṭuraiyē

Report an error

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ

kaṭṭuraikkil tāmarai niṉ kaṇ pātam kai ovvā cuṭṭu uraitta naṉ poṉ uṉ tirumēṉi oḷi ovvātu oṭṭu uraittu iv ulaku uṉṉaip pukaḻvu ellām perumpālum paṭṭuraiyāy puṟku eṉṟē kāṭṭumāl parañcōtī

Report an error

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே

parañcōti nī paramāy niṉ ikaḻntu piṉ maṟṟu ōr param cōti iṉmaiyiṉ paṭi ōvi nikaḻkiṉṟa parañcōti niṉṉuḷḷē paṭar ulakam paṭaitta em parañcōti kōvintā paṇpu uraikkamāṭṭēṉē

Report an error

மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின் மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே?

māṭṭātē ākilum im malar talai mā ñālam niṉ māṭṭu āya malar puraiyum tiruvuruvam maṉam vaikka māṭṭāta pala camaya mati koṭuttāy malart tuḻāy māṭṭē nī maṉam vaittāy mā ñālam varuntātē?

Report an error

வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய் வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?

varuntāta arum tavatta malar katiriṉ cuṭar uṭampu āy varuntāta ñāṉam āy varampu iṉṟi muḻutu iyaṉṟāy varum kālam nikaḻ kālam kaḻi kālam āy ulakai oruṅkāka aḷippāy cīr eṅku ulakka ōtuvaṉē?

Report an error

ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும் சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே?

ōtuvār ōttu ellām ev ulakattu ev evaiyum cātuvāy niṉ pukaḻiṉ takai allāl piṟitu illai pōtu vāḻ puṉam tuḻāy muṭiyiṉāy pūviṉmēl mātu vāḻ mārpiṉāy eṉ colli yāṉ vāḻttuvaṉē?

Report an error

வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய் கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே?

vāḻttuvār palar āka niṉṉuḷḷē nāṉmukaṉai mūḻtta nīr ulaku ellām paṭai eṉṟu mutal paṭaittāy kēḻtta cīr araṉ mutalāk kiḷar teyvamāyk kiḷarntu cūḻttu amarar tutittāl uṉ tol pukaḻ mācūṇātē?

Report an error

மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய் மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே?

mācūṇāc cuṭar uṭampuāy malarātu kuviyātu mācūṇā ñāṉam āy muḻutum āy muḻutu iyaṉṟāy mācūṇā vāṉ kōlattu amarar kōṉ vaḻippaṭṭāl mācūṇā uṉa pātamalarc cōti maḻuṅkātē?

Report an error

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே?

maḻuṅkāta vain nutiya cakkara nal valattaiyāy toḻum kātal kaḷiṟu aḷippāṉ puḷ ūrntu tōṉṟiṉaiyē maḻuṅkāta ñāṉamē paṭai āka malar ulakil toḻumpāyārkku aḷittāl uṉ cuṭarc cōti maṟaiyātē?

Report an error

மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே?

maṟai āya nāl vētattuḷ niṉṟa malarc cuṭarē muṟaiyāl iv ulaku ellām paṭaittu iṭantu uṇṭu umiḻntu aḷantāy piṟai ēṟu caṭaiyāṉum nāṉmukaṉum intiraṉum iṟai ātal aṟintu ētta vīṟṟiruttal itu viyappē?

Report an error

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச் சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன் துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும் உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே

viyappu āya viyappu illā meyñ ñāṉa vētiyaṉaic cayap pukaḻār palar vāḻum taṭam kurukūrc caṭakōpaṉ tuyakku iṉṟit toḻutu uraitta āyirattuḷ ip pattum uyakkoṇṭu piṟappu aṟukkum oli munnīr ñālattē

Report an error

Illustration: Verse & Place (Project-owned).