Skip to content

பத்து 6 · திருமொழி 6 · பத்து 6 · திருமொழி 6

Centum 6, Decad 6

pattu 6 · tirumoḻi 6

A source-numbered decad of Nammalvar’s Tiruvaymoli.

11 versesTamil with transliteration

A lotus and conch offered to Vishnu beside a Tamil manuscript.

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு நீலக் கரு நிற மேக நியாயற்கு கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர் ஏலக் குழலி இழந்தது சங்கே

mālukku vaiyam aḷanta maṇāḷaṟku nīlak karu niṟa mēka niyāyaṟku kōlac centāmaraik kaṇṇaṟku eṉ koṅku alar ēlak kuḻali iḻantatu caṅkē

Report an error

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் மங்கை இழந்தது மாமை நிறமே

caṅku vil vāḷ taṇṭu cakkarak kaiyaṟku ceṅkaṉivāyc ceyya tāmaraik kaṇṇaṟku koṅku alar taṇ am tuḻāy muṭiyāṉukku eṉ maṅkai iḻantatu māmai niṟamē

Report an error

நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே

niṟam kariyāṉukku nīṭu ulaku uṇṭa tiṟam kiḷar vāyc ciṟuk kaḷvaṉ avaṟku kaṟaṅkiya cakkarak kaiyavaṉukku eṉ piṟaṅku irum kūntal iḻantatu pīṭē

Report an error

பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு மாடு உடை வையம் அளந்த மணாளற்கு நாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என் பாடு உடை அல்குல் இழந்தது பண்பே

pīṭu uṭai nāṉmukaṉaip paṭaittāṉukku māṭu uṭai vaiyam aḷanta maṇāḷaṟku nāṭu uṭai maṉṉarkkut tūtu cel nampikku eṉ pāṭu uṭai alkul iḻantatu paṇpē

Report an error

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு மண் புரை வையம் இடந்த வராகற்கு தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என் கண்புனை கோதை இழந்தது கற்பே

paṇpu uṭai vētam payanta paraṉukku maṇ purai vaiyam iṭanta varākaṟku teṇ puṉal paḷḷi em tēva pirāṉukku eṉ kaṇpuṉai kōtai iḻantatu kaṟpē

Report an error

கற்பகக் கா அன நல் பல தோளற்கு பொன் சுடர்க் குன்று அன்ன பூந் தண் முடியற்கு நல் பல தாமரை நாள் மலர்க் கையற்கு என் வில் புருவக்கொடி தோற்றது மெய்யே

kaṟpakak kā aṉa nal pala tōḷaṟku poṉ cuṭark kuṉṟu aṉṉa pūn taṇ muṭiyaṟku nal pala tāmarai nāḷ malark kaiyaṟku eṉ vil puruvakkoṭi tōṟṟatu meyyē

Report an error

மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே

mey amar pal kalaṉ naṉku aṇintāṉukku pai araviṉ aṇaip paḷḷiyiṉāṉukku kaiyoṭu kāl ceyya kaṇṇa pirāṉukku eṉ taiyal iḻantatu taṉṉuṭaic cāyē

Report an error

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என் வாசக் குழலி இழந்தது மாண்பே

cāyak kuruntam ocitta tamiyaṟku māyac cakaṭam utaitta maṇāḷaṟku pēyaip piṇampaṭap pāl uṇ pirāṉukku eṉ vācak kuḻali iḻantatu māṇpē

Report an error

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே

māṇpu amai kōlattu em māyak kuṟaḷaṟku cēṇ cuṭark kuṉṟu aṉṉa ceñcuṭar mūrttikku kāṇ perum tōṟṟattu em kākutta nampikku eṉ pūṇ puṉai meṉmulai tōṟṟatu poṟpē

Report an error

பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என் கற்பு உடையாட்டி இழந்தது கட்டே

poṟpu amai nīḷ muṭip pūn taṇ tuḻāyaṟku mal poru tōḷ uṭai māyap pirāṉukku niṟpaṉa pal uruvāy niṟkum māyaṟku eṉ kaṟpu uṭaiyāṭṭi iḻantatu kaṭṭē

Report an error

கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக் கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல் கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே

kaṭṭu eḻil cōlai nal vēṅkaṭavāṇaṉaik kaṭṭu eḻil teṉ kurukūrc caṭakōpaṉ col kaṭṭu eḻil āyirattu ip pattum vallavar kaṭṭu eḻil vāṉavar pōkam uṇpārē

Report an error

Illustration: Verse & Place (Project-owned).