Skip to content

பத்து 7 · திருமொழி 7 · பத்து 7 · திருமொழி 7

Centum 7, Decad 7

pattu 7 · tirumoḻi 7

A source-numbered decad of Nammalvar’s Tiruvaymoli.

11 versesTamil with transliteration

A lotus and conch offered to Vishnu beside a Tamil manuscript.

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன் ஆழி அம் கண்ண பிரான் திருக்கண்கள்கொலோ? அறியேன் சூழவும் தாமரை நாள் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே?

ēḻaiyar āvi uṇṇum iṇaik kūṟṟamkolō? aṟiyēṉ āḻi am kaṇṇa pirāṉ tirukkaṇkaḷkolō? aṟiyēṉ cūḻavum tāmarai nāḷ malar pōl vantu tōṉṟum kaṇṭīr tōḻiyarkāḷ aṉṉaimīr eṉ ceykēṉ tuyarāṭṭiyēṉē?

Report an error

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்? மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்? ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே

āṭṭiyum tūṟṟiyum niṉṟu aṉṉaimīr eṉṉai nīr nalintu eṉ? māṭṭu uyar kaṟpakattiṉ valliyō? koḻuntō? aṟiyēṉ? īṭṭiya veṇṇey uṇṭāṉ tirumūkku eṉatu āviyuḷḷē māṭṭiya val viḷakkiṉ cuṭarāy niṟkum vāliyatē

Report an error

வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்? கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே

vāliyatu ōr kaṉikol? viṉaiyāṭṭiyēṉ valviṉaikol? kōlam tiraḷ pavaḷak koḻum tuṇṭamkolō? aṟiyēṉ nīla neṭu mukil pōl tirumēṉi ammāṉ toṇṭaivāy ēlum ticaiyuḷ ellām vantu tōṉṟum eṉ iṉ uyirkkē

Report an error

இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன் தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே

iṉ uyirkku ēḻaiyarmēl vaḷaiyum iṇai nīla viṟkol maṉṉiya cīr mataṉaṉ karuppuc cilaikol mataṉaṉ taṉ uyirt tātai kaṇṇa perumāṉ puruvam? avaiyē eṉ uyir mēlaṉavāy aṭukiṉṟaṉa eṉṟum niṉṟē

Report an error

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்? அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே

eṉṟum niṉṟē tikaḻum ceyya īṉ cuṭar veṇ miṉṉukkol? aṉṟi eṉ āvi aṭum aṇi muttamkolō? aṟiyēṉ kuṉṟam eṭutta pirāṉ muṟuval eṉatu āvi aṭum oṉṟum aṟikiṉṟilēṉ aṉṉaimīr! eṉakku uyvu iṭamē

Report an error

உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் பை விடப் பாம்பு அணையான் திருக் குண்டலக் காதுகளே? கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே

uyvu iṭam ēḻaiyarkkum acurarkkum arakkarkaṭkum evviṭam eṉṟu ilaṅki makaram taḻaikkum taḷirkol pai viṭap pāmpu aṇaiyāṉ tiruk kuṇṭalak kātukaḷē? kaiviṭal oṉṟum iṉṟi aṭukiṉṟaṉa kāṇmiṉkaḷē

Report an error

காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலைகொல் சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே? கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே

kāṇmiṉkaḷ aṉṉaiyarkāḷ eṉṟu kāṭṭum vakai aṟiyēṉ nāḷ maṉṉu veṇ tiṅkaḷ kol nayantārkaṭku naccu ilaikol cēṇ maṉṉu nāl taṭam tōḷ perumāṉ taṉ tiru nutalē? kōḷ maṉṉi āvi aṭum koṭiyēṉ uyir kōḷ iḻaittē

Report an error

கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் கோள் இழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும் கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம் கொல் கண்ணன் கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே?

kōḷ iḻait tāmaraiyum koṭiyum pavaḷamum villum kōḷ iḻait taṇ muttamum taḷirum kuḷir vāṉ piṟaiyum kōḷ iḻaiyā uṭaiya koḻum cōtivaṭṭam kol kaṇṇaṉ kōḷ iḻai vāḷ mukamāy koṭiyēṉ uyir koḷkiṉṟatē?

Report an error

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? அன்று மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே

koḷkiṉṟa kōḷ iruḷaic cukirntiṭṭa koḻum curuḷiṉ uḷkoṇṭa nīla nal nūl taḻaikol? aṉṟu māyaṉ kuḻal viḷkiṉṟa pūn taṇ tuḻāy virai nāṟa vantu eṉ uyiraik kaḷkiṉṟavāṟu aṟiyīr aṉṉaimīr! kaḻaṟā niṟṟirē

Report an error

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே?

niṟṟi muṟṟattuḷ eṉṟu neritta kaiyar āy eṉṉai nīr cuṟṟiyum cūḻntum vaitir cuṭarc cōti maṇi niṟam āy muṟṟa im mūvulakum virikiṉṟa cuṭar muṭikkē oṟṟumai koṇṭatu uḷḷam aṉṉaimīr nacai eṉ nuṅkaṭkē?

Report an error

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே

kaṭku ariya piramaṉ civaṉ intiraṉ eṉṟu ivarkkum kaṭku ariya kaṇṇaṉaik kurukūrc caṭakōpaṉ coṉṉa uṭku uṭai āyirattuḷ ivaiyum oru pattum vallār uṭku uṭai vāṉavarōṭu uṭaṉāy eṉṟum māyārē

Report an error

Illustration: Verse & Place (Project-owned).