Skip to content

யுத்த காண்டம் — மருத்து மலைப் படலம் · யுத்த காண்டம் — மருத்து மலைப் படலம்

Yuddha Kandam — maruttu malaip paṭalam

yutta kāṇṭam — maruttu malaip paṭalam

The original Tamil verses of Kambar’s Ramayanam.

116 versesTamil with transliteration

A spreading tree, recalling the forest journeys in Kambar’s Ramayanam.

போயினள் தையல்; இப்பால் புரிக எனப் புலவர் கோமான் ஏயின கருமம் நோக்கி, எய்திய இலங்கை வேந்தன், மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட ஆயின ஆக்கி, தான் வந்து, அமர் பெருங் களத்தன் ஆனானான்,

pōyiṉaḷ taiyal; ippāl purika eṉap pulavar kōmāṉ ēyiṉa karumam nōkki, eytiya ilaṅkai vēntaṉ, mēyiṉa uṇavu koṇṭu, mīṇṭu, avai uṟaiyuḷ viṭṭa āyiṉa ākki, tāṉ vantu, amar peruṅ kaḷattaṉ āṉāṉāṉ,

Report an error

நோக்கினான் கண்டான் பண்டு, இவ் உலகங்கள் படைக்க நோற்றான் வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும் தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே தேக்கினான் என்ன நின்று தியங்கினான், உணர்வு தீர்ந்தான்.

nōkkiṉāṉ kaṇṭāṉ paṇṭu, iv ulakaṅkaḷ paṭaikka nōṟṟāṉ vākkiṉāl māṇṭār eṉṉa, vāṉara vīrar muṟṟum tākkiṉār ellām paṭṭa taṉmaiyai; viṭattait tāṉē tēkkiṉāṉ eṉṉa niṉṟu tiyaṅkiṉāṉ, uṇarvu tīrntāṉ.

Report an error

விளைந்தவாறு உணர்ந்திலாதான், ஏங்கினான், வெதும்பினான்; மெய் உளைந்து உளைந்து உயிர்த்தான்; 'ஆவி உண்டு, இலை 'என்ன, ஓய்ந்தான்; வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்; இளங்கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான்.

viḷaintavāṟu uṇarntilātāṉ, ēṅkiṉāṉ, vetumpiṉāṉ; mey uḷaintu uḷaintu uyirttāṉ; 'āvi uṇṭu, ilai 'eṉṉa, ōyntāṉ; vaḷainta pēyk kaṇamum nāyum narikaḷum iriya, vantāṉ; iḷaṅkiḷaiyōṭum cāynta irāmaṉai iṭaiyil kaṇṭāṉ.

Report an error

என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது இவைகள் எல்லாம் பின்பு என்பது, அல்லது; என்றும் தம்முடைய நிலையின் பேரா முன்பு என்பது, உளது; என்றாலும் முழுவதும் தெரிந்த ஆற்றால் அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது இன்றால்

eṉpu eṉpatu, yākkai eṉpatu, uyir eṉpatu ivaikaḷ ellām piṉpu eṉpatu, allatu; eṉṟum tammuṭaiya nilaiyiṉ pērā muṉpu eṉpatu, uḷatu; eṉṟālum muḻuvatum terinta āṟṟāl aṉpu eṉpatu oṉṟiṉ taṉmai amararum aṟintatu iṉṟāl

Report an error

ஆயினும், 'இவருக்கு இல்லை அழிவு' எனும் அதனால் ஆவி போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித் தீயினும் எரியும் நெஞ்சின் வெருவலால் தெரிய நோக்கி 'நாயகன் மேனிக்கு இல்லை வடு' என நடுக்கம் தீர்ந்தான்.

āyiṉum, 'ivarukku illai aḻivu' eṉum ataṉāl āvi pōyiṉatu illai; vāyāl pulampalaṉ, porumi; poṅkit tīyiṉum eriyum neñciṉ veruvalāl teriya nōkki 'nāyakaṉ mēṉikku illai vaṭu' eṉa naṭukkam tīrntāṉ.

Report an error

அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி, சிந்தையின் எண்ணி எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான்.

antaṇaṉ paṭaiyāl vantatu eṉpatum, āṟṟal cāṉṟa intiracittē eytāṉ eṉpatum, iḷavaṟku āka nontaṉaṉ irāmaṉ eṉṉum nuṇmaiyum, noytiṉ nōkki, cintaiyiṉ eṇṇi eṇṇi, tīrvatu ōr upāyam tērvāṉ.

Report an error

'உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ? தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவது அன்றே; வள்ளலோ, தம்பி மாய வாழ்கிலன்; மாய வாழ்க்கைக் கள்ளனோ? என்றான்; என்னா, மழை எனக் கலுழும் கண்ணான்.

'uḷḷuṟu tuṉpam ūṉṟa, uṟṟaṉaṉ uṟakkam aṉṟō? teḷḷitiṉ uṇarnta piṉṉai, cintaṉai terivatu aṉṟē; vaḷḷalō, tampi māya vāḻkilaṉ; māya vāḻkkaik kaḷḷaṉō? eṉṟāṉ; eṉṉā, maḻai eṉak kaluḻum kaṇṇāṉ.

Report an error

பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும் இன்னே நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை; வீசும் போர்க் களத்து வீழ்ந்த சேனையும் மீளும்; வெய்ய நீசன் போர் வெல்வது உண்டோ? என்று உளம் நிலையில் நின்றான்

pācam pōy iṟṟāṟ pōlap patumattōṉ paṭaiyum iṉṉē nācam pōy eytum; nampi tampikku naṭukkam illai; vīcum pōrk kaḷattu vīḻnta cēṉaiyum mīḷum; veyya nīcaṉ pōr velvatu uṇṭō? eṉṟu uḷam nilaiyil niṉṟāṉ

Report an error

'உணர்வதன் முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளரெனின், துருவித் தேடிக் கொணர்குவென், விரைவின் 'என்னா, கொள்ளி ஒன்று அங்கை கொண்டான் புணரியின் குருதி வெள்ளத்து ஒருதனி விரைவில் போனான்.

'uṇarvataṉ muṉṉam, iṉṉē uṟṟuḻi utavaṟku otta tuṇaivarkaḷ, tuñcal illār, uḷareṉiṉ, turuvit tēṭik koṇarkuveṉ, viraiviṉ 'eṉṉā, koḷḷi oṉṟu aṅkai koṇṭāṉ puṇariyiṉ kuruti veḷḷattu orutaṉi viraivil pōṉāṉ.

Report an error

வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங்கண் தீ உக, கனகக் குன்றின் திரண்டதோள் மழையைத் தீண்ட ஆயிர கோடி யானைப் பெரும்பிணத்து அமளி மேலான், காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான்.

vāy maṭittu, iraṇṭu kaiyum muṟukki, taṉ vayirac ceṅkaṇ tī uka, kaṉakak kuṉṟiṉ tiraṇṭatōḷ maḻaiyait tīṇṭa āyira kōṭi yāṉaip perumpiṇattu amaḷi mēlāṉ, kāy ciṉattu aṉumaṉ eṉṉum kaṭal kaṭantāṉaik kaṇṭāṉ.

Report an error

கண்டு, தன் கண்கள் ஊடு மழை எனக் கலுழி வார 'உண்டு உயிர் 'என்பது உன்னி, உடல் கணை ஒன்று ஒன்று ஆக, விண்ட நீர்ப் புண்ணின் நின்று மெல்லென வாங்கிக் கையால் கொண்டல் நீர் முகந்து கொண்டு முகத்தினைக் குளிரச் செய்தான்.

kaṇṭu, taṉ kaṇkaḷ ūṭu maḻai eṉak kaluḻi vāra 'uṇṭu uyir 'eṉpatu uṉṉi, uṭal kaṇai oṉṟu oṉṟu āka, viṇṭa nīrp puṇṇiṉ niṉṟu melleṉa vāṅkik kaiyāl koṇṭal nīr mukantu koṇṭu mukattiṉaik kuḷirac ceytāṉ.

Report an error

உயிர்ப்பு முன் உதித்த, பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப, ஊறி வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப் பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக, அயர்த்திலன் இராமன் நாமம், வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார்.

uyirppu muṉ utitta, piṉṉar, urōmaṅkaḷ cilirppa, ūṟi viyarppu uḷatāka, kaṇkaḷ viḻittaṉa, mēṉi mellap peyarttu, vāy puṉal vantu ūṟa, vikkalum piṟantatāka, ayarttilaṉ irāmaṉ nāmam, vāḻttiṉaṉ; amarar ārttār.

Report an error

அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர, தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, 'தக்கோய்! வழு இலன் அன்றே, வள்ளல்? ' என்றனன்; 'வலியன் 'என்றான்; தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயான்.

aḻukaiyōṭu uvakai uṟṟa vīṭaṇaṉ ārvam kūra, taḻuviṉaṉ avaṉai, tāṉum aṉpoṭu taḻuvi, 'takkōy! vaḻu ilaṉ aṉṟē, vaḷḷal? ' eṉṟaṉaṉ; 'valiyaṉ 'eṉṟāṉ; toḻutaṉaṉ, ulakam mūṉṟum talaiyiṉmēl koḷḷum tūyāṉ.

Report an error

'அன்பு தன் தம்பி மேலது அறிவினை மயக்க ஐயன் துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வு இனித் தொடர்ந்த பின்னை என் புகுந்து எய்தும் என்பது அறிகிலம்! 'என்றலோடும், 'தன் பெருந் தன்மைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்? 'என்றான்.

'aṉpu taṉ tampi mēlatu aṟiviṉai mayakka aiyaṉ tuṉpoṭum tuyilaṉ āṉāṉ; uṇarvu iṉit toṭarnta piṉṉai eṉ pukuntu eytum eṉpatu aṟikilam! 'eṉṟalōṭum, 'taṉ perun taṉmaikku otta cāmpaṉ et talaiyaṉ? 'eṉṟāṉ.

Report an error

'அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென் "ஆவி யாக்கை பிறிந்து இலன், உளன் '' என்று ஒன்றும் தெரிந்திலென், பெயர்ந்தேன் 'என்று செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய, காலின் செம்மல், 'இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி 'என்றான்.

'aṟintileṉ avaṉai; yāṇṭum kaṇṭileṉ "āvi yākkai piṟintu ilaṉ, uḷaṉ '' eṉṟu oṉṟum terintileṉ, peyarntēṉ 'eṉṟu ceṟinta tār nirutar vēntaṉ uraiceya, kāliṉ cemmal, 'iṟum tiṟam avaṉukku illai; nāṭutum, ēki 'eṉṟāṉ.

Report an error

'அன்னவன் தன்னைக் கண்டால் ஆணையே, அரக்கர்க்கு எல்லாம் மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும்; உபாயம் வல்லான் ' என்னலும், 'உய்ந்தோம், ஐய! எகுதும். விரைவின் 'என்றான், சில்நெறி இருளில் சென்றார், சாம்பனை விரைவில் சேர்ந்தார்.

'aṉṉavaṉ taṉṉaik kaṇṭāl āṇaiyē, arakkarkku ellām maṉṉava! nammai īṇṭu vāḻvikkum; upāyam vallāṉ ' eṉṉalum, 'uyntōm, aiya! ekutum. viraiviṉ 'eṉṟāṉ, cilneṟi iruḷil ceṉṟār, cāmpaṉai viraivil cērntār.

Report an error

எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும், அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும் தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன் எனினும், வீரர் வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால் வயிரத் தோளான்.

erikiṉṟa mūppiṉālum, ēvuṇṭa nōviṉālum, arikiṉṟa tuṉpattālum, ār uyirppu aṭaṅki, oṉṟum terikiṉṟatu illā mammarc cintaiyaṉ eṉiṉum, vīrar varukiṉṟa cuvaṭṭai ōrntāṉ, cevikaḷāl vayirat tōḷāṉ.

Report an error

'அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன் தானோ? இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ? வரக் கடவார்கள் அல்லர் மாற்றலர் மலைந்து போனார்; புரக்க உள்ளாரே! 'என்னாக் கருதினன், பொருமல் தீர்ந்தான்.

'arakkaṉō? eṉṉai āḷum aṇṇalō? aṉumaṉ tāṉō? irakkam uṟṟu aruḷa vanta tēvarō? muṉivarēyō? varak kaṭavārkaḷ allar māṟṟalar malaintu pōṉār; purakka uḷḷārē! 'eṉṉāk karutiṉaṉ, porumal tīrntāṉ.

Report an error

வந்து அயல் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச் சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மைத் தேற்றி, 'அந்தமில் குணத்தீர் யாவிர், அணுகினிர்? 'என்றான்; 'ஐய! உய்ந்தனம்! உய்ந்தோம்! 'என்ற வீடணன் உரையைக் கேட்டான்.

vantu ayal niṉṟu, kuṉṟiṉ vārntu vīḻ aruvi māṉac cintiya kaṇṇiṉ nīrar ēṅkuvār tammait tēṟṟi, 'antamil kuṇattīr yāvir, aṇukiṉir? 'eṉṟāṉ; 'aiya! uyntaṉam! uyntōm! 'eṉṟa vīṭaṇaṉ uraiyaik kēṭṭāṉ.

Report an error

'மற்று அயல் நின்றான் யாவன்? ' என்ன, மாருதியும், வாழி! கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென் 'என்று கூற இற்றிலம், ஐய, எல்லேம் எழுந்தனம், எழுந்தேம்! 'என்னா, உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், ஊற்றம் மிக்கான்.

'maṟṟu ayal niṉṟāṉ yāvaṉ? ' eṉṉa, mārutiyum, vāḻi! koṟṟava! aṉumaṉ niṉṟēṉ; toḻutaṉeṉ 'eṉṟu kūṟa iṟṟilam, aiya, ellēm eḻuntaṉam, eḻuntēm! 'eṉṉā, uṟṟa pēr uvakaiyālē, ōṅkiṉāṉ, ūṟṟam mikkāṉ.

Report an error

'விரிஞ்சன் வெம்படை என்றாலும், வேதத்தின் வேதம் அன்ன அரிந்தமன் தன்னை ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல் தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்? தெரித்தி 'என்றான்; 'பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும! 'என்றான்.

'viriñcaṉ vempaṭai eṉṟālum, vētattiṉ vētam aṉṉa arintamaṉ taṉṉai oṉṟum āṟṟilatu eṉṉum āṟṟal terintaṉeṉ; muṉṉē, aṉṉāṉ ceytatu eṉ? teritti 'eṉṟāṉ; 'peruntakai tuṉpa veḷḷat tuyil uḷāṉ, peruma! 'eṉṟāṉ.

Report an error

'அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமே? யாக்கை வேறே; இன்னுயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரே யால்; இன்னது கடக்கத் தாழாது இப்பொழுது இமைப்பின் முன்னம் கொன்னியல் வயிரத் தோளாய் மருந்துபோய்க் கொணர்தி 'என்றான்.

'aṉṉavaṉ taṉmai kaṇṭāl āṟṟumē? yākkai vēṟē; iṉṉuyir oṉṟē mūlattu iruvarum oruvarē yāl; iṉṉatu kaṭakkat tāḻātu ippoḻutu imaippiṉ muṉṉam koṉṉiyal vayirat tōḷāy maruntupōyk koṇarti 'eṉṟāṉ.

Report an error

'எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும், முழுதும் இவ் உலகம் மூன்றும், நல்லற மூர்த்தி தானும், வழுவல் இல் மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த! பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி.

'eḻupatu veḷḷattōrum, irāmaṉum, iḷaiya kōvum, muḻutum iv ulakam mūṉṟum, nallaṟa mūrtti tāṉum, vaḻuval il maṟaiyum, uṉṉāl vāḻntaṉa ākum; mainta! poḻutu iṟai tāḻātu, eṉ col neṟi tarak kaṭitu pōti.

Report an error

'பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின் யோசனைகள் பேச நின்ற ஒன்பதினாயிரம் கடந்தால், இமயமெனும் குலவரையை உறுதி; உற்றால், தன்பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; பின் தவிரப் போனால், முன்பு உள யோசனை எல்லாம்முற்றினை, பொன் கூடம் சென்று உறுதி 'மொய்ம்ப!

'piṉpu uḷatu ik kaṭal eṉṉap peyarntataṟpiṉ yōcaṉaikaḷ pēca niṉṟa oṉpatiṉāyiram kaṭantāl, imayameṉum kulavaraiyai uṟuti; uṟṟāl, taṉperumai ōr iraṇṭāyiram uḷatu yōcaṉai; piṉ tavirap pōṉāl, muṉpu uḷa yōcaṉai ellāmmuṟṟiṉai, poṉ kūṭam ceṉṟu uṟuti 'moympa!

Report an error

இம்மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் செம்மலைக்கும் உளவாய அத்தனை யோசனை கடந்தால் சென்று காண்டி எம்மலைக்கும் பெரிது ஆய வடமலையை; அம்மலையின் அகலம் எண்ணின், மொய்மலைந்த திண்தோளாய்! முப்பத்து ஈர் ஆயிரம் யோசனையின் முற்றும்.

immalaikkum oṉpatiṉāyiram uḷatām yōcaṉaiyiṉ niṭatam eṉṉum cemmalaikkum uḷavāya attaṉai yōcaṉai kaṭantāl ceṉṟu kāṇṭi emmalaikkum peritu āya vaṭamalaiyai; ammalaiyiṉ akalam eṇṇiṉ, moymalainta tiṇtōḷāy! muppattu īr āyiram yōcaṉaiyiṉ muṟṟum.

Report an error

மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள யோசனையை விட்டால், நேர் அணுகும் நீலகிரி; தான் இரண்டாயிரம் உளயோ சனையின் நிற்கும்; மாருதி! மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்து மருந்து வைகும் கார்வரையைக் காணுதி; மற்று அதுகாண இத்துயர்க்குக் கரையும் காண்டி.

mēruviṉaik kaṭantu, appāl oṉpatiṉāyiram uḷa yōcaṉaiyai viṭṭāl, nēr aṇukum nīlakiri; tāṉ iraṇṭāyiram uḷayō caṉaiyiṉ niṟkum; māruti! maṟṟu ataṟku appāl yōcaṉai nālāyirattu maruntu vaikum kārvaraiyaik kāṇuti; maṟṟu atukāṇa ittuyarkkuk karaiyum kāṇṭi.

Report an error

'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், உடல் வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும், மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்மருந்தும், உள; நீ, வீர! ஆண்டு ஏகிக் கொணர்தி 'என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.

'māṇṭārai uyvikkum maruntu oṉṟum, uṭal vēṟu vakirkaḷ ākak kīṇṭālum poruntuvikkum oru maruntum, paṭaikkalaṅkaḷ kiḷaippatu oṉṟum, mīṇṭēyum tam uruvai aruḷuvatu ōr meymmaruntum, uḷa; nī, vīra! āṇṭu ēkik koṇarti 'eṉa aṭaiyāḷattoṭum uraittāṉ, aṟiviṉ mikkāṉ.

Report an error

இன்ன மருந்து ஒரு நான்கும், பயோத்தியைக் கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர் உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இவுலகம் மூன்றும் தன் இரு தாள் உள்ளடக்கிப் பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை, அன்னவை கண்டு, உயாவுதலும், தொல்முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்.

iṉṉa maruntu oru nāṉkum, payōttiyaik kalakkiya ñāṉṟu, eḻunta; tēvar uṉṉi amaittaṉar; maṟaikkum eṭṭāta parañcuṭar ivulakam mūṉṟum taṉ iru tāḷ uḷḷaṭakkip poli pōḻtiṉ yāṉ muracam cāṟṟum vēlai, aṉṉavai kaṇṭu, uyāvutalum, tolmuṉivar avaṟṟu iyal eṟku aṟivittārāl.

Report an error

'இம்மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண்ணிலவால்; இரங்கா, யார்க்கும்; நெய்ம்மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும் அவற்றுடனே நிற்கும்; பொய்ம்மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற காரியத்தின் பொருளை நோக்கிக் கைம்மருங்கு தொடர்ந்து உன்னைக் 'காவாய்' என்று அப்புறம் போய்க் கரக்கும் என்றான்.

'immaruntu kāttu uṟaiyum teyvaṅkaḷ eṇṇilavāl; iraṅkā, yārkkum; neymmaruṅku paṭarakillā neṭunēmip paṭaiyum avaṟṟuṭaṉē niṟkum; poymmaruṅkiṉ nillātāy! purikiṉṟa kāriyattiṉ poruḷai nōkkik kaimmaruṅku toṭarntu uṉṉaik 'kāvāy' eṉṟu appuṟam pōyk karakkum eṉṟāṉ.

Report an error

'ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும் பிறந்தோரே : எம் கோற்கு யாதும், தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர் போய் ' எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான் ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன், பொன் தோளிரண்டும் திசையோடு ஒக்க வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான்.

'īṅku ituvē paṇi ākil, iṟantōrum piṟantōrē : em kōṟku yātum, tīṅku iṭaiyūṟu eytāmal, teruṭṭutir pōy ' eṉac colli, avarait tīrntāṉ ōṅkiṉaṉ vāṉ neṭu mukaṭṭai uṟṟaṉaṉ, poṉ tōḷiraṇṭum ticaiyōṭu okka vīṅkiṉa; ākāyattai viḻuṅkiṉaṉē eṉa vaḷarntāṉ vētam pōlvāṉ.

Report an error

கோளோடு தாரகைகள், கோத்து அமைத்த மணி ஆரக் கோவை போன்ற; தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை அளவு சொல்ல ஒண்ணா; தாளோடு தாள் பெயர்க்க, இடமிலது ஆயினது இலங்கை; தடக் கை வீச, நீளோடு திசை போதா; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா.

kōḷōṭu tārakaikaḷ, kōttu amaitta maṇi ārak kōvai pōṉṟa; tōḷōṭu tōḷ akalam āyiram yōcaṉai aḷavu colla oṇṇā; tāḷōṭu tāḷ peyarkka, iṭamilatu āyiṉatu ilaṅkai; taṭak kai vīca, nīḷōṭu ticai pōtā; vicaittu eḻuvāṉ uruvattiṉ nilai ītu ammā.

Report an error

வால் விசைத்து, கை நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து, மானக் கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் நெருக்கி கழுத்தினையும் சுருக்கிக் காட்டி தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான், அவ் விலங்கை, துளங்கிச் சூழ்ந்த வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக் கலம் போல் சுரித்து உலைய விசயத் தோளான்

vāl vicaittu, kai nimirttu, vāyiṉaiyum ciṟitu akala vakuttu, māṉak kāl nilattiṉiṭai ūṉṟi, uram nerukki kaḻuttiṉaiyum curukkik kāṭṭi tōl mayirk kuntaḷam cilirppa, vicaittu eḻuntāṉ, av vilaṅkai, tuḷaṅkic cūḻnta vēlaiyil pukku aḻuntiyatu ōr marak kalam pōl curittu ulaiya vicayat tōḷāṉ

Report an error

கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு அகல் வேலை; கிழக்கும் மேற்கும்; பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்பு இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி; அழிந்தன வானவர் மானம், ஆகாயத் திசையினில் பேர் அசனி என்ன விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம்.

kiḻintaṉa, māmaḻaik kulaṅkaḷ, kīṇṭatu, nīṇṭu akal vēlai; kiḻakkum mēṟkum; poḻintaṉa, mīṉ; toṭarntu eḻunta, poruppu iṉamum, taruk kulamum, piṟavum, poṅki; aḻintaṉa vāṉavar māṉam, ākāyat ticaiyiṉil pēr acaṉi eṉṉa viḻuntaṉa, nīrk kaṭal aḻunta; ēṟiṉa mēl, kīṟiṉa pōyt ticaikaḷ ellām.

Report an error

பாய்ந்தனன், அங்கு அப்பொழுதே; பருவரைகள் எனைப் பலவும் வடபாகத்துச் சாய்ந்தன' பேருடல் பிறந்த சண்டமாருதம் வீசத் தாதை சால ஓய்ந்தனன் 'என்று உரை செய்ய, விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால், காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து எரிந்த பெருங்கானம் எல்லாம்

pāyntaṉaṉ, aṅku appoḻutē; paruvaraikaḷ eṉaip palavum vaṭapākattuc cāyntaṉa' pēruṭal piṟanta caṇṭamārutam vīcat tātai cāla ōyntaṉaṉ 'eṉṟu urai ceyya, vicumpūṭu paṭarkiṉṟāṉ uru vēkattāl, kāyntaṉa vēlaikaḷ; mēkam karintaṉa; ventu erinta peruṅkāṉam ellām

Report an error

கடன் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான் உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச் செல, செல்வான் உருவை நோக்கி, 'அடல் முன்னே தொடங்கியநாள், ஆழ்கடல், சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் திடல் முந்நீர் இடைப்படுத்து மறித்திலன் நம்துயர் என்றார் தேவரெல்லாம்.

kaṭaṉ muṉṉē nimirntu ōṭa, kāl piṉṉē toṭarntu ōṭa, kaṭitiṉ celvāṉ uṭal muṉṉē cela, uḷḷam kaṭaik kuḻaiyāyc cela, celvāṉ uruvai nōkki, 'aṭal muṉṉē toṭaṅkiyanāḷ, āḻkaṭal, cūḻ ilaṅkai eṉum arakkar vāḻum tiṭal munnīr iṭaippaṭuttu maṟittilaṉ namtuyar eṉṟār tēvarellām.

Report an error

மேகத்தின் பதம் கடந்து, வெங்கதிரும் தண்கதிரும் விரைவில் செல்லும் மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி, போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள் பிற்படப் போய், 'பூவின் வந்த ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்றாம் 'என்ன எழுந்து சென்றான்.

mēkattiṉ patam kaṭantu, veṅkatirum taṇkatirum viraivil cellum mākattiṉ neṟikku appāl, vāṉamīṉ kulam viḷaṅkum varampu nīṅki, pōkattiṉ neṟi kaṭantār pukaliṭaṅkaḷ piṟpaṭap pōy, 'pūviṉ vanta ēkattu antaṇaṉ irukkai iṉic cēyttu aṉṟām 'eṉṉa eḻuntu ceṉṟāṉ.

Report an error

வான நாட்டு உறைகின்றார், 'வயக் கலுழன் வல்விசையால், மாயன் வைகும் தான நாட்டு எழுகின்றான் 'என்று உரைத்தார் சிலர் சிலர்கள் 'விரிஞ்சன்தான் தன் ஏனநாட்டு எழுகின்றான் 'என்று உரைத்தார் சிலர் சிலர்கள் 'ஈசன் அல்லால் போன நாட்டிடை போக வல்லரோ? இவன் முக்கண் புனிதன் 'என்றார்.

vāṉa nāṭṭu uṟaikiṉṟār, 'vayak kaluḻaṉ valvicaiyāl, māyaṉ vaikum tāṉa nāṭṭu eḻukiṉṟāṉ 'eṉṟu uraittār cilar cilarkaḷ 'viriñcaṉtāṉ taṉ ēṉanāṭṭu eḻukiṉṟāṉ 'eṉṟu uraittār cilar cilarkaḷ 'īcaṉ allāl pōṉa nāṭṭiṭai pōka vallarō? ivaṉ mukkaṇ puṉitaṉ 'eṉṟār.

Report an error

'வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடுகின்றான், மெய் வேதம் நான்கும் தீண்டு உருவன் அல்லாத திருமாலே இவன்' என்றார், 'தெரிய நோக்கிக் காண்டும்' என இமைப்பதன்முன் கண் புலமும் கடந்து அகலும்; இன்னும் காண்மின், மீண்டு வரும் தரம் அல்லன், வீட்டு உலகம் புகும்' என்றார், மேன்மேல் உள்ளார்.

'vēṇṭu uruvam koṇṭu eḻuntu, viḷaiyāṭukiṉṟāṉ, mey vētam nāṉkum tīṇṭu uruvaṉ allāta tirumālē ivaṉ' eṉṟār, 'teriya nōkkik kāṇṭum' eṉa imaippataṉmuṉ kaṇ pulamum kaṭantu akalum; iṉṉum kāṇmiṉ, mīṇṭu varum taram allaṉ, vīṭṭu ulakam pukum' eṉṟār, mēṉmēl uḷḷār.

Report an error

'உரு' என்றார் சிலர்சிலர்கள்; 'ஒளி' என்றார். சிலர்சிலர்கள் ஒளிரு மேனி 'அரு' என்றார்; சிலர்சிலர்கள் அண்டத்துக்கு அப்புறம் நின்று உலகம் ஆக்கும் 'கரு' என்றார், சிலர்சிலர்கள்; 'மற்று' என்றார், சிலர்சிலர்கள்; கடலைத் தாவிச் செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர்.

'uru' eṉṟār cilarcilarkaḷ; 'oḷi' eṉṟār. cilarcilarkaḷ oḷiru mēṉi 'aru' eṉṟār; cilarcilarkaḷ aṇṭattukku appuṟam niṉṟu ulakam ākkum 'karu' eṉṟār, cilarcilarkaḷ; 'maṟṟu' eṉṟār, cilarcilarkaḷ; kaṭalait tāvic ceru veṉṟāṉ nilai oṉṟum teriyakilār ulaku aṉaittum teriyum celvar.

Report an error

வாச நாள் மலரோன்தன் உலக அளவும் நிமிர்ந்தனன், மேல்வானம் ஆன காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உரு இடையே கனகத் தோள்கள் வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம ஆசை காவலர் தலைகள் பொதிரெறிந்தார் விதிர் எறிந்தது அண்ட கோளம்.

vāca nāḷ malarōṉtaṉ ulaka aḷavum nimirntaṉaṉ, mēlvāṉam āṉa kācam āyiṉa ellām karanta taṉatu uru iṭaiyē kaṉakat tōḷkaḷ vīca, vāṉ mukaṭu uriñca, vicaittu eḻuvāṉ uṭal piṟanta muḻakkam vimma ācai kāvalar talaikaḷ potireṟintār vitir eṟintatu aṇṭa kōḷam.

Report an error

தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர், அடுத்த நான் மறைகள் ஓதி வாழ்த்த, வாள் அவுணர் வேந்தன் கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு எல்லாம்.

toṭutta nāḷ mālai vāṉōr muṉivarē mutala tollōr, aṭutta nāṉ maṟaikaḷ ōti vāḻtta, vāḷ avuṇar vēntaṉ koṭutta nāḷ, aḷantu koṇṭa kuṟaḷaṉār kuṟiya pātam eṭutta nāḷ ottatu aṇṇal eḻunta nāḷ, ulakukku ellām.

Report an error

தேவரும் முனிவர் தாமும், சித்தரும் தெரிவைமாரும், மூவுலகிடை உளோரும் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் தூவின மலரும் சாந்தும் சுண்ணமும் மணியும் தொத்த, பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான்.

tēvarum muṉivar tāmum, cittarum terivaimārum, mūvulakiṭai uḷōrum uvakaiyāl toṭarntu moyttār tūviṉa malarum cāntum cuṇṇamum maṇiyum totta, pūvuṭai amarar teyvat taru eṉa, vicumpil pōṉāṉ.

Report an error

இமய மால் வரையை உற்றான்; அங்கு உள இமைப்பு இலோரும்; கமை உடை முனிவர், மற்றும் அறன்நெறி கலந்தோர்; எல்லாம்; 'அமைக, நின் கருமம். " என்று வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால்; உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு; உவகை உற்றான்.

imaya māl varaiyai uṟṟāṉ; aṅku uḷa imaippu ilōrum; kamai uṭai muṉivar, maṟṟum aṟaṉneṟi kalantōr; ellām; 'amaika, niṉ karumam. " eṉṟu vāḻttiṉar; ataṉukku appāl; umaiyoru pākaṉ vaikum kayilai kaṇṭu; uvakai uṟṟāṉ.

Report an error

வடகுண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும் தடவரை அதனை நோக்கி, தாமரை கைகள் கூப்பி, படர்குவான் தன்னை, அண்ணல் பரமனும் விரும்பிப் பார்த்துத் தடமுலை உமைக்குக் காட்டி வாயுவின் தநயன் என்றான்.

vaṭakuṇa ticaiyil tōṉṟum, maḻuvalāṉ āṇṭu vaikum taṭavarai ataṉai nōkki, tāmarai kaikaḷ kūppi, paṭarkuvāṉ taṉṉai, aṇṇal paramaṉum virumpip pārttut taṭamulai umaikkuk kāṭṭi vāyuviṉ tanayaṉ eṉṟāṉ.

Report an error

'என், இவன் எழுந்த தன்மை? ' என்று, உலகு ஈன்றாள் கேட்ப 'மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர் தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து, நல் நுதல்! நாமும் வெம்போர் காணுதும், நாளை 'என்றான்.

'eṉ, ivaṉ eḻunta taṉmai? ' eṉṟu, ulaku īṉṟāḷ kēṭpa 'maṉṉavaṉ irāmaṉ tūtaṉ maruntiṉmēl vantāṉ; vañcar teṉ nakar ilaṅkait tīmai tīrvatu tiṇṇam; cērntu, nal nutal! nāmum vempōr kāṇutum, nāḷai 'eṉṟāṉ.

Report an error

நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி, ஏம கூடத்தின் உம்பர் எய்தி நின்று, இறுதி இல்லாக் காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்; நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான்.

nāma yōcaṉaikaḷ koṇṭatu āyiram naṭuvu nīṅki, ēma kūṭattiṉ umpar eyti niṉṟu, iṟuti illāk kāmamē nukarum celvak kaṭavuḷar īṭṭam kaṇṭāṉ; nēmiyiṉ vicaiyiṉ celvāṉ niṭatattiṉ neṟṟi uṟṟāṉ.

Report an error

எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும் கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான், மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும் விண்ணுக்கும், அளவை ஆய மேருவின் மீது சென்றான்.

eṇṇukkum, aḷavu ilāta aṟiviṉōr iruntu nōkkum kaṇṇukkum, karutum teyva maṉattiṟkum kaṭiyaṉ āṉāṉ, maṇṇukkum, ticaikaḷ vaitta varampiṟkum, malarōṉ vaikum viṇṇukkum, aḷavai āya mēruviṉ mītu ceṉṟāṉ.

Report an error

'யாவது நிலைமைத் தன்மை இன்னது, என்று 'இமையா நாட்டத் தேவரும் தெரிகிலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்; நாவலம் பெருந்தீவு என்னா நளிர்கடல் வளாக வைப்பில் காவல் மூன்று உலகம் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான்.

'yāvatu nilaimait taṉmai iṉṉatu, eṉṟu 'imaiyā nāṭṭat tēvarum terikilāta vaṭamalaikku umparc ceṉṟāṉ; nāvalam peruntīvu eṉṉā naḷirkaṭal vaḷāka vaippil kāval mūṉṟu ulakam ōtum kaṭavuḷ mā marattaik kaṇṭāṉ.

Report an error

அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல் தன்னகர் அதனை நோக்கி, அதன் நடு நாப்பண் நாமப் பொன்மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும் தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான்.

aṉṉa mā malaiyiṉ umpar, ulaku elām amaitta aṇṇal taṉṉakar ataṉai nōkki, ataṉ naṭu nāppaṇ nāmap poṉmalarp pīṭam taṉmēl nāṉmukaṉ poliyat tōṉṟum taṉmaiyum kaṇṭu kaiyāl vaṇaṅkiṉāṉ tarumam pōlvāṉ.

Report an error

தருவனம் ஒன்றில் வானோர் தலைத் தலை மயங்கித் தாழ, பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க, மரு விரி துளப மோலி மாநிலக் கிழத்தியோடும் திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான

taruvaṉam oṉṟil vāṉōr talait talai mayaṅkit tāḻa, poru aru muṉivar vētam pukaḻntu urai ōtai poṅka, maru viri tuḷapa mōli mānilak kiḻattiyōṭum tiruvoṭum irunta, mūlat tēvaiyum vaṇakkam ceytāṉa

Report an error

ஆயதன் வடகீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற காய்கதிர் பரப்பி, ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி தூயபேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த சேயிழை பாகத்து, எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான்.

āyataṉ vaṭakīḻ pākattu āyiram arukkar āṉṟa kāykatir parappi, aintu katirmukak kamalam kāṭṭi tūyapēr ulakam mūṉṟum tūviya malariṉ cūḻnta cēyiḻai pākattu, eṇtōḷ oruvaṉai vaṇakkam ceytāṉ.

Report an error

சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலைமேல் ஓங்க, சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூவ, அந்தர வான நாடர் அடிதொழ, முரசம் ஆர்ப்ப, இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான்.

cantiraṉ aṉaiya koṟṟat taṉikkuṭai talaimēl ōṅka, cuntara makaḷir aṅkaic cāmarai teṉṟal tūva, antara vāṉa nāṭar aṭitoḻa, muracam ārppa, intiraṉ irunta taṉmai kaṇṭu uvantu, iṟaiñcip pōṉāṉ.

Report an error

பூஅலர் மரத்தைப் போல அந்தரம் விரிந்து பொங்கும் தேவர்தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில் மூவகை உலகம் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான்.

pūalar marattaip pōla antaram virintu poṅkum tēvartam irukkaiyāṉa mēruviṉ cikara vaippil mūvakai ulakam cūḻnta muraṇ ticai muṟaiyiṉ kākkum kāvalar eṇmar niṉṟa taṉmaiyum teriyak kaṇṭāṉ.

Report an error

அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த அண்ணல், உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி, செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி வித்தகன், 'விடிந்தது 'என்னா, 'முடிந்தது என் வேகம் 'என்றான்.

attaṭaṅ kiriyai nīṅki, attalai aṭainta aṇṇal, uttara kuruvai uṟṟāṉ; oḷiyavaṉ katirkaḷ ūṉṟi, ceṟṟiya iruḷ iṉṟu ākki viḷaṅkiya ceyalai nōkki vittakaṉ, 'viṭintatu 'eṉṉā, 'muṭintatu eṉ vēkam 'eṉṟāṉ.

Report an error

'ஆதியான் உணரா முன்னம் அருமருந்து உதவி, அல்லின் பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் சோதியான் உதயம் செய்தான்; உற்றதோ துணிதல் ஆற்றேன்; ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை இலாதான்.

'ātiyāṉ uṇarā muṉṉam arumaruntu utavi, alliṉ pātiyāl, aṉaiya tuṉpam akaṟṟuvāṉ pāvittēṟkuc cōtiyāṉ utayam ceytāṉ; uṟṟatō tuṇital āṟṟēṉ; ētu yāṉ ceyvatu? eṉṉā, iṭar uṟṟāṉ, iṇai ilātāṉ.

Report an error

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் மேல்திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு மாற்றினன் வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் சாற்றினர் என்னத் துன்பம் தணிந்தனன் தவத்தின் மிக்கான்.

kāl ticai curuṅkac cellum kaṭumaiyāṉ katiriṉ celvaṉ mēlticai eḻuvāṉ allaṉ; viṭintatum aṉṟu; mēru māṟṟiṉaṉ vaṭapāl tōṉṟum eṉpatu maṟaikaḷ vallōr cāṟṟiṉar eṉṉat tuṉpam taṇintaṉaṉ tavattiṉ mikkāṉ.

Report an error

இருவரே தோன்றி என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி, ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி, பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர் வைகும் திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரியக் கண்டான்.

iruvarē tōṉṟi eṉṟum īṟu ilā āyuḷ eyti, oruvarōṭu oruvar, uḷḷam uyiroṭum oṉṟē āki, poru arum iṉpam tuyttu, puṇṇiyam purintōr vaikum tiru uṟai kamalam aṉṉa nāṭṭaiyum teriyak kaṇṭāṉ.

Report an error

வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான் கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளுங் காணி சென்னி நாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன் தெய்வப் பொன்னி நாட்டு உவமை வைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான்.

vaṉṉi nāṭṭiya poṉ mauli vāṉavaṉ, malariṉ mēlāṉ kaṉṉi nāḷ tiruvaic cērum kaṇṇaṉum, āḷuṅ kāṇi ceṉṉi nāḷ teriyal vīraṉ tiyākamā vinōtaṉ teyvap poṉṉi nāṭṭu uvamai vaippaip pulaṉkoḷa nōkkip pōṉāṉ.

Report an error

விரியவன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும் பெரியவன்; அயனார் செல்வம் பெற்றவன்; பிறப்பும் பேர்ந்தான்; அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் கரியவன் என்ன நின்ற நீல மால் வரையைக் கண்டான்.

viriyavaṉ mēru eṉṉum veṟpiṉiṉ mītu cellum periyavaṉ; ayaṉār celvam peṟṟavaṉ; piṟappum pērntāṉ; ariyavaṉ, ulakam ellām aḷanta nāḷ vaḷarntu tōṉṟum kariyavaṉ eṉṉa niṉṟa nīla māl varaiyaik kaṇṭāṉ.

Report an error

அல் குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப் போனான், பொன்குன்றம் அனைய தோளான் நோக்கினான்; புலவன் சொன்ன நல்குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன் 'நாகம் உற்ற எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் 'என்ன.

al kuṉṟa alaṅku cōti ammalai akalap pōṉāṉ, poṉkuṉṟam aṉaiya tōḷāṉ nōkkiṉāṉ; pulavaṉ coṉṉa nalkuṉṟam ataṉaik kaṇṭāṉ, uṇarntaṉaṉ 'nākam uṟṟa el kuṉṟa eṟiyum teyva maruntu aṭaiyāḷam 'eṉṉa.

Report an error

பாய்ந்தனன்; பாய்தலோடும், அம்மலை பாதலத்துச் சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன; கடுத்து வந்து காய்ந்தனை; நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக என்ன ஆய்ந்தவன்; உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான்.

pāyntaṉaṉ; pāytalōṭum, ammalai pātalattuc cāyntatu; kākkum teyvam calittaṉa; kaṭuttu vantu kāyntaṉai; nītāṉ yāvaṉ? karuttu eṉkol? kaḻaṟuka eṉṉa āyntavaṉ; uṟṟa taṉmai avaṟṟiṉukku aṟiyac coṉṉāṉ.

Report an error

கேட்டு அவை, 'ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல் எம்பால் காட்டு' என உரைத்து, வாழ்த்திக் கரந்தன, கமலக் கண்ணன் வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணில் நின்றும் தோட்டனன், அனுமன் மற்று அக் குன்றினை, வயிரத் தோளால்.

kēṭṭu avai, 'aiya! vēṇṭiṟṟu iyaṟṟi, piṉ keṭāmal empāl kāṭṭu' eṉa uraittu, vāḻttik karantaṉa, kamalak kaṇṇaṉ vāḷ talai nēmi tōṉṟi, maṟaintatu; maṇṇil niṉṟum tōṭṭaṉaṉ, aṉumaṉ maṟṟu ak kuṉṟiṉai, vayirat tōḷāl.

Report an error

'இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் சிங்குமால் காலம்’என்று உணரும் சிந்தையான் அங்கு அதை வேரொடும் அங்கை தாக்கினான் பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான்.

'iṅku niṉṟu iṉṉaṉa maruntu eṉṟu eṇṇiṉāl ciṅkumāl kālam’eṉṟu uṇarum cintaiyāṉ aṅku atai vēroṭum aṅkai tākkiṉāṉ poṅkiya vicumpiṭaik kaṭitu pōkuvāṉ.

Report an error

ஆயிரம் யோசனை அகன்று மீது உயர்ந்து ஆயிரம் யோசனை சூழ்ந்தது அம்மலை 'ஏ’எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்.

āyiram yōcaṉai akaṉṟu mītu uyarntu āyiram yōcaṉai cūḻntatu ammalai 'ē’eṉum māttirattu oru kai ēntiṉāṉ tāyiṉaṉ ulaku elām tavaḻnta cīrttiyāṉ.

Report an error

அத்தலை அன்னவன் அனையன் ஆம்துணை இத்தலை இருவரும் விரைவின் எய்தினார் கைத்தலத்தால் அடி வருடும் காலையில் உத்தமற்கு உற்றதை உணர்த்து வாம் அரோ.

attalai aṉṉavaṉ aṉaiyaṉ āmtuṇai ittalai iruvarum viraiviṉ eytiṉār kaittalattāl aṭi varuṭum kālaiyil uttamaṟku uṟṟatai uṇarttu vām arō.

Report an error

விண்டன மடந்தையர் மனத்தை வேரொடும் கண்டன களவு அறும் கருணைத்து ஆம் எனக் கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா புண்டரீகம் துணை நயனம் பூத்தன.

viṇṭaṉa maṭantaiyar maṉattai vēroṭum kaṇṭaṉa kaḷavu aṟum karuṇaittu ām eṉak koṇṭaṉa koṭuppaṉa varaṅkaḷ kōḷ ilā puṇṭarīkam tuṇai nayaṉam pūttaṉa.

Report an error

நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன்புகழ் ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினர் தூக்கிய தலையினர் தொழுத கையினர் ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை;

nōkkiṉaṉ karaṭikaṭku aracum nōṉpukaḻ ākkiya nirutaṉum aḻuta kaṇṇiṉar tūkkiya talaiyiṉar toḻuta kaiyiṉar ēkkamuṟṟu aruku iruntu iraṅkuvārkaḷai;

Report an error

'ஏவிய காரியம் இயற்றி எய்தினை நோவிலை; வீடணா! என்று நோக்கிப் பின் சாவு அரும் பெரும்புகழ்ச் சாம்பன்தன்னை நீ ஆவி வந்தனை கொல்? 'என்று அருளினான் அரோ.

'ēviya kāriyam iyaṟṟi eytiṉai nōvilai; vīṭaṇā! eṉṟu nōkkip piṉ cāvu arum perumpukaḻc cāmpaṉtaṉṉai nī āvi vantaṉai kol? 'eṉṟu aruḷiṉāṉ arō.

Report an error

'ஐயன்மீர்; நமக்கு உற்ற அழிவு இது ஆதலின் செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர் உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டு எனின் பொய்யிலீர்! புகலுதிர் புலமை உள்ளத்தீர்!

'aiyaṉmīr; namakku uṟṟa aḻivu itu ātaliṉ ceyvakai piṟitu ilai; uyiriṉ tīrntavar uykilar; iṉic ceyaṟku uriyatu uṇṭu eṉiṉ poyyilīr! pukalutir pulamai uḷḷattīr!

Report an error

சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை யாது என உணர்த்துகேன்! உலகம் ஓதிடும் காதை வன் பழியொடும் திருத்திக் காட்டினேன்.

cītai eṉṟu oruttiyāl uḷḷam tēmpiya pētaiyēṉ ciṟumaiyāl uṟṟa peṟṟiyai yātu eṉa uṇarttukēṉ! ulakam ōtiṭum kātai vaṉ paḻiyoṭum tiruttik kāṭṭiṉēṉ.

Report an error

"மாயை இம்மான் ” என எம்பி வாய்மையால் தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் போயினென் பெண் உரை மறாது; போகலால் ஆனது இப்பழியுடை மரணம் அன்பினீர்!

"māyai immāṉ ” eṉa empi vāymaiyāl tūyaṉa uṟutikaḷ coṉṉa col koḷēṉ pōyiṉeṉ peṇ urai maṟātu; pōkalāl āṉatu ippaḻiyuṭai maraṇam aṉpiṉīr!

Report an error

'கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால்; மண்டு அமர் புரிந்தனென் வலியின்; ஆருயிர் கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால்.

'kaṇṭaṉeṉ irāvaṇaṉ taṉṉaik kaṇkaḷāl; maṇṭu amar purintaṉeṉ valiyiṉ; āruyir koṇṭileṉ uṟavu elām koṭuttu māḷa nāṉ paṇṭuṭait tīviṉai payanta paṇpiṉāl.

Report an error

"தேவர்தம் படைக்கலம் தொடுத்து தீயவன் சாவது காண்டும் " என்று இளவல் சாற்றவும் ஆவதை இசைந்திலன் அழிவது என்வயின் மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால்.

"tēvartam paṭaikkalam toṭuttu tīyavaṉ cāvatu kāṇṭum " eṉṟu iḷaval cāṟṟavum āvatai icaintilaṉ aḻivatu eṉvayiṉ mēvutal uṟuvatu ōr vitiyiṉ vemmaiyāl.

Report an error

"நின்றிலென் உடன் எறிபடைக்கு நீதியால் ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்; பொன்றினர் நமரெலாம்; இளவல் போயினான்; வென்றிலன் அரக்கனை விதியின் மேன்மையால்.

"niṉṟileṉ uṭaṉ eṟipaṭaikku nītiyāl oṉṟiya pūcaṉai iyaṟṟa uṉṉiṉēṉ; poṉṟiṉar namarelām; iḷaval pōyiṉāṉ; veṉṟilaṉ arakkaṉai vitiyiṉ mēṉmaiyāl.

Report an error

ஈண்டு இருந்து இவை இவை இயம்பும் ஏழைமை வேண்டுவது அன்று; இனி அமரின் வீடிய ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடைக் காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால்.

īṇṭu iruntu ivai ivai iyampum ēḻaimai vēṇṭuvatu aṉṟu; iṉi amariṉ vīṭiya āṇtakai aṉparai amarar nāṭṭiṭaik kāṇṭalē nalam; piṟa kaṇṭatu illaiyāl.

Report an error

'எம்பியைத் துணைவரை இழந்த நான் இனி வெம்புபோர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து அம்பினால் இராவணன் ஆவி பாழ்படுத்து உம்பருக்கு உதவி மேல் உறுவது என் அரோ?

'empiyait tuṇaivarai iḻanta nāṉ iṉi vempupōr arakkarai murukki vēr aṟuttu ampiṉāl irāvaṇaṉ āvi pāḻpaṭuttu umparukku utavi mēl uṟuvatu eṉ arō?

Report an error

'இளையவன் இறந்தபின் எவரும் என் எனக்கு? அளவு அறு சீர்த்தி என்? அறமென்? ஆண்மை என்? கிளை உறு சுற்றமென்? அரசு என்? கேண்மை என்? விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்?

'iḷaiyavaṉ iṟantapiṉ evarum eṉ eṉakku? aḷavu aṟu cīrtti eṉ? aṟameṉ? āṇmai eṉ? kiḷai uṟu cuṟṟameṉ? aracu eṉ? kēṇmai eṉ? viḷaivutāṉ eṉ? maṟai viti eṉ? meymmai eṉ?

Report an error

'இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வனேல் மரக் கண் வன்கள்வனே! வஞ்சர் என்னில் ஆர்? கரக்குமது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ?

'irakkamum pāḻpaṭa empi īṟu kaṇṭu arakkarai veṉṟu niṉṟu āṇmai āḷvaṉēl marak kaṇ vaṉkaḷvaṉē! vañcar eṉṉil ār? karakkumatu allatu ōr kaṭaṉ uṇṭākumō?

Report an error

"தாதையை இழந்தபின் சடாயு வீய்ந்தபின் காதலின் துணைவரும் முடிய காத்து உழல் கோது அறு தம்பியும் விளிய கோள் இலன் சீதையை உவந்துளன் " என்பர் சீரியோர்.

"tātaiyai iḻantapiṉ caṭāyu vīyntapiṉ kātaliṉ tuṇaivarum muṭiya kāttu uḻal kōtu aṟu tampiyum viḷiya kōḷ ilaṉ cītaiyai uvantuḷaṉ " eṉpar cīriyōr.

Report an error

வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அறக் கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்து இன்துணைத் தம்பியை இன்றி யான் உளேன் நன்று அரசு ஆளுமா சால நன்று அரோ.

veṉṟaṉeṉ arakkarai vērum vīyntu aṟak koṉṟaṉeṉ ayōttiyaik kuṟukiṉēṉ kuṇattu iṉtuṇait tampiyai iṉṟi yāṉ uḷēṉ naṉṟu aracu āḷumā cāla naṉṟu arō.

Report an error

படியின்மேல் காதலின் யாதும் பார்க்கலன் 'முடிகுவென் உடன்’என முடியக் கூறலும் அடி இணை வணங்கிய சாம்பன் 'ஆழியாய்! நொடிகுவது உளது’என நுவல்வதாயினான்.

paṭiyiṉmēl kātaliṉ yātum pārkkalaṉ 'muṭikuveṉ uṭaṉ’eṉa muṭiyak kūṟalum aṭi iṇai vaṇaṅkiya cāmpaṉ 'āḻiyāy! noṭikuvatu uḷatu’eṉa nuvalvatāyiṉāṉ.

Report an error

'உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது அது; என்னெனில் இமையவர் எண்ணுக்கு ஈனமாம்; பின்னரே தெரிகுதி; தெரிவு இல் பெற்றியோய்

'uṉṉai nī uṇarkilai; aṭiyaṉēṉ uṉai muṉṉamē aṟikuvēṉ; moḻital tītu atu; eṉṉeṉil imaiyavar eṇṇukku īṉamām; piṉṉarē terikuti; terivu il peṟṟiyōy

Report an error

'அம் புயத்து அயன் படை ஆதல் தேறினேன் உம்பியை உலப்பு அரும் வலத்தை ஒத்தது வெம்பு போர்க் களத்திடை விழுத்த வென்றியால்; எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்.

'am puyattu ayaṉ paṭai ātal tēṟiṉēṉ umpiyai ulappu arum valattai ottatu vempu pōrk kaḷattiṭai viḻutta veṉṟiyāl; em perun talaiva! ītu eṇṇam uṇmaiyāl.

Report an error

'அன்னவன் படைக்கலம் அமரர் தானவர் தன்னையும் விடின் உயிர் குடிக்கும்; தற்பர! உன்னை ஒன்று இழைக்கிலது ஒழிந்து நீங்கியது; இன்னமும் அளவை ஒன்று எண்ண வேண்டுமோ?

'aṉṉavaṉ paṭaikkalam amarar tāṉavar taṉṉaiyum viṭiṉ uyir kuṭikkum; taṟpara! uṉṉai oṉṟu iḻaikkilatu oḻintu nīṅkiyatu; iṉṉamum aḷavai oṉṟu eṇṇa vēṇṭumō?

Report an error

'பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் அருந்துயர் முடுக்குறும் அளவு இல் ஆற்றலான் "மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்! ” என பொருந்தினன் வடதிசைக் கடிது போயினான்.

'peruntiṟal aṉumaṉ īṇṭu uṇarvu peṟṟuḷāṉ aruntuyar muṭukkuṟum aḷavu il āṟṟalāṉ "maruntu iṟaip poḻutiṉil koṇarkuvāy! ” eṉa poruntiṉaṉ vaṭaticaik kaṭitu pōyiṉāṉ.

Report an error

'பனிவரை கடந்தனன் பருப்பதங்களின் தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான் இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும் துனிவரு துன்பம் நீ துடைத்தி தொல்லையோய்!

'paṉivarai kaṭantaṉaṉ paruppataṅkaḷiṉ taṉi aracu ataṉpuṟam tavirntu cārntuḷāṉ iṉi oru kaṇattiṉ vantu eytum; īṇṭuṟum tuṉivaru tuṉpam nī tuṭaitti tollaiyōy!

Report an error

'யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் வேனலான் மேனியாய்! மருந்தை மெய்யுற.

'yāṉ alāl entaiyāy ulakai īṉṟuḷāṉ tāṉ alāl civaṉ alāl nēmi tāṅkiya kōṉ alāl eṉaivarum uṇarum kōḷ ilar vēṉalāṉ mēṉiyāy! maruntai meyyuṟa.

Report an error

'ஆர்கலி கடைந்த நாள் அமிழ்தின் வந்தன; கார்நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன; மேருவின் உத்தர குருவின் மேல் உள; யாரும் உற்று உணர்கிலா அரணம் எய்தின.

'ārkali kaṭainta nāḷ amiḻtiṉ vantaṉa; kārniṟattu aṇṇaltaṉ nēmi kāppaṉa; mēruviṉ uttara kuruviṉ mēl uḷa; yārum uṟṟu uṇarkilā araṇam eytiṉa.

Report an error

தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில; ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள் மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால்.

tōṉṟiya nāḷmutal yārum toṭṭila; āṉṟa pēr aṇṇalē! avaṟṟiṉ āṟṟal kēḷ mūṉṟu eṉa oṉṟiya ulakam muṉṉai nāḷ īṉṟavaṉ iṟappiṉum āvi īyumāl.

Report an error

'சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின நல்லுயிர் நல்குவது ஒன்று; நல் நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று; தொல்லையோய்!

'calliyam akaṟṟuvatu oṉṟu; cantukaḷ pulluṟap poruttuvatu oṉṟu; pōyiṉa nalluyir nalkuvatu oṉṟu; nal niṟam tollaiyatu ākkuvatu oṉṟu; tollaiyōy!

Report an error

'வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி தருநெறி தருமமே காட்ட தாழ்க்கிலன்; அருமையது அன்று 'எனா அடி வணங்கினான்; இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான்.

'varuvatu tiṇṇam; nī varuntal; māruti taruneṟi tarumamē kāṭṭa tāḻkkilaṉ; arumaiyatu aṉṟu 'eṉā aṭi vaṇaṅkiṉāṉ; irumaiyum tuṭaippavaṉ ēmpal eytiṉāṉ.

Report an error

"பொன்மலை மீதுபோய் போக பூமியின் நல் மருந்து உதவும் " என்று உரைத்த நல்லுரைக்கு அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் என்னலும் வடதிசை எழுந்தது ஓங்கு ஒலி.

"poṉmalai mītupōy pōka pūmiyiṉ nal maruntu utavum " eṉṟu uraitta nalluraikku aṉvayam illai eṉṟu ayirkkiṉṟēṉ alēṉ eṉṉalum vaṭaticai eḻuntatu ōṅku oli.

Report an error

கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர கார்வரை இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை தடை இலது உடற்றுறு சண்ட மாருதம் வடதிசை தோன்றிய மறுக்கம் உற்றதால்.

kaṭal kiḷarntu eḻuntu mēlpaṭara kārvarai iṭai iṭai paṟintu viṇ ēṟa iṟṟu iṭai taṭai ilatu uṭaṟṟuṟu caṇṭa mārutam vaṭaticai tōṉṟiya maṟukkam uṟṟatāl.

Report an error

மீன்குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம் தான்குலைந்து உயர்மதி தழுவ தன் உழை மான்குலம் வெருக் கொள மயங்கி மண்டி வான் தேன்குலம் கலங்கிய நறவின் சென்றவால்.

mīṉkulam kulaintu uka veyiliṉ maṇṭilam tāṉkulaintu uyarmati taḻuva taṉ uḻai māṉkulam veruk koḷa mayaṅki maṇṭi vāṉ tēṉkulam kalaṅkiya naṟaviṉ ceṉṟavāl.

Report an error

வேர்த் துணர் தூரொடு விசும்பை மீச் செலப் போர்த்தன மலையொடு மரனும் முன்புபோல் தூர்த்தன வேலையை; காலின் தோன்றலும் ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான்.

vērt tuṇar tūroṭu vicumpai mīc celap pōrttaṉa malaiyoṭu maraṉum muṉpupōl tūrttaṉa vēlaiyai; kāliṉ tōṉṟalum ārttaṉaṉ aṉaiyavar arantai āṟṟuvāṉ.

Report an error

மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால் உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே.

maḻaikaḷum kaṭalkaḷum maṟṟum muṟṟum maṇ uḻaiyavum vicumpavum olittaṟku ottuḷa kuḻīiyiṉa kumuṟiṉa koḷkai koṇṭatāl uḻuvaiyiṉ ciṉattavaṉ ārtta ōcaiyē.

Report an error

எறிதிரைப் பெருங்கடல் கடைய ஏற்ற நாள் 'செறிசுடர் மந்தரம் தருதி சென்று’என 'வெறிது கொல் 'எனக்கொடு விசும்பின் மீச்செலும் உறுவலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான்.

eṟitiraip peruṅkaṭal kaṭaiya ēṟṟa nāḷ 'ceṟicuṭar mantaram taruti ceṉṟu’eṉa 'veṟitu kol 'eṉakkoṭu vicumpiṉ mīccelum uṟuvalik kaluḻaṉē ottut tōṉṟiṉāṉ.

Report an error

பூதரத்து அரவொடு மலைந்து போன நாள் ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தான் ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய தாதையும் ஒத்தனன் உவமை தனக்கு இலான்.

pūtarattu aravoṭu malaintu pōṉa nāḷ ōtiya veṉṟiyaṉ uṭaṟṟum ūṟṟattāṉ ētam il ilaṅkai am kirikoṭu eytiya tātaiyum ottaṉaṉ uvamai taṉakku ilāṉ.

Report an error

'தோன்றினன் 'என்னும் அச்சொல்லின் முன்னம் வந்து ஊன்றினன் நிலத்து அடி; கடவுள் ஒங்கல்தான் வான்தனி நின்றது வஞ்சர் ஊர் வர ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான்.

'tōṉṟiṉaṉ 'eṉṉum accolliṉ muṉṉam vantu ūṉṟiṉaṉ nilattu aṭi; kaṭavuḷ oṅkaltāṉ vāṉtaṉi niṉṟatu vañcar ūr vara ēṉṟilatu ātaliṉ; aṉumaṉ eytiṉāṉ.

Report an error

காற்று வந்து அசைதலும் கடவுள் நாட்டவர் போற்றிட விருந்து உவந்து இருந்த புண்ணியர் ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார் கூற்றினை வென்று தம் உருவம் கூடினார்.

kāṟṟu vantu acaitalum kaṭavuḷ nāṭṭavar pōṟṟiṭa viruntu uvantu irunta puṇṇiyar ēṟṟamum peruvali aḻakoṭu eytiṉār kūṟṟiṉai veṉṟu tam uruvam kūṭiṉār.

Report an error

அரக்கர்தம் யாக்கைகள் அழிவு இல் ஆழியில் கரக்கல் உற்று ஒழிந்தன ஓழிய கண்டன மரக் குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன; குரக்கு இனம் உய்ந்தது கூறல் வேண்டுமோ?

arakkartam yākkaikaḷ aḻivu il āḻiyil karakkal uṟṟu oḻintaṉa ōḻiya kaṇṭaṉa marak kulam mutalavum uyntu vāḻntaṉa; kurakku iṉam uyntatu kūṟal vēṇṭumō?

Report an error

கழன்ற நெடுங்கணை கரந்த புண்; கடுத்து அழன்றன குளிர்ந்தன அங்கம்; செங்கண்கள் சுழன்றன; உலகு எலாம் தொழுதது ஓங்கலை; குழன்ற பூங் குஞ்சியான் உணர்வும் கூடினான்.

kaḻaṉṟa neṭuṅkaṇai karanta puṇ; kaṭuttu aḻaṉṟaṉa kuḷirntaṉa aṅkam; ceṅkaṇkaḷ cuḻaṉṟaṉa; ulaku elām toḻutatu ōṅkalai; kuḻaṉṟa pūṅ kuñciyāṉ uṇarvum kūṭiṉāṉ.

Report an error

யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல் தாவரும் பேரொலி செவியில் சார்தலும் தேவர்தம் வாழ்த்தொலி கேட்ட செங்கணான் யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான்.

yāvarum eḻuntaṉar ārtta ēḻkaṭal tāvarum pēroli ceviyil cārtalum tēvartam vāḻttoli kēṭṭa ceṅkaṇāṉ yōkam nīṅkiṉaṉ eṉa iḷaval ōṅkiṉāṉ.

Report an error

ஓங்கிய தம்பியை; உயிர் வந்து உள்ளுற வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர் நீங்கினன் இராமனும்; உலகில் நின்றில தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்.

ōṅkiya tampiyai; uyir vantu uḷḷuṟa vīṅkiya tōḷkaḷāl taḻuvi ventuyar nīṅkiṉaṉ irāmaṉum; ulakil niṉṟila tīṅku uḷa; tēvarum maṟukkam tīrntaṉar.

Report an error

அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா பரம்பின! முனிவரும் வேதம் பாடினார்.

arampaiyar āṭiṉar; amiḻta ēḻ icai narampu iyal kiṉṉaram mutala naṉmaiyē nirampiṉa; ulaku elām uvakai ney viḻā parampiṉa! muṉivarum vētam pāṭiṉār.

Report an error

வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின் சீதம் நின்று ஆர்த்தன; தேவர் சிந்தனை.

vētam niṉṟu ārttaṉa; vēta vētiyar pōtam niṉṟu ārttaṉa; pukaḻum ārttaṉa; ōtam niṉṟu ārttaṉa; ōta vēlaiyiṉ cītam niṉṟu ārttaṉa; tēvar cintaṉai.

Report an error

உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும் தந்தனை நீ; அது நினக்குச் சான்று எனா சுந்தர வில்லியைத் தொழுது சூழவந்து அந்தணன் படையும் நின்று அகன்று போயதால்.

untiṉa piṉ kolai oḻivu il uṇmaiyum tantaṉai nī; atu niṉakkuc cāṉṟu eṉā cuntara villiyait toḻutu cūḻavantu antaṇaṉ paṭaiyum niṉṟu akaṉṟu pōyatāl.

Report an error

ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ தாயின் அன்பனைத் தழுவினான் தனி நாயகன் பெருந்துயரம் நாம் அற தூய காதல்நீர் துளும்பு கண்ணினான்.

āya kālaiyiṉ amarar ārttu eḻa tāyiṉ aṉpaṉait taḻuviṉāṉ taṉi nāyakaṉ peruntuyaram nām aṟa tūya kātalnīr tuḷumpu kaṇṇiṉāṉ.

Report an error

எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு உழுத மார்பினான் உருகி உள்ளுறத் தழுவி நிற்றலும் தாழ்ந்து தாளுறத் தொழுத மாருதிக்கு இனைய சொல்லினான்.

eḻutu kuṅkumat tiruviṉ ēntu kōṭu uḻuta mārpiṉāṉ uruki uḷḷuṟat taḻuvi niṟṟalum tāḻntu tāḷuṟat toḻuta mārutikku iṉaiya colliṉāṉ.

Report an error

முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம் நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய்.

muṉṉiṉ tōṉṟiṉōr muṟaiyiṉ nīṅkalātu eṉṉiṉ tōṉṟiya tuyariṉ īṟu cēr maṉṉiṉ tōṉṟiṉōm muṉṉam; māṇṭuḷōm niṉṉiṉ tōṉṟiṉōm neṟiyiṉ tōṉṟiṉāy.

Report an error

'அழியுங்கால் தரும் உதவி ஐயனே! மொழியுங்கால் தரும் உயிரின் முற்றுமோ? பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை வழியும் காத்து நன் மறையும் காத்தனை.

'aḻiyuṅkāl tarum utavi aiyaṉē! moḻiyuṅkāl tarum uyiriṉ muṟṟumō? paḻiyum kāttu arum pakaiyum kāttu emai vaḻiyum kāttu naṉ maṟaiyum kāttaṉai.

Report an error

'தாழ்வும் இங்கு இறைப் பொழுது தாழ்ந்ததேல் வாழி எம்பிமேல் அன்பு மாட்ட வான் ஏழும் வீயும்; என் பகர்வது? எல்லை நாள் ஊழி காண நீ உதவினாய் அரோ!

'tāḻvum iṅku iṟaip poḻutu tāḻntatēl vāḻi empimēl aṉpu māṭṭa vāṉ ēḻum vīyum; eṉ pakarvatu? ellai nāḷ ūḻi kāṇa nī utaviṉāy arō!

Report an error

'இன்று வீகிலாது எவரும் எம்மொடு நின்று வாழுமா நெடிது நல்கினாய்; ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால்!

'iṉṟu vīkilātu evarum emmoṭu niṉṟu vāḻumā neṭitu nalkiṉāy; oṉṟum iṉṉal nōy uṟukilātu nī eṉṟum vāḻtiyāl iṉitu eṉ ēvalāl!

Report an error

மற்றையோர்களும் அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்; உற்றவாறு எலாம் உணரக் கூறினான்.

maṟṟaiyōrkaḷum aṉumaṉ vaṇmaiyāl peṟṟa āyuḷār piṟanta kātalār cuṟṟum mēviṉār; toḻutu vāḻttiṉār; uṟṟavāṟu elām uṇarak kūṟiṉāṉ.

Report an error

உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் பொய்த்த சிந்தையார் இறுதல் பொய்க்குமால் மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய் வைத்து மீடியால் வரம்பு இல் ஆற்றலாய்.

uytta mā maruntu utava oṉṉalār poytta cintaiyār iṟutal poykkumāl moytta kuṉṟai am mūla ūḻivāy vaittu mīṭiyāl varampu il āṟṟalāy.

Report an error

என்று சாம்பவன் இயம்ப ஈது அரோ நன்று சால! என்று உவந்து ஒர்நாழிகை சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வமாக் குன்று தாங்கி அக் குரிசில் போயினான்.

eṉṟu cāmpavaṉ iyampa ītu arō naṉṟu cāla! eṉṟu uvantu ornāḻikai ceṉṟu mīḷveṉ eṉṟu eḻuntu teyvamāk kuṉṟu tāṅki ak kuricil pōyiṉāṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).