Skip to content

பாயிரம் / உற்பத்திக் காண்டம் — மேருப்படலம் · மேருப்படலம்

mēruppaṭalam

mēruppaṭalam

mēruppaṭalam, from Pāyiram and Uṟpatti Kāṇṭam; poems 1.411–1.491.

81 versesTamil with transliteration

A spear and lotus for chapter 10 of Kanda Puranam.

பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற் கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத் துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன் இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான்.

paṉṉaruñ ciṟappiṉ mikka paṉivarai yaracaṉ ṟaṉpāṟ kaṉṉiyam putalvi yākik kaurinōṟ ṟirunta kālait tuṉṉiya vavuṇar cūḻac cūrapaṉ māvām veyyōṉ innila varaippiṉ aṇṭat tiṟaivaṉē yāki yuṟṟāṉ.

Report an error

மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப் பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள் அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி முற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார்.

maṟṟatu pōḻtiṟ ṟollai maṟaipporuḷ vaṭattiṉ pāṅkarp peṟṟiṭu caṉaka ṉāti muṉivarar piṉṉum paṉṉāḷ aṟṟamil tavañcey tentai yaruḷiṉāṟ kayilai naṇṇi muṟṟuṇar nanti pōṟṟu mutalilai vāyil pukkār.

Report an error

நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால் வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார்.

nōṉmaiyiṉ muṉiva rāṉōr nuvalaruṅ kāṭci nanti kāṉmuṟai vaṇaṅki niṟpa aṉaiyavaṉ karuṇai taṉṉāl vāṉmali kaṭavuṭ kōyiṉ mantiraṅ koṇṭu cella nāṉmukaṉ mutalōrk keytā ñāṉanā yakaṉaik kaṇṭār.

Report an error

மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள விழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித் தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார்

moḻiyatu tavaṟal cella muṟṟuṭal poṭippuk koḷḷa viḻipuṉal perukat tīcēr peḻukeṉa vuḷḷam viḷḷa aḻakiya maṟaikku meṭṭā ātinā yakaṉai nōkkit toḻutaṉa ruvakai pūttut tuḷḷiṉar tuḷakka muṟṟār

Report an error

மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம் நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந் தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார்.

maṇṇava ramarar yārai vaṇaṅkiṉu mavaika ḷellām naṇṇiya paramaṉ ṟāḷi ṉāṟperun tavatti ṉōrun taṇṇaḷi neṟiyiṟ palkāṟ ṟāḻntaṉa reḻuntu niṉṟu paṇṇicai maṟaika ṭammāl tutittivai pakarta luṟṟār.

Report an error

இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத திடைப்பட் டாங்குப் பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள் அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண் மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார்.

iruṭperuṅ kaṭaluḷyāmat teṟimaruta tiṭaippaṭ ṭāṅkup poruṭperuṅ kaṭalām vētam puṭaitoṟu malaippa vinnāḷ aruṭperuṅ kaṭalē eyttē mamaintila tuṇarvi yāṅkaṇ maruṭperuṅ kaṭaliṉ nīṅkum vaṇṇamoṉ ṟaruṭi yeṉṟār.

Report an error

நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர் இவைபுகன் றிடலு மன்பர்க் கெளிவருங் கருணை வள்ளல் அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு தவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி ரென்றான்.

navaiyaṟu tavaṅka ḷāṟṟi nallaruḷ paṭaitta tollōr ivaipukaṉ ṟiṭalu maṉpark keḷivaruṅ karuṇai vaḷḷal avarmukan terintu nuṅkaḷ aṟivamain taṭaṅku māṟu tavalaruñ ciṟappiṉ naṉṉūl caṟṟutu mirutti reṉṟāṉ.

Report an error

என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர் நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட் சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக் கொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான்.

eṉṟivai yaruḷa entai yiṇaiyaṭi taṉātu muṉṉar naṉṟuṇar kāṭci koḷḷum nālvaru miruntār aṅkaṭ ceṉṟiṭu nantip puttēḷ ciṟappuṭai vataṉa nōkkik koṉṟaiyan toṭaiyal vēynta kuḻakaṉoṉ ṟiyampu kiṉṟāṉ.

Report an error

பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும் ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண் நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான்.

pūṅkaṉaik kiḻava ṉaṉṟip puṅkavar yārpōn tālum īṅkuṟat taruti yallai yītuṉak kaṭaitta teṉṉa āṅkatu puriva ṉeṉṉā vamalaṉai yiṟaiñci yaṅkaṇ nīṅkiyak kaṇattiṉ nanti neṟimutalpōṟṟal ceytāṉ.

Report an error

நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல் முந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப் புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார்.

nantimuṟ kaṭaiyaip pōṟṟa ñāṉanā yakaṉā maṇṇal muntuṟai caṉaka ṉāti muṉivarar toḻutu kēṭpa antamil āka mattiṉ arumpatam mūṉṟuṅ kūṟap puntiya toṭuṅkum ñāṉa pōtakam pōti yeṉṟār.

Report an error

என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன் பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர் அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால் உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான்.

eṉṉalum nakaitti yātu metirmoḻi purintā ṉallaṉ paṉṉuva taṉṟāl maṟṟip pariciṉā liruttal kaṇṭīr anneṟi yāku meṉṟē aṉaiyavark kuṇarttu māṟṟāl uṉṉarum parattiṉ mēlō ṉoruceyal purita luṟṟāṉ.

Report an error

இருவரு முணரா அண்ணல் ஏனவெள் ளெயிறி யாமை சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள் கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்.

iruvaru muṇarā aṇṇal ēṉaveḷ ḷeyiṟi yāmai ciranirai yananta kōṭi tiḷaittiṭum urattiṟ cīrkoḷ karatala moṉṟu cērtti mōṉamut tiraiyaik kāṭṭi orukaṇañ ceyaloṉ ṟiṉṟi yōkucey vāri ṉuṟṟāṉ.

Report an error

இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம் பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட் புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார்.

iṉaiyatōr taṉmai kāṭṭi yempirā ṉuṇarttak kaṇṭu caṉakaṉē mutalā vuḷḷōr tavalarum ñāṉa pōtam paṉuvaliṉ aḷavaṉ ṟeṉṉum pāṉmaiyait terintu mukkaṭ puṉitaṉa taruḷāṟ ṟattam puntiyi ṉoṭukkam peṟṟār.

Report an error

தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும் முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன் சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல்.

tattamuḷ ḷoṭuṅkal peṟṟa tāpata kaṇattar yārum muttoḻil puriyum mūvā mutalvaṉām mukkaṇ mūrtti meyttava vaṭiva muṉṉi mēviṉar cūḻcci mēlōṉ cittiram puṇartta pāvai ceyalaṟa irukku māpōl.

Report an error

தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை அற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின் முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம் பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ.

taṟparaṉ iṉaiya vāṟṟāṟ ṟāpata ruṇarun taṉmai aṟputa ñāṉa pōta maḷittiṭuṅ kaṇama toṉṟiṉ muṟpaṭu kamalap puttēḷ mutaliya amarark kellām paṟpala yukaṅkaḷ ceṉṟa piṟarkkiṉip pakarva teṉṉō.

Report an error

இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம் மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில் அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாடபோல்.

ittiṟa ñāṉapōta meṉṟutoṉ muṉivark kentai kaittalaṅ koṇṭu kāṭṭuṅ kaṇattiṉil amarark kellām mettupal lukaṅkaḷ ceṉṟa viḻumiya kāñci taṉṉil attaṉmey kuḻaitta naṅkai avaṉviḻi putaitta nāṭapōl.

Report an error

காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ் சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே.

kāraṇa mutalvaṉ mōṉak kāṭciyāl amara rellāñ cūrara makaḷir taṅka ṭuṇaimulaip pōka miṉṟi āriṭar nilaimai taṉṉai yaṭaintaṉar aḷakkar cūḻnta pāriṭai uyiruṅ kāmap paṟṟuviṭ ṭirunta vaṉṟē.

Report an error

ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம் ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்ற ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங் காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ.

āraṇaṉ ṟaṉatu maintark karumpeṟal ñāṉa pōtam ōriṟai kāṭṭu muṉṉar ulakelā moruppā ṭoṉṟa īruṭaṉ muyaṅku mārva miṉṟiyē yirunta yārkkuṅ kāraṇaṉ civaṉē yeṉkai kaḻaṟavum vēṇṭaṟ pāṟṟō.

Report an error

பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல் அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர் இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப் புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல்.

piṇaiviḻaic cūḻtan tuyppap perumaṟai vitiva ḻāmal aṇaiviḻac caṭaṅkiṟ koṇṭa arivaiya rōṭu tēvar iṇaiviḻaic ciyaṟkai kūṭā tiraṅkiṉar kavaṟci yeytip puṇaiviḻac calati yāḻntu pulampukoḷ mākka ḷēpōl.

Report an error

வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத் தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால் இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப் புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல்.

vaṉmulai yaṇaṅki ṉōrum vāṉavar yāruṅ kāmat taṉmaiyum puṇarppu miṉṟit taḷarntaṉar vaṟiñar tampāl iṉmaikoṇ ṭōrkaḷ cella īvatu kūṭā vellaip puṉmaiyo ṭiruvar tāmum pulampuṟu taṉmai yēpōl.

Report an error

பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர் அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார் தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம் நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல்.

poṟpuruk kuṟaiviṉ ṟuṟṟum puṉamēl makaḷir maintar aṟpoṭu kalantu kāmat tarumpayaṉ kōṭa ṟēṟṟār taṟpara vaṭuka ṉāṇait taṉmaiyāl alakai yīṭṭam naṟpuṉa ṉīḻal peṟṟu naṇukarun taṉmai yēpōl.

Report an error

மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர் கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும் ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப் பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல்.

māṭaka veḻālai yaṉṉa paṇimoḻi makaḷir maintar kūṭiṉa riruntu miṉpaṅ koṇṭilar ciṟārku ḻāmum āṭavar kuḻāmum vāṭkaṇ arivaiyar kuḻāmu mēṉaip pēṭiyar kuḻāmum vevvē ṟuṟṟiṭu peṟṟi yēpōl.

Report an error

இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற் பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந் திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம்.

iruntiṭa viriñcaṉ māyōṉ iruvaru mīcaṉ ṟaṉpāṟ poruntiṭu muṇarcci koṇṭu muttiyiṟ pukka cēyun tiruntucīr vaciṭṭaṉ collāṟ cilaiyeṉap paṉṉāḷ niṉṟa aruntati mātum pōṉṟār āṭavar makaḷi rellām.

Report an error

ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர் பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங் காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம்.

ēmaru puvaṉa mūṉṟu miṉitaruḷ kamalak kaṇṇar pūmaṭa mātar tampāṟ puṇarkilar poruvil vēḷuṅ kāmaru makaḷir kūṭṭaṅ karutalaṉ ivarpōṟ cintai āmaiyi ṉoṭuṅkal peṟṟār ācaiyuḷ ḷōrkaḷellām.

Report an error

மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும் விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும் பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக் கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல்.

maṇṇakat tuyirkaṇ muṟṟu mātirat tuyirkaṇ muṟṟum viṇṇakat tuyirkaṇ muṟṟum vēṟṟakat tuyirkaṇ muṟṟum peṇṇakat tāṇmai kūṭuñ ciṟunalam piḻaitta ñāṉak kaṇṇakat tiṟaivaṟ kaṇṭu kaṭainiṉṟa kāṭci yārpōl.

Report an error

நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல் வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே.

nākamār caṭilat taṇṇal nāṟperun tavaru muyya yōkucēr nilaimai kāṭṭu morukaṇat tuyiriṉ pommal vākaivē ṭāṉu niṟka maiyalum puṇarppu maṟṟa ākaiyāl akila mellā mavaṉeṉkai terinta taṉṟē.

Report an error

சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின் கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ.

cilaiyoṭu pakaḻi vāṭat tirumatik kuṭaicīr kuṉṟa valitaḷar veytat teṉṟal maṟikaṭaṟ cuṟavu tūṅka alaipuri yāṇai nīṅki āṭaṉmā mataṉu mātiṉ kalaviya toḻintā ṉeṉṉiṟ piṟarceyal kaḻaṟaṟ pāṟṟō.

Report an error

சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல் மேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே.

cālikaḷ vaḷaru mellai taṭampuṉal vaṟumait tāka vālitu kuralvāṅ kātu varuttoṭu māyva tēpōl mēla ṉaruḷāṟ pōkam veṟuttalaṟ karumal kiṉṟi ñālamaṉ ṉuyirkaḷ muṟṟum nāṭoṟuṅ kuṟainta vaṉṟē.

Report an error

முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித் தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற தெள்ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன் வெள்ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல்

muḷḷarai muḷarip puttēḷ mutaṟpuri tuṇaiyē yaṉṟit taḷḷaru muyirkaḷ piṉṉun talaittalai malkā tuṟṟa teḷḷiti ṉulaka mīṉṟa tēviyiṉ ṟāki īcaṉ veḷḷiyaṅ kayilai taṉṉil mēviya mēlai nāṭpōl

Report an error

இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும் மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை தெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர் தம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரனி புக்கான்.

immuṟai nikaḻa nātaṉ īriru tavatti ṉōrkkum meymmaiko ḷuṇarcci kāṭṭi vīṟṟirun taruḷu mellai temmuyal cūraṉ tīṅku ceytalāl makavāṉ vāṉōr tammoṭun tuṟakkam viṭṭuc caciyoṭun taraṉi pukkāṉ.

Report an error

மேகமூர் கடவுள் வெள்ளி வெற்பினி லேகி முக்கண் ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன் மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான்.

mēkamūr kaṭavuḷ veḷḷi veṟpiṉi lēki mukkaṇ ēkanā yakaṉaik kāṇu mellaiyiṉ ṟāka mīṇṭu cōkamō ṭampoṉ mērut tuṉṉiyē cūraṉ maintaṉ mākanā ṭaḻittuc cēyaic ciṟaiceyta vaṇṇan tērntāṉ.

Report an error

தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும் இமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான்.

tamaṉiya mēru veṟpiṟ ṟaṉṉuḷa poruppā ṭeyta nimalaṉai yuṉṉip paṉṉāḷ neṭuntava muḻatta lōṭum imilviṭai micaik koṇ ṭaṅkaṇ empirā ṉēkak kāṇūu amararkōṉ vaṇaṅkip pōṟṟa aṉaiyava ṉaruḷic ceyvāṉ.

Report an error

நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய் இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான்.

nontaṉai yaḷappil kāla nōṟṟaṉai yāṟṟal tīrntāy intira niṉakku vēṇṭiṟ ṟeṉṉaiya tiyampu keṉṉā antami laṟiviṉ mēlōṉ aṟikilaṉ pōlak kēṭpa vantaṉai purintu pōṟṟi makapati pukala luṟṟāṉ.

Report an error

பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர் என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித் தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான் அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன.

paṉṉarum paḻicēr cūraṉ paruvaraṟ paṭuttip piṉṉar eṉṉoru putalvaṉ ṟaṉṉai imaiyavar palarai vāṭṭit taṉṉakarc ciṟaiyiṭ ṭemmūr taḻalkoḷīit tavaṟu ceytāṉ aṉṉavaṉ ṟaṉṉai yaṭṭē aḷittiyā lemmai yeṉṉa.

Report an error

மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம் நும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள் நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி இம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான்.

meymmaiya takaṉṟa takkaṉ vēḷviyi ṉirunta pāvam nummiṭai yirunta taṟṟāl nōtaka vuḻantīr mēṉāḷ nammiṭai yorucēy vantu naṇukiveñ cūraik kāti immeṉa vummaik kāppa ṉeṉappukaṉ ṟiṟaivaṉ pōṉāṉ.

Report an error

மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க மெய்திக் குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட் பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான்.

maṟaintaṉaṉ iṟaiva ṉēka makapati yirakka meytik kuṟaintaṉaṉ uṇarvu tuṉpaṅ kūrntaṉaṉ kumara ṉaṅkaṭ piṟantumaik kāppa ṉeṉṟē pirāṉaruḷ purinta peṟṟi ciṟantataṉ maṉatti luṉṉit tēṟiṉaṉ uvakai ceytāṉ.

Report an error

மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன் தேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள் ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான்.

mācaṟu kāṭci koṇṭa mātavark karuḷi yeṅkōṉ tēcuṟu kayilai yuṟṟāṉ umaiyava ḷimaiyañ cērntāḷ ācaṟu kumaraṉ aṉṉārk kaṭaivatet taṉmai yeṉṉā vācava ṉiruntu nāṭi maṉamicaik kavalai kūrntāṉ.

Report an error

மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின் இயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங் கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும்.

mayarvoṭu tuṟakka maṉṉaṉ maṉōvati yeṉṉu māṇṭai viyaṉaka reyti yāṅkaṇ vīṟṟirun taruḷum poṉṉiṉ iyaṉmuṟai maṉaivi taṉpāl illiṉai yiruttal ceytāṅ kayaṉuṟu kaṭimāṇ kōyi laṭaintaṉaṉ amara rōṭum.

Report an error

இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம் முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித் துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி அனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான்.

iṉaiyatōr kālai mukka ṇempirāṉ ñāṉapōtam muṉivarark kuṇartti vaikum muṟaiyiṉāṟ paṭaippiṉ ṟākit tuṉiyoṭu vētā vaikun toṉmuṟai yavaiyai naṇṇi aṉaiyavaṉ kaḻaṉmuṉ ṟāḻūu aḷappila vaḻutti niṉṟāṉ.

Report an error

நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப் பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர் கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ் சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம்.

niṟṟalum makavāṉ ṟaṉṉai nīṭaruḷ purintu nōkkip poṟṟaṉik kamala mēya puṅkavar mutalvaṉ vāṉōr koṟṟava vanta teṉṉai kūṟuti yeṉṉa lōṭuñ coṟṟaṉaṉ cūra paṉmaṉ ceytiṭun tuṉpa mellām.

Report an error

வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன் ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின் செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி உய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான்.

veyyatōr cūraṉ ceykai viḷampiyē muṉivark kīcaṉ aiyami luṇarvu kāṭṭi yamarvatu muraittut tāṉpiṉ ceyyuṟu tavaṅkaṇ ṭaṉṉāṉ aruḷiya tiṟaṉuñ ceppi uyvatōr parica teṉṉō umparum yāṉu meṉṟāṉ.

Report an error

என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன் ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும் அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வெள்ளிக் குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே.

eṉṟalum malarōṉ kēḷā evarkkumē lāku mīcaṉ oṉṟiya varuḷi ṉōṉum uṟṟavark kutavu vōṉum aṉṟiyum muṟaicey vōṉu mātaliṉ muṉipōl veḷḷik kuṉṟiṭai yemmai yāḷuṅ kuṟippiṉvīṟ ṟiruntā ṉaṉṟē.

Report an error

செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல் நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே.

ceṅkaṇamā ṟāṉum nāṉun tēṭutaṟ karitāy niṉṟa eṅkaṭam pirāṟku mēlā eṇṇavōr tēvu muṇṭō aṅkavaṉ ñāṉa pōtam aṟivaruk kuṇartti vaikal naṅkuṟai muḻutu māṟṟum nallaru ḷāku maṉṟē.

Report an error

படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம் அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல் கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே.

paṭamarmati milaiccuñ ceṉṉip pakavaṉā ruyirk ḷellām aṭuvatum varuttan tīrkku māraru ḷāṉa vāpōl koṭiyaveñ cūraṉ ṟaṉṉaik koṇṭēmak kalakkaṇ ceykai viṭalarum pavappē ṟārtti vīṭaruḷ karuṇai yaṉṟē.

Report an error

பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன் றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார் மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற் பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான்.

peṟṟiṭuṅ kurava rāṉōr piḷḷaikaḷ tampāl nōyoṉ ṟuṟṟiṭiṟ piṟaraik koṇṭum uṟutuyar ceytu tīrppār maṟṟavar tampā laṉpō vaṉkaṇō atupōl nampāṟ paṟṟiya pavaṅkaḷ tīrppāṉ paramaṉu mivaikaḷ ceytāṉ.

Report an error

தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன் பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான் இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே.

terumaru kiṉṟa nampāṟ ṟīṅkelām nīṅku mellai oruciṟi taṇukiṟ ṟāku mātalāl uṇarviṉ mēlōṉ parivoṭu niṉpāl vantu paricivai yaruḷip pōṉāṉ iruviṉaip pauva vēlai ēṟiṉam pōlu maṉṟē.

Report an error

ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந் தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற் கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே.

ātaliṉ iṟaiva ṉēmē laruḷceyum ataṟki yāmun tītaṟa muyalu māṟu ciṟituḷa tivaṟṟai māyōṟ kōtiṉam vēṇṭuñ ceykai yollaiyiṟ ceytu meṉṉā ētamil kamalap puttēḷ irukkaiviṭ ṭeḻuntā ṉaṉṟē.

Report an error

அன்ன காலை யதுநன்று நன்றெனாத் துன்னு வானவர் சூழலொ டிந்திரன் பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச் சென்னி நான்கினன் செல்லுதல்மேயினான்.

aṉṉa kālai yatunaṉṟu naṉṟeṉāt tuṉṉu vāṉavar cūḻalo ṭintiraṉ piṉṉa rākap peyarntuṭaṉ vantiṭac ceṉṉi nāṉkiṉaṉ cellutalmēyiṉāṉ.

Report an error

ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன் வாலி தாந்தன் மனோவதி நீங்குறா மேலை வைகுந்த மேன்னும் வியனகர் ஆல யத்தின் அகன்கடை யேகினான்.

ñālam yāvaiyum nalkiya puṅkavaṉ vāli tāntaṉ maṉōvati nīṅkuṟā mēlai vaikunta mēṉṉum viyaṉakar āla yattiṉ akaṉkaṭai yēkiṉāṉ.

Report an error

அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ் சங்கு மேந்திய தானையங் காவலன் செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன் பங்க யத்தன் படர்ந்தது செப்பினான்.

aṅka vellai yatukaṇṭu nēmiyuñ caṅku mēntiya tāṉaiyaṅ kāvalaṉ ceṅkaṇ māyaṉmuṉ ceṉṟuviṇ ṇōruṭaṉ paṅka yattaṉ paṭarntatu ceppiṉāṉ.

Report an error

பணில மேந்திய பண்ணவன் அன்னரைக் கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி இணையில் காவல னுய்த்திட இந்திரன் கணமொ டெகினன் காசினி நல்கியோன்.

paṇila mēntiya paṇṇavaṉ aṉṉaraik koṇarti yāleṉak kūṟi viṭuttuḻi iṇaiyil kāvala ṉuyttiṭa intiraṉ kaṇamo ṭekiṉaṉ kāciṉi nalkiyōṉ.

Report an error

பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன் னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள் மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல் அரியி ருந்த அவைக்களம் நண்ணினான்.

poruvil māmuṉi puṅkavar pōṟṟutaṉ ṉuruvu koṇṭa vulappaṟu kaṇṇarkaḷ marapi ṉētta maṇippaṇip pīṭamēl ariyi runta avaikkaḷam naṇṇiṉāṉ.

Report an error

அன்ன மூர்தி அமருல காளுறும் மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும் பன்ன காசனப் பங்கயக் கண்ணவன் பொன்னின் மாணடி போற்றி வணங்கினான்.

aṉṉa mūrti amarula kāḷuṟum maṉṉa ṉōṭumav vāṉavar tammoṭum paṉṉa kācaṉap paṅkayak kaṇṇavaṉ poṉṉiṉ māṇaṭi pōṟṟi vaṇaṅkiṉāṉ.

Report an error

தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக் கருணை செய்துதன் காதல னாகிய பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால் அருளி யங்கண் அவனை இருத்தினான்.

taraiya ḷantiṭu tāḷiṉaṉ avvaḻik karuṇai ceytutaṉ kātala ṉākiya pirama ṉukkoru pīṭikai peṟṟiyāl aruḷi yaṅkaṇ avaṉai iruttiṉāṉ.

Report an error

குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ ஒல்லும் நின்விதி யூறில தாகியே செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான்.

kullai māmuṭik koṇṭavaṉ attuṉai alli māma laraṇṇalai nōkkuṟīi ollum niṉviti yūṟila tākiyē cellu kiṉṟakol eṉṟaluñ ceppuvāṉ.

Report an error

கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும் அனக இத்திறங் கேட்க அறிவுடைச் சனகன் முற்படு தாபதர் நால்வரும் எனக ருத்திடை முற்பக லெய்தினார்.

kaṉakaṉ accuṟak kantiṭai vanteḻum aṉaka ittiṟaṅ kēṭka aṟivuṭaic caṉakaṉ muṟpaṭu tāpatar nālvarum eṉaka ruttiṭai muṟpaka leytiṉār.

Report an error

அறிவின் மிக்க அனையரை நோக்கியான் பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண் டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர் முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை.

aṟiviṉ mikka aṉaiyarai nōkkiyāṉ peṟuva tāmip peruntoḻi lāṟṟiyīṇ ṭuṟuti reṉṉa uḷattatu koṇṭilar muṟuval ceytu moḻintaṉar ivvurai.

Report an error

பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப் பேச லுற்ற பெருந்தளை பூணலம் ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார்.

pāca vaṉciṟaip paṭṭup paṭaippeṉap pēca luṟṟa peruntaḷai pūṇalam īcaṉ māṇaṭi yeytutum yāmeṉā mācil kāṭciyar valvirain tēkiṉār.

Report an error

மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும் ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக் கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா வேத வுண்மை விளம்புதி யாலென்றார்.

māta vattiṉai maintarka ḷāṟṟalum āti nāyakaṉ avvuḻi vantumak kētu vēṇṭiya teṉṟalu meṇṇilā vēta vuṇmai viḷamputi yāleṉṟār.

Report an error

என்ற லோடும் இறையவன் வெள்ளியங் குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும் ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம் நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர்.

eṉṟa lōṭum iṟaiyavaṉ veḷḷiyaṅ kuṉṟa mītuteṉ kōṭṭiṭai niṟpuṟum oṉṟo rāṉiḻal uṟṟu maṟaiyelām naṉṟu ṇarttiṭa nālvarun tērntaṉar.

Report an error

முந்தை வேத முழுது முணர்த்தியே எந்தை யேக இருநிலம் போந்துதஞ் சிந்தை யொன்றும் திறனரி தாதலின் நொந்து பின்னரும் நோற்றலை மேயினார்.

muntai vēta muḻutu muṇarttiyē entai yēka irunilam pōntutañ cintai yoṉṟum tiṟaṉari tātaliṉ nontu piṉṉarum nōṟṟalai mēyiṉār.

Report an error

பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே தொன்ன லம்பெறு தூய வுளத்தராய் என்னை யாளுடை யீச னருளினால் மன்னும் வெள்ளி வரையிடை யேகினார்.

piṉṉum maintar peruntava māṟṟiyē toṉṉa lampeṟu tūya vuḷattarāy eṉṉai yāḷuṭai yīca ṉaruḷiṉāl maṉṉum veḷḷi varaiyiṭai yēkiṉār.

Report an error

ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம் பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான் ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும் ஓகை பற்றி யுணர்வகை கூறியே.

ēkal peṟṟiṭu makkaṭ kiṉituḷam pāka muṟṟa paricuṇarn tempirāṉ āka mattiṉ arumpatam mūṉṟaiyum ōkai paṟṟi yuṇarvakai kūṟiyē.

Report an error

கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய வான நாயகன் மற்றவர் காண்டக ஞான போதம் நவிலருந் தன்மையால் மோன மேய முதற்குறி காட்டினான்.

kūṉaṉ māmatik kōṭu milaicciya vāṉa nāyakaṉ maṟṟavar kāṇṭaka ñāṉa pōtam navilarun taṉmaiyāl mōṉa mēya mutaṟkuṟi kāṭṭiṉāṉ.

Report an error

அந்த வெல்லை யரனருள் கண்டுதம் புந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர் சிந்தை செய்து செயலற்று வைகினார் முந்தி யாப்புறு முத்தளை மூட்டற.

anta vellai yaraṉaruḷ kaṇṭutam punti yoṉṟiyap puṅkavaṉ tāḷmalar cintai ceytu ceyalaṟṟu vaikiṉār munti yāppuṟu muttaḷai mūṭṭaṟa.

Report an error

வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம் போத யோகின் பொருண்மையைக் காட்டுழி ஓத லாகும் உகம்பல சென்றன சீத வானதி சேர்ந்ததொன் னாளினே.

vēta nāyakaṉ meyttavark kōrkaṇam pōta yōkiṉ poruṇmaiyaik kāṭṭuḻi ōta lākum ukampala ceṉṟaṉa cīta vāṉati cērntatoṉ ṉāḷiṉē.

Report an error

அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல் என்ன துஞ்செய லின்றி யிருத்தலான் முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய் மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே.

aṉṉai taṉṉai akaṉṟaraṉ yōkipōl eṉṉa tuñceya liṉṟi yiruttalāṉ muṉṉai āṇpeṇ muyakkama tiṉmaiyāy maṉṉu yirttokai malkaliṉ ṟāyatē.

Report an error

நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார் இவறு காமப் புணர்ச்சிய தின்றியே கவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார் தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல்.

naviṟal eṉṉiṉi ñālam vicumpuḷār ivaṟu kāmap puṇarcciya tiṉṟiyē kavaṟal koṇṭu kalaṅkaña reytiṉār tavaṟal koṇṭatu nalkun taṉicceyal.

Report an error

நல்கல் பெற்ற தமியனும் நாமகட் புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே அல்கல் பெற்ற அருந்தவ யோகரின் ஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால்.

nalkal peṟṟa tamiyaṉum nāmakaṭ pulkal peṟṟa puṇarcciyiṉ ṟākiyē alkal peṟṟa aruntava yōkariṉ olkal peṟṟaṉaṉ uṇmaiyi tākumāl.

Report an error

நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால் ஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர் எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன் சொற்க நாட்டில் துயரினை நாட்டினான்.

niṟka iṅkitu nittaṉva rattiṉāl oṟka milvaḷa ṉuṇṭiṭu veyyacūr eṟkum nittalu mēvaloṉ ṟiṭṭaṉaṉ coṟka nāṭṭil tuyariṉai nāṭṭiṉāṉ.

Report an error

தேசு நீங்குறு தேவரை ஈண்டுள வாச வன்றனை மாதிரத் தோர்களைப் பாச னத்தொடு பற்றினன் நித்தலுங் கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ.

tēcu nīṅkuṟu tēvarai īṇṭuḷa vāca vaṉṟaṉai mātirat tōrkaḷaip pāca ṉattoṭu paṟṟiṉaṉ nittaluṅ kūca liṉṟikkuṟ ṟēvalkoṇ ṭāṉarō.

Report an error

நிறைபு ரிந்த நிலவினை வாளரா மறைபு ரிந்தென வானகத் தோருடன் இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச் சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே.

niṟaipu rinta nilaviṉai vāḷarā maṟaipu rinteṉa vāṉakat tōruṭaṉ iṟaipu rintaviv vintiraṉ maintaṉaic ciṟaipu rintaṉaṉ tīttoḻi lāṟṟiyē.

Report an error

நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும் அரந்தை மல்க அறிகிலன் போலவே இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது விரைந்து கூறுதி யென்று விளம்பினான்.

niranta palluyir taṅkaṭku nittalum arantai malka aṟikilaṉ pōlavē irunta ṉaṉcivaṉ eṉṉiṉic ceyvatu viraintu kūṟuti yeṉṟu viḷampiṉāṉ.

Report an error

அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும் மரபின் நாடினர் வாலுணர் வெய்திய திருவி னாயகன் செங்கம லந்திகழ் பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான்.

ariya tattuvam aiyaintiṉ pētamum marapiṉ nāṭiṉar vāluṇar veytiya tiruvi ṉāyakaṉ ceṅkama lantikaḻ piramaṉ māmukam nōkkiṉaṉ pēcuvāṉ.

Report an error

ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி மூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந் தேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில் ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார்.

āvika ḷaṉaittu māki aruvamā yuruva māki mūvakai yiyaṟkait tāṉa mūlakā raṇam tākun tēvarka ṭēvaṉ yōkiṉ ceyalmuṟai kā meṉṉil ēvarkaḷ kāmaṅ kaṉṟit toṉmaipō lirukkum nīrār.

Report an error

ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித் தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற் சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே.

ūḻviṉai neṟiyāl muṉṉa moruperu vēḷvi yāṟṟit tāḻviṉai yaṭainta takkaṉ ṟaṉpuṭai yiruntōr tampāṟ cūḻviṉai yecca muṟṟum aruttiyē tolaittut tollai vāḻviṉai yaruḷa nātaṉ maṉattiṭai niṉaintā ṉaṉṟē.

Report an error

சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ் சார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற் பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால்.

cūreṉu mavuṇaṟ kāṟṟal purintatuñ curarkaḷ yāruñ cārvarun tiruttāl īcaṉ tavattaruk kuṇarvu kāṭṭi āruyir evaikku miṉṉa lākkiya vāṟun tūkkiṟ pēraruḷ muṟaiyē yaṉṟip piṟitoru ceyalu maṉṟāl.

Report an error

முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப் பனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க் கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந் துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ.

muṉivaruk kuṇarvu kāṭṭum mōṉattai mutalvaṉ nīṅkip paṉivarai aṇaṅkai mēvil paṭaippayaṉa muṟṟum aṉṉārk kiṉiyoru kumaraṉ tōṉṟil cūrkiḷai yeṉaittum poṉṟun tuṉiyuṟum ulaka mellān toṉmaipō luyyu mātō.

Report an error

அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில் எத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச் சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான்.

attiṟa muṟṟu māṟoṉ ṟaṟaikuvaṉ akilan taṉṉil ettiṟat tarumāl koḷ veytiṭuṅ kāmaṉ ṟaṉṉai uyttiṭiṉ muṉivar taṅkaṭ kuṇarvucey mōṉam nīṅkic cattiyai maṇantu cēyait tantiṭu mentai yeṉṟāṉ.

Report an error

பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால் மதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான்.

patumapī ṭikaiyō ṉaṉ paricutērn tuvakai yeyti ituceyal muṟaiyē entāy ēṟṟaṉa pukaṉṟā yeṉṉa atupoḻu tavaṉai nōkki accutaṉ amalaṉ ṟaṉpāl mataṉaṉai viḷittu vēṇṭi viṭuttinī vallai yeṉṟāṉ.

Report an error

என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன் பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும் மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று தன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே.

eṉṉalum malarō ṉuḷḷat ticaivukoṇ ṭeḻuntu māyaṉ poṉṉaṭi vaṇakkañ ceytu viṭaikoṭu pulava rōṭum maṉṉoṭu maṅkaṇ nīṅki maṉōvati ataṉpāṟ ceṉṟu taṉṉaka raṭaintu kañcat taviciṉvīṟ ṟiruntā ṉaṉṟē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).