Skip to content

பாயிரம் / உற்பத்திக் காண்டம் — பார்ப்பதிப் படலம் · பார்ப்பதிப் படலம்

pārppatip paṭalam

pārppatip paṭalam

pārppatip paṭalam, from Pāyiram and Uṟpatti Kāṇṭam; poems 1.375–1.410.

36 versesTamil with transliteration

A spear and lotus for chapter 9 of Kanda Puranam.

அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல் உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத் தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள்.

aṉṉuḻi umaiyava ḷakattu ḷōrceyal uṉṉiṉaḷ tuṇukkamuṟ ṟollaitā ṉeḻīit taṉṉika rillavaṉ tāḷi ṟaiñciyē muṉṉuṟa niṉṟivai moḻital mēyiṉāḷ.

Report an error

கற்பனை முதலிய கடந்த கண்ணுதல் தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப் பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச் சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான்.

kaṟpaṉai mutaliya kaṭanta kaṇṇutal taṟpara niṉaiyikaḻ takkaṉ taṉṉiṭaip paṟpakal vaḷarntavaṉ payanta māteṉac coṟpaṭu nāmamuñ cumantu ḷēṉiyāṉ.

Report an error

ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந் தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன் நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள்.

āṅkatōr peyaraiyu mavaṉka ṇeytiyē ōṅkināṉ vaḷarntaviv vuṭalan taṉṉaiyun tāṅkiṉaṉ mēlavai tarittaṟ kañciṉēṉ nīṅkuva ṉavvakai patitti nīyeṉṟāḷ.

Report an error

மன்னுயி ராகிய மரபு முற்றவும் முன்னுற அருளிய முதல்வி யன்பினால் இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத் தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான்.

maṉṉuyi rākiya marapu muṟṟavum muṉṉuṟa aruḷiya mutalvi yaṉpiṉāl iṉṉaṇa miyampalu mitaṉait tērntiṭāt taṉṉika rillatōr talaivaṉ kūṟuvāṉ.

Report an error

பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற் சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின் புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால்.

pattimai yemvayiṟ paḻutta paṇpiṉāṟ cattiyē niṉṉikar cakatti ṉillainī ittiṟam muyaluta lellai tīrntaniṉ puttirar vīṭuṟu poruṭṭup pōlumāl.

Report an error

நற்றிற மேலுது நங்கை சிந்தனை முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின் சுற்றம தாகிய இமையத் தொல்வரைக் கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம்.

naṟṟiṟa mēlutu naṅkai cintaṉai muṟṟiya vēṇṭumēl moḻitum mēruviṉ cuṟṟama tākiya imaiyat tolvaraik koṟṟavaṉ purivaṉāṟ koṭiya mātavam.

Report an error

ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன் மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால் ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ.

ētavaṉ peṟattava miyaṟṟu meṉṟiyēṉ mātuṉai makaṇmaiyā marapiṟ pōṟṟiyē kātalo ṭemakkaruḷ karutta tākumāl ātaliṟ kuḻaviyāy avaṉka ṇeytunī.

Report an error

தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான் இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன் உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம்.

taḷarntuṭal melivuṟat tavañcey veṟpiṉāṉ iḷañciṟu kuḻaviyā yeyti maṟṟavaṉ uḷaṅkaḷi kūravāṇ ṭōrain tiṉṟuṇai vaḷarntaṉai puritimēl mācil mātavam.

Report an error

அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர் கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும் இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம் மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா.

aṇaṅkunī nōṟṟuḻi yakilat tuḷḷatōr kaṇaṅkaḷun talaivaruṅ kaṇippil tēvarum iṇaṅkiṉar cūḻtara veyti niṉṉaiyām maṇampurin tēkoṭu varutu mīṇṭeṉā.

Report an error

கடல்விட முண்டிடு கடவு ளித்திறம் நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந் தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே விடையது பெற்றனள் விமலை யேகினாள்.

kaṭalviṭa muṇṭiṭu kaṭavu ḷittiṟam naṭaimuṟai yaruḷalum naṉṟē ṉāmakiḻn taṭiyiṇai vaṇaṅkiniṉ ṟaṉpiṟ pōṟṟiyē viṭaiyatu peṟṟaṉaḷ vimalai yēkiṉāḷ.

Report an error

அல்லலு முவகையு மன்பு மெம்பிரான் எல்லையி லருளுமா யீண்டி முன்செல மெல்லியல் உமையவள் வெள்ளி வெற்பொரீஇ வல்லையின் இமையமால் வரையிற் போயினாள்.

allalu muvakaiyu maṉpu mempirāṉ ellaiyi laruḷumā yīṇṭi muṉcela melliyal umaiyavaḷ veḷḷi veṟporīi vallaiyiṉ imaiyamāl varaiyiṟ pōyiṉāḷ.

Report an error

வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால் எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை வெள்ளியங் கிரியென விளங்கு கின்றதே.

vaḷḷiyaṉ kaṭakari vaṭiviṉ vīḻtaru tuḷḷiyam paṉimaḻaic cōṉai cūḻtalāl eḷḷarun taṉmaicēr imaiya mālvarai veḷḷiyaṅ kiriyeṉa viḷaṅku kiṉṟatē.

Report an error

எண்டகு மிமையமு மிமைய மேலுறு கொண்டலு மொன்றியே குலவு காட்சிய தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ் சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால்.

eṇṭaku mimaiyamu mimaiya mēluṟu koṇṭalu moṉṟiyē kulavu kāṭciya teṇṭirai micaiyeḻu nañcun tīyanañ cuṇṭiṭu maṇimiṭaṟ ṟiṟaiyu mokkumāl.

Report an error

நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு மேலுற விளங்கிய இமைய வெற்பது மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில் பாலுறு பன்னகப் பாயல் போன்றதே.

nīluṟu maḻaimukil nilavu miṉṉoṭu mēluṟa viḷaṅkiya imaiya veṟpatu mālavaṉ ṟiruvoṭu maruvik kaṇṭuyil pāluṟu paṉṉakap pāyal pōṉṟatē.

Report an error

கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட அரும்பவி ழாதவெண் கமல மன்னதே.

karumpuya lārttuṟu kāṭcit tākiyē irumpaṉi yiṭaiyaṟā vimaiyap poṉvarai curumpiṉa micaiyoṭu tuvaṉṟic cuṟṟiṭa arumpavi ḻātaveṇ kamala maṉṉatē.

Report an error

நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப் பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான் மூடினள் வைத்திடு முறைய தேயெனக் கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே.

nīṭiya maṇmakaḷ nitiyiṉ kuppaiyaip pāṭuṟu taṇṇilāp paṭāma toṉṟiṉāṉ mūṭiṉaḷ vaittiṭu muṟaiya tēyeṉak kōṭuyar paṉikoḷpoṟ kuṉṟam niṉṟatē.

Report an error

பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர் துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால் என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை.

poṉṉeṭuṅ kiriyeṉa vīṇṭum puṅkavar tuṉṉiṉar cūḻvareṉ ṟuṉṉit toṉmaṉu aṉṉatai maṟaittaṉaṉ iratat tāviyāl eṉṉavum niṉṟatāl imaiyap poṉvarai.

Report an error

குடகடல் குணகடல் கூடு றாவகை இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே.

kuṭakaṭal kuṇakaṭal kūṭu ṟāvakai iṭaiyoru vālitām ēṉa meytiyē taṭapuri ciṟappeṉa imaiyat tāḻvarai neṭunila vaḷavaiyum nimirntu pōyatē.

Report an error

விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள் அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக் கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல் உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே.

viṇṇavar tatikkaṭal kaṭainta veṇṇeyuḷ aṇṇalam pāṟkaṭa lamutam vaitteṉak kaṇṇakaṉ parumpaṉi kavaiiya veṟpiṉmēl uṇṇiṟai puṉaṟṟaṭa moṉṟu vaikiṟṟē.

Report an error

அன்னதோர் தடத்திடை அசல மன்னவன் மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந் தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும் முன்னுற வருந்தவம் முயன்று வைகினான்.

aṉṉatōr taṭattiṭai acala maṉṉavaṉ maṉṉiya kauritaṉ makaṇmai yākavun taṉṉika rilāvaraṉ ṟaṉakku nalkavum muṉṉuṟa varuntavam muyaṉṟu vaikiṉāṉ.

Report an error

மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற் பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள் எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள்.

meyttava miyaṟṟiya veṟpaṉ kāṇiya attaṭa malarumō raravin tattiṉmēṟ paittatōr kuḻaviyiṉ paṭivat tuṟṟaṉaḷ ettiṟat tuyiraiyu mīṉṟa toṉmaiyāḷ.

Report an error

ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன் ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான்.

āṅkavaṭ kaṇṭu veṟpaṉ aṭiyaṉēṉ poruṭṭā lammai nīṅkiṉaḷ pōlum mukka ṇirumalaṉ ṟaṉṉai yeṉṉā ēṅkiṉaṉ ṟaṉatu nōṉpuk kiraṅkiṉa ṉivaika ḷīcaṉ ōṅkupē raruḷē yeṉṉā vukaiyaṅ kaṭaluṭ paṭṭāṉ.

Report an error

கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத் துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான்.

kaṇṇuṟu kōta vāri kāṉṟiṭa vurōma rāci uṇṇika ḻaṉpu mikkup puṟantaṉi loḻukiṟ ṟeṉṉa vaṇṇaṉmey poṭippat tuḷḷi aṭiyaṉē ṉuyntē ṉeṉṉāt tuṇṇeṉap pāṭi yāṭi yamalaiyait toḻutu niṉṟāṉ.

Report an error

பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது செங்கயை னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித் துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ.

paṅkayat taviciṉ vaikum parāparai taṉaitta ṉātu ceṅkayai ṉeṭuttu vallē ceṉṉimēṟ ṟāṅki yēkit tuṅkanal limaiyat taṇṇal toṉmuṟai yirukkai pukku maṅkala mēṉai yeṉṉu maṉaivikaik koṭuttāṉ mātō.

Report an error

கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர் அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம். எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள்.

koṭuttalun toḻutu vāṅkik koṟṟava ivaṇiṉ pāṅkar aṭuttataṅ kevaṉō veṉṉa aracaṉum nikaḻnta vellām. eṭutturai ceyyak kēḷā vīcaṉa taruḷō veṉṉā vaṭuttavir kaṟpiṉ mēṉai maṉamuṟa makiḻcci koṇṭāḷ.

Report an error

சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும் பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம் நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ.

curantaṉa koṅkai pālun tuṇṇeṉa voḻukiṟ ṟeṅkum parantaṉa poṭippiṉ pōrvai paraitaṉa taruḷē yuḷḷam nirantaṉa kavalai yāvum nīṅkiṉa pavamuṉ ṉuḷḷa karantaṉa vimaiyat taṇṇal kātali taṉakku mātō.

Report an error

பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம் விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம் அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள்.

paripuran taṇṭai yampoṟ pāṭakam pāta cālam viraviya toṭiyē caṅku viyaṉmaṇic cuṭṭi yāram arikeḻu matāṇi poṟṟō ṭaṅkatam piṟavuñ cātti varaiyuṟaḻ taṉappā lārtti varampeṟu kāppu nērntāḷ.

Report an error

வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப் புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன் மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான்.

vaṉaitaru pavaḷaṅ kālā vayiramē maruṅkiṟ kōlāp puṉaiyirum palakai nīlāp pirintapoṟ ṟoṭṭiṉ mēlā aṉaiyava ṭaṉṉai yuyttu maṅkaiyiṟ koṇṭun taṉkōṉ maṉamakiḻ tiṟaṉāṟ pōṟṟi matiyeṉa vaḷarkka luṟṟāṉ.

Report an error

மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம் அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள் தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக் கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே.

maṉṉuyir puvaṉa mēṉai maṟṟuḷa poruḷuk kellām aṉṉaiyā yutavi nāḷu mavaṟṟiṉai vaḷarttu niṟpāḷ taṉṉaiyum vaḷarppā ruṇṭō vaḷarntatu caḻakkē yantak kaṉṉitaṉ ṉaruḷiṉ nīrmai kāṭṭiṉaḷ pōlu maṉṟē.

Report an error

இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந் தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச் சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள்.

intavā ṟiṉaiyar pālā yemperu māṭṭi vaiki aintiyāṇ ṭakaṉṟa piṉṟai yayaṉmutaṟ ṟēvar yārkkun tantaiyā raruḷai yuṉṉit tavamiṉip puriva ṉeṉṉāc cintiyā vimaiyat tōṅkaṟ cemmaluk kuraikka luṟṟāḷ.

Report an error

நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான் நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின் ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப் பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான்.

nāṟperun taṭantō ḷaṇṇal nalattaka varaintu koḷvāṉ nōṟpaṉā liṉaiya veṟpi ṉuvalaru morucār vaippiṉ ēṟpatōr kaṉṉi mārō ṭeṉaiviṭut taruṇmō veṉṉāp pārppati iyampa lōṭum paṉivarai yaracaṉ colvāṉ.

Report an error

அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக் கன்னிகை நகைத்துக் கேண்மோ இஃதெனக் கழற லுற்றாள்.

aṉṉaikē ḷemmiṉ nīṅki yaruntava māṟṟaṟ kotta tiṉṉatōr paruva maṉṟā liyāṇṭumō raintē ceṉṟa niṉṉuṭal poṟātā līṇṭin nilaimaiyait tavirti yeṉṉak kaṉṉikai nakaittuk kēṇmō iḵteṉak kaḻaṟa luṟṟāḷ.

Report an error

ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால் ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப் பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான்.

īcaṉē kāppa ṉallāl yāraiyum piṟarāṟ ṟammāl ācaṟap pōṟṟa lākā tatutuṇa vāku mīṇṭup pēciya tiṟaṉu maṉṉōṉ pēraruḷ maṟāti yeṉṉa nēcamō ṭiyaintiṭ ṭaṉṉai niṉaintanōṉ piyaṟṟu keṉṟāṉ.

Report an error

மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில் அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித் தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக் கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான்.

maṉṉaṉu miyaintu piṉṉar mālvarai yorucār taṉṉil aṉṉameṉ ṉaṭaiyi ṉāḷuk karuntavac cālai yāṟṟit taṉṉuṟu kiḷaiñar tampāṟ ṟavattiṉāl vanta pāṉmaik kaṉṉiyar palaraik kūvik kauripā lākac ceytāṉ.

Report an error

நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர் பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச் சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள்.

nīluṟu maṇitōy mēṉi nimalaiyaṅ kimaiyat tucci mēluṟu maracaṉ ṟēvi viṭaiyiṉāl maṭavār pallōr pāluṟu paṇiyiṟ cūḻap paramaṉai yuṉṉi yantac cālaiyai yaṭaintu mikka tavattiṉai yiḻaikka luṟṟāḷ.

Report an error

தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின் மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால் அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன்.

taṅkiya vaika ṟōṟun tātaiyun tāvil kaṟpiṉ maṅkaiyum pōṟṟi yēka mātunōṟ ṟiruntā ḷippāl aṅkavaṭ pirinta piṉṟai arumperuṅ kayilai mēya veṅkaṭam perumāṉ ceyta pariciṉai iyampa luṟṟēṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).