Skip to content

யுத்த காண்டம் — இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம் · இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்

iraṇṭānāṭ cūrapaṉmaṉ yuttap paṭalam

iraṇṭānāṭ cūrapaṉmaṉ yuttap paṭalam

iraṇṭānāṭ cūrapaṉmaṉ yuttap paṭalam, from Yutta Kāṇṭam; poems 4.457–4.876.

Part 1 of 2: verses 1–210 of 420Tamil with transliteration

A spear and lotus for chapter 101 of Kanda Puranam.

Invocation

4.457.opening

உ செந்திலாண்டவன் துணை திருச்சிற்றம்பலம்

u centilāṇṭavaṉ tuṇai tirucciṟṟampalam

Editor's note: Traditional opening, separate from the numbered poems.

கங்குல்போந் திடுதலுங் கணபணப பன்னகம் நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ் சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத் துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதிய.

kaṅkulpōn tiṭutaluṅ kaṇapaṇapa paṉṉakam nuṅkuṟā takalavē nōṟṟumāl ēntiṭuñ caṅkamāy maticelac cakkarap paṭaiyeṉat tuṅkamō ṭeḻutalpōl tōṉṟiṉaṉ paritiya.

Report an error

இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ எழுந்து மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் றெய்தித் திரும ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன் நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை நனைந்தான்.

iravi cellumuṉ avuṇarkōṉ tuyilorīi eḻuntu marapi ṉiṟpuri nāṭkaṭaṉ muṭittumaṉ ṟeytit tiruma ṇipperun taviciṭai iruntutaṉ ciṟuvaṉ nerunal uṟṟiṭum vacaiyiṉai uḷattiṭai naṉaintāṉ.

Report an error

நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம் நீட இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் யானே அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை அழித்துப் புனைவன் வாகையென் ன்னினான் அழிவிலாப் புகழோன்.

niṉaital uṟṟuḻi uḷattiṭaip peruñciṉam nīṭa iṉiya marttoḻiṟ kiyāraiyum viṭukkilaṉ yāṉē aṉika mōṭupōy māṟṟalar vaṉmaiyai aḻittup puṉaivaṉ vākaiyeṉ ṉṉiṉāṉ aḻivilāp pukaḻōṉ.

Report an error

செங்கண் வாளெயிற் றவுணன்இத் தன்மையைத் தேற்றி வெங்கண் ஒற்றிரில் அளப்பிலர் தங்களை விளியா அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும் அளக்கர் எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான்.

ceṅkaṇ vāḷeyiṟ ṟavuṇaṉit taṉmaiyait tēṟṟi veṅkaṇ oṟṟiril aḷappilar taṅkaḷai viḷiyā aṅkaṇ mānilam muṟaimuṟai cūḻtarum aḷakkar eṅka ṇuñceṟi tāṉaiyait tammiṉkaḷ eṉṟāṉ.

Report an error

என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ் சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத் துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர் தொன்னாள் வென்றி கொண்டநூ றாயிர வெள்ளத்தின் மிக்கோர்.

eṉṟa luntoḻu tāyira kōṭiyōr yāṇṭuñ ceṉṟu ceṉṟutam maṉṉavaṉ paṇimuṟai ceppat tuṉṟu tērkari parimicaip paṭarntaṉar toṉṉāḷ veṉṟi koṇṭanū ṟāyira veḷḷattiṉ mikkōr.

Report an error

சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ் சாபங் கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் நாஞ்சில் பிண்டி பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி பீலிவல் முசல மாதி பெரும்படை கொண்டு சென்றார்.

cūlamē kaṇicci taṇṭan tōmaraṅ kulicañ cāpaṅ kōlavāḷ palakai vaṭṭaṅ kuntamvēl nāñcil piṇṭi pālamē mucuṇṭi caṅkam paritiyē eḻuvē taṭṭi pīlival mucala māti perumpaṭai koṇṭu ceṉṟār.

Report an error

எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வெள் ளத்தி னோருந் திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி யார்ப்ப விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக் கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல்.

eṇṭakum iṉaiya vāṟṟāl ilakkamveḷ ḷatti ṉōrun tiṇṭiṟal makēnti rappērt tirunakar cuṟṟi yārppa viṇṭoṭu cikari yeṉṉum mēruviṉ ucci pōkik kaṇṭaṉaṉ avuṇar maṉṉaṉ kaṭaṟperun tāṉaic cūḻal.

Report an error

தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை ஈட்டம் நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம் யாவும் நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது வென்றி ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான்.

tēkkiṉaṉ katiruñ cellāc celluṟaḻ tāṉai īṭṭam nōkkiṉaṉ cintai koṇṭa nōṉmaicār tuyaram yāvum nīkkiṉaṉ vaṉmai peṟṟāṉ nēralarp porutu veṉṟi ākkiṉaṉ pōla niṉṟāṉ aṟattuṭaṉ aruḷaik koṉṟāṉ.

Report an error

அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழுங் கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச் செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும் இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன்.

aḻintiṭu kiṉṟa kālat taḷakkariṉ ārttuc cūḻuṅ kaḻintiṭu tāṉai kaṇṭōṉ kaṭitupōrk kēka muṉṉic ceḻuṅkatir matiyam ākkun tirumaṇic cikari niṉṟum iḻintaṉaṉ talaimai nīṅki iḻitoḻil payiṉṟa tīyōṉ.

Report an error

எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட் கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் சுரத்திற் கோதை தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் தோறும் அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான்.

eṭuttaṉaṉ cilaiyum ēṉaip paṭaikaḷum imaiyōr toṉṉāṭ koṭuttiṭu paṭaikaḷ yāvuṅ koṇṭaṉaṉ curattiṟ kōtai toṭuttaṉaṉ verinil tūṇi tūkakiṉaṉ viralkaḷ tōṟum aṭuttapoṟ puṭṭil cērttāṉ aṇṭaṅkaḷ aṉaittum veṉṟāṉ.

Report an error

குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌல தன்னில் சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும் இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல்.

kuntaḷac cuḻiyaṟ kuñcik kōlamā maula taṉṉil cuntarat tuṇarmeṉ tumpai toṭuttiṭu piṇaiyal cērtti mantarap poruppu mēru varaiyiteṉ ṟaiyañ ceyyum intirap peruntēr oṉṟiṉ ēṟiṉaṉ iravi yēpōl.

Report an error

பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம் எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான்.

paṇṇulām puravip panti parumitak kaḷiṟṟiṉ īṭṭam eṇṇilāp puravi māṉtēr ēmamāyp piṉṉar ēka aṇṇalvāḷ avuṇa vīrar amaiccarkaḷ ayaliṟ cella viṇṇulām puricaik kōyil vītikaḷ kaṭantu ceṉṟāṉ.

Report an error

கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக் காய்கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலக மென்ன ஆயிர நூறு வெள்ளத் தவுணரும் புடைசூழ்ந் தார்த்தார்.

kōyiliṉ ellai nīṅkik kōpuraṅ keḻīiya koṟṟa vāyiliṉ maruṅku cella maṉṉavaṉ varavu nōkkik kāykatirt tapaṉaṟ kaṇṭa kaliviyaṉ ulaka meṉṉa āyira nūṟu veḷḷat tavuṇarum puṭaicūḻn tārttār.

Report an error

அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி சூரன் துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் தொல்லோன் என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான்.

aṉṉa kālaiyil arimukaṉ cēyati cūraṉ tuṉṉu tārakaṉ cutaṉacu rēntirat tollōṉ eṉṉa niṉṟiṭum maintarkaḷ iruvarum ēki maṉṉar maṉṉaṉai aṭaitalum iṉaiyaṉa vakuppāṉ.

Report an error

திரைகொள் வேலைபோல் நிறைதரு கோட்டகஞ் சிறிதோர் கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப் பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும் அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும்.

tiraikoḷ vēlaipōl niṟaitaru kōṭṭakañ ciṟitōr karaiyi lāvaḻi yuṭaintiṭum aṉṉatu kaṭuppap poruti ṟaṟpaṭai palavuḷa eṉṉiṉum pōṟṟum araca rilvaḻi niṉṟiṭā taṉṉavai aḻiyum.

Report an error

ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின் மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப் போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர் ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில்.

āta lāliṉi nīriru vīrkaḷum amariṉ mēta kumperuñ cēṉaikku mutalvarāy mēvip pōtir muṉṉuṟa eṉṟalum niṉṟiṭu putalvar ītu naṉṟeṉa vaṇaṅkiyē ēkiṉar imaippil.

Report an error

தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில் கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர் வந்த நாற்பெரும் படையையும் அணிபெற வகுத்து முந்து தானையந் தலைவராய் ஏகினர் முறையால்.

tanta māṉtaṭan tērmicai ēṟiyē camaril kontu lāmalar vākaiyai milaicciya kumarar vanta nāṟperum paṭaiyaiyum aṇipeṟa vakuttu muntu tāṉaiyan talaivarāy ēkiṉar muṟaiyāl.

Report an error

ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா அடுபோர் வாகை கொண்டநூ றாயிர வெள்ளத்து மறவோர் ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க.

ākum ellaiyil aṅkatu nōkkuṟā aṭupōr vākai koṇṭanū ṟāyira veḷḷattu maṟavōr ōkai eytiyē amarpuri paṟantalai uṉṉi ēkal mēyiṉar paṇikaḷuñ cēṭaṉum iraṅka.

Report an error

கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை வீரர் படர்ந்திடு கின்ற காலைப் பருமணி வயிரத் தேர்மல் அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை சுற்றவ விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான்.

kaṭantikaḻ karitēr pāymāk kalantiṭat tāṉai vīrar paṭarntiṭu kiṉṟa kālaip parumaṇi vayirat tērmal aṭaintiṭum avuṇar maṉṉar aḷakkaril vaṭavai cuṟṟava viṭantaṉi naṭanta teṉṉa viṇṇavar maruḷac ceṉṟāṉ.

Report an error

தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு கோடு திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய் கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற றம்மா.

toṇṭakan tuṭiyē pampai tūriyam muruṭu kōṭu tiṇṭiṟaṟ paṭakam montai timilaiyē taṭāri takkai kaṇṭaiā kuḷiyē pīli kākaḷam uṭukkai pēḻvāy koṇṭatōr patalai caṅkam kuṭamuḻā iyampiṟa ṟammā.

Report an error

தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு சேண்போய் முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும் வீரர் கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல் லியத்தின் ஆர்ப்பும் எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த அன்றே.

taṭṭuṭai neṭuntēr ārppum tantiyiṉ ārppu cēṇpōy muṭṭuṟu koṭikaḷ ārppum muraṭpari ārppum vīrar kaṭṭuṟu kaḻaliṉ ārppu mkaṇippilpal liyattiṉ ārppum eṭṭuḷa ticaiyum ellā vulakumuṇ ṭeḻunta aṉṟē.

Report an error

நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ் செல்லக் கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல முன்னம் தானுறு கின்ற காலைச் சசியென்த் தயங்கிப் பின்னர் மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன்.

nīṉiṟa mukilpōl mēṉi avuṇarkaḷ nīttañ cellak kāṉiṟai pūḻi īṭṭaṅ kakaṉamēṟ cella muṉṉam tāṉuṟu kiṉṟa kālaic caciyeṉt tayaṅkip piṉṉar mīṉeṉak karantāṉ mēlām virikatir paṭaitta veyyōṉ.

Report an error

நேசமொ டென்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும் ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத் தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற பூழி.

nēcamo ṭeṉpāl vaikum neṟiyiṉār tamakku vīṭum ācaṟu pataṅkaḷ yāvum vaikalum purivēṉ eṉṉai ēcuvar pōluṅ kīḻeṉ ṟikalpurin tiṭuvaṉ eṉṉāt tūcipār viṭutta tēpōl tuṟakkamēṟ ceṉṟa pūḻi.

Report an error

கன்னிறை அழித்த மொய்ம்பிற் கார்கெழும் அவுண வெள்ளம் துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச் செய்கை என்னென உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும் பொன்னுல கதனை வல்லே பூவுல காக்கிற் றன்றே.

kaṉṉiṟai aḻitta moympiṟ kārkeḻum avuṇa veḷḷam tuṉṉuṟa naṭappac cellun tūḷiyiṉ paṭalaic ceykai eṉṉeṉa uraippaṉ ammā intira ṉeṉpōṉ vaikum poṉṉula kataṉai vallē pūvula kākkiṟ ṟaṉṟē.

Report an error

கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின் மீதும் நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற் கங்கை நக்கி மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின் அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ.

kaṇṇakal taṭantēr mītuṅ kāyciṉak kaḷiṟṟiṉ mītum naṇṇiya koṭikaḷ vāṉpōy naḷirpuṉaṟ kaṅkai nakki maṇṇuṟac citaṟi āṭi alamaral makēnti rattiṉ aṇṇaliṉ ṟaḻivaṉ eṉṟē aḻutiṟam pōlum mātō.

Report an error

திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ் செங்கேழ்ப் பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை முற்றுந் தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு மாற்றி எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற் றம்மா.

tiṅkaḷveṇ kuṭaiyum nīlat tiruniḻaṟ kavippuñ ceṅkēḻp paṅkaya malarnta taṉṉa parumaṇik kavikai muṟṟun toṅkaliṉ tokaiyum veyyōṉ tolkatir varavu māṟṟi eṅkaṇuñ ceṟivuṟ ṟūḻi iruḷiṉai viḷakkiṟ ṟammā.

Report an error

ஆனவியல் பெய்தஅவு ணப்படைக ளோடும் வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத் தானதுதெ ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக் கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான்.

āṉaviyal peytaavu ṇappaṭaika ḷōṭum vāṉeṟiko ṭēavuṇaṉ vaiyamicai cellat tāṉatute rintamarar tammiṟaivaṉ ōṭik kāṉamarka ṭampaṉaṭi kaitoḻutu colvāṉ.

Report an error

அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள் செய்த துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன் இன்றுபொரு வான்விரைவின் ஏகினன் எதிர்ந்தே சென்றவனை வென்றெமது சீர்அருளு கென்றான்.

aṉṟupuri vēḷviyiṭai ātiyaruḷ ceyta tuṉṟupaṭai īṭṭamoṭu cūraṉeṉum veyyōṉ iṉṟuporu vāṉviraiviṉ ēkiṉaṉ etirntē ceṉṟavaṉai veṉṟematu cīraruḷu keṉṟāṉ.

Report an error

ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப் பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு கென்றான்.

āmparicu kūṟaava ṉukkaruḷ purintē ēmpaluṟu kēcariyiṉ ēṟṟaṇaiyiṉ nīṅkip pāmpiṉvali ceṟṟulavu pākutaṉai nōkki vāmparikoḷ nammiratam vallaitaru keṉṟāṉ.

Report an error

என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல் குன்றனைய தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை புகுந்தான் மன்றல்மலர் சிந்திஅயன் மாலொடு வழுத்த.

eṉṟiṭalum naṉṟeṉa eḻuntulavai aṇṇal kuṉṟaṉaiya tēratu koṇarntumuṉam uyppa veṉṟiayil aṇṇalataṉ mīmicai pukuntāṉ maṉṟalmalar cintiayaṉ māloṭu vaḻutta.

Report an error

செழுந்தருண மேதகைய தோன்மிசை வானோர் தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக் கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர் எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச.

ceḻuntaruṇa mētakaiya tōṉmicai vāṉōr toḻuntalaiva ṉākiyamar tolmurukaṉ ēṟak koḻuntaḻal muṭittaṉaiya kuñcikeḻu pūtar eḻuntaṉar teḻittaṉar iruṅkaṭalum añca.

Report an error

நாட்டமொரு மூன்றுடைய நாதனருள் மைந்தன் வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக் கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர் கின்றார்.

nāṭṭamoru mūṉṟuṭaiya nātaṉaruḷ maintaṉ vāṭṭamaṟu vevvavuṇar maṉṉaṉvali taṉṉai vīṭṭumvakai ceṉṟiṭutal viṇṇavar uraippak kēṭṭaṉika pūtarkaḷ kiḷarntupaṭar kiṉṟār.

Report an error

பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர் பாரிடர்பு ரிந்தனர் பரிக்குமெனை யென்னாப் பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல் போலும்.

pāriṭarka ḷāyaṟumu kaṟparavu kiṉṟa pāriṭarna ṭappaveḻu pūḻipaṭarn tiṉṉōr pāriṭarpu rintaṉar parikkumeṉai yeṉṉāp pāriṭamviṇ ṇōṭupakar taṟkeḻutal pōlum.

Report an error

தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல் கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர்.

takkaiyo ṭuṭukkaituṭi callari taṭāri tokkuṭaiya taṇṇumai tuvaippiṉmiku pēri meykkuṭamu ḻāppaṭakam vīṇaikuḻal āmpal kokkarai iyampiṉarkaḷ kōṭikaṇa nātar.

Report an error

நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும் கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப் பாடினர்கு மாரன்அடி பன்முறை பணிந்தே ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும்.

nāṭutava nārataṉum nalluvaṇar tāmum kēṭilicai vallatoru kiṉṉararu mākip pāṭiṉarku māraṉaṭi paṉmuṟai paṇintē āṭiṉarkaḷ viṇṇavarum ācilmuṉi vōrum.

Report an error

சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும் எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின் வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித் திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை சென்றார்.

caṇmukaṉa tēvalkoṭu tāviliḷai yōṉum eṇmarumi lakkarkaḷum īṇṭiya kaṇattiṉ vaṇmaikeḻu maṉṉavarum vaiyamicai yākit tiṇmaipaṭai ūkkamoṭu cēṉaiyiṭai ceṉṟār.

Report an error

மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு தானை இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன் செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப் பொம்மலுறு தானவர்கள் போர்முனை அடைந்தான்.

moymmali paṭaittalaivar muntiyuṟu tāṉai immuṟaiyi ṉāloḻuka īcaṉaruḷ maintaṉ cemmaṇivil vīciyamar tēriṉiṭai ēkip pommaluṟu tāṉavarkaḷ pōrmuṉai aṭaintāṉ.

Report an error

அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு மாகி மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த தொடர்ந்துநுகர் தீவலிதொ லைத்துமென முந்நீர் படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல.

aṭaintapoḻu tiṟpuviyum antaramu māki miṭaintuvaru cūraṉikam veyteṉa vaḷainta toṭarntunukar tīvalito laittumeṉa munnīr paṭarntupuṭai cuṟṟiyiṭu pāṉmaiyatu pōla.

Report an error

வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள் கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவர் தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினர் விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே.

vaḷaintiṭu kālaiyil vayavem pūtarkaḷ kiḷarntaṉar teḻittaṉar keḻuvu tāṉavar taḷantaṉai aṭarttaṉar avarun tākkiṉar viḷaintatu peruñcamar viṇṭa taṇṭamē.

Report an error

மாச்சினை மரங்களும் வரையுந் தண்டமும் தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும் மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும் ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல்.

mācciṉai maraṅkaḷum varaiyun taṇṭamum tīccikaik kaḻumuḷum tikiri nēmiyum mīcceluṅ kavaṇkalum vēlum nāñcilum ōcciṉar pūtarkaḷ oṉṉa lārkaḷmēl.

Report an error

மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ் அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல் முப்புகா இலைப்படை முசலம் முற்கரம் கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை.

meyppaṭum avuṇarkaḷ vekuṇṭu villumiḻ appoṭu kaṇiccitaṇ ṭāḻi nāñcilvēl muppukā ilaippaṭai mucalam muṟkaram kappaṇañ citaṟiṉar kaṇaṅkaḷ tammicai.

Report an error

பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை எற்றுவர் பார்தனில் எறிவர் மாதிரஞ் சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார்.

paṟṟuvar karikaḷaip pariyi ṉaṅkaḷai eṟṟuvar pārtaṉil eṟivar mātirañ cuṟṟuvar viṇṇiṭaik kiḻippar tuṇṇeṉa muṟṟuṭal eruttiṉai murittuc cintuvār.

Report an error

இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில் பொருகளி ராயிரம் புரள மோதுவர் கரிகளொ ராயிரங் கரங்கொண் டேற்றியே பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார்.

iratamo rāyiram eṭuttuc ceṅkaiyil porukaḷi rāyiram puraḷa mōtuvar karikaḷo rāyiraṅ karaṅkoṇ ṭēṟṟiyē paripati ṉāyiram pāriṉ vīṭṭuvār.

Report an error

பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண் டாயிர கோடியாம் அவுணர் தங்களைச் சேயிரு நிலத்திடைச் சிதையச் சிந்துவார் காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே.

pāypari yāyirap pattup pāṇikoṇ ṭāyira kōṭiyām avuṇar taṅkaḷaic cēyiru nilattiṭaic citaiyac cintuvār kāykaṉal coritaruṅ kaṭuṅkaṭ pūtarē.

Report an error

குரங்குளைப் புரவியர் குஞ்ச ரத்தினர் இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர் வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச் சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார்.

kuraṅkuḷaip puraviyar kuñca rattiṉar iraṅkuṟu tēriṉar nilattiṉ ēkiṉōr varaṅkeḻum avuṇarkaḷ vaḷaintu pūtaraic caraṅkaḷil piṟaviṉil taṭital mēyiṉār.

Report an error

மலைதனைச் சிந்துவர் மறங்கொள் பூதர்தாள் நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர் கொலைதனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத் தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர்.

malaitaṉaic cintuvar maṟaṅkoḷ pūtartāḷ nilaitaṉaic cintuvar neṭuṅkai cintuvar kolaitaṉaic cintuvar koyvar moympiṉait talaitaṉaic cintuvar taṟukaṭ ṭāṉavar.

Report an error

இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித் தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள் அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே.

ivvakai māṟukoṇ ṭikalcey kiṉṟuḻit tevvaṭu pūtartañ cēṉai maṉṉarkaḷ avviṭai ēṉṟuniṉ ṟamari yaṟṟuḻi vevvacu rappaṭai mikavum māyntatē.

Report an error

பொன்றிகழ படையொடு புவியும் வானுமாய் நின்றிடும் அவுணர்கள் நீடு தொல்பிணக் குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச் சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார்.

poṉṟikaḻa paṭaiyoṭu puviyum vāṉumāy niṉṟiṭum avuṇarkaḷ nīṭu tolpiṇak kuṉṟuru vākiyē kuruti yāṟṟiṭaic ceṉṟaṉar aḷakkarait tiṭara tākkuvār.

Report an error

நீடிய வேற்படை நிமலன் காணுற வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற் கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல் ஆடிய உடற்குறை அனந்த கோடியே.

nīṭiya vēṟpaṭai nimalaṉ kāṇuṟa vīṭiṉam yāmiṉi veyya tōṟṟamēṟ kūṭuva tilaiyeṉak kuṉikku māṟupōl āṭiya uṭaṟkuṟai aṉanta kōṭiyē.

Report an error

மானப் படைசேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும் ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா றிகல்செய்யுங் கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் தனைநோக்கித் தானை தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான்.

māṉap paṭaicēr avuṇap paṭaiyum vayamāṉ tērppaṭaiyum ēṉaip paṭaiyum muṭivuṟ ṟiṭavē ivvā ṟikalceyyuṅ kūṉaṟ caṭilap pūtap paṭaiyiṉ koṟṟan taṉainōkkit tāṉai talaivaṉ aticū raṉeṉun taṉayaṉ vekuḷuṟṟāṉ.

Report an error

தேரா யிரமா யிரமங் கொருபாற் சேமத் தொடுசெல்லக் காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் இமைசார ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ டுறுகின்றான்.

tērā yiramā yiramaṅ korupāṟ cēmat toṭucellak kārā yiramuṟ ṟaṉataṉ paṭivaṅ katirkāḷ imaicāra īrā yiramām ivuḷit tokaipūṇ ṭīrkkun tērmītē ōrā yiramāṅ katirpōl aḻalā uraṉō ṭuṟukiṉṟāṉ.

Report an error

வார்வில் லதனை விரைவில் குனியா வடிவா ளிகள்போக்கிச் சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் துணிசெய் தனன்நிற்ப ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர் புரிகின்றான் போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர்.

vārvil lataṉai viraivil kuṉiyā vaṭivā ḷikaḷpōkkic cōrvil lavaṉum etirkiṉ ṟaṉarait tuṇicey taṉaṉniṟpa ōrvil loruvaṉ taṉiyē ivaṇvan tuṟupōr purikiṉṟāṉ pōrvil laṟivaṉ ivaṉē eṉavē pukalkiṉ ṟaṉarpūtar.

Report an error

ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா இகல்செய்யும் பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ யுமிழ்கண்ணான் மேதக் கசலந் தரனார் உடலம் வீழும் படிகீண்ட சோதிக் கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன்.

ōtak kaṭalpōl alaman talaman tulaiyā ikalceyyum pūtark kiṟaiuk kiraṉeṉ ṟoruvaṉ pukaitī yumiḻkaṇṇāṉ mētak kacalan taraṉār uṭalam vīḻum paṭikīṇṭa cōtik kaṭavuṭ paṭaiyuṇ ṭumiḻun tollōṉ ikalvallōṉ.

Report an error

எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய் திடுமாறு கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல்கொள்ளும் தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார் பிடையோச்ச விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார்.

eṇṭā ṉavaruk kiṟaivaṉ kumaraṉ ikalcey tiṭumāṟu kaṇṭāṉ muṉiyā viraivil paṭarvāṉ kālaṉ tiṟalkoḷḷum taṇṭā ṉatukoṇ ṭavaṉēr kuṟukit taṭamār piṭaiyōcca viṇṭāṉ ivaṉeṉ ṟavuṇap paṭaiyōr veruvā alamantār.

Report an error

மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண் டவன்மார்பில் கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா வருகின்றான் பாறா டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா நூறா யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற் செலவெய்தான்.

māṟā kiyauk kiraṉē vutalum varutaṇ ṭavaṉmārpil kūṟā kiyacā likaicin tiṭavē kotiyā varukiṉṟāṉ pāṟā ṭukaḷat tiṭaiyīṅ kivaṉaip paliyūṭ ṭuvaṉeṉṉā nūṟā yiramā cukamōr toṭaiyiṉ noytiṟ celaveytāṉ.

Report an error

வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சேர் அதிசூரன் எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப் பெருநீத்தம் எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் தொடுசெற்றஞ் செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான்.

veytām ayilvā ḷikaḷuk kiraṉmēl viṟalcēr aticūraṉ eytāṉ atumaṟ ṟavaṉmēṟ paṭavē eruvaip perunīttam eytāṉ muḻutum perukuṟ ṟiṭalum viḻumat toṭuceṟṟañ ceytāṉ orumāl varaikoṇ ṭavuṇaṉ tērmēṟ celavuyttāṉ.

Report an error

அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ ரன்மான்தேர் பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னா உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக் கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான்.

atirpoṟ kaḻalāṉ viṭutiṇ kiriyāl aticū raṉmāṉtēr pitirpaṭ ṭiṭalum puvimēṟ paṭartal piḻaiyā meṉavuṉṉā utayak kiripōṟ kaṉakat tiyalum orutēr micainīlak katiruṟ ṟeṉavē kaṭitiṟ pāyntāṉ kālaṉ miṭaltīrppāṉ.

Report an error

பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள் மாயும் வண்ணம றம்புரி உக்கிரன் சீய மாமெனச் சென்றுதைத் தானரோ.

pāyum vēlaiap palmaṇit tēriṉai ēya āṟṟalkoṇ ṭīrttiṭum vācikaḷ māyum vaṇṇama ṟampuri ukkiraṉ cīya māmeṉac ceṉṟutait tāṉarō.

Report an error

உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப் பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே சிதைப்பன் இந்தச் சிறியனை என்றுமெய் புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான்.

utaikka veyyavaṉ oṇpari pāriṭaip pataittu vīḻtalum paiyuḷiṉ māḻkiyē citaippaṉ intac ciṟiyaṉai eṉṟumey putaippa nūṟu porucaran tūṇṭiṉāṉ.

Report an error

தூண்டு கின்ற் சுடர்க்கணை யாவையும் ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக் காண்ட லுங்கதை கைக்கொடவ் வுக்கிரன் மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே.

tūṇṭu kiṉṟ cuṭarkkaṇai yāvaiyum īṇṭi yētaṉ etiruṟum peṟṟiyaik kāṇṭa luṅkatai kaikkoṭav vukkiraṉ mīṇṭi ṭumpaṭi vīciniṉ ṟārkkavē.

Report an error

வேறொர் தேரிடை வெய்தென எய்தியே ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ மாறி தெய்வத மாப்படை தொட்டுனை ஈறு காண்பன் இறந்தனை நீயெனா.

vēṟor tēriṭai veyteṉa eytiyē ūṟu nīṅkiya ukkiraṟ kaṇṇuṟīi māṟi teyvata māppaṭai toṭṭuṉai īṟu kāṇpaṉ iṟantaṉai nīyeṉā.

Report an error

முன்னு பூசை முதலிய யாவையும் முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின் வன்னி மாப்படை வாங்கி வணங்கியே மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான்.

muṉṉu pūcai mutaliya yāvaiyum muṉṉi yēniṉ ṟoruṅkuṭaṉ ceytapiṉ vaṉṉi māppaṭai vāṅki vaṇaṅkiyē miṉṉu taṇcuṭar mīkkoḷa vīciṉāṉ.

Report an error

ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன் வீசு வெம்படை வீரத்தை நோக்கியே ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை நேச மோடு நினைந்தனன் போற்றினான்.

ācai tōṟum aḻalcinta māṟṟalaṉ vīcu vempaṭai vīrattai nōkkiyē īcaṉ maintaṉ iṇaimalart tāḷkaḷai nēca mōṭu niṉaintaṉaṉ pōṟṟiṉāṉ.

Report an error

எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோன் அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன் செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட.

evve varkkum iṟaiyava ṉākiyōṉ avva ḻittaṉ aruḷceya ukkiraṉ cevvi tiṟcelun tīccaram paṟṟiyē kavvi nuṅkiṉaṉ kaṇkaṉal kāṉṟiṭa.

Report an error

நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன் துங்க மாமகன் தொல்புனல் மாப்படை பொங்கு சண்டப் பொருபடை ஏவலும் அங்க வற்றையும் பற்றி அருந்தினான்.

nuṅku vāṉṟaṉai nōkki arimukaṉ tuṅka māmakaṉ tolpuṉal māppaṭai poṅku caṇṭap porupaṭai ēvalum aṅka vaṟṟaiyum paṟṟi aruntiṉāṉ.

Report an error

காற்றின் வெம்படை ஏவினன் கைதவன் ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான் தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே ஏற்ற மான இரும்பொருள் யாவதோ.

kāṟṟiṉ vempaṭai ēviṉaṉ kaitavaṉ āṟṟal ukkiraṉ aṉṉatu nuṅkiṉāṉ tēṟṟu kiṉṟuḻic ceytavam aṉṟiyē ēṟṟa māṉa irumporuḷ yāvatō.

Report an error

மற்றும் அவ்வதி சூரன் மலரயன் ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன் பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால் பெற்றி ருந்த பெரும்படை ஏவினான்.

maṟṟum avvati cūraṉ malarayaṉ oṟṟai vempaṭai ōccalum ukkiraṉ paṟṟi nuṅkavap paṅkayaṉ tātaipāl peṟṟi runta perumpaṭai ēviṉāṉ.

Report an error

ஒய்யெ னச்சென் றுருகெழு நாரணன் பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங் கையில வாங்கிக் கதுமென வாய்க்கொளா வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே.

oyye ṉacceṉ ṟurukeḻu nāraṇaṉ poyyil māppaṭai pōntiṭa āṅkatuṅ kaiyila vāṅkik katumeṉa vāykkoḷā veyya ukkiraṉ mēyiṉaṉ eṉpavē.

Report an error

ஆன காலை அரிமுகன் காதலன் யானி னிச்செய் இயற்கையென் னேயிவன் தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை மேனி லாவிய வேதன்கொ லோவென்றான்.

āṉa kālai arimukaṉ kātalaṉ yāṉi ṉiccey iyaṟkaiyeṉ ṉēyivaṉ tāṉav vīcaṉkol kaṇṇaṉkol tāmarai mēṉi lāviya vētaṉko lōveṉṟāṉ.

Report an error

மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார் ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத் தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான்.

mūva rākiya mūrttikaḷ allatai ēva rēmaṟ ṟituceyum peṟṟiyār āva ṉāvaṉ avarkkuḷ ivaṉeṉāt tēvar māṟṟalaṉ piṉṉaruñ ceppiṉāṉ.

Report an error

சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல் தோற்றங் கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன் ஏற்றங் கண்டுழி என்செய்தும் என்றனர் கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார்.

cīṟṟaṅ koṇṭa avuṇar tiraikkaṭal tōṟṟaṅ koṇṭacav cūrkeḻum ukkiraṉ ēṟṟaṅ kaṇṭuḻi eṉceytum eṉṟaṉar kūṟṟaṅ koṇṭa uyiriṟ kulaintuḷār.

Report an error

அண்ணல் வாசவ னாதிய ராகிய எண்ணில் வானவர் யாவரும் இச்செயல் கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப் பண்ண வன்முன் பணிந்திது கூறுவார்.

aṇṇal vācava ṉātiya rākiya eṇṇil vāṉavar yāvarum icceyal kaṇṇu ṟāikal kaṇṭaruḷ nāṉmukap paṇṇa vaṉmuṉ paṇintitu kūṟuvār.

Report an error

எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை செங்க ணான்படை தீயநின் மாப்படை அங்கி யாவும் அணுகஇப் பூதர்கோன் நுங்கு மாறென் நுவலுதி என்னவே.

eṅka ḷālvarum eṇṇil perumpaṭai ceṅka ṇāṉpaṭai tīyaniṉ māppaṭai aṅki yāvum aṇukaip pūtarkōṉ nuṅku māṟeṉ nuvaluti eṉṉavē.

Report an error

இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன் அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான் கந்தன் எந்தை கழலிணை போற்றியே வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான்.

inti rātiyar kēṇmiṉkaḷ īṅkivaṉ anti vāṉcaṭai aṇṇal varattiṉāṉ kantaṉ entai kaḻaliṇai pōṟṟiyē vantu ḷāṉev valiyaiyum āṟṟuvāṉ.

Report an error

எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ் செம்மை யானவன் செம்பொற் சிலம்படி மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன் எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான்.

emmai yāḷuṭai īcaṉ aruḷpeṟuñ cemmai yāṉavaṉ cempoṟ cilampaṭi mummai yuntoḻu muttipeṟ ṟāṉivaṉ emmi ṉumperi yāṉeṉṟum īṟilāṉ.

Report an error

மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய சக்க ரம்நுக ருந்தவத் தோனினும் மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான் உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான்.

maikka ruṅkaṭal vaṇṇaṉmuṉ ēviya cakka ramnuka runtavat tōṉiṉum mikka āṟṟalaṉ veṟṟiyiṉ mēlaiyāṉ ukki raṉṉeṉ ṟuraittiṭum pēriṉāṉ.

Report an error

பண்டு நாமருள் பல்படை யாவையும் உண்ட தோவியப் பொல்லையில எல்லையில் அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன் கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ.

paṇṭu nāmaruḷ palpaṭai yāvaiyum uṇṭa tōviyap pollaiyila ellaiyil aṇṭa muñcitait tākkuvaṉ īṅkivaṉ koṇṭa tolpukaḻ kūṟat tolaiyumō.

Report an error

என்ன நான்முகன் எண்ணி இயம்பலும் அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந் துன்னு சென்னி துளக்கிப் பெருந்திறல் இன்னு மாக இவற்கென் றியம்பினார்.

eṉṉa nāṉmukaṉ eṇṇi iyampalum aṉṉa kēṭṭalum aṇṭarkaḷ yāvarun tuṉṉu ceṉṉi tuḷakkip peruntiṟal iṉṉu māka ivaṟkeṉ ṟiyampiṉār.

Report an error

வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர் சேனை காவலன் பூதனை நோக்கிநிற் சிதைப்பல் ஊன மாகிய படையென உன்னலை உமைபால் ஞான நாயகன் படைதொடு வேனென நவின்றான்.

vāṉa mēlitu nikaḻntuḻi māṟilā avuṇar cēṉai kāvalaṉ pūtaṉai nōkkiniṟ citaippal ūṉa mākiya paṭaiyeṉa uṉṉalai umaipāl ñāṉa nāyakaṉ paṭaitoṭu vēṉeṉa naviṉṟāṉ.

Report an error

மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச் சிந்தை மேலுறு வெகுளியோ டரன்படை செலுத்த அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால் அடர்க்கும் எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய திமைப்பில்.

manti rantaṉiṟ pūcaṉai mutaliya vakuttuc cintai mēluṟu vekuḷiyō ṭaraṉpaṭai celutta anta millatōr ulakelām muṟuvalāl aṭarkkum entai koṇṭatō ruruveṉat tōṉṟiya timaippil.

Report an error

நஞ்சும் ஆரழல் நாகமும் நடுவன துருவும் விஞ்சு பூதமுங் கணங்களும் வேறுபல் படையும் எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும் அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே.

nañcum āraḻal nākamum naṭuvaṉa turuvum viñcu pūtamuṅ kaṇaṅkaḷum vēṟupal paṭaiyum eñca lillatōr aṅkiyum pōṟṟa evvulakum añci ṭumpaṭi naṭantatāl araṉpaṭai yatuvē.

Report an error

ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும் ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப் பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தான்.

īcaṉ māppaṭai varutalum ukkiraṉ eṉṉum ācil vīraṉṟaṉ aṅkaiyiṟ kataiyiṉai akaṟṟip pāca nīkkumañ ceḻuttiṉai vitimuṟai paṉṉi nēca mōṭukai toḻutaraṉ poṉṉaṭi niṉaintāṉ.

Report an error

ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான் மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான் ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில்.

āṇṭai ukkiraṉ niṟṟalum añcali purivāṉ māṇṭa tolpaṭai illavaṉ tuticeyum vāyāṉ īṇṭi vaṉṟaṉai aṭukilaṉ yāṉeṉa eṇṇi mīṇṭu ceṉṟatu civaṉaruḷ paṭaikkalam viraivil.

Report an error

அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின் அவர்பால் நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின் விடையூர் பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள் படையே.

aṇṇa lampaṭai tuṟantavar mēlviṭiṉ avarpāl naṇṇu ṟātunam pakkalvan tiṭumeṉa nalka viṇṇu lāmpukaḻ avuṇarkōṉ peṟutaliṉ viṭaiyūr paṇṇa vaṉṟaṉai aṭaintatāṅ kavaṉaruḷ paṭaiyē.

Report an error

ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென் றயிர்த்துச் சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார் வானு ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம் ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகாண் றிரிந்தார்.

āṉa peṟṟikaṇ ṭiṅkivaṉ civaṉkoleṉ ṟayirttuc cēṉai kāvalaṉ tuḷaṅkiṉaṉ pūtarkaḷ ciṟantār vāṉu ḷōrmalar mārikaḷ tūrttaṉar māṟām ēṉai vīrarkaḷ viḻipoḻi tāraikāṇ ṟirintār.

Report an error

நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை நீவிர் ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன் வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான்.

nīṅku kiṉṟatōr tāṉavar kuḻuviṉai nīvir ēṅku kiṉṟatai viṭumiṉkaḷ eṉṟutēr iḻintu pāṅkar uṟṟatōr taṇṭukoṇ ṭarimukaṉ pālaṉ vīṅku tōḷiṭai eṟṟiṉaṉ ukkiraṉ vekuṇṭāṉ.

Report an error

எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன் பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத் தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான் மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி.

eṟṟu taṇṭiṉai aṅkaiyāl ukkiraṉ eṉpōṉ paṟṟi vāṅkiyē avaṉṟaṉa turampatai pataippat teṟṟe ṉappuṭait tiṭutalum nilaṉiṭaic cērntāṉ maṟṟa vaṉṟaṉa tuyirkoṭu pōyiṉaṉ maṟali.

Report an error

துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடீர் மஞ்சு போலவே வரும்அசு ரேந்திரன் மனமும் நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழு நகையா விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் விரைவின்.

tuñci vīḻati cūraṉai nōkkiyē tukaṭīr mañcu pōlavē varumacu rēntiraṉ maṉamum nañcu māmeṉak kotittaṉaṉ aḻaleḻu nakaiyā viñcu pūtartaṅ kuḻuviṉmēṟ ceṉṟaṉaṉ viraiviṉ.

Report an error

கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன் கரத்தின் நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப் படியும் வானமுங் குலைந்தன உயிரெலாம் பதைப்ப.

kaṭitu ceṉṟacu rēntiraṉ intiraṉ karattiṉ neṭiya villiṉum āyirat tiraṭṭimēl nimirnta koṭiya vārcilai vāṅkiyē kuṇattoli koḷuvap paṭiyum vāṉamuṅ kulaintaṉa uyirelām pataippa.

Report an error

பூதர் அங்கது நோக்கியே தண்டமும் பொருப்பும் பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன் மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச் சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச் சொரிந்தான்.

pūtar aṅkatu nōkkiyē taṇṭamum poruppum pāta vaṅkaḷun tārakaṉ tantiṭu patakaṉ mītu ceṉṟiṭa viṭuttalum aṉaiyaṉa vilakkic cōti veṅkaṇai iṟutināḷ mukileṉac corintāṉ.

Report an error

வடிகொள் வார்ணை விடுத்தலும் பூதர்கள் வலிதின் விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி முடியுங் கைகளும் ஆகமும முகத்தொடு மொய்ம்பும் அடியுஞ் சோரிநீர் கான்றிட அழுந்திய அவர்பால்.

vaṭikoḷ vārṇai viṭuttalum pūtarkaḷ valitiṉ viṭupi ṟaṅkalē mutaliya iṭaiyiṭai vīṭṭi muṭiyuṅ kaikaḷum ākamuma mukattoṭu moympum aṭiyuñ cōrinīr kāṉṟiṭa aḻuntiya avarpāl.

Report an error

மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும் மண்மேல் அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும் இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக் கொற்ற வீரில் கனகன்என் பவன்எதிர் கொண்டான்.

maṟṟum veṅkaṇai ulappila tūṇṭalum maṇmēl aṟṟa kaikaḷun tuṇintiṭu tōḷkaḷum aṭiyum iṟṟa kaṇṭamu mākivem pūtarkaḷ iṟappak koṟṟa vīril kaṉakaṉeṉ pavaṉetir koṇṭāṉ.

Report an error

எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த அதிரும் வார்கழல் அன்னலோர் வடிக்கணை அழுத்த உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான் கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் கடிதின்.

etira tāyvaru kaṉakaṉmēl tārakaṉ īnta atirum vārkaḻal aṉṉalōr vaṭikkaṇai aḻutta utira vāriyō ṭaṉṉavaṉ tērmicai uṟṟāṉ katiriṉ mēlvaru ceyyakō ḷāmeṉak kaṭitiṉ.

Report an error

பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம் பனைக்கை நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக் காகம் போலவெள் ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர் மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான்.

pākaṉ taṉṉuyir ulantiṭa utaittuvem paṉaikkai nākan tantiṭu matalaitaṉ varicilai nāṇaik kākam pōlaveḷ ḷeyiṟṟiṉāṟ kīṟiveṅ kaṟaicēr mēkan tāraṇi micaiiḻin tāleṉa mīṇṭāṉ.

Report an error

இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந் தினாங் கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின் அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக் குழிந்த கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான்.

iḻintu mālvarai oṉṟukīṇ ṭacurarin tiṉāṅ kaḻinta cīrttiyāṉ mīmicai ōccaluṅ karattiṉ aḻinta villiṉai nīttuvē ṟorucilai ataṉaik kuḻinta kaṇṇuṭaip pūtarkaḷ verukkoḷak kuṉittāṉ.

Report an error

குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித் தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப் புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள் பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி.

kuṉittu nāṉkiru cuṭucaran toṭuttaṟai kūvit taṉittu mēlvaruṅ kaṉakaṉē viyakiri cāyttup puṉiṟṟi ḷampiṟai cekkarvāṉ nuḻainteṉap puyaṅkaḷ paṉitti ṭumpaṭi aḻuttiṉaṉ āyiram pakaḻi.

Report an error

பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள் நிகழ நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப் புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன் ஆர்த்தான்.

pakaḻi āyiram paṭutalum āṭakaṉ paiyuḷ nikaḻa niṟṟalum vēṟoru valavaṉai niṟuvip pukaḻil tāṉavaṉ tērkoṭu pūtarmēṟ pōta akaḻu mālvarai oṉṟeṟin tuṉmattaṉ ārttāṉ.

Report an error

அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந் தடர்க்கக் கவன வெம்பரி யாயின உலந்தன காணாப் பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப் பாய்ந்தான் புவனம் உண்ணிய நின்றதோர் கடவுள போல்வான்.

avaṉe ṟintiṭum paruppatam viraivilvan taṭarkkak kavaṉa vempari yāyiṉa ulantaṉa kāṇāp pavaṉa vēkattiṉ vēṟoru tērmicaip pāyntāṉ puvaṉam uṇṇiya niṉṟatōr kaṭavuḷa pōlvāṉ.

Report an error

முந்து வெங்கணை உலப்பில தூண்டலும் முந்நீர் செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் செறிய வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நோ வந்தான்.

muntu veṅkaṇai ulappila tūṇṭalum munnīr centu kirkkoṭi pōrtteṉak kurutinīr ceṟiya vanta muṟṟilaṉ puvimicai iruntaṉaṉ āṅkē mantaṉ eṉpavaṉ tārakaṉ putalvaṉnō vantāṉ.

Report an error

வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய் பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக் கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது கண்டான்.

varuta lōṭumāṅ kavaṉmicai aiyiru vāḷi kuruti kāluṟa vaḻaṅkalum eriyeṉak kotiyāy pariti mēvarat takuvatōr paruppatam paṟittuk karuti ēviṉaṉ avuṇarkōṉ aṅkatu kaṇṭāṉ.

Report an error

சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித் தெறித்துக் குன்று மீண்டுமற் றவன்புடை போயது கொடியோன் ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான் நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான்.

ceṉṟu mārpetir ēṟṟalum vantuḻit teṟittuk kuṉṟu mīṇṭumaṟ ṟavaṉpuṭai pōyatu koṭiyōṉ oṉṟu pōliya āyiram pakaḻikaḷ uyttāṉ niṉṟu mantaṉ aṅkayarntaṉaṉ ciṅkaṉum nērntāṉ.

Report an error

எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர் எறியத் தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் தரியார் விடுத்த தோர்கதை எறிதலும் அவனது விலக்கித் தொடுத்து நூறுகோல் அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான்.

eṭuttu mālvarai oṉṟavaṉ urattiṉnēr eṟiyat taṭuttor vāḷiyiṉ akaṟṟiṉaṉ amariṭait tariyār viṭutta tōrkatai eṟitalum avaṉatu vilakkit toṭuttu nūṟukōl aḻuttiṉaṉ ciṅkaṉum tolaintāṉ.

Report an error

ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும் உடன்றே அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள் பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில் கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான்.

oḻinta cāratat talaivarka ḷiyāvarum uṭaṉṟē aḻintu niṉṟaṉar tārakaṉ kumaraṉā cukaṅkaḷ poḻintu maṟṟuḷa pūtarai muṭittiṭum pōtil kaḻinta tuṉpoṭum ilakkaril taṇṭakaṉ kaṇṭāṉ.

Report an error

தனது கார்முகம் வாங்கியே தண்டகப் பெயரோன் முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன முகத்தின் நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி மனமவெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை வளைத்தான்.

taṉatu kārmukam vāṅkiyē taṇṭakap peyarōṉ muṉaiyi ruṅkaṇai āyiraṅ koṭiyavaṉa mukattiṉ naṉipu kuntiṭa viṭuttalum naṭalaiyuṟ ṟiraṅki maṉamave kuṇṭupiṉ taṉperuñ cilaiyiṉai vaḷaittāṉ.

Report an error

வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக மறவோன் குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன் கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர் கிடைத்தான்.

vaḷaittu nāliraṇ ṭampiṉait taṇṭaka maṟavōṉ kuḷattiṉ mēṟpaṭa viṭuttalum eḻuntaṉa kuruti iḷaittu niṉṟaṉaṉ tērmicai aṉṉavaṟ kiḷaiyōṉ kiḷattu cōmukaṉ tārakaṉ makaṉetir kiṭaittāṉ.

Report an error

எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங் கவலா அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம் நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன் நொடிப்பில்.

etirpu kuntavaṉ akalamēl aimpatiṟ ṟiraṭṭi katirte ṟuṅkaṇai avuṇarkōṉ aḻuttaluṅ kavalā atirta runtaṉa toṇcilai vāṅkiyā yiramām nutikoḷ veñcaran tūṇṭiṉaṉ cōmukaṉ noṭippil.

Report an error

பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன் சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல் ஒன்றை ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென உய்த்தான்.

palla vaṅkaḷā yiramumat tārakaṉ pālaṉ cilli yantaṉit tēriṉai valavaṉaic citaippa mella vēṟoru tērmicaip pāyntuvēl oṉṟai ollai iṅkivaṉ uyiriṉai uṇkeṉa uyttāṉ.

Report an error

உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும் முயங்கி எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப நித்தன் வேர்வுறு சோமுகற் கிளையவன் நெடுமால் ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி துற்றான்.

uytta vēlavaṉ akalamēṟ paṭutalum muyaṅki eyttu maṟṟavaṉ tērmicai mayaṅkiṉaṉ iruppa nittaṉ vērvuṟu cōmukaṟ kiḷaiyavaṉ neṭumāl otta vaṉmaiyaṉ vicayaṉeṉ pavaṉkaṭi tuṟṟāṉ.

Report an error

விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே வெகுண்டு நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற் றவன்கை இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான்.

vicayaṉ āṅkoru koṭumaram vāṅkiyē vekuṇṭu nicita veṅkaṇai āyiram uyttunē rillā acurar intiraṉ valavaṉait taṭintumaṟ ṟavaṉkai icaiyum villoṭu nāriyait tuṇipaṭa iṟuttāṉ.

Report an error

முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும் முனியா இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக் கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின் பொலிந்தான்.

muṟṟu nūluṇar pākuyir ulattalum muṉiyā iṟṟa nāṇoṭu vārcilai tuṇiyiṉai ēntik koṟṟa māracu rēntiraṉ mattikai koṇṭu poṟṟai aṉṉataṉ tērviṭu valavaṉiṉ polintāṉ.

Report an error

தகுவர் கோன்ஒரு வலவனை நிறுவியோர் தண்டம் இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப் புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன் மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான்.

takuvar kōṉoru valavaṉai niṟuviyōr taṇṭam ikalum vaṉmaiyāl eṭuttaṉaṉ avaṉmicai eṟiyap pukutu mellaiyil kaṇṭetir vicayaṉām pukaḻōṉ mikavum ellaiyil caraṅkaḷait tūṇṭiṉaṉ viṭuttāṉ.

Report an error

தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத் தொலைத்து மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய் வீழ்ந்தான்.

toṭṭa toṭṭaṉa kaṇaiyelān tukaḷpaṭat tolaittu maṭṭu lāntoṭai vicayaṉmār pakattiṭai vantu paṭṭa kālaiyil avaṉṟaṉa tiratamēṟ pataittu viṭṭa villoṭu kurutiyun tāṉumāy vīḻntāṉ.

Report an error

விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண் டுழந்த துன்பொடு வீரமொய்ம் பினன்விரைந் துற்றான்.

viḻunta kālaiyil ilakkaril ēṉaiyōr vekuṇṭu poḻinta vāḷiyāl tārakaṉ makaṉoṭu porutē aḻinti yāvarum irintaṉar pōtalum atukaṇ ṭuḻanta tuṉpoṭu vīramoym piṉaṉvirain tuṟṟāṉ.

Report an error

வீர வாகுவேள் இணையடி போற்றியே வெகுண்டோர் கோர வெஞ்சிலை வாங்கினன் நாணாலி கொளுவி யாரும் வானவர் வியபபுற அவுணர்கள் அயரத் தார காசுரன் மதலையை மறைத்தனன் சரத்தால்.

vīra vākuvēḷ iṇaiyaṭi pōṟṟiyē vekuṇṭōr kōra veñcilai vāṅkiṉaṉ nāṇāli koḷuvi yārum vāṉavar viyapapuṟa avuṇarkaḷ ayarat tāra kācuraṉ matalaiyai maṟaittaṉaṉ carattāl.

Report an error

மறைப்ப மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல் லவுணன் றிற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும் உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர் ஒத்தார்.

maṟaippa meyyelāṅ kurutikoṇ ṭiṭalumval lavuṇaṉ ṟiṟka ṭuñcilai oṉṟiṉai vaḷaittavaṉ micaiyē piṟaitta laikkaṇai āyiram aḻuttiṉaṉ peritum uṟaitta cempuṉal iruvarum iḷaṅkatir ottār.

Report an error

தார கத்திற லான்மகன் தூண்டியேழ் சரத்தால் சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் துணிப்ப வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே விடங்கால் கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால்.

tāra kattiṟa lāṉmakaṉ tūṇṭiyēḻ carattāl cūrar ittiṟal aṇṇalkaic cilaitaṉait tuṇippa vīraṉ maṟṟoru kārmukam vāṅkiyē viṭaṅkāl kūra yiṟkaṇai āyiram viṭuttaṉaṉ kuṟiyāl.

Report an error

ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை இறுத்துப் பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன் போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர்.

ēkum vārkaṇai tārakaṉ makaṉcilai iṟuttup pākaṉ āviyuṇ ṭiratamō ṭayaṅkaḷaip paṭuppa vākai iṉṟiyē vēṟoru tērmicai vaṟiyaṉ pōka lōṭumaṟ ṟaṉṉatu kaṇṭaṉar pulavōr.

Report an error

வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன் பொருது வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார் அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன் கரித ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின்.

veruva rapporun tārakaṉ matalaiyai vīraṉ porutu veṟṟikoḷ vāṉkolām iṉiyeṉap pukaḻntār ariya aṟputa mōvavaṉ veṉṟiṭal avuṇaṉ karita ruñcutaṉ cimpuḷiṉ cutaṉivaṉ kaḻaṟiṉ.

Report an error

மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு வளைத்து நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச் சீறி வானெழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன் ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான்.

māṟor tēriṭaip pāyntavaṉ orutaṉu vaḷaittu nūṟu kōlviṭut tavaṉira tattiṉai nūṟac cīṟi vāṉeḻīi vīravā kuppeyart tiṟalōṉ āṟu māmuka mutalvaṉaip paraviniṉ ṟārttāṉ.

Report an error

உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற் படர்ந்து சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் தேர்மேல் குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற் றிறைக ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன் றெறிந்தான்.

uṟaika ḻittuvāḷ uruviyē umpariṟ paṭarntu ciṟaika ḻittiṭum varaipurai avuṇarkōṉ tērmēl kuṟaika ḻittiṭum paṇikavar matiyeṉak kuppuṟ ṟiṟaika ḻikkumuṉ avaṉṟaṉaik kaiyiloṉ ṟeṟintāṉ.

Report an error

எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம் இறலுங் குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை சென்றே உறைந்த தோர்கரும் பணியழல் மணியுமிழ்ந் தொப்ப.

eṟinta kālaiyil iṟṟatōr kaittalam iṟaluṅ kuṟainta kaiyiṭaic calacala iḻivaṉa kuruti ceṟinta nīlavoṇ kiritaṉak korupuṭai ceṉṟē uṟainta tōrkarum paṇiyaḻal maṇiyumiḻn toppa.

Report an error

கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத ஒய்யெனத் திறல் மொய்ம்பினன் வானெழுந் தொருதன் செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன் சிரத்தில்.

kaiya ṟuttalun tārakaṉ taṉcutaṉ kaṉaṉṟu moyyu ṭaikkatai oṉṟeṭut tavaṉmicai mōta oyyeṉat tiṟal moympiṉaṉ vāṉeḻun torutaṉ ceyya poṟpatat tutaittaṉaṉ aṅkavaṉ cirattil.

Report an error

காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங் கண்டு தூம மார்விழி யான்அசு ரேந்திரன் தொடர்ந்தோர் சேம வாள்கொடு வானெழ மேலையோன் சீறி ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான்.

kāmar tāḷiṉāl utaittuviṇ paṭartaluṅ kaṇṭu tūma mārviḻi yāṉacu rēntiraṉ toṭarntōr cēma vāḷkoṭu vāṉeḻa mēlaiyōṉ cīṟi ēma nāntakat tālavaṉ talaiyaṟa eṟintāṉ.

Report an error

எறிந்த சென்னியு மியாக்கையும் இப்பரின் வீழ்ந்து மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற் செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர் செய்கை அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே.

eṟinta ceṉṉiyu miyākkaiyum ippariṉ vīḻntu maṟintu maṟṟavaṉ maṉṉuyir pōyatu vāṉmēṟ ceṟinta viṇṇavar ārttaṉar iṉṉatōr ceykai aṟinta tāṉavak kaṭalelām ōṭiṉa aṉṟē.

Report an error

மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத் தொக்க பேரழல் உலகட எழுந்ததோற் றம்போல் மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள் வென்றான்.

makka ḷāyiṉar iruvarum iṟantatu malaintu pakka mēyiṉa tāṉaikaḷ irintatum pārāt tokka pēraḻal ulakaṭa eḻuntatōṟ ṟampōl mikka cīṟṟamēṟ koṇṭaṉaṉ aṇṭaṅkaḷ veṉṟāṉ.

Report an error

சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும் ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக் காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந் தெய்திக் கூற்றின் வெம்பசி தணிப்பகோர் சிலையினைக் குனித்தான்.

cīṟṟa mētaku kācipaṉ matalaipōr ceyyum āṟṟa lārtamai aṭuvaṉāl virainteṉa matittuk kāṟṟiṉ muntucel tēriṭaik kaṭituvan teytik kūṟṟiṉ vempaci taṇippakōr cilaiyiṉaik kuṉittāṉ.

Report an error

வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை நீணி லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல் பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற் புணர்த்த நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் நகத்தால்.

vāṇi pōṟṟiṭu cayamakaḷ vīramā maṭantai nīṇi laippaṭa vēṟucō pāṉattiṉ neṟipōl pūṇa ḷāviya poṉṉavāñ cilaitaṉiṟ puṇartta nāṇiṉ ōtaiyaik kāṭṭiṉaṉ aṇiviral nakattāl.

Report an error

கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக் கணங்கள் மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும் உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ் சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி.

karaṅkoḷ villoli kēṭṭalum pāriṭaik kaṇaṅkaḷ maraṅkaḷ cintiṉar cikarikaḷ cintiṉar malaiyum uraṅkaḷ cintiṉar vīramuñ cintiṉar uṭaluñ ciraṅka ḷāṉavum paṉittiṭa ōṭiṉar citaṟi.

Report an error

யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில் வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து மாண்டு ளார்சிலர் மயக்கமுற் றார்சிலர் மற்றும் ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில் அரவம்.

yāṇṭu mākiyē irintaṉar allatin nilattil vīṇṭu ḷārcilar pataittuniṉ ṟārcilar vīḻntu māṇṭu ḷārcilar mayakkamuṟ ṟārcilar maṟṟum āṇṭu paṉṉiraṇ ṭoḻintila tavuṇaṉvil aravam.

Report an error

வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன் விண்ணோர் நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக் கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின பொருமி.

vētaṉ añciṉaṉ mālmuṭi tuḷakkiṉaṉ viṇṇōr nātaṉ añciṉaṉ maṟaliyum añciṉaṉ naṭuṅkik kōtil nallaṟam añciṉa aivakai koṇṭa pūtam añciṉa uyirttokai añciṉa porumi.

Report an error

வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலும் மறத்தால் விஞ்சு பூதமீ ராயிர வெள்ளமும் வெருவி எஞ்சி யேயவண் நின்றிடா திரிந்துள வென்றால் அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ.

vañcaṉ vārcilai nāṇoli kēṭṭalum maṟattāl viñcu pūtamī rāyira veḷḷamum veruvi eñci yēyavaṇ niṉṟiṭā tirintuḷa veṉṟāl añcu pūtaṅkaḷ añcuva taṟputat taṉavō.

Report an error

சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந் துளங்கிப் பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப் போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும் புகுந்து மாரி யிற்பொழந் திட்டனர் வரைகளும் மரமும்.

cūraṉ viṟperu muḻakkiṉaik kēṭṭalun tuḷaṅkip pāri ṭattokai aḻitara aṉṉatu pārttup pōri yaṟpaṭait talaivarnūṟ ṟeṇmarum pukuntu māri yiṟpoḻan tiṭṭaṉar varaikaḷum maramum.

Report an error

அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி பொன்னின் வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித் தன்னு ழைப்புகும் வரையொடு தருக்களைத் தடிந்து துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத் துளைத்தான்.

aṉṉa vēlaiyiṟ pattunū ṟāyira kōṭi poṉṉiṉ veṅkaṇai avuṇarkōṉ muṟaimuṟai pōkkit taṉṉu ḻaippukum varaiyoṭu tarukkaḷait taṭintu tuṉṉu pāriṭat talaivartam yākkaiyait tuḷaittāṉ.

Report an error

முடிது ளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத் தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தனன் கடிது ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர் அடிது ளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார்.

muṭitu ḷaittaṉaṉ mukattiṉait tuḷaittaṉaṉ moympait toṭaiyal mārpiṉait tuḷaittaṉaṉ pāṇiyait tuḷaittaṉaṉ kaṭitu ḷaittaṉaṉ kuṟaṅkiṉait tuḷaittaṉaṉ kaḻalcēr aṭitu ḷaittaṉaṉ pāriṭat talaivarum ayarntār.

Report an error

துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந் துயர்கொண் டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன் களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன் உலைந்தான்.

tuḷaittu meyyiṉai veñcaram pōtalun tuyarkoṇ ṭiḷaittu niṉṟaṉaṉ atipalaṉ vakkiraṉ eṉpōṉ kaḷaittu vīḻntaṉaṉ vacciraṉ iraṅkiṉaṉ kapāli uḷattiṉ vaṉmaiya taḻintaṉaṉ uṉmattaṉ ulaintāṉ.

Report an error

நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான் ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான் வாடு கின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான் ஆடு றுந்துயர் அறிந்தனன் அண்டவா பரணன்.

nīṭu kuṉṟiṉai yēntiyē accutaṉ niṉṟāṉ ōṭu kiṉṟilaṉ etirntilaṉ māpalaṉ uḷaintāṉ vāṭu kiṉṟaṉaṉ maticayaṉ mēkaṉum maruṇṭāṉ āṭu ṟuntuyar aṟintaṉaṉ aṇṭavā paraṇaṉ.

Report an error

மேக மாலிஉ நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான் காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான் ஆகம வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன் மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி மறிந்தான்.

mēka māliu naṭuṅkiṉaṉ cuppiraṉ melintāṉ kāka pātaṉmey pataittaṉaṉ utavakaṉ kavaṉṟāṉ ākama vīḻntiṭu kurutiyuḷ aḻuntiṉaṉ acalaṉ māka vantaṉnon tiraṅkiṉaṉ attiri maṟintāṉ.

Report an error

பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன் பதுமன் எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான் மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான் சித்தி ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல் திளைத்தார்.

patti raṉciṟi tiṭaintaṉaṉ uṭaintaṉaṉ patumaṉ eytta caintaṉaṉ viyākkiraṉ taṉañcayaṉ irintāṉ mattaṉ vaituvey tuyirttaṉaṉ piṉākimey maṟantāṉ citti rāṅkaṉuṅ kaṉakaṉun tuyarkkaṭal tiḷaittār.

Report an error

நெஞ்ச ழிந்தனர் மாலியும் நீலனும் நெடுங்கண் பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்புற் றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி துஞ்சல் கூடினர் வாமனுஞ் சோமன்என் பவனும்.

neñca ḻintaṉar māliyum nīlaṉum neṭuṅkaṇ pañca ṭaintaṉar kumpaṉum nikumpaṉum pataippuṟ ṟañci ēṅkiṉar caṇṭiyun taṇṭiyum āvi tuñcal kūṭiṉar vāmaṉuñ cōmaṉeṉ pavaṉum.

Report an error

வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன் வெகுண்டான் சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந் தீர்ந்தான் சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான் பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான்.

veṅkaṇ ukkiraṉ eḻuvataṟ kuraṉilaṉ vekuṇṭāṉ ciṅkaṉ ōyntaṉaṉ cuvētacī riṭaṉmaṟan tīrntāṉ caṅka pālaṉvīḻn turuṇṭaṉaṉ nantiyuñ calittāṉ piṅka laṉuyirk kiṉṟilaṉ urōmacaṉ peyarntāṉ.

Report an error

இனைய தன்மையால் இவர்முத லானநூற் றெண்மர் அனிக வேந்தர்கள் போர்வலி இன்றியே அழியத் துனைய மற்றது கண்டுநூ றாயிரத் தொகையோர் கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள்.

iṉaiya taṉmaiyāl ivarmuta lāṉanūṟ ṟeṇmar aṉika vēntarkaḷ pōrvali iṉṟiyē aḻiyat tuṉaiya maṟṟatu kaṇṭunū ṟāyirat tokaiyōr kaṉaiyum vārcilai vāṅkiyē tūrttaṉar kaṇaikaḷ.

Report an error

தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழச் சூரன் வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன விலக்கி ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண் மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான்.

tūrttu maṟṟavar māṟukoṇ ṭiṭuvuḻac cūraṉ vērttu veṅkaṇai māritūy aṉaiyaṉa vilakki ārttu veñcaram āyira kōṭitoṭ ṭaṅkaṇ mūrttam oṉṟiṉil aṉaiyavar cilaikaḷai murittāṉ.

Report an error

முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன் முன்னம் திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச் செலுத்திப் பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை உய்த்தான்.

murittu maṟṟavar vārcilai yeṭuppataṉ muṉṉam tirittum āyira kōṭiveṅ kaṇaiyiṉaic celuttip paritti ṟampala pūṇṭiṭun tērkaḷaip paṭutti urattil aṉṉavark kilakkamā yiraṅkaṇai uyttāṉ.

Report an error

உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும் உளைந்தே எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் டிரங்கி வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின்.

uytta vāḷikaḷ neñcupōḻn tiṭutalum uḷaintē eyttu vīḻntaṉar ilakkarum aṉaiyakaṇ ṭiraṅki vitta kaṅkeḻu vīramārt tāṇṭaṉām viṭalai kaitta laṅkeḻu cilaiyoṭu nērntaṉaṉ kaṭitiṉ.

Report an error

வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார் கடல்கள் ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் கணையெனும் எழிலி தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத் தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச் செறித்தான்.

vāṅku villiṉaṉ eṟintanāṇ oliyaṉvār kaṭalkaḷ ēṅkum ārppiṉaṉ avuṇaṉmēṟ kaṇaiyeṉum eḻili tūṅku vittaluñ caraṅkaḷtūy aṉṉavai tolaittut tīṅka ṭuṅkaṇai āyiram nutaliṭaic ceṟittāṉ.

Report an error

செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி குறித்து வீசியே அவன்விடு கணையொடுங் குனிவில் அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும் அட்டான்.

ceṟitta kālaiyil vīraruḷ veyyavaṉ ceyirttu maṟittum veñcaran tūṇṭavē āyiram vāḷi kuṟittu vīciyē avaṉviṭu kaṇaiyoṭuṅ kuṉivil aṟuttu rampiḷan tampupey tūṇiyum aṭṭāṉ.

Report an error

அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள் ளழுங்கிப் பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் விறலோன்.

aṭṭa kālaiyil vīramārt tāṇṭaṉuḷ ḷaḻuṅkip paṭṭu ḷāṉeṉa vīḻntaṉaṉ paricatu nōkki oṭṭa lāṉvali aṭakkuvaṉ yāṉeṉa uruttu viṭṭa tēroṭum vantaṉaṉ arakkaṉām viṟalōṉ.

Report an error

வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன் கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால் உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஒராயிரங் கணைகள்.

vanta vīrarāk kataṉeṉum nāmattu valiyōṉ kontu lāntoṭai tūṅkutaṉ koṭumaraṅ kuṉiyā aintu nūṟṟiraṇ ṭaṭucaran turantiṭa atukāl unti ārttaṉaṉ avuṇarkōṉ orāyiraṅ kaṇaikaḷ.

Report an error

முட்டு வெங்கணை வீரராக் கதனெனும் மொய்ம்பன் தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில் எட்டு மாதிரக் கரிகளும் வெருவஆர்த் தெழுந்தான்.

muṭṭu veṅkaṇai vīrarāk kataṉeṉum moympaṉ toṭṭa vāḷiyai vilakkiaṅ kavaṉcilai tuṇikka neṭṭi ruñcuṭar vāḷamoṉ ṟēntinīḷ vicumpil eṭṭu mātirak karikaḷum veruvaārt teḻuntāṉ.

Report an error

விண்ணெ ழுந்தவன் அவுணர்கோன் நின்றிடும் வியன்தேர்க் கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் முகத்தைத் துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன் வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது மணிவாள்.

viṇṇe ḻuntavaṉ avuṇarkōṉ niṉṟiṭum viyaṉtērk kaṇṇil vāviyē āṅkavaṉ koṇṭakār mukattait tuṇṇe ṉaccuṭar nāntakat teṟitaluñ cūraṉ vaṇṇa vārcilai muṭintila toṭintatu maṇivāḷ.

Report an error

நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன் தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன் படையி ழந்திடும் வலியிலற் கொல்வது பழியென் றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற் செல்ல.

neṭiya vāṭpaṭai iṟṟiṭa viṟaluṭai nirutaṉ toṭaiyal mārpakat teṟṟuvāṉ muyaṟaluñ cūraṉ paṭaiyi ḻantiṭum valiyilaṟ kolvatu paḻiyeṉ ṟaṭiyiṉ mēṟpaṭut teṟintaṉaṉ aṇṭamēṟ cella.

Report an error

அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட அலமந் திரக்கம் எய்தியே வீழந்தனன் புவிமிசை இதுகண் டுரக்க டுங்கணை மாரிகள் ஒன்னலன் தேரும் கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன் கடியோன்.

arakkar vīraṉai avuṇarkōṉ eṟintiṭa alaman tirakkam eytiyē vīḻantaṉaṉ puvimicai itukaṇ ṭurakka ṭuṅkaṇai mārikaḷ oṉṉalaṉ tērum karakka vīcivan tēṟṟaṉaṉ makēntiraṉ kaṭiyōṉ.

Report an error

சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச் சாரி வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன் தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி.

cūraṉ aṅkatu vilakkiyē kaṇaimaḻai turappa vīraṉ maṟṟatu cintiṉaṉ pakaḻikaḷ vīcic cāri vaṭṭama tāyvara avuṇaṉun takkōṉ tērai vaṭṭaṇai vantaṉaṉ cilīmukañ citaṟi.

Report an error

திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை ஒருதி றத்தருந் தெளிகிலர் உணர்ந்திட அற்றோ இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால்.

tiriyum vaṭṭaṇai muṟaiyiṉāṟ caramaḻai citaṟi varuti ṟattiṉāl aiyama tāvavar vaṭivai oruti ṟattarun teḷikilar uṇarntiṭa aṟṟō iruti ṟattarum vīramā makēntirar eṉṟāl.

Report an error

ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத் தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற் றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி தொலைத்தான்.

āḷa rikkuṭaṉ vantavaṉ attuṇai aḻaṉṟu kōḷa rikkuṭaṉ vantavaṉ viṭucaraṅ kuṟaittut tāḷiṉ muppatu marumamī tirupatu taṭampoṟ ṟōḷiṉ muppatu kaṇaiviṭut tavaṉvali tolaittāṉ.

Report an error

வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகைமேல் புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் புகலும் மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன் சிலைகு னிந்திடப் பகழிவான் நிமிர்ந்திடச் சென்றான்.

valito laintavaṉ vīḻtalum mākkaḷiṉ tokaimēl puliya ṭainteṉa avuṇarkōṉ urappiṉaṉ pukalum melivil āṟṟalaṉ vīratī raṉṉeṉum veyyōṉ cilaiku ṉintiṭap pakaḻivāṉ nimirntiṭac ceṉṟāṉ.

Report an error

சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால் குறைப்ப நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல் நடந்தான்.

ceṉṟa vīratī raṉviṭu kaṇaiyoṭu cilaiyai oṉṟo rāyiram vāḷiyāl vīṭṭiyē uyarnta kuṉṟa maṉṉatōr tēraiyēḻ kaṇaiyiṉāl kuṟaippa naṉṟu naṉṟeṉāt taṇṭamoṉ ṟeṭuttumēl naṭantāṉ.

Report an error

நடத்த லாகிய எல்லையில் பகழியோர் நான்கு தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் துணித்துத் தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள் விடுத்து மண்மிசை வீட்டினன் யாரையும் வென்றான்.

naṭatta lākiya ellaiyil pakaḻiyōr nāṉku toṭuttu maṟṟavaṉ ēntiya taṇṭiṉait tuṇittut taṭatta mārpiṉum moympiṉum ēḻiru caraṅkaḷ viṭuttu maṇmicai vīṭṭiṉaṉ yāraiyum veṉṟāṉ.

Report an error

ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன் கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல் மான மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம் வலியா ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல் உய்த்தான்.

āṉa kālaiyil vīramā makēcaṉām aṭalōṉ kūṉal villiṉāl aritivaṉ taṉvali kōṭal māṉa mārtiṟal moympaṟkum eṉamaṉam valiyā ūṉum āviyum kavarvatōr teyvavēl uyttāṉ.

Report an error

வேல்வி டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக் குனித்துக் கோல்வி டுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச் சூல்வி டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின் மால்வி டுத்திடா அவுணன்மார் புற்றதவ் வைவேல்.

vēlvi ṭuttuḻik kaṇṭavaṉ veñcilaik kuṉittuk kōlvi ṭuttalum āyiram aṉṉavai kuṟaittuc cūlvi ṭuttiṭum eḻilipāl miṉvarum toṭarpiṉ mālvi ṭuttiṭā avuṇaṉmār puṟṟatav vaivēl.

Report an error

உற்ற தோரெஃகம் நுண்டுக ளாகிவிண் ணுலவிச் சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன் மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர் சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத் தொடுத்தான்.

uṟṟa tōreḵkam nuṇṭuka ḷākiviṇ ṇulavic cuṟṟu mātirañ ceṉṟatu cūraṉmēl vīraṉ maṟṟor taṇṭiṉai viṭuttiṭa eṭukkumuṉ vallōr coṟṟa cāpattiṉ muntumēḻ kaṇaiyiṉait toṭuttāṉ.

Report an error

ஏழெ னப்படும் பகழயும் மகேசனாம் ஏந்தல் பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த சூழு கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம்.

ēḻe ṉappaṭum pakaḻayum makēcaṉām ēntal pāḻi moympiṉaip pāḻiya tākavē paṭutta vīḻal uṟṟataṅ kavaṉuṭal uṇarccikaḷ vīnta cūḻu kiṉṟatōr maṉṉuyir aṭaintatu turiyam.

Report an error

மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது நோக்கிக் ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று நகேசன் மங்கையோடிகலிவேங் கடகிரி நண்ணுங் குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர் கொண்டான்.

makēcaṉ eṉpavaṉ mayaṅkalum maṟṟatu nōkkik kakēcaṉ mēlvarum irākuviṉ avuṇaṉaik kaṉaṉṟu nakēcaṉ maṅkaiyōṭikalivēṅ kaṭakiri naṇṇuṅ kukēcaṉ ēvalcey vīrakē cariyetir koṇṭāṉ.

Report an error

எதிர்பு குந்தவன் வணக்கியே நாணொலி யெறிந்த துதிகொள் வார்சிலை தன்னையேழ் கணையினால் துணியா அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து நுதிநெ டுங்கணை அழுத்தின் ஆயிர நுதலின்.

etirpu kuntavaṉ vaṇakkiyē nāṇoli yeṟinta tutikoḷ vārcilai taṉṉaiyēḻ kaṇaiyiṉāl tuṇiyā atiku ralmaṇit tērainū ṟampiṉāl aṟuttu nutine ṭuṅkaṇai aḻuttiṉ āyira nutaliṉ.

Report an error

ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில் பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால் பறித்து மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன் மன்னோ.

āyi raṅkaṇai nutaliṭai aḻuttaam puviyil pāyta ruṅkuru tipperu natiyoṭu pāyntu cēyi ruṅkuva ṭoṉṟiṉaic ceṅkaiyāl paṟittu māyai tantiṭu matalaimēl viṭuttaṉaṉ maṉṉō.

Report an error

எறித்த ருஞ்சுடர்த் தபனனுஞ் சேடனும் இரங்கப் பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம் வெறித்த ருந்தொடை அவுணர்கோன் விசிகமொன் றதனால் அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன் அம்மா.

eṟitta ruñcuṭart tapaṉaṉuñ cēṭaṉum iraṅkap paṟitte ṭuttumēl vīciya parāraiyaṅ kuṉṟam veṟitta runtoṭai avuṇarkōṉ vicikamoṉ ṟataṉāl aṟuttu mārpiṉū ṟayiṟkaṇai aḻuttiṉaṉ ammā.

Report an error

கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங் கணைகள் உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப் பாயா வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை அடித்தான்.

karampu kuntiṭuṅ kuṉicilai umiḻntiṭuṅ kaṇaikaḷ urampu kuntiṭa vīrakē carimaṉam uḷaintu parampu kuntiṭum avuṇarkōṉ tērmicaip pāyā varampu kuntakuṉ ṟaṉṉamār pattiṭai aṭittāṉ.

Report an error

வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின் வலிதாய் அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை வெடித்த தாமெனக் கீண்டது விண்டது சோரி துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன் துயரால்.

vaṭitta viṟpaṭai avuṇarkōṉ marumattiṉ valitāy aṭitta kālaiyil vīrakē caritaṉa taṅkai veṭitta tāmeṉak kīṇṭatu viṇṭatu cōri tuṭittu yirppoṭu tēriṭai maṟintaṉaṉ tuyarāl.

Report an error

வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழச் சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன் உறங்கும வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள.

vīra kōḷari pataittumāṉ tēriṭai vīḻac cūraṉ maṟṟivaṟ kolvatu paḻiyeṉac cūḻā ōrkai yālavaṉ taṉaiyeṭut taccutaṉ uṟaṅkuma vāri tikkiṭai eṟintaṉaṉ viṇṇavar maruḷa.

Report an error

பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன் பதைப்புற் றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் டணுகி முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம் புரந்த ரப்பெயர் வாகையான் ஏற்றெதிர் புகுந்தான்.

paranta pāṟkaṭal eṟitalum vīḻntavaṉ pataippuṟ ṟarantai eytiyē eḻuntuviṇ ṇeṟiyiṉmīṇ ṭaṇuki murinta tammiṉaṅ kūṭiṉaṉ aṅkataṉ muṉṉam puranta rappeyar vākaiyāṉ ēṟṟetir pukuntāṉ.

Report an error

ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான் ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் செய்வனேல் அவற்றை மாற்றி வென்றிடும் என்னையும் இவனென மதித்துக் கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக் குறுக.

ēṟṟe tirntiṭu vīramā purantaraṉ eṉpāṉ āṟṟal veṅkaṇai corintupōr ceyvaṉēl avaṟṟai māṟṟi veṉṟiṭum eṉṉaiyum ivaṉeṉa matittuk kūṟṟu vaṉpaṭai toṭṭaṉaṉ avuṇaṉaik kuṟuka.

Report an error

குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன் முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால் உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல் மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது வரத்தால்.

kuṟukum appaṭai varattiṉai nōkkiyē koṭiyōṉ muṟuval ceytaṉaṉ āṅkataṟ ketiruṟa muraṇāl uṟuva tōrpaṭai toṭṭilaṉ ikaḻntiṭa uvaṉmēl maṟali taṉpaṭai paṭṭumāyn tiṭṭatu varattāl.

Report an error

தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு மகவான் முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம் கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட விடுத்தான்.

taṇṭa kaṉpaṭai māytaluñ cayaṅkeḻu makavāṉ muṇṭa kaṉpaṭai eṭuttaṉaṉ toṭuppataṉ muṉṉam kaṇṭa kaṉcilai vāṅkinū ṟāyiraṅ kaṇaiyai viṇṭa kaṉperu mārpakan tiṟantiṭa viṭuttāṉ.

Report an error

நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை நெறியாத் திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீர் உமிழ்ந்து மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி.

niṟanta ruñcuṭark kaṇaipukun turattiṉai neṟiyāt tiṟantu pōyiṉa vīramā purantaraṉ ceṅkai uṟainta nāṉmukap paṭaiyoṭuñ cōrinīr umiḻntu maṟintu māyntaṉaṉ vantaṉaṉ vīrartam maṟali.

Report an error

தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார் சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும் நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ.

tīra rāntiṟal avuṇarkaḷ pūtarāñ citaivār cūra rāñcilai vallavar namarelān tolaiyum nīra rāñceruc ceyalitu naṉṟeṉa nikaḻtti vīra rāntakaṉ vantaṉaṉ antakaṉ veruva.

Report an error

சார்ங்கம் அன்னதோர் வலியதாய் மாமதன் தனுவாம் ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக் கார்ங்க ரும்புய லாமென நாணொலி காட்டிக் கூர்ங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை கொண்டான்.

cārṅkam aṉṉatōr valiyatāy māmataṉ taṉuvām īrṅka rumpeṉa aripaṭu cilaikuṉit tēṟṟuk kārṅka rumpuya lāmeṉa nāṇoli kāṭṭik kūrṅko ṭuṅkaṇai citaṟiniṉ ṟārppicai koṇṭāṉ.

Report an error

ஆர்ப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம் வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார் சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப் பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை.

ārppe ṭuttalum añciṉaṉ katiravaṉ aṅkam vērppe ṭuttaṉar amararkaḷ viñcaiyar viṇṭār cīrppe ṭaikkulam alamarak kiṉṉarañ cintip pārppe ṭuttiri kiṉṟaṉa kēcarap paṟavai.

Report an error

ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின் சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன் ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத் தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத் தடுத்தான்.

āṉa kālaiyil vīraran takaṉviṭum ampiṉ cōṉai māriyaik kaṇaikaḷāl vilakkiyē cūraṉ ūṉum āviyuṅ kavarumā yiraṅkaṇai uyppat tāṉum āyiram pakaḻitoṭ ṭaṉṉatait taṭuttāṉ.

Report an error

தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத் தலைசேர் வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த.

taṭutta kālaiyil avuṇarkōṉ ciṉavimut talaicēr vaṭitta vaccirac cilīmukam āyiram vallē eṭuttu viṭṭiṭa vīraran takaṉṟamak ketirā viṭutta pallavam yāvaiyuñ cintiyē virainta.

Report an error

விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை வீட்டிக் கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப் புரந்த ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில்.

viraintu pōyviṟal antakaṉ tēriṉai vīṭṭik karanta ṉiṟcilai oṭittuvī rattiṉaik kalakki uranta ṉiṟpukun tuṇarvuṇṭu cōrinīr ukuttup puranta raṟkuḷan tuṇukkuṟap pōyatu puṟattil.

Report an error

விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட வீழ்ந்து மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின் உறல்ப டைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத் திறல்ப டைத்திடு மொய்ம்பினான் அவுணன்மேற் சென்றான்.

viṟalpa ṭaittiṭum antakaṉ kaṇaipaṭa vīḻntu maṟalpa ṭaittiṭa āṅkatu nōkkiyē maṉattiṉ uṟalpa ṭaittiṭu ceṟṟamum māṉamum ukaippat tiṟalpa ṭaittiṭu moympiṉāṉ avuṇaṉmēṟ ceṉṟāṉ.

Report an error

அரிகள் அச்சுறும் வீரவா குப்பெயர் அறிஞன் இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் எழில்சோ உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென உன்னிப் பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன் பேசும்.

arikaḷ accuṟum vīravā kuppeyar aṟiñaṉ iratam ūrntuvan tēṟṟalum āṅkavaṉ eḻilcō uruva nōkkuṟā oṟṟaṉām ivaṉeṉa uṉṉip peritu veñciṉam eytiyē avuṇarkōṉ pēcum.

Report an error

எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத் தமரை அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய் குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர் கொண்டே அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா.

ematu vīramā makēntirañ cāṭieṇ ṇillāt tamarai aṭṭaṉai tāṉaikaḷ aḷappila taṭintāy kumarar taṅkaḷaik koṉṟaṉai niṉṉuyir koṇṭē amariṉ āṟṟalai iṉṟoṭē muṭikkuvaṉ ammā.

Report an error

பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய் இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான்.

paṟṟu paṭṭimai payiṟṟiyē amaiccariṉ paṉṉi oṟṟa ṉākiyē iṉṉumvan tāyeṉiṉ uyti maṟṟa tēkaṭaṉ vārcilai piṭittaṉai māṇṭāy iṟṟai vaikalō niṉṉuyirk kiḻaittanāḷ eṉṟāṉ.

Report an error

தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார் மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன் ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில ஏதும் வல்லன்யான் வேண்டுபோர் புரிதியால் என்றான்.

tūtum ākuvaṉ amaiccaṉum ākuvaṉ tuṉṉār mītu veñcamar āṟṟuvaṉ iṉṉamum vēlōṉ ōti ṭumpaṇi yāvaiyuñ ceykuvaṉ ulakila ētum vallaṉyāṉ vēṇṭupōr puritiyāl eṉṟāṉ.

Report an error

என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம் தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன் குன்ற மன்னவிற் குனித்தனன் நாணொலி கொண்டான்.

eṉṟu vīraṉō tiṭutalum erintaṉa nayaṉam tiṉṟa vāḷeyi ṟitaḻiṉai urōmaṅkaḷ cilitta tuṉṟu cīṟṟamuḷ ḷeḻuntatu cūraṉām avuṇaṉ kuṉṟa maṉṉaviṟ kuṉittaṉaṉ nāṇoli koṇṭāṉ.

Report an error

சிலைப னித்திடக் குனித்திடு காலையிற் செம்பொன் மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய் அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண் தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் தானும்.

cilaipa ṉittiṭak kuṉittiṭu kālaiyiṟ cempoṉ malaipa ṉittaṉa pārakam paṉittaṉa vāṉatōy alaipa ṉittaṉa aṇṭamum paṉittaṉa aṅkaṇ talaipa ṉittaṉaṉ araviṉuk kiṟaiyavaṉ tāṉum.

Report an error

அம்முறை வேலையில் ஆடல்கொள மொய்ம்பின் செம்மல்த னாது செழுங்கர முற்ற மைம்மலி வார்சிலை வன்மையின் வாங்கிக் கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான்.

ammuṟai vēlaiyil āṭalkoḷa moympiṉ cemmalta ṉātu ceḻuṅkara muṟṟa maimmali vārcilai vaṉmaiyiṉ vāṅkik kommeṉa nāṇoli koṇṭaṉaṉ ārttāṉ.

Report an error

ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ் சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை மூர்த்தம தொன்றினின் முச்சக வைப்பும் பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே.

ārttiṭu pēroli āṅkavaṉ vāṅkuñ cīrttaṉu ārppoṭu ceṉṟiṭu kālai mūrttama toṉṟiṉiṉ muccaka vaippum pērtteṉa vēpeyar kuṟṟaṉa aṉṟē.

Report an error

அங்கது காலையில் ஆயிர கோடி துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப் புங்கவ னுக்கிளை யான்புய லென்ன வெங்கணை வீசி விலக்கினன் நின்றான்.

aṅkatu kālaiyil āyira kōṭi tuṅkane ṭuṅkaṇai tūrttaṉaṉ ārppap puṅkava ṉukkiḷai yāṉpuya leṉṉa veṅkaṇai vīci vilakkiṉaṉ niṉṟāṉ.

Report an error

விலக்கிய காலை வெகுண்டிவன் ஆவி கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன் இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான் கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே.

vilakkiya kālai vekuṇṭivaṉ āvi kalakkuvaṉ eṉṟu kaṭuñcaram veyyōṉ ilakkam viṭuttiṭa ēntal taṭuttāṉ kolaikkaṇai āyira kōṭi toṭuttē.

Report an error

வெற்றிகொள் வான்பினும் வெங்கணை கோடி செற்றமொ டேசெறி வித்திடு காலை மற்றவை சிந்தினன் வாளிகள் நூறு நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன்.

veṟṟikoḷ vāṉpiṉum veṅkaṇai kōṭi ceṟṟamo ṭēceṟi vittiṭu kālai maṟṟavai cintiṉaṉ vāḷikaḷ nūṟu neṟṟiyil viṭṭaṉaṉ nīḷpuya vīraṉ.

Report an error

அச்சுத னாம்அவு ணன்குளம் எய்தி மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட வச்சிர மாகிய மால்வரை ஒன்றின் உச்சியின உற்றபொன் ஊசிகள் என்ன.

accuta ṉāmavu ṇaṉkuḷam eyti meyccaram nūṟum viḷintupiṉ viṇṭa vaccira mākiya mālvarai oṉṟiṉ ucciyiṉa uṟṟapoṉ ūcikaḷ eṉṉa.

Report an error

நூறயில் வாளி நுதற்கிடை சென்று மூறில னாகி உறுந்திறல் நோக்கி ஆறுமு கேசன் அயற்படை அல்லால் ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான்.

nūṟayil vāḷi nutaṟkiṭai ceṉṟu mūṟila ṉāki uṟuntiṟal nōkki āṟumu kēcaṉ ayaṟpaṭai allāl īṟuce yātivaṉ yākkaiyai eṉṟāṉ.

Report an error

என்றிடும் வீரன் இதற்பினும் வாளி துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன் வன்றிறல வெங்கணை யாலவை மாற்றி ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான்.

eṉṟiṭum vīraṉ itaṟpiṉum vāḷi tuṉṟupal kōṭi corintiṭa veyyōṉ vaṉṟiṟala veṅkaṇai yālavai māṟṟi oṉṟuṭaṉ ēḻkaṇai oṇpuyam uyttāṉ.

Report an error

அம்பிரு நான்கும் அணைந்துடன் ஆடல் மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ளுற்ற செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ.

ampiru nāṉkum aṇaintuṭaṉ āṭal moympiṉaṉ moympuṟa mūḻkiyuḷ ḷuṟṟa cempuṉal uṇṭu ceḻumpiṭar pōḻntē umpar verukkoḷa ōṭiya mātō.

Report an error

ஓடிய வேலை யுளைந்திடு நெஞ்சன் ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன் பாடுறு தேர்விடு பாகர்தம் மெய்யில் கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான்.

ōṭiya vēlai yuḷaintiṭu neñcaṉ āṭalkoḷ moympiṉaṉ avvacu rēcaṉ pāṭuṟu tērviṭu pākartam meyyil kōṭipal kōṭi koṭuṅkaṇai viṭṭāṉ.

Report an error

அலகில் நெடுங்கணை ஆகம் அழுந்த வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப் புலவொடு சோரி புறத்தில் விளங்க இலவம லர்ந்தென யாரும் இருந்தார்.

alakil neṭuṅkaṇai ākam aḻunta valavarkaḷ āṟṟa varuntiṉa rākip pulavoṭu cōri puṟattil viḷaṅka ilavama larnteṉa yārum iruntār.

Report an error

அங்கது நோக்கி அழன்றசு ரேசன் செங்கணை ஐம்பது தீயென ஓச்சி வெங்கண் விறற்புயன் மேதகு தேரைப் பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான்.

aṅkatu nōkki aḻaṉṟacu rēcaṉ ceṅkaṇai aimpatu tīyeṉa ōcci veṅkaṇ viṟaṟpuyaṉ mētaku tēraip poṅkuḷai māvoṭu poḷḷeṉa aṭṭāṉ.

Report an error

அட்டிடு காலை அடற்புயன் ஆங்கோர் வட்டணை யாழிகொள் வையம தேறி நெட்டழல் வாயு நெடும்படை தன்னைத் தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான்.

aṭṭiṭu kālai aṭaṟpuyaṉ āṅkōr vaṭṭaṇai yāḻikoḷ vaiyama tēṟi neṭṭaḻal vāyu neṭumpaṭai taṉṉait toṭṭaṉaṉ āṅkatu cūraṉ aṟintāṉ.

Report an error

வீறாகிய அசுரர்கிறை மிகமூரல் படைத்து மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு நிற்பர் சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி ஊறாயின நூறாயிரம் உதிராயின பிதிராய்.

vīṟākiya acurarkiṟai mikamūral paṭaittu māṟākavor paṭaitoṭṭilaṉ varivilloṭu niṟpar cūṟāvaḷi aḻalmāppaṭai cūraṉmicai tākki ūṟāyiṉa nūṟāyiram utirāyiṉa pitirāy.

Report an error

காற்றின்படை கன்லின்படை கண்டம்பல வாகக் கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத் திடலுஞ் சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும் ஏற்றந்தனை இழந்தேகடி திறந்திட்டன அன்றே.

kāṟṟiṉpaṭai kaṉliṉpaṭai kaṇṭampala vākak kūṟṟiṉpaṭai katiriṉpaṭai kūṭattoṭut tiṭaluñ cīṟṟaṅkeḻu cūraṉmicai ceṉṟēyavai tāmum ēṟṟantaṉai iḻantēkaṭi tiṟantiṭṭaṉa aṉṟē.

Report an error

அருணன்படை மறலிப்படை அழிவெய்தலும் அம்மை சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில் தலைவன் வருணன்படை நிருதிப்படை மகவான்படை மூன்றும் முரணங்கொடு கொடியோன்உர மொய்ம்பிற்புக விடுத்தான்.

aruṇaṉpaṭai maṟalippaṭai aḻiveytalum ammai caraṇantaṉil varucattikaḷ tarumaintaril talaivaṉ varuṇaṉpaṭai nirutippaṭai makavāṉpaṭai mūṉṟum muraṇaṅkoṭu koṭiyōṉura moympiṟpuka viṭuttāṉ.

Report an error

ஏற்றவை அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு மொய்ம்பன் மாயப்படை அவுணப்படை வல்லேசெல விடுப்பப் போயப்படை யவன்மெய்யிடை புகுந்தேபொடி யான.

ēṟṟavai avuṇarkkiṟai irutōḷuram eyti vīyuṟṟaṉa atukālaiyil vīraṅkeḻu moympaṉ māyappaṭai avuṇappaṭai vallēcela viṭuppap pōyappaṭai yavaṉmeyyiṭai pukuntēpoṭi yāṉa.

Report an error

விண்ணோர்படை இவையாவையும் விளிவாதலும் வீரன் நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித னாகி மண்ணோடுயிர்த் தொகையாவையும் வகுத்தோன்படை நளினக் கண்ணோன்படை யொடுகூட்டுபு கடிதிற்செல விடுத்தான்.

viṇṇōrpaṭai ivaiyāvaiyum viḷivātalum vīraṉ naṇṇāṉperu viṟalkaṇṭaṉaṉ naṉivimmita ṉāki maṇṇōṭuyirt tokaiyāvaiyum vakuttōṉpaṭai naḷiṉak kaṇṇōṉpaṭai yoṭukūṭṭupu kaṭitiṟcela viṭuttāṉ.

Report an error

விடுக்குற்றிடும் அயன்மால்படை விரைந்தேசினம் வீங்கி அடுக்குற்றிடும் உருமுப்புகை அழல்கால்பல படைகள் மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை யுலகு நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன மாதோ.

viṭukkuṟṟiṭum ayaṉmālpaṭai viraintēciṉam vīṅki aṭukkuṟṟiṭum urumuppukai aḻalkālpala paṭaikaḷ maṭukkuṟṟiṭu puṇarittokai vakuttevvakai yulaku naṭukkuṟṟiṭa avuṇaṟketir naṭantiṭṭaṉa mātō.

Report an error

ஆண்டேவரும் அயன்மால்படை அவுணன்தட மார்பங் கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தான்அக லத்தின் மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி வயிரச் சேண்டோய்கிரி துளைப்பான்முயல் சிறைவண்டின மெனவே.

āṇṭēvarum ayaṉmālpaṭai avuṇaṉtaṭa mārpaṅ kīṇṭēkutum eṉṟēavaṉ kiḷartāṉaka lattiṉ mūṇṭēciṉa moṭutākkiya muḻumāmaṇi vayirac cēṇṭōykiri tuḷaippāṉmuyal ciṟaivaṇṭiṉa meṉavē.

Report an error

மாயோன்படை உலகந்தரு மறையோன்படை அவுணத் தீயோனுரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி சிந்தி மீயோங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி ஏயோவென வசையெய்தி இரிந்திட்டன அன்றே.

māyōṉpaṭai ulakantaru maṟaiyōṉpaṭai avuṇat tīyōṉuran taṉiṟpāyntu tiruttolvali cinti mīyōṅkiya acurēcarum viṇṇōrkaḷum nōkki ēyōveṉa vacaiyeyti irintiṭṭaṉa aṉṟē.

Report an error

மீளுற்றவை இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர முன்னிக் கோளுற்றிடு பெரும்விம்மிதங் கொண்டுற்றிட அண்டம் ஆளுற்றிடும் அவுணர்க்கிறை நகைசெய்திவை அறைவான்.

mīḷuṟṟavai iriyuñceyal viḻitīyuṟa nōkki nīḷuṟṟiṭu tiṟalmoympiṉaṉ nimalaṉvara muṉṉik kōḷuṟṟiṭu perumvimmitaṅ koṇṭuṟṟiṭa aṇṭam āḷuṟṟiṭum avuṇarkkiṟai nakaiceytivai aṟaivāṉ.

Report an error

முத்தேவரின் முதலாகிய மூவாமுதல் வரத்தால் எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில எந்தப் புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு படையும் உய்த்தேதடை வினைசெய்கிலன் அவற்றின்வலி உணர்வேன்.

muttēvariṉ mutalākiya mūvāmutal varattāl ettēvarkaḷ paṭaiyuykkiṉum eṉaivelkila entap puttēḷpaṭai viṭiṉummetir poravēoru paṭaiyum uyttētaṭai viṉaiceykilaṉ avaṟṟiṉvali uṇarvēṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).