Skip to content

யுத்த காண்டம் — இரணியன் யுத்தப் படலம் · இரணியன் யுத்தப் படலம்

iraṇiyaṉ yuttap paṭalam

iraṇiyaṉ yuttap paṭalam

iraṇiyaṉ yuttap paṭalam, from Yutta Kāṇṭam; poems 4.1166–4.1303.

138 versesTamil with transliteration

A spear and lotus for chapter 104 of Kanda Puranam.

ஒற்றரை நோக்கியே உணர்வின் மன்னவன் சொற்றது கேட்டலும் துளங்கி ஏங்கினான் மற்றவன் அளித்திடு மதலை மாரிநாட் புற்றுறை அரவெனப் புழுங்கு நெஞ்சினான்.

oṟṟarai nōkkiyē uṇarviṉ maṉṉavaṉ coṟṟatu kēṭṭalum tuḷaṅki ēṅkiṉāṉ maṟṟavaṉ aḷittiṭu matalai mārināṭ puṟṟuṟai araveṉap puḻuṅku neñciṉāṉ.

Report an error

ஆயிர மறையுணர்ந் தான்ற கேள்வியான் தூயநல் லறத்தொடு முறையும் தூக்கினோன் மாயமும் வஞ்சமும் மரபில் கற்றனன் தீயதோர் அவுணருள் திறலும் பெற்றுளான்.

āyira maṟaiyuṇarn tāṉṟa kēḷviyāṉ tūyanal laṟattoṭu muṟaiyum tūkkiṉōṉ māyamum vañcamum marapil kaṟṟaṉaṉ tīyatōr avuṇaruḷ tiṟalum peṟṟuḷāṉ.

Report an error

தரணியின் கீழுறை அரக்கர் தங்கள்மேல் விரணம தாகிமுன் வென்று மீண்டனன் முரணுறு சென்னியோர் மூன்று கொண்டுளான் இரணியன் என்பதோர் இயற்கைப் பேரினான்.

taraṇiyiṉ kīḻuṟai arakkar taṅkaḷmēl viraṇama tākimuṉ veṉṟu mīṇṭaṉaṉ muraṇuṟu ceṉṉiyōr mūṉṟu koṇṭuḷāṉ iraṇiyaṉ eṉpatōr iyaṟkaip pēriṉāṉ.

Report an error

இருந்தனன் ஒருபுடை எழுந்து தாதைதன் திருந்தடி இணையினைச் சென்னி சேர்த்திடாப் பொருந்துவ தொன்றுள புகல்வன் கேளெனாப் பரிந்துநின் றினையன பகர்தல் மேயினான்.

iruntaṉaṉ orupuṭai eḻuntu tātaitaṉ tiruntaṭi iṇaiyiṉaic ceṉṉi cērttiṭāp poruntuva toṉṟuḷa pukalvaṉ kēḷeṉāp parintuniṉ ṟiṉaiyaṉa pakartal mēyiṉāṉ.

Report an error

தேவரை நாம்சிறை செய்த தன்மையால் ஆவது பாவமே ஆக்கம் வேறிலை யாவையும் உணர்ந்திடும் இறைவ திண்ணமே போவது நம்முயிர் திருவும் பொன்றுமால்.

tēvarai nāmciṟai ceyta taṉmaiyāl āvatu pāvamē ākkam vēṟilai yāvaiyum uṇarntiṭum iṟaiva tiṇṇamē pōvatu nammuyir tiruvum poṉṟumāl.

Report an error

சூருடைக் கானகம் தோற்றும் புன்மைபோய்ப் பாரிடைப் புவனமோர் பலவும் போற்றியே சீருடைத் தாகிஇத் திருவின் வைகுதல் ஆரிடைப் பெற்றனை அதனைத் தேர்திநீ.

cūruṭaik kāṉakam tōṟṟum puṉmaipōyp pāriṭaip puvaṉamōr palavum pōṟṟiyē cīruṭait tākiit tiruviṉ vaikutal āriṭaip peṟṟaṉai ataṉait tērtinī.

Report an error

மாலைமுன் வென்றதும் மலர யன்றனை ஏலுறு முனிவரை ஏவல் கொண்டதும் மேலுயர் அமரரை விழுமஞ் செய்தலும் ஆலமர் கடவுள்தன் ஆற்ற லால்அன்றோ.

mālaimuṉ veṉṟatum malara yaṉṟaṉai ēluṟu muṉivarai ēval koṇṭatum mēluyar amararai viḻumañ ceytalum ālamar kaṭavuḷtaṉ āṟṟa lālaṉṟō.

Report an error

அரிபொர வருவனேல் அமரர் கோனொடும் பிரமன்வந் தேற்குமேற் பிறர்கள் நேர்வரேல் பொருவதும் வெல்வதும் புறத்தைக் கண்டுபின் வருவதும் எளிதரோ கடனும் மற்றதே.

aripora varuvaṉēl amarar kōṉoṭum piramaṉvan tēṟkumēṟ piṟarkaḷ nērvarēl poruvatum velvatum puṟattaik kaṇṭupiṉ varuvatum eḷitarō kaṭaṉum maṟṟatē.

Report an error

நோற்றிடு தவத்தினை நோக்கி எண்ணிலாப் பேற்றினை உதவிய பிரானொர் தீமையான் மாற்றிட உன்னுமேல் வணங்கி மாறொரீஇப் போற்றுதல் அன்றியே பொரவுஞ் செய்யுமோ.

nōṟṟiṭu tavattiṉai nōkki eṇṇilāp pēṟṟiṉai utaviya pirāṉor tīmaiyāṉ māṟṟiṭa uṉṉumēl vaṇaṅki māṟorīip pōṟṟutal aṉṟiyē poravuñ ceyyumō.

Report an error

ஒன்றொரு பயன்றனை உதவி னோர்மனங் கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல் புன்றொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ.

oṉṟoru payaṉṟaṉai utavi ṉōrmaṉaṅ kaṉṟiṭa oruviṉai karutic ceyvarēl puṉṟoḻil avarkkumuṉ purinta naṉṟiyē koṉṟiṭum allatu kūṟṟum vēṇṭumō.

Report an error

கந்தனை அருள்புரி கடவுள் ஆணையைச் சிந்தையின் மாறுகொள் சிறியர் யாவரும் அந்தம தடைந்தனா அன்றி வன்மையால் உய்ந்தனர் இவரென உரைக்க வல்லமோ.

kantaṉai aruḷpuri kaṭavuḷ āṇaiyaic cintaiyiṉ māṟukoḷ ciṟiyar yāvarum antama taṭaintaṉā aṉṟi vaṉmaiyāl uyntaṉar ivareṉa uraikka vallamō.

Report an error

கட்டுசெஞ் சடைமுடிக் கடவுள் காமனைப் பட்டிட விழித்ததும் பண்டு மூவெயில் சுட்டதும் அந்தகன் சுழலச் சூலமேல் இட்டதுங் கேட்டிலை போலும் எந்தைநீ.

kaṭṭuceñ caṭaimuṭik kaṭavuḷ kāmaṉaip paṭṭiṭa viḻittatum paṇṭu mūveyil cuṭṭatum antakaṉ cuḻalac cūlamēl iṭṭatuṅ kēṭṭilai pōlum entainī.

Report an error

காலனை உதைத்ததுங் கங்கை யென்பவள் மேல்வரும் அகந்தையை வீட்டிக் கொண்டதும் மாலயன் அமரர்கள் இரிய வந்ததோர் ஆலம துண்டதும் அறிகி லாய்கொலோ.

kālaṉai utaittatuṅ kaṅkai yeṉpavaḷ mēlvarum akantaiyai vīṭṭik koṇṭatum mālayaṉ amararkaḷ iriya vantatōr ālama tuṇṭatum aṟiki lāykolō.

Report an error

அண்டரை யோர்அரி யலைப்ப அன்னது கண்டநஞ் சுடையவன் கருதி வீரனால் தண்டம திழைத்ததுந் தக்கன் வேள்வியை விண்டிடு வித்ததும் வினவி லாய்கொலோ.

aṇṭarai yōrari yalaippa aṉṉatu kaṇṭanañ cuṭaiyavaṉ karuti vīraṉāl taṇṭama tiḻaittatun takkaṉ vēḷviyai viṇṭiṭu vittatum viṉavi lāykolō.

Report an error

கடிமலர் மேலவன் இகழக் கண்ணுதல் வடுகனை ஏவிவள் ளுகிரின் அன்னவன் முடிகளை வித்தது முகுந்தன் தன்னிடை அடைதரு வித்ததும் அறிகி லாய்கொலோ.

kaṭimalar mēlavaṉ ikaḻak kaṇṇutal vaṭukaṉai ēvivaḷ ḷukiriṉ aṉṉavaṉ muṭikaḷai vittatu mukuntaṉ taṉṉiṭai aṭaitaru vittatum aṟiki lāykolō.

Report an error

முந்தொரு மகபதி மொய்ம்பை அட்டதும் ஐந்தியல் அரக்கரை அழித்த செய்கையும் தந்தியை உழுவையை உரித்த தன்மையும் எந்தைநிற் குணர்த்தினர் இல்லை போலுமால்.

muntoru makapati moympai aṭṭatum aintiyal arakkarai aḻitta ceykaiyum tantiyai uḻuvaiyai uritta taṉmaiyum entainiṟ kuṇarttiṉar illai pōlumāl.

Report an error

ஏமுற உலகடும் ஏனக் கொம்பினை ஆமையின் ஓட்டினை அணிந்த தன்மையும் பூமலர் மிசையவன் முதல புங்கவர் மாமுடி அணிந்ததும் மதிக்கி லாய்கொலோ.

ēmuṟa ulakaṭum ēṉak kompiṉai āmaiyiṉ ōṭṭiṉai aṇinta taṉmaiyum pūmalar micaiyavaṉ mutala puṅkavar māmuṭi aṇintatum matikki lāykolō.

Report an error

கதித்திடு முனிவரர் கடிய வேள்வியில் உதித்திடு முயலகன் ஒல்லென் றார்த்தெழப் பதத்தினில் உதைத்தவன் பதைப தைத்திட மிதித்ததும் பிறவுநீ வினவிற் றில்லையோ.

katittiṭu muṉivarar kaṭiya vēḷviyil utittiṭu muyalakaṉ olleṉ ṟārtteḻap patattiṉil utaittavaṉ pataipa taittiṭa mitittatum piṟavunī viṉaviṟ ṟillaiyō.

Report an error

ஒன்னலர் தன்மைபூண் டுற்று ளோர்தமைத் தன்னிகர் இல்லவன் தண்டம் செய்தன இன்னமோர் கோடியுண் டிருந்தி யான்இவண் பன்னினும் உலப்புறா செல்லும் பல்லுகம்.

oṉṉalar taṉmaipūṇ ṭuṟṟu ḷōrtamait taṉṉikar illavaṉ taṇṭam ceytaṉa iṉṉamōr kōṭiyuṇ ṭirunti yāṉivaṇ paṉṉiṉum ulappuṟā cellum pallukam.

Report an error

ஆதலால் ஈசன் தன்னை அடைந்தவர் உய்வர் அல்லாப் பேதையர் யாவ ரேனும் பிழைக்கலர் இனைய வாய்மை வேதநூல் பிறவும் கூறும் விழுப்பொரு ளாகும் நீயும் ஏதமா நெறியின் நீங்கி இப்பொருள் உணர்தி எந்தாய்.

ātalāl īcaṉ taṉṉai aṭaintavar uyvar allāp pētaiyar yāva rēṉum piḻaikkalar iṉaiya vāymai vētanūl piṟavum kūṟum viḻupporu ḷākum nīyum ētamā neṟiyiṉ nīṅki ipporuḷ uṇarti entāy.

Report an error

இன்னமொன் றுரைப்பன் நீமுன் இருந்தவம் இயற்ற இந்த மன்னிலை புரிந்த மேலோன் மாற்றவும் வல்ல னாமால் அன்னவன் குமரன் தன்னோ டமர்செய்வ தியல்போ ஐய தன்னினும் உயர்ந்தா ரோடு பொருதிடில் சயமுண் டாமோ.

iṉṉamoṉ ṟuraippaṉ nīmuṉ iruntavam iyaṟṟa inta maṉṉilai purinta mēlōṉ māṟṟavum valla ṉāmāl aṉṉavaṉ kumaraṉ taṉṉō ṭamarceyva tiyalpō aiya taṉṉiṉum uyarntā rōṭu porutiṭil cayamuṇ ṭāmō.

Report an error

பூதல வரைப்பும் வானும் திசைகளும் புணரி வைப்பும் மேதகு வரையும் தொன்னாள் வேறுபா டுற்ற நோக்கி ஈதென மாயம் கொல்லென் றெண்ணினம் அனைய வெல்லாம் ஆதிதன் குமரன் செய்த ஆடலென் றுரைத்தா ரன்றே.

pūtala varaippum vāṉum ticaikaḷum puṇari vaippum mētaku varaiyum toṉṉāḷ vēṟupā ṭuṟṟa nōkki īteṉa māyam kolleṉ ṟeṇṇiṉam aṉaiya vellām ātitaṉ kumaraṉ ceyta āṭaleṉ ṟuraittā raṉṟē.

Report an error

அண்ணலங் குமரன் ஆடல் அறிகிலர் மருளுங் காலைக் கண்ணிடை அன்னான் மற்றோர் வடிவினைக் காட்டி நிற்ப விண்ணவர் பலரும் சூழ்ந்து வெகுண்டனர் வெம்போர் ஆற்றத் துண்ணென அவரை அட்டாங் கெழுப்பினன் தூயோ னென்பர்.

aṇṇalaṅ kumaraṉ āṭal aṟikilar maruḷuṅ kālaik kaṇṇiṭai aṉṉāṉ maṟṟōr vaṭiviṉaik kāṭṭi niṟpa viṇṇavar palarum cūḻntu vekuṇṭaṉar vempōr āṟṟat tuṇṇeṉa avarai aṭṭāṅ keḻuppiṉaṉ tūyō ṉeṉpar.

Report an error

எண்டொகை பெற்ற அண்டம் யாவையும் புவ வைப்பும் மண்டுபல் வளனும் ஏனை மன்னுயிர்த் தொகுதி முற்றும் அண்டரும் மூவர்தாமும் அனைத்துமா கியதன் மேனி கண்டிட இமையோர்க் கெல்லாம் காட்டினன் கந்தன் என்பர்.

eṇṭokai peṟṟa aṇṭam yāvaiyum puva vaippum maṇṭupal vaḷaṉum ēṉai maṉṉuyirt tokuti muṟṟum aṇṭarum mūvartāmum aṉaittumā kiyataṉ mēṉi kaṇṭiṭa imaiyōrk kellām kāṭṭiṉaṉ kantaṉ eṉpar.

Report an error

மறைமுத லவனை முன்னோர் வைகலின் வல்லி பூட்டிச் சிறையிடை வைத்துத் தானே திண்புவி அளித்து முக்கண் இறையவன் வேண்ட விட்டான் என்பரால் இனைய வாற்றால் அறுமுகன் செய்கை கேட்கின் அற்புத மாகு மன்னோ.

maṟaimuta lavaṉai muṉṉōr vaikaliṉ valli pūṭṭic ciṟaiyiṭai vaittut tāṉē tiṇpuvi aḷittu mukkaṇ iṟaiyavaṉ vēṇṭa viṭṭāṉ eṉparāl iṉaiya vāṟṟāl aṟumukaṉ ceykai kēṭkiṉ aṟputa māku maṉṉō.

Report an error

அங்கண்மா ஞாலம் தன்னை மேலினி அகழு மோட்டுச் செங்கண்மால் ஏன யாக்கை எயிற்றையோர் சிறுகை பற்றி மங்குல்வா னுலகிற் சுற்றி மருப்பொன்று வழுத்த வாங்கித் தங்கணா யகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கு மென்பர்.

aṅkaṇmā ñālam taṉṉai mēliṉi akaḻu mōṭṭuc ceṅkaṇmāl ēṉa yākkai eyiṟṟaiyōr ciṟukai paṟṟi maṅkulvā ṉulakiṟ cuṟṟi maruppoṉṟu vaḻutta vāṅkit taṅkaṇā yakaṟkuc cāttac caṇmukaṉ aḷikku meṉpar.

Report an error

நேநலர் புரமூன் றட்ட நிருமலக் கடவுள் மைந்தன் ஆரினும் வலியோன் என்கை அறைந்திட வேண்டுங் கொல்லோ பாரினை அளந்தோன் உய்த் பரிதியை அணியாக் கொண்ட தாரகன் தன்னை வெற்பைத் தடிந்தது சான்றே அன்றோ.

nēnalar puramūṉ ṟaṭṭa nirumalak kaṭavuḷ maintaṉ āriṉum valiyōṉ eṉkai aṟaintiṭa vēṇṭuṅ kollō pāriṉai aḷantōṉ uyt paritiyai aṇiyāk koṇṭa tārakaṉ taṉṉai veṟpait taṭintatu cāṉṟē aṉṟō.

Report an error

அறுமுகத் தொருவ னாகும் அமலனை அரன்பால் வந்த சிறுவனென் றிகழல் மன்னா செய்கையால் பெரியன் கண்டாய் இறுதிசேர் கற்பம் ஒன்றின் ஈறிலா தவன்பால் தோன்றும் முறுவலின் அழலு மன்னோ உலகெலாம் முடிப்ப தம்மா.

aṟumukat toruva ṉākum amalaṉai araṉpāl vanta ciṟuvaṉeṉ ṟikaḻal maṉṉā ceykaiyāl periyaṉ kaṇṭāy iṟuticēr kaṟpam oṉṟiṉ īṟilā tavaṉpāl tōṉṟum muṟuvaliṉ aḻalu maṉṉō ulakelām muṭippa tammā.

Report an error

வாசவன் குறையும் அந்தண் மலரயன் குறையும் மற்றைக் கேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க வாசிலோர் குழவி போலாய் அறுமுகங் கொண்டான் எண்டோள் ஈசனே என்ப தல்லாற் பிறிதொன்றை இசைக்க லாமோ.

vācavaṉ kuṟaiyum antaṇ malarayaṉ kuṟaiyum maṟṟaik kēcavaṉ kuṟaiyum nīkkik kēṭilā veṟukkai nalka vācilōr kuḻavi pōlāy aṟumukaṅ koṇṭāṉ eṇṭōḷ īcaṉē eṉpa tallāṟ piṟitoṉṟai icaikka lāmō.

Report an error

கங்கைதன் புதல்வன் என்றுங் கார்த்திகை மைந்தன் என்றுஞ் செங்கண்மால் மருகன் என்றுஞ் சேனையின் செல்வன் என்றும் பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை இங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பால தன்றோ.

kaṅkaitaṉ putalvaṉ eṉṟuṅ kārttikai maintaṉ eṉṟuñ ceṅkaṇmāl marukaṉ eṉṟuñ cēṉaiyiṉ celvaṉ eṉṟum paṅkayaṉ mutalōr tēṟāp parañcuṭar mutalvaṉ taṉṉai iṅkivai palavuñ colva tēḻaimaip pāla taṉṟō.

Report an error

பன்னிரு தடந்தோள் வள்ளல் பரிதியம் பகைவன் சூழ்வால் தன்னுறு படைஞர் மாய்ந்த தன்மையை வினவித் தாழா தன்னவர் மீளு மாற்றால் அளக்கர்மேல் விடுத்த வேலை இந்நகர் தன்னில் தூண்டின் யாரிவண் இருத்தற் பாலார்.

paṉṉiru taṭantōḷ vaḷḷal paritiyam pakaivaṉ cūḻvāl taṉṉuṟu paṭaiñar māynta taṉmaiyai viṉavit tāḻā taṉṉavar mīḷu māṟṟāl aḷakkarmēl viṭutta vēlai innakar taṉṉil tūṇṭiṉ yārivaṇ iruttaṟ pālār.

Report an error

தாரகற் செற்ற தென்றால் தடவரை பொடித்த தென்றால் வார்புனற் கடலுள் உய்த்த வலியரை மீட்ட தென்றால் கூருடைத் தனிவேல் போற்றிக் குமரன்றாள் பணிவ தல்லால் போரினைப் புரிதும் என்கை புலமையோர் கடன தாமோ.

tārakaṟ ceṟṟa teṉṟāl taṭavarai poṭitta teṉṟāl vārpuṉaṟ kaṭaluḷ uytta valiyarai mīṭṭa teṉṟāl kūruṭait taṉivēl pōṟṟik kumaraṉṟāḷ paṇiva tallāl pōriṉaip puritum eṉkai pulamaiyōr kaṭaṉa tāmō.

Report an error

அரனிடைப் பிறந்த அண்ணல் ஆணையால் வந்த தூதன் திருநகர் அழித்தான் முன்னஞ் சேனையுந் தானு மேகி ஒருபகற் பானு கோபன் உலைவுறப் பொருது வென்று கருதரும் அவுணர் தானைக் கடலையுங் கடந்து போனான்.

araṉiṭaip piṟanta aṇṇal āṇaiyāl vanta tūtaṉ tirunakar aḻittāṉ muṉṉañ cēṉaiyun tāṉu mēki orupakaṟ pāṉu kōpaṉ ulaivuṟap porutu veṉṟu karutarum avuṇar tāṉaik kaṭalaiyuṅ kaṭantu pōṉāṉ.

Report an error

இப்பகல் வந்து வீரன் இருஞ்சமர் இயற்ற என்முன் தப்பினன் மறைந்து மாயைப் படைதொடா உணர்ச்சி தள்ளி அப்புனல் அளக்கர் உய்ப்ப அறுமுகன் வேலான் மீண்டுன் மெய்ப்பதி யடுவான் என்றால் அவனையார் வெல்லற் பாலார்.

ippakal vantu vīraṉ iruñcamar iyaṟṟa eṉmuṉ tappiṉaṉ maṟaintu māyaip paṭaitoṭā uṇarcci taḷḷi appuṉal aḷakkar uyppa aṟumukaṉ vēlāṉ mīṇṭuṉ meyppati yaṭuvāṉ eṉṟāl avaṉaiyār vellaṟ pālār.

Report an error

இறுதியும் எய்தான் என்னின் ஏற்றதொல் லுணர்ச்சி மாய்ந்து மறியினும் எழுவன் என்னின் மாயையுந் தொலையும் என்னின் செறியும்விண் முதல்வர் தந்த படைக்குநேர் செலுத்து மென்னின் அறிஞர்கள் அவன்மேற் பின்னும் அமர்செயக் கருது வாரோ.

iṟutiyum eytāṉ eṉṉiṉ ēṟṟatol luṇarcci māyntu maṟiyiṉum eḻuvaṉ eṉṉiṉ māyaiyun tolaiyum eṉṉiṉ ceṟiyumviṇ mutalvar tanta paṭaikkunēr celuttu meṉṉiṉ aṟiñarkaḷ avaṉmēṟ piṉṉum amarceyak karutu vārō.

Report an error

தூதென முன்னர் வந்தோன் ஒருவனால் தொலையும் இந்த மூதெயில் நகர முற்றும் அவுணரும் முடிவர் என்னின் ஆதியும் முடிவும் இல்லா அறுமுகன் அடுபோர் உன்னிப் போதுமேல் இமைப்பின் எல்லாப் புவனமும் பொன்றி டாவோ.

tūteṉa muṉṉar vantōṉ oruvaṉāl tolaiyum inta mūteyil nakara muṟṟum avuṇarum muṭivar eṉṉiṉ ātiyum muṭivum illā aṟumukaṉ aṭupōr uṉṉip pōtumēl imaippiṉ ellāp puvaṉamum poṉṟi ṭāvō.

Report an error

கரங்கள்பன் னிரண்டு கொண்ட கடவுள்வந் தெதிர்க்கின் நந்தம் வரங்களும் படைகள் யாவும் மாயையுந் திறலுஞ் சீரும் உரங்களுந் திருவு மெல்லாம் ஊழிநா யகன்முன் னுற்ற புரங்களும் அவுண ரும்போற் பூழிபட் டழிந்தி டாவோ.

karaṅkaḷpaṉ ṉiraṇṭu koṇṭa kaṭavuḷvan tetirkkiṉ nantam varaṅkaḷum paṭaikaḷ yāvum māyaiyun tiṟaluñ cīrum uraṅkaḷun tiruvu mellām ūḻinā yakaṉmuṉ ṉuṟṟa puraṅkaḷum avuṇa rumpōṟ pūḻipaṭ ṭaḻinti ṭāvō.

Report an error

ஒற்றனை விடுத்து நாடி உம்பரை விடாமை நோக்கி மற்றிவட் போந்து நம்மேல் வைகலும் வந்தி டாது சுற்றுதன் தானை யோடுந் தூதனைத் தூண்டி அங்கண் இற்றையின் அளவு நம்பாற் கருணைசெய் திருந்தான் ஐயன்.

oṟṟaṉai viṭuttu nāṭi umparai viṭāmai nōkki maṟṟivaṭ pōntu nammēl vaikalum vanti ṭātu cuṟṟutaṉ tāṉai yōṭun tūtaṉait tūṇṭi aṅkaṇ iṟṟaiyiṉ aḷavu nampāṟ karuṇaicey tiruntāṉ aiyaṉ.

Report an error

கருணைகொண் டிருந்த வள்ளல் கருத்திடைத் தொலைவில் சீற்றம் வருவதன் முன்னம் இன்னே வானவர் சிறையை மாற்றி உரியநந் தமரும் யாமும் ஒல்லையின் ஏகி ஐயன் திருவடி பணிந்து தீயேஞ் செய்தன பொறுத்தி யென்று.

karuṇaikoṇ ṭirunta vaḷḷal karuttiṭait tolaivil cīṟṟam varuvataṉ muṉṉam iṉṉē vāṉavar ciṟaiyai māṟṟi uriyanan tamarum yāmum ollaiyiṉ ēki aiyaṉ tiruvaṭi paṇintu tīyēñ ceytaṉa poṟutti yeṉṟu.

Report an error

பணிந்துழி அமல மூர்த்தி பலவுநாம் புரிந்த தீமை தணிந்தருள் செய்து தானுந் தணப்பிலா வரங்கள் நல்கி அணிந்ததன் தானை யோடும் அகலுமால் உய்தும் யாமும் துணிந்திது புகன்றேன் ஈதே துணிவென மதலை சொற்றான்.

paṇintuḻi amala mūrtti palavunām purinta tīmai taṇintaruḷ ceytu tāṉun taṇappilā varaṅkaḷ nalki aṇintataṉ tāṉai yōṭum akalumāl uytum yāmum tuṇintitu pukaṉṟēṉ ītē tuṇiveṉa matalai coṟṟāṉ.

Report an error

பரிந்துதனக் குறுதியிவை தெருட்டுதலும் அதுகேளாப் பகுவாக் கால, விரிந்தபுகைப் படலிகைபோய்த் திசையனைத்தும் விழுங்கியிட வெகுளி மூளக், கரிந்ததன துடல்வியர்ப்ப உயிர்ப்புவர இதழதுடிப்பக் கண்கள் சேப்ப, எரிந்துமனம் பதைபதைப்ப உருமெனக்கை எறிந்துநகைத் தினைய சொல்வான்.

parintutaṉak kuṟutiyivai teruṭṭutalum atukēḷāp pakuvāk kāla, virintapukaip paṭalikaipōyt ticaiyaṉaittum viḻuṅkiyiṭa vekuḷi mūḷak, karintataṉa tuṭalviyarppa uyirppuvara itaḻatuṭippak kaṇkaḷ cēppa, erintumaṉam pataipataippa urumeṉakkai eṟintunakait tiṉaiya colvāṉ.

Report an error

தூவுடைய நெடுஞ்சுடர்வேல் ஒருசிறுவன் ஆற்றலையும் தூதாய் வந்த, மேவலன்தன் வலியினையும் யான்செய்யப் படுவனவும் விளம்பா நின்றாய், ஏவருனக் கிதுபுகன்றார் புகன்றாரை உணர்வேனேல் இன்னே அன்னோர், ஆவிதனைக் களைந்திடுவேன் ஆங்கவர்தொல் குலங்களெலாம் அடுவன் யானே.

tūvuṭaiya neṭuñcuṭarvēl oruciṟuvaṉ āṟṟalaiyum tūtāy vanta, mēvalaṉtaṉ valiyiṉaiyum yāṉceyyap paṭuvaṉavum viḷampā niṉṟāy, ēvaruṉak kitupukaṉṟār pukaṉṟārai uṇarvēṉēl iṉṉē aṉṉōr, āvitaṉaik kaḷaintiṭuvēṉ āṅkavartol kulaṅkaḷelām aṭuvaṉ yāṉē.

Report an error

ஞாலமெலா முன்படைத்த நான்முகன்ஐந் தியலங்கம் நவின்று போவான், ஆலமிசைத் துயில்கூர்வான் என்னிளவல் தனக்குடைந்தான் அமரர் கோமான், வேலைதனின் மீன்முழுதும் என்பணியில் தந்தனனால் வெள்ளி வெற்பின், நீலமிடற் றவன்மகனோ தொலைவறுமென் பேராற்றல் நீக்கு கின்றான்.

ñālamelā muṉpaṭaitta nāṉmukaṉain tiyalaṅkam naviṉṟu pōvāṉ, ālamicait tuyilkūrvāṉ eṉṉiḷaval taṉakkuṭaintāṉ amarar kōmāṉ, vēlaitaṉiṉ mīṉmuḻutum eṉpaṇiyil tantaṉaṉāl veḷḷi veṟpiṉ, nīlamiṭaṟ ṟavaṉmakaṉō tolaivaṟumeṉ pērāṟṟal nīkku kiṉṟāṉ.

Report an error

அரியயனும் புரந்தரனும் விண்ணவர்க ளெல்லோரும் அகிலந் தன்னின், விரவுகணத் தவரெவரும் யார்க்குமுத லாகுமுக்கண் விமலன் தானும், பொருசமரின் ஏற்றிடினும் எனக்கழிவ தன்றிவென்று போவ துண்டோ, ஒருசிறிதும் புந்தியிலா மைந்தாயான் பெற்றவரம் உணர்கி லாயோ.

ariyayaṉum purantaraṉum viṇṇavarka ḷellōrum akilan taṉṉiṉ, viravukaṇat tavarevarum yārkkumuta lākumukkaṇ vimalaṉ tāṉum, porucamariṉ ēṟṟiṭiṉum eṉakkaḻiva taṉṟiveṉṟu pōva tuṇṭō, oruciṟitum puntiyilā maintāyāṉ peṟṟavaram uṇarki lāyō.

Report an error

ஆற்றல் விட்டனை குலமுறை பிழைத்தனை அரசின் ஏற்றம் நீங்கினை ஒன்னலர்க் கஞ்சினை இசைத்தாய் மாற்றம் ஒன்றினி உரைத்தியேல் உன்றனை வலலே கூற்று வன்புரத் தேற்றுவன் யானெனக் கொதித்தான்.

āṟṟal viṭṭaṉai kulamuṟai piḻaittaṉai araciṉ ēṟṟam nīṅkiṉai oṉṉalark kañciṉai icaittāy māṟṟam oṉṟiṉi uraittiyēl uṉṟaṉai valalē kūṟṟu vaṉpurat tēṟṟuvaṉ yāṉeṉak kotittāṉ.

Report an error

கொதித்த வேலையின் மைந்தனும் நம்முரை கொடியோன் மதித்தி லன்இவன் மாய்வது சரதமே வான்மேல் உதித்த செங்கதிர்ப் பரிதியங் கடவுள்சூழ உலகில் விதித்தி றந்தனை யாவரே வன்மையால் வென்றோர்.

kotitta vēlaiyiṉ maintaṉum nammurai koṭiyōṉ matitti laṉivaṉ māyvatu caratamē vāṉmēl utitta ceṅkatirp paritiyaṅ kaṭavuḷcūḻa ulakil vititti ṟantaṉai yāvarē vaṉmaiyāl veṉṟōr.

Report an error

இறுதி யாகிய பருவம்வந் தணுகிய திவனுக் குறுதி யாம்பல கூறினென் பயனென உன்னா அறிவன் நீசில அறிந்தனன் போலநிற் கறைந்தேன் சிறுவன் ஆதலிற் பொறுத்தியென் றாற்றினன் சீற்றம்.

iṟuti yākiya paruvamvan taṇukiya tivaṉuk kuṟuti yāmpala kūṟiṉeṉ payaṉeṉa uṉṉā aṟivaṉ nīcila aṟintaṉaṉ pōlaniṟ kaṟaintēṉ ciṟuvaṉ ātaliṟ poṟuttiyeṉ ṟāṟṟiṉaṉ cīṟṟam.

Report an error

வெஞ்சி னந்தனை ஆற்றியித் தாதைதான் விரைவில் துஞ்சு முன்னர்யான் இறப்பது நன்றெனத் துணியா எஞ்ச லில்லவன் தாளிணை வணங்கிநீ யிசைத்த வஞ்சி னந்தனை முடிப்பன்யான் என்றனன் மைந்தன்.

veñci ṉantaṉai āṟṟiyit tātaitāṉ viraivil tuñcu muṉṉaryāṉ iṟappatu naṉṟeṉat tuṇiyā eñca lillavaṉ tāḷiṇai vaṇaṅkinī yicaitta vañci ṉantaṉai muṭippaṉyāṉ eṉṟaṉaṉ maintaṉ.

Report an error

அனைய வேலையில் ஐயநீ மாற்றலர்க் கஞ்சி வினையம் யாவுமுன் னுரைத்தனை அவர்கள்பால் வீரம் புனைய உன்னிய தென்கொலோ என்றலும் பொன்னோன் உனது மைந்தன்யான் அஞ்சுவ னோவென உரைத்தான்.

aṉaiya vēlaiyil aiyanī māṟṟalark kañci viṉaiyam yāvumuṉ ṉuraittaṉai avarkaḷpāl vīram puṉaiya uṉṉiya teṉkolō eṉṟalum poṉṉōṉ uṉatu maintaṉyāṉ añcuva ṉōveṉa uraittāṉ.

Report an error

தாதை அன்னதோர் வேலையின் மைந்தனைத் தழீஇக்கொண் டீது நன்றுநன் றுன்பெருந் தானையோ டெழுந்து போதி யென்றலும் விடைகொடு புரந்தனில போந்து மாதி ரம்புகழ் கின்றதன் னுறையுளில் வந்தான்.

tātai aṉṉatōr vēlaiyiṉ maintaṉait taḻīikkoṇ ṭītu naṉṟunaṉ ṟuṉperun tāṉaiyō ṭeḻuntu pōti yeṉṟalum viṭaikoṭu purantaṉila pōntu māti rampukaḻ kiṉṟataṉ ṉuṟaiyuḷil vantāṉ.

Report an error

நிறங்கொள் மேருவை நிலாக்கதிர் உண்டநீர் மையைப்போல் மங்கொள் சூர்மகன் ஆடக மெய்யில்வச் சிரத்தின் திறங்கொள் சாலிகை கட்டினன் தூணியின் செறித்தான் பிறங்கு கோதையும் புட்டிலும் கைவிரல் பெய்தான்.

niṟaṅkoḷ mēruvai nilākkatir uṇṭanīr maiyaippōl maṅkoḷ cūrmakaṉ āṭaka meyyilvac cirattiṉ tiṟaṅkoḷ cālikai kaṭṭiṉaṉ tūṇiyiṉ ceṟittāṉ piṟaṅku kōtaiyum puṭṭilum kaiviral peytāṉ.

Report an error

அடங்க லர்க்குவெங் கூற்றெனும் ஆடல்வில் லொன்றை இடங்கை பற்றினன் வலங்கையில் பலபடை எடுத்தான் தடங்கொள் மோலியில் தும்பையஞ் சிகழிகை தரித்தான் மடங்கல் ஆயிரம் பூண்டதேர் புக்கனன் வந்தான்.

aṭaṅka larkkuveṅ kūṟṟeṉum āṭalvil loṉṟai iṭaṅkai paṟṟiṉaṉ valaṅkaiyil palapaṭai eṭuttāṉ taṭaṅkoḷ mōliyil tumpaiyañ cikaḻikai tarittāṉ maṭaṅkal āyiram pūṇṭatēr pukkaṉaṉ vantāṉ.

Report an error

ஆற்றல் மிக்குறு துணைவர்ஆ யிரவரும் அனிகம் போற்று மன்னர்ஆ யிரவரும் போரணி புனைந்து காற்றெ னப்படர் கவனமான் தேரிடைக் கலந்து நாற்றி றற்படை தன்னொடு புடைதனில் நடப்ப.

āṟṟal mikkuṟu tuṇaivarā yiravarum aṉikam pōṟṟu maṉṉarā yiravarum pōraṇi puṉaintu kāṟṟe ṉappaṭar kavaṉamāṉ tēriṭaik kalantu nāṟṟi ṟaṟpaṭai taṉṉoṭu puṭaitaṉil naṭappa.

Report an error

நூறொ டேயெழு நூறுவெள் ளந்நொறி லுடைத்தேர் சீறும் யானையும் அத்தொகை அவுணர்தஞ சேனை ஆறு நூற்றிரு வெள்ளத்த பரிகளும் அனைத்தே சூறை மாருத மாமென அவன்புடை சூழ்ந்த.

nūṟo ṭēyeḻu nūṟuveḷ ḷannoṟi luṭaittēr cīṟum yāṉaiyum attokai avuṇartaña cēṉai āṟu nūṟṟiru veḷḷatta parikaḷum aṉaittē cūṟai māruta māmeṉa avaṉpuṭai cūḻnta.

Report an error

துடிக றங்கின கறங்கின பேரிதுந் துபிப்பேர் இடிக றங்கின வலம்புரி கறங்கின எடுக்கும் கொடிக றங்கின தானைகள் கறங்கின குனித்துக் கடிக றங்கின கறங்கின கழுகொடு காகம்.

tuṭika ṟaṅkiṉa kaṟaṅkiṉa pēritun tupippēr iṭika ṟaṅkiṉa valampuri kaṟaṅkiṉa eṭukkum koṭika ṟaṅkiṉa tāṉaikaḷ kaṟaṅkiṉa kuṉittuk kaṭika ṟaṅkiṉa kaṟaṅkiṉa kaḻukoṭu kākam.

Report an error

வசலை மென்கொடி வாடிய தன்னநுண் மருங்கில் கிசலை யம்புரை சீறடிக் கிஞ்சுகச் செவ்வாய்ப் பசலை சேர்முலை மங்கையர் விழிக்கணை பாய வசலை மங்கைதன் மெய்த்தனு வளைந்திட அகன்றான்.

vacalai meṉkoṭi vāṭiya taṉṉanuṇ maruṅkil kicalai yampurai cīṟaṭik kiñcukac cevvāyp pacalai cērmulai maṅkaiyar viḻikkaṇai pāya vacalai maṅkaitaṉ meyttaṉu vaḷaintiṭa akaṉṟāṉ.

Report an error

அறந்த லைப்படும் இரணியன் அனிகநால் வகையும் புறந்த லைப்படத் துயரமும் தலைப்படப் போந்து மறந்த லைப்படு பூதர்கள் ஆர்ப்பொலி வழங்கும் பறந்த லைக்களம் புக்கனன் அமரர்மெய் பனிப்ப.

aṟanta laippaṭum iraṇiyaṉ aṉikanāl vakaiyum puṟanta laippaṭat tuyaramum talaippaṭap pōntu maṟanta laippaṭu pūtarkaḷ ārppoli vaḻaṅkum paṟanta laikkaḷam pukkaṉaṉ amararmey paṉippa.

Report an error

விண்ணு ளோர்களும் பிறருமவ் வியனகர் நோக்த் துண்ணெ னத்துளங் குறுவதுங் கண்டனன் தொன்னாள் மண்ணி னுள்ளபா ரிடமெலாம் வல்லைவந் தழித்து நண்ணு கின்றதுங் கண்டனன் நன்றென நக்கான்.

viṇṇu ḷōrkaḷum piṟarumav viyaṉakar nōkt tuṇṇe ṉattuḷaṅ kuṟuvatuṅ kaṇṭaṉaṉ toṉṉāḷ maṇṇi ṉuḷḷapā riṭamelām vallaivan taḻittu naṇṇu kiṉṟatuṅ kaṇṭaṉaṉ naṉṟeṉa nakkāṉ.

Report an error

தனது மாநகர் அழிந்தது கண்டனன் தணியா முனிவு கொண்டனன் வெய்துயிர்த் தனன்உடல் முற்றும் நனிவி யர்ப்புள தாயினன் மருங்குற நணுகும் அனிக வேந்தரைத் துணைவரை நோக்கியீ தறைவான்.

taṉatu mānakar aḻintatu kaṇṭaṉaṉ taṇiyā muṉivu koṇṭaṉaṉ veytuyirt taṉaṉuṭal muṟṟum naṉivi yarppuḷa tāyiṉaṉ maruṅkuṟa naṇukum aṉika vēntarait tuṇaivarai nōkkiyī taṟaivāṉ.

Report an error

ஆயி ரம்வெள்ளம் ஓரொரு திசையினில் ஆக்கி நீயிர் யாவரும் நால்வகைத் தாகியே நீங்கி மாயி ருந்திறற் சாரதன் வீரரை வளைந்து போயெ திர்ந்துவெஞ் சமர்புரி வீரெனப் புகன்றான்.

āyi ramveḷḷam ōroru ticaiyiṉil ākki nīyir yāvarum nālvakait tākiyē nīṅki māyi runtiṟaṟ cārataṉ vīrarai vaḷaintu pōye tirntuveñ camarpuri vīreṉap pukaṉṟāṉ.

Report an error

அக்க ணந்தனில் துணைவரும் அனிகமன் னவருந் தக்க தேயென இரணியன் மொழிதலைத் தாங்கித் திக்கி லாயிரம் வெள்ளமாச் சேனையைக் கொண்டு தொக்க பாரிட வெள்ளமேற் போயினார் சூழ.

akka ṇantaṉil tuṇaivarum aṉikamaṉ ṉavarun takka tēyeṉa iraṇiyaṉ moḻitalait tāṅkit tikki lāyiram veḷḷamāc cēṉaiyaik koṇṭu tokka pāriṭa veḷḷamēṟ pōyiṉār cūḻa.

Report an error

தானை மன்னரும் துணைவரும் திசைதொறும் தழுவிப் போன காலையில் ஆடகன் குடபுலம் புகுதுஞ் சேனை முன்கொடு சென்றனன் இன்னதோர் செய்கை மான வேற்படைக் காவலன் கண்டனன் மன்னோ.

tāṉai maṉṉarum tuṇaivarum ticaitoṟum taḻuvip pōṉa kālaiyil āṭakaṉ kuṭapulam pukutuñ cēṉai muṉkoṭu ceṉṟaṉaṉ iṉṉatōr ceykai māṉa vēṟpaṭaik kāvalaṉ kaṇṭaṉaṉ maṉṉō.

Report an error

வீர மொய்ம்பினன் அதுகண்டு வெஞ்சமர்க் குறுவான் சூரன் மைந்தருள் ஒருவனோ சுற்றமா யினனோ ஆரி வன்கொலென் றையுறு காலையின் அயலே நார தன்எனும் முனிவரன் வந்திவை நவில்வான்.

vīra moympiṉaṉ atukaṇṭu veñcamark kuṟuvāṉ cūraṉ maintaruḷ oruvaṉō cuṟṟamā yiṉaṉō āri vaṉkoleṉ ṟaiyuṟu kālaiyiṉ ayalē nāra taṉeṉum muṉivaraṉ vantivai navilvāṉ.

Report an error

இரணி யன்எனும் மைந்தனைச் சூரன்இங் கேவ அருணன் என்னவந தடைந்தனன் அம்படை யலைப்ப வருணன் இந்திரன் மந்திரி மறலிமா திரத்தின் முரணு றும்படை நான்கையும் முன்னுறச் செலுத்தி.

iraṇi yaṉeṉum maintaṉaic cūraṉiṅ kēva aruṇaṉ eṉṉavana taṭaintaṉaṉ ampaṭai yalaippa varuṇaṉ intiraṉ mantiri maṟalimā tirattiṉ muraṇu ṟumpaṭai nāṉkaiyum muṉṉuṟac celutti.

Report an error

மாயை வல்லவன் படைபல பரித்தவன் வஞ்ச மாய சூழச்சிகள் பற்பல தெரிந்தவன் அவனை நீய லாதுவெல் கின்றவர் இல்லையால் நினக்கிங கேய தன்மையின் அமர்தனைப் புரிதியா லென்றான்.

māyai vallavaṉ paṭaipala parittavaṉ vañca māya cūḻaccikaḷ paṟpala terintavaṉ avaṉai nīya lātuvel kiṉṟavar illaiyāl niṉakkiṅa kēya taṉmaiyiṉ amartaṉaip puritiyā leṉṟāṉ.

Report an error

என்று கூறியே நாரதன் விண்மிசை ஏக நன்று நன்றென அன்னதை வினவியே நகைத்துத் துன்று பாரிடத் தலைவரைச் சுற்றமா யுளரை வென்றி மொய்ம்புடை ஆண்டகை நோக்கியே விளம்பும்.

eṉṟu kūṟiyē nārataṉ viṇmicai ēka naṉṟu naṉṟeṉa aṉṉatai viṉaviyē nakaittut tuṉṟu pāriṭat talaivaraic cuṟṟamā yuḷarai veṉṟi moympuṭai āṇṭakai nōkkiyē viḷampum.

Report an error

ஏற்ற தானைய நமையெலாம் சூழ்ந்திட ஏவி மாற்ற லன்மகன் குறுகுவான் நீவிரும் வல்லே நாற்றி சைக்கணும் சாரதப் படையொடு நடந்து வீற்று வீற்றுநின் றமர்புரி வீரென விளம்பி.

ēṟṟa tāṉaiya namaiyelām cūḻntiṭa ēvi māṟṟa laṉmakaṉ kuṟukuvāṉ nīvirum vallē nāṟṟi caikkaṇum cāratap paṭaiyoṭu naṭantu vīṟṟu vīṟṟuniṉ ṟamarpuri vīreṉa viḷampi.

Report an error

வீரர் எண்மரை இலக்கரை வியன்கணத் தவரைப் பாரி டங்களை நால்வகைப் படும்வகை பகுத்தே ஈரி ரண்டுமா திரத்தினும் சென்றிட ஏவிச் சூரன் மாமகன் வருதிசைப் படர்ந்தனன் தோன்றல்.

vīrar eṇmarai ilakkarai viyaṉkaṇat tavaraip pāri ṭaṅkaḷai nālvakaip paṭumvakai pakuttē īri raṇṭumā tirattiṉum ceṉṟiṭa ēvic cūraṉ māmakaṉ varuticaip paṭarntaṉaṉ tōṉṟal.

Report an error

காலை யாங்கதின் அவுணமாப் பெரும்படை கடிதின் நாலு மாதிரந் தன்னினும் நரலைசூழ்ந் தென்ன ஓல மோடுவந் தணுகலும் உருத்துவெம் பூத சாலம் யாவையும் ஏற்றன சமரினைப் புரிய.

kālai yāṅkatiṉ avuṇamāp perumpaṭai kaṭitiṉ nālu mātiran taṉṉiṉum naralaicūḻn teṉṉa ōla mōṭuvan taṇukalum uruttuvem pūta cālam yāvaiyum ēṟṟaṉa camariṉaip puriya.

Report an error

மற்ற வேலையில் அவுணர்கள் மழுப்படை நாஞ்சில் கற்றை யஞ்சுடர்ப் பரிதிவார் சிலையுமிழ் கணைகள் கொற்ற மிக்குறு தோமரந் தண்டெழுக் குலிசம் ஒற்றை முத்தலை வேல்முதற் படையெலாம் உய்த்தார்.

maṟṟa vēlaiyil avuṇarkaḷ maḻuppaṭai nāñcil kaṟṟai yañcuṭarp paritivār cilaiyumiḻ kaṇaikaḷ koṟṟa mikkuṟu tōmaran taṇṭeḻuk kulicam oṟṟai muttalai vēlmutaṟ paṭaiyelām uyttār.

Report an error

தோடு சிந்திய தேனறா மராமரத் தொகையின் காடு சிந்தினர் கதைகளுஞ் சிந்தினர் கணிச்சி நீடு சிந்துரப் பருவரை சிந்தினர் நேமி மாடு சிந்தினர் சிந்தினர் பூதரில் வலியோர்.

tōṭu cintiya tēṉaṟā marāmarat tokaiyiṉ kāṭu cintiṉar kataikaḷuñ cintiṉar kaṇicci nīṭu cinturap paruvarai cintiṉar nēmi māṭu cintiṉar cintiṉar pūtaril valiyōr.

Report an error

தலையி ழந்தனர் கரங்களும் இழந்தனர் தாளின் நிலையி ழந்தனர் சாரதர் அவுணரும் நெடுங்கை மலையி ழந்தனர் தேர்பரி இழந்தனர் மறவெங் கொலையி ழந்தனர் மடிந்தனர் குருதியுட் குளித்தார்.

talaiyi ḻantaṉar karaṅkaḷum iḻantaṉar tāḷiṉ nilaiyi ḻantaṉar cāratar avuṇarum neṭuṅkai malaiyi ḻantaṉar tērpari iḻantaṉar maṟaveṅ kolaiyi ḻantaṉar maṭintaṉar kurutiyuṭ kuḷittār.

Report an error

வசையில் பூதரும் அவுணரும் இவ்வகை மயங்கித் திசைதொ றும்பொரு கின்றுழித் தனித்தனி சேர்ந்து விசைய மொய்ம்பினான் விடுத்தி வீரரும் விறல்சேர் அசுர வேந்தரும் வெஞ்சமர் விளைத்தனர் அன்றே.

vacaiyil pūtarum avuṇarum ivvakai mayaṅkit ticaito ṟumporu kiṉṟuḻit taṉittaṉi cērntu vicaiya moympiṉāṉ viṭutti vīrarum viṟalcēr acura vēntarum veñcamar viḷaittaṉar aṉṟē.

Report an error

அனைய எல்லையின் வீரவா குப்பெயர் அறிஞன் கனகன் முன்வரும் சேனைமாப் பெருங்கடல் கண்டு முனிவு கொண்டுதன் பாணியின் மூரிவெஞ் சிலையைக் குனிவு செய்தனன் அறத்தனிக் கடவுளும் குனிப்ப.

aṉaiya ellaiyiṉ vīravā kuppeyar aṟiñaṉ kaṉakaṉ muṉvarum cēṉaimāp peruṅkaṭal kaṇṭu muṉivu koṇṭutaṉ pāṇiyiṉ mūriveñ cilaiyaik kuṉivu ceytaṉaṉ aṟattaṉik kaṭavuḷum kuṉippa.

Report an error

மலைவ ளைத்திடு தன்மைபோல் வானுற நிமிர்ந்த சிலைவ ளைத்தனன் நாணொலி யெடுத்தனன் தெழித்தான் அலைவ ளைத்திடு கடலெலாம் நடுங்கிய அனந்தன் தலைவ ளைத்தனன் எண்டிசை நாகமும் சலித்த.

malaiva ḷaittiṭu taṉmaipōl vāṉuṟa nimirnta cilaiva ḷaittaṉaṉ nāṇoli yeṭuttaṉaṉ teḻittāṉ alaiva ḷaittiṭu kaṭalelām naṭuṅkiya aṉantaṉ talaiva ḷaittaṉaṉ eṇṭicai nākamum calitta.

Report an error

காலை யங்கதின் வீரமொய்ம் புடையதோர் காளை கோலொ ராயிரப் பத்தினைக் குனிசிலைக் கொளுவி மேல தாகிய கானிடைப் பொழிதரும் மேக சால மாமெனப் பொழிந்தனன் அவுணர்தா னையின்மேல்.

kālai yaṅkatiṉ vīramoym puṭaiyatōr kāḷai kōlo rāyirap pattiṉaik kuṉicilaik koḷuvi mēla tākiya kāṉiṭaip poḻitarum mēka cāla māmeṉap poḻintaṉaṉ avuṇartā ṉaiyiṉmēl.

Report an error

பிடிகு றைந்தன களிற்றினம் குறைந்தன பிடிக்கும் கொடிகு றைந்தன கொய்யுளைப் புரவிதேர் குறைந்த அடிகு றைந்தன தலைகளும் குறைந்தன அம்பொன் தொடிகு றைந்தன குறைந்தன அவுணர்தம் தோள்கள்.

piṭiku ṟaintaṉa kaḷiṟṟiṉam kuṟaintaṉa piṭikkum koṭiku ṟaintaṉa koyyuḷaip puravitēr kuṟainta aṭiku ṟaintaṉa talaikaḷum kuṟaintaṉa ampoṉ toṭiku ṟaintaṉa kuṟaintaṉa avuṇartam tōḷkaḷ.

Report an error

எறித லுற்றிடு சூறையால் பல்கவ டிற்று முறித லுற்றுவீழ் பொதும்பர்போல் மொய்ம்பன்வா ளியினால் செறித லுற்றதம் வடிவெலாம் சிதைந்துவே றாகி மறித லுற்றன நால்வகைப் படைகளும் மயங்கி.

eṟita luṟṟiṭu cūṟaiyāl palkava ṭiṟṟu muṟita luṟṟuvīḻ potumparpōl moympaṉvā ḷiyiṉāl ceṟita luṟṟatam vaṭivelām citaintuvē ṟāki maṟita luṟṟaṉa nālvakaip paṭaikaḷum mayaṅki.

Report an error

ஆரியன் விட்ட அயிற்கணை பாய மூரி மதக்கரி முற்றுயர் யாக்கை சோரி உகுப்பன தொல்பக லின்கண் மாருதம் உய்த்திடு வன்னியை யொப்ப.

āriyaṉ viṭṭa ayiṟkaṇai pāya mūri matakkari muṟṟuyar yākkai cōri ukuppaṉa tolpaka liṉkaṇ mārutam uyttiṭu vaṉṉiyai yoppa.

Report an error

விறல்கெழு மொய்ம்பன் விடுத்திடு கின்ற பிறைமுக வாளி பெருங்கரி யின்கை அறைபுரி கின்றஅ ராத்தொகை தன்னைக் குறைமதி சென்ற குறைப்பன போலாம்.

viṟalkeḻu moympaṉ viṭuttiṭu kiṉṟa piṟaimuka vāḷi peruṅkari yiṉkai aṟaipuri kiṉṟaa rāttokai taṉṉaik kuṟaimati ceṉṟa kuṟaippaṉa pōlām.

Report an error

வித்தக வீரன் விடுங்கணை வேழ மத்தக முற்றிட மற்றவை போழ்ந்தே முத்தம் உகுப்ப முகந்திடு கும்பம் உய்த்திடும் நல்லமு தச்சுதை யொக்கும்.

vittaka vīraṉ viṭuṅkaṇai vēḻa mattaka muṟṟiṭa maṟṟavai pōḻntē muttam ukuppa mukantiṭu kumpam uyttiṭum nallamu taccutai yokkum.

Report an error

கரம்பட ருங்கவி கைத்தொகை தேரின் உரம்படு கால்கள் உலம்புரை தோளான் சரம்பட விற்ற தலைத்தலை உற்ற வரம்பின் மதிக்குறை மல்கிய வென்ன.

karampaṭa ruṅkavi kaittokai tēriṉ urampaṭu kālkaḷ ulampurai tōḷāṉ carampaṭa viṟṟa talaittalai uṟṟa varampiṉ matikkuṟai malkiya veṉṉa.

Report an error

மேக்குயர் மொய்ம்பன் விடுங்கணை யால்பாய் மாக்கள் துணிந்து மறிந்து கிடந்த தேக்கிய தெண்கட லிற்றிரை முற்றும் தாக்கிய சூறை தனக்கழிந் தென்ன.

mēkkuyar moympaṉ viṭuṅkaṇai yālpāy mākkaḷ tuṇintu maṟintu kiṭanta tēkkiya teṇkaṭa liṟṟirai muṟṟum tākkiya cūṟai taṉakkaḻin teṉṉa.

Report an error

பெருந்தகை விட்ட பிறைத்தலை வாளி திருந்தலர் தோலுறு செங்கை துணிப்ப வருந்திட மாமதி வௌவும்அ ராவைத் துரந்திடு கின்றதன் சுற்றம தென்ன.

peruntakai viṭṭa piṟaittalai vāḷi tiruntalar tōluṟu ceṅkai tuṇippa varuntiṭa māmati vauvuma rāvait turantiṭu kiṉṟataṉ cuṟṟama teṉṉa.

Report an error

தக்க வன்மையால் சிறந்துளோர் தமதுமாற் றலர்மேல் மிக்க வெஞ்சினத் தேகல்போல் அனிகவெள் ளத்தில் தொக்கு வந்துவந் திழிந்தசெஞ் சோரியின் வெள்ளம் மைக்க ருங்கடல் வெள்ளத்தி னூடுபோய் மடுத்த.

takka vaṉmaiyāl ciṟantuḷōr tamatumāṟ ṟalarmēl mikka veñciṉat tēkalpōl aṉikaveḷ ḷattil tokku vantuvan tiḻintaceñ cōriyiṉ veḷḷam maikka ruṅkaṭal veḷḷatti ṉūṭupōy maṭutta.

Report an error

குறைத்தி டும்பெரு ஞாளியும் குறுநரிக் குழாமும் நிருத்த மேயின கவந்தமும் நிணனுண்டு செருக்கி உருத்த குந்திறல் காளியும் கூளியும் ஒருசார்க் கிருத்தி மங்களும் தலைத்தலை மயங்கின கெழுமி.

kuṟaitti ṭumperu ñāḷiyum kuṟunarik kuḻāmum nirutta mēyiṉa kavantamum niṇaṉuṇṭu cerukki urutta kuntiṟal kāḷiyum kūḷiyum orucārk kirutti maṅkaḷum talaittalai mayaṅkiṉa keḻumi.

Report an error

சிலையின் வல்லவன் இவ்வகை கணைமழை சிதறி நிலைய வெல்லையின் மலைந்திடும் தானவர் நீத்தம் உலைப டுங்கனல முன்னுறும் இழுதென உடைந்து குலைகு லைந்துதம உயிருடன் யாக்கையுங் குறைந்த.

cilaiyiṉ vallavaṉ ivvakai kaṇaimaḻai citaṟi nilaiya vellaiyiṉ malaintiṭum tāṉavar nīttam ulaipa ṭuṅkaṉala muṉṉuṟum iḻuteṉa uṭaintu kulaiku laintutama uyiruṭaṉ yākkaiyuṅ kuṟainta.

Report an error

ஆளி யாயிரம் பூண்டதேர் மிசைவரும் அவுணர் மீளி யாயது கண்டனன் எடுத்ததோர் வில்லின் வாளி யாயிரம் ஒருதொடை தூண்டியே மறவெங் கூளி யாயிர கோடியோ ரிமைப்பினில் கொன்றான்.

āḷi yāyiram pūṇṭatēr micaivarum avuṇar mīḷi yāyatu kaṇṭaṉaṉ eṭuttatōr villiṉ vāḷi yāyiram orutoṭai tūṇṭiyē maṟaveṅ kūḷi yāyira kōṭiyō rimaippiṉil koṉṟāṉ.

Report an error

கொன்ற காலையில் பூதவெம் படைகளும் குலைந்து சென்ற மாதிரம் தெரிந்தில தழல்விடம் தெறக்கண் டன்ற போகிய தேவரே ஆயினர் அதனை நின்ற தானையம் தலைவரில் கண்டனன் நீலன்.

koṉṟa kālaiyil pūtavem paṭaikaḷum kulaintu ceṉṟa mātiram terintila taḻalviṭam teṟakkaṇ ṭaṉṟa pōkiya tēvarē āyiṉar ataṉai niṉṟa tāṉaiyam talaivaril kaṇṭaṉaṉ nīlaṉ.

Report an error

கண்ட நீலனும் இறுதிநாள் அழலெனக் கனன்று திண்டி றற்கெழு மன்னவன் மதலைமுன் சென்றே அண்ட முந்தலை பனித்திட உருமென ஆர்த்தான் உண்டு போரிதி என்றனர் அமரரா யுள்ளோர்.

kaṇṭa nīlaṉum iṟutināḷ aḻaleṉak kaṉaṉṟu tiṇṭi ṟaṟkeḻu maṉṉavaṉ matalaimuṉ ceṉṟē aṇṭa muntalai paṉittiṭa urumeṉa ārttāṉ uṇṭu pōriti eṉṟaṉar amararā yuḷḷōr.

Report an error

காலை யனனத்தில்அவுணர்தம் இறைமகன் கனன்று வேல தொன்றினை ஆகமூழ் குற்றிட விடுப்ப நீலன் வன்மைபோய் நின்றிலன் சென்றனன் நெடிய சால மொன்றுகொண் டவன் தடந் தேரினைத் தடிந்தான்.

kālai yaṉaṉattilavuṇartam iṟaimakaṉ kaṉaṉṟu vēla toṉṟiṉai ākamūḻ kuṟṟiṭa viṭuppa nīlaṉ vaṉmaipōy niṉṟilaṉ ceṉṟaṉaṉ neṭiya cāla moṉṟukoṇ ṭavaṉ taṭan tēriṉait taṭintāṉ.

Report an error

வையம் அங்கழி வெய்தலும் அவுணர்கோன் மற்றோர் செய்ய தேரிடை வல்லையில் தாவிநாண் செறித்துக் கையில் வாங்கிய சராசனத் திடையுறக் கடைநாட் பொய்யின் மாமுகி லாமெனச் சுடுசரம் பொழிந்தான்.

vaiyam aṅkaḻi veytalum avuṇarkōṉ maṟṟōr ceyya tēriṭai vallaiyil tāvināṇ ceṟittuk kaiyil vāṅkiya carācaṉat tiṭaiyuṟak kaṭaināṭ poyyiṉ māmuki lāmeṉac cuṭucaram poḻintāṉ.

Report an error

பொழிந்த வார்கணை முழுவதும் அவனுரம் புகலும் அழிந்தி லன்சிறி தஞ்சிலன் குலகிரி அன்றி ஒழிந்த குன்றெலாம் பறித்தனன் வீசியே உடலத் திழந்த சோரிநீர் சொரிதர நின்றனன் இமையான்.

poḻinta vārkaṇai muḻuvatum avaṉuram pukalum aḻinti laṉciṟi tañcilaṉ kulakiri aṉṟi oḻinta kuṉṟelām paṟittaṉaṉ vīciyē uṭalat tiḻanta cōrinīr coritara niṉṟaṉaṉ imaiyāṉ.

Report an error

நிருப னாகிய ஆடகன் தன்னெதிர் நீலன் மரபின் நூக்கிய வரையெலாஞ் சரங்களால் மாற்ற விரைவி னோடுபோய் அவன்தடந் தேரினை வெகுளா ஒருகை யாலெடுத் தெறிந்தனன் அமரரும் உலைய.

nirupa ṉākiya āṭakaṉ taṉṉetir nīlaṉ marapiṉ nūkkiya varaiyelāñ caraṅkaḷāl māṟṟa viraivi ṉōṭupōy avaṉtaṭan tēriṉai vekuḷā orukai yāleṭut teṟintaṉaṉ amararum ulaiya.

Report an error

ஆற்ற லந்தடந் தேரினை வீசிட அதுவுங் காற்று லாய்நிமிர் விண்ணுறப் போயது காளை மாற்றொர் வையமேற் பாய்ந்திட உன்னினன் வரலும் ஏற்றெ ழுந்தெதிர் புக்கனன் நீலனாம் இகலோன்.

āṟṟa lantaṭan tēriṉai vīciṭa atuvuṅ kāṟṟu lāynimir viṇṇuṟap pōyatu kāḷai māṟṟor vaiyamēṟ pāyntiṭa uṉṉiṉaṉ varalum ēṟṟe ḻuntetir pukkaṉaṉ nīlaṉām ikalōṉ.

Report an error

நிற்றி நிற்றிநீ என்றுகொண் டேகியே நீலன் எற்றி னான்அவன் உரத்திடை அவுணனும் இவனைப் பற்றி வீசினான் பூதனும் மீண்டுதன் பதத்தாற் செற்ற மோடுதைத் துருட்டிவான் உருமெனத் தெழித்தான்.

niṟṟi niṟṟinī eṉṟukoṇ ṭēkiyē nīlaṉ eṟṟi ṉāṉavaṉ urattiṭai avuṇaṉum ivaṉaip paṟṟi vīciṉāṉ pūtaṉum mīṇṭutaṉ patattāṟ ceṟṟa mōṭutait turuṭṭivāṉ urumeṉat teḻittāṉ.

Report an error

நெறிந்த பங்கிசேர் நீலனங் குதைத்திட நிருதர் முறிந்து நீங்கிய களத்திடை வழுக்கிவீழ முகில்போல் மறிந்து வீழ்தரும் அவுணன்மேற் பாய்ந்தனன் மகவான் எறிந்த வச்சிரப் பெரும்படை இதுகொலென் றிசைப்ப.

neṟinta paṅkicēr nīlaṉaṅ kutaittiṭa nirutar muṟintu nīṅkiya kaḷattiṭai vaḻukkivīḻa mukilpōl maṟintu vīḻtarum avuṇaṉmēṟ pāyntaṉaṉ makavāṉ eṟinta vaccirap perumpaṭai itukoleṉ ṟicaippa.

Report an error

வீழ்ந்த காளையைத் தன்பெருந் தாள்களால் மிதிப்பக் கீழ்ந்து போயது மாநிலம் அவன்முடி கிழிந்த போழ்ந்த தாகமும் வாய்வழி குருதிநீர் பொழிய வாழ்ந்து வெந்துயர் உழந்தனன் செய்வதொன் றறியான்.

vīḻnta kāḷaiyait taṉperun tāḷkaḷāl mitippak kīḻntu pōyatu mānilam avaṉmuṭi kiḻinta pōḻnta tākamum vāyvaḻi kurutinīr poḻiya vāḻntu ventuyar uḻantaṉaṉ ceyvatoṉ ṟaṟiyāṉ.

Report an error

திறல ழிந்தனன் சீற்றமும் அழிந்தனன் செங்கோல் மறலி கொள்வதற் கணியனே ஆதலும் மனத்தில் இறுதி எய்திய தீங்கனிச் செய்வதென் எமக்கோர் உறுதி யாதென உன்னினன் பின்னரொன் றுணர்ந்தான்.

tiṟala ḻintaṉaṉ cīṟṟamum aḻintaṉaṉ ceṅkōl maṟali koḷvataṟ kaṇiyaṉē ātalum maṉattil iṟuti eytiya tīṅkaṉic ceyvateṉ emakkōr uṟuti yāteṉa uṉṉiṉaṉ piṉṉaroṉ ṟuṇarntāṉ.

Report an error

மாயம் ஒன்றினைப் புரிகுதும் யாமென வல்லே ஆய மந்திரம் புகன்றனன் பூசனை அனைத்தும் தூய சிந்தையால் நிரப்பினன் வேண்டிய துணியா ஆய தெய்வதம் உன்னினன் அன்னதோர் எல்லை.

māyam oṉṟiṉaip purikutum yāmeṉa vallē āya mantiram pukaṉṟaṉaṉ pūcaṉai aṉaittum tūya cintaiyāl nirappiṉaṉ vēṇṭiya tuṇiyā āya teyvatam uṉṉiṉaṉ aṉṉatōr ellai.

Report an error

தன்போலொரு வடிவன்னதொர் சமரின்தலை அணுகா மின்போலொளிர் தருபல்படை விரவும்படி பரியா என்போலெவர் பொருகின்றவ ரெனவீரம துரையா வன்போரது புரியும்படி வலிகொண்டுமுன் வரலும்.

taṉpōloru vaṭivaṉṉator camariṉtalai aṇukā miṉpōloḷir tarupalpaṭai viravumpaṭi pariyā eṉpōlevar porukiṉṟava reṉavīrama turaiyā vaṉpōratu puriyumpaṭi valikoṇṭumuṉ varalum.

Report an error

கண்டானது வருகின்ற கடிதேயெதிர் நடவா எண்டானவர் அமரின்தலை யிட்டேகிய தொருபொற் றண்டானது கொண்டேஅதன் தலைமோதினன் இமையோர் விண்டான்இவற் கழிந்தானென நீலன்தனை வியந்தார்.

kaṇṭāṉatu varukiṉṟa kaṭitēyetir naṭavā eṇṭāṉavar amariṉtalai yiṭṭēkiya torupoṟ ṟaṇṭāṉatu koṇṭēataṉ talaimōtiṉaṉ imaiyōr viṇṭāṉivaṟ kaḻintāṉeṉa nīlaṉtaṉai viyantār.

Report an error

வியக்கும்பொழு தினில்அன்னவன் விடுமாயமும் விசையால் உயக்குற்றவ ரெனவிண்மிசை உயர்கின்றது காணாத் துயக்குற்றிடு நீலன்னது தொடர்ந்தான்கரந் திடலும் மயக்குற்றனன் நெடிதுன்னினன் மண்மீதுறக் கண்டான்.

viyakkumpoḻu tiṉilaṉṉavaṉ viṭumāyamum vicaiyāl uyakkuṟṟava reṉaviṇmicai uyarkiṉṟatu kāṇāt tuyakkuṟṟiṭu nīlaṉṉatu toṭarntāṉkaran tiṭalum mayakkuṟṟaṉaṉ neṭituṉṉiṉaṉ maṇmītuṟak kaṇṭāṉ.

Report an error

காணாவல மருவானிது கரவாமென உணரான் நாணால்மிகு சீற்றத்தொடு நணுகுற்றனன் அதுவுந் தூணார்தடந் தோள்கொண்டமர் கொடங்குற்றது தொடங்கிச் சேணாகிய தணித்தாயது திசையெங்கணுந் திரியும்.

kāṇāvala maruvāṉitu karavāmeṉa uṇarāṉ nāṇālmiku cīṟṟattoṭu naṇukuṟṟaṉaṉ atuvun tūṇārtaṭan tōḷkoṇṭamar koṭaṅkuṟṟatu toṭaṅkic cēṇākiya taṇittāyatu ticaiyeṅkaṇun tiriyum.

Report an error

பாரிற்புகும விண்ணிற்புகும் பரிதிச்சுட ரெனவே தேரிற்புகும் மாவிற்புகும் சிலையிற்புகும் திரைமுந் நீரிற்புகும் வடவாமுக நெருப்பிற்புகும் நீலக் காரிற்புகும் நிரயத்திடை கடிதிற்புகும் எழுமே.

pāriṟpukuma viṇṇiṟpukum pariticcuṭa reṉavē tēriṟpukum māviṟpukum cilaiyiṟpukum tiraimun nīriṟpukum vaṭavāmuka neruppiṟpukum nīlak kāriṟpukum nirayattiṭai kaṭitiṟpukum eḻumē.

Report an error

முன்அவேரும் இடத்தேவரும் முதுவெம்பிடர் தழுவிப் பின்னேவரும் வலத்தேவரும் பெரும்போரினைப் புரியும் பொன்னேகரு தியமங்கையர் புலனாமெனத் திரியும் என்னேஅதன் இயல்யாவையும் யாரேபுகல் வாரே.

muṉavērum iṭattēvarum mutuvempiṭar taḻuvip piṉṉēvarum valattēvarum perumpōriṉaip puriyum poṉṉēkaru tiyamaṅkaiyar pulaṉāmeṉat tiriyum eṉṉēataṉ iyalyāvaiyum yārēpukal vārē.

Report an error

மாலுந்திறம் இதுபெற்றியின் வருகின்றதொர் மாயக் கோலந்தனி தொடராவலி குறைந்தான்திரிந் துலைந்தான் காலுந்தளர் கின்றானவன் கல்வித்திறம் புகழா மேலென்செய லெனஉன்னி வெகுண்டான்அடல் வீரன்.

māluntiṟam itupeṟṟiyiṉ varukiṉṟator māyak kōlantaṉi toṭarāvali kuṟaintāṉtirin tulaintāṉ kāluntaḷar kiṉṟāṉavaṉ kalvittiṟam pukaḻā mēleṉceya leṉauṉṉi vekuṇṭāṉaṭal vīraṉ.

Report an error

வென்றார்புகழ் தருவீரனும் வினையந்தனை உன்னி நின்றான்அது காலந்தனில் நிருத்ன்றன துருவம் ஒன்றாயது பலவாயுல கெல்லாமொருங் குறலால் நன்றாமிது மாயம்மென நாணத்தொடு நவின்றான்.

veṉṟārpukaḻ taruvīraṉum viṉaiyantaṉai uṉṉi niṉṟāṉatu kālantaṉil nirutṉṟaṉa turuvam oṉṟāyatu palavāyula kellāmoruṅ kuṟalāl naṉṟāmitu māyammeṉa nāṇattoṭu naviṉṟāṉ.

Report an error

திண்டோளுடை நீலன்னிது தெளிகின்றுழ அவனால் புண்டோய்தரு குருதிப்புனல் புடைபோதரப் புவிமேல் விண்டோனென மறிகின்றவன் மிடல்பெற்றெழுந் திதனைக் கண்டோர்தடந் தேரேறினன் மாயத்தொடு கலந்தான்.

tiṇṭōḷuṭai nīlaṉṉitu teḷikiṉṟuḻa avaṉāl puṇṭōytaru kurutippuṉal puṭaipōtarap puvimēl viṇṭōṉeṉa maṟikiṉṟavaṉ miṭalpeṟṟeḻun titaṉaik kaṇṭōrtaṭan tērēṟiṉaṉ māyattoṭu kalantāṉ.

Report an error

கலந்தானொரு சிலைவாங்கினன் கனல்வாளிகள் தெரியா உலந்தானுறழ் தருமெய்யிடை உய்த்தானுவன் பொங்கர் மலர்ந்தாலென உரம்புண்பட வடிவாளின் படநின் றலந்தான்மன மெலிந்தான்பொரு தலுத்தான்மிகச் சலித்தான்.

kalantāṉoru cilaivāṅkiṉaṉ kaṉalvāḷikaḷ teriyā ulantāṉuṟaḻ tarumeyyiṭai uyttāṉuvaṉ poṅkar malarntāleṉa urampuṇpaṭa vaṭivāḷiṉ paṭaniṉ ṟalantāṉmaṉa melintāṉporu taluttāṉmikac calittāṉ.

Report an error

ஈண்டு சீர்த்தி இரணியன் மாயமும் ஆண்டு நீலன் அயர்வது நோக்குறாப் பூண்ட வாகைப் புயத்தவன் சீறியே தூண்டு தேரொடு துண்ணென நண்ணினான்.

īṇṭu cīrtti iraṇiyaṉ māyamum āṇṭu nīlaṉ ayarvatu nōkkuṟāp pūṇṭa vākaip puyattavaṉ cīṟiyē tūṇṭu tēroṭu tuṇṇeṉa naṇṇiṉāṉ.

Report an error

தாங்கு கின்றதன் தாழ்சிலை தோள்கொடே வாங்கி நாணியின் வல்லிசை கோடலும் வீங்கு மொய்ம்பின் விறல்கெழு தானவர் ஏங்கி யாரும் இரிந்தனர் போயினார்.

tāṅku kiṉṟataṉ tāḻcilai tōḷkoṭē vāṅki nāṇiyiṉ vallicai kōṭalum vīṅku moympiṉ viṟalkeḻu tāṉavar ēṅki yārum irintaṉar pōyiṉār.

Report an error

சோதி நெற்றிச் சுடர்த்தனி வேலினான் பாத மெய்த்துணை பன்முறை போற்றிடா ஆத ரத்தின் அருச்சனை ஆற்றியே சேத னப்படை செங்கையின் வாங்கினான்.

cōti neṟṟic cuṭarttaṉi vēliṉāṉ pāta meyttuṇai paṉmuṟai pōṟṟiṭā āta rattiṉ aruccaṉai āṟṟiyē cēta ṉappaṭai ceṅkaiyiṉ vāṅkiṉāṉ.

Report an error

தூய போதகத் தொல்படை அன்னவன் மாயை மேல்விட மற்றதன் பட்டிமை ஆயி ரங்கதிர் ஆதவன் நேர்புறப் போய கங்குல் நிசியெனப் போந்ததே.

tūya pōtakat tolpaṭai aṉṉavaṉ māyai mēlviṭa maṟṟataṉ paṭṭimai āyi raṅkatir ātavaṉ nērpuṟap pōya kaṅkul niciyeṉap pōntatē.

Report an error

போந்த காலைப் புலம்புறு தானவர் ஏந்த லேத மியாக எரியெனக் காந்தி நின்றவன் காமர்வில் வாங்கியே ஆய்ந்து தீங்கணை ஆயிரம் தூண்டினான்.

pōnta kālaip pulampuṟu tāṉavar ēnta lēta miyāka eriyeṉak kānti niṉṟavaṉ kāmarvil vāṅkiyē āyntu tīṅkaṇai āyiram tūṇṭiṉāṉ.

Report an error

தூண்டு கின்ற சுடுகணை வீரமார்த் தாண்டன் முன்னவன் தன்வரை மார்புறா மீண்டு நுண்டுகள் ஆதலும் மேலது காண்ட லுஞ்சுரர் கையெடுத் தார்த்தனர்.

tūṇṭu kiṉṟa cuṭukaṇai vīramārt tāṇṭaṉ muṉṉavaṉ taṉvarai mārpuṟā mīṇṭu nuṇṭukaḷ ātalum mēlatu kāṇṭa luñcurar kaiyeṭut tārttaṉar.

Report an error

பொறுத்த வாகைப் புயன்வலி வெவ்விடம் நிறத்த நூறு நெடுங்கணை தூண்டியே எறிந்த சீர்த்தி இரணியன் கேதனம் அறுத்து வில்லொ டரணமுஞ் சிந்தினான்.

poṟutta vākaip puyaṉvali vevviṭam niṟatta nūṟu neṭuṅkaṇai tūṇṭiyē eṟinta cīrtti iraṇiyaṉ kētaṉam aṟuttu villo ṭaraṇamuñ cintiṉāṉ.

Report an error

பொருவில் சாலிகை போதலுஞ் சூர்தரும் திருவில் கோமகன் செங்கரம் தன்னில்வே றொருவில் கொள்ளவொ ராயிரம் வெங்கணை விரைவில் தூண்டின னால்விறல் மொய்ம்பினான்.

poruvil cālikai pōtaluñ cūrtarum tiruvil kōmakaṉ ceṅkaram taṉṉilvē ṟoruvil koḷḷavo rāyiram veṅkaṇai viraivil tūṇṭiṉa ṉālviṟal moympiṉāṉ.

Report an error

விடுத்த வாளிகள் வெவ்விறல் ஆடகன் எடுத்த வாளி இருஞ்சிலை பின்னுறத் தொடுத்த தூணிமுன் தூண்டிய பாகுதேர் படுத்து மார்பகம் பஃறுளை செய்தவே.

viṭutta vāḷikaḷ vevviṟal āṭakaṉ eṭutta vāḷi iruñcilai piṉṉuṟat toṭutta tūṇimuṉ tūṇṭiya pākutēr paṭuttu mārpakam paḵṟuḷai ceytavē.

Report an error

செய்ய வேறொரு தேர்மிசைச் சூரருள் வெய்யன் வாவலும் வீரருள் வீரனாம் ஐயன் வாளிகொண் டன்னது மட்டிட மையல் எய்தி இழந்தனன் வன்மையே.

ceyya vēṟoru tērmicaic cūraruḷ veyyaṉ vāvalum vīraruḷ vīraṉām aiyaṉ vāḷikoṇ ṭaṉṉatu maṭṭiṭa maiyal eyti iḻantaṉaṉ vaṉmaiyē.

Report an error

வேறு பின்னரும் மேதகு சூர்மகன் ஏறு தேர்க ளியாவையும் செல்லுமுன் நூறு நூறு கணைகளின் நூறியே ஈறு செய்தலும் ஏங்கியி தெண்ணினான்.

vēṟu piṉṉarum mētaku cūrmakaṉ ēṟu tērka ḷiyāvaiyum cellumuṉ nūṟu nūṟu kaṇaikaḷiṉ nūṟiyē īṟu ceytalum ēṅkiyi teṇṇiṉāṉ.

Report an error

இநத் வேலை இடர்ப்படு மென்றனக் கந்த மெய்திய தன்னவ னால்உயிர் சிந்தும் என்னொடு தீர்வது வோஇனித் தந்தை யாரும் இறத்தல் சரதமே.

inat vēlai iṭarppaṭu meṉṟaṉak kanta meytiya taṉṉava ṉāluyir cintum eṉṉoṭu tīrvatu vōiṉit tantai yārum iṟattal caratamē.

Report an error

இற்ற காலை இருங்கடன் செய்திட மற்றி யாவரும் இல்லைஇம் மாநகர்ச் சுற்ற மானவ ருந்தொலைந் தார்இனி உற்று ளோரும் இறப்பரி துண்மையே.

iṟṟa kālai iruṅkaṭaṉ ceytiṭa maṟṟi yāvarum illaiim mānakarc cuṟṟa māṉava runtolain tāriṉi uṟṟu ḷōrum iṟappari tuṇmaiyē.

Report an error

உறுதி யாவ துரைக்கவும் ஆங்கது வறிது மோர்கிலா மன்னவன் மாயுமுன் இறுவ தேகடன் இற்றில னேயெனின் அறுவ தோஎன் அகத்திட ராயினும்.

uṟuti yāva turaikkavum āṅkatu vaṟitu mōrkilā maṉṉavaṉ māyumuṉ iṟuva tēkaṭaṉ iṟṟila ṉēyeṉiṉ aṟuva tōeṉ akattiṭa rāyiṉum.

Report an error

ஒய்யெ னச்சுர ரோடவென் கண்டஎன் ஐயன் மற்றினித் துஞ்சின் அருங்கடன் செய்வ தற்கொரு சேயுமிங் றாலெனின் வைய கத்தில் வசையதுண் டாகுமே.

oyye ṉaccura rōṭaveṉ kaṇṭaeṉ aiyaṉ maṟṟiṉit tuñciṉ aruṅkaṭaṉ ceyva taṟkoru cēyumiṅ ṟāleṉiṉ vaiya kattil vacaiyatuṇ ṭākumē.

Report an error

மைந்த னைப்பெறு கின்றது மாசிலாப் புந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும் தந்தை மாண்டுழித் தம்முறைக் கேற்றிட அந்த மில்கடன் ஆற்றுதற் கேயன்றோ.

mainta ṉaippeṟu kiṉṟatu mācilāp punti aṉpoṭu pōṟṟi vaḷarppatum tantai māṇṭuḻit tammuṟaik kēṟṟiṭa anta milkaṭaṉ āṟṟutaṟ kēyaṉṟō.

Report an error

அசைவி லாத அமரிடைத் தஞ்சிடின் இசைய தாகும்இ றந்தில னேயெனில் தசையு லாமுடல் தாங்கிஉய்ந் தானெனா வசைய தாகுமென் வன்மையும் துஞ்சுமே.

acaivi lāta amariṭait tañciṭiṉ icaiya tākumi ṟantila ṉēyeṉil tacaiyu lāmuṭal tāṅkiuyn tāṉeṉā vacaiya tākumeṉ vaṉmaiyum tuñcumē.

Report an error

என்னை எய்தும் இசையது வேயெனின் மன்னை எய்தும் வசையுரை ஆங்கதன் றென்னை எய்தினும் எய்துக தந்தைபால் அன்ன தாதல் அழகிதன் றாலென.

eṉṉai eytum icaiyatu vēyeṉiṉ maṉṉai eytum vacaiyurai āṅkataṉ ṟeṉṉai eytiṉum eytuka tantaipāl aṉṉa tātal aḻakitaṉ ṟāleṉa.

Report an error

ஆவ துனனிஎன் னாருயிர் போற்றியே போவ தேகடன் என்று பொருக்கெனத் தாவி வான்முகில் தன்னிடைப் போயொரு தேவு மந்திரம் சிந்தையில் உன்னினான்.

āva tuṉaṉieṉ ṉāruyir pōṟṟiyē pōva tēkaṭaṉ eṉṟu porukkeṉat tāvi vāṉmukil taṉṉiṭaip pōyoru tēvu mantiram cintaiyil uṉṉiṉāṉ.

Report an error

உன்ன லோடும் உருவரு வாதலும் தன்னை யாரும் தெரிவரும் தன்மையால் பொன்னு லாய புணரியுட் போயினான் மின்னு தண்சுடர் மீனுரு வாகியே.

uṉṉa lōṭum uruvaru vātalum taṉṉai yārum terivarum taṉmaiyāl poṉṉu lāya puṇariyuṭ pōyiṉāṉ miṉṉu taṇcuṭar mīṉuru vākiyē.

Report an error

ஆண்டு போன அவுணன்அம் மாநகர் மீண்டு செல்கிலன் மேல்விளை கின்றன காண்டும் நந்தம் கடன்முடிக் குந்துணை ஈண்டு வைகுதும் என்றவண் மேவினான்.

āṇṭu pōṉa avuṇaṉam mānakar mīṇṭu celkilaṉ mēlviḷai kiṉṟaṉa kāṇṭum nantam kaṭaṉmuṭik kuntuṇai īṇṭu vaikutum eṉṟavaṇ mēviṉāṉ.

Report an error

ஆய காலையில் ஆடகன் செய்திடு மாயை யாமெனக் கங்குலு மாய்ந்திடத் தூய போதகத் தொல்படை தோன்றல்போல் சேயி ருங்கதிர்ச் செல்வன்வந் தெய்தினான்.

āya kālaiyil āṭakaṉ ceytiṭu māyai yāmeṉak kaṅkulu māyntiṭat tūya pōtakat tolpaṭai tōṉṟalpōl cēyi ruṅkatirc celvaṉvan teytiṉāṉ.

Report an error

ஆங்கு வெய்யவன் அப்படை போலெழ நீங்கு மாயையின் நீள்நில வற்றிட ஏங்கி யோடும் இரணிய னாமென ஓங்கு திங்கள் உததியில் போயினான்.

āṅku veyyavaṉ appaṭai pōleḻa nīṅku māyaiyiṉ nīḷnila vaṟṟiṭa ēṅki yōṭum iraṇiya ṉāmeṉa ōṅku tiṅkaḷ utatiyil pōyiṉāṉ.

Report an error

நீங்கு சூர்மகன் நீர்மையை நோக்கியே வீங்கு தோளுடை வீரன்நம் மாற்றலன் ஓங்கும் ஆழியுள் ஓடினன் தோற்றெனா ஏங்கு சங்கம் எடுத்திசைத தானரோ.

nīṅku cūrmakaṉ nīrmaiyai nōkkiyē vīṅku tōḷuṭai vīraṉnam māṟṟalaṉ ōṅkum āḻiyuḷ ōṭiṉaṉ tōṟṟeṉā ēṅku caṅkam eṭutticaita tāṉarō.

Report an error

சங்கம் வாயிடைக் கொண்டுதன் சீர்த்தியை எங்கு ளோரும் தெளிய இசைத்துழிப் பொங்கு பூதர் புகழ்ந்தனர் வாழியென் றங்கண் வானவர் ஆசிசெய் தார்க்கவே.

caṅkam vāyiṭaik koṇṭutaṉ cīrttiyai eṅku ḷōrum teḷiya icaittuḻip poṅku pūtar pukaḻntaṉar vāḻiyeṉ ṟaṅkaṇ vāṉavar ācicey tārkkavē.

Report an error

நின்ற வீரர்கள் நேரலர் சேனையைப் பொன்று வித்தனர் போரிடைத் தூதுவர் சென்று காலொடு சிந்தையும் பிற்பட மன்றன் மாநகர் மந்திரம் எய்தினார்.

niṉṟa vīrarkaḷ nēralar cēṉaiyaip poṉṟu vittaṉar pōriṭait tūtuvar ceṉṟu kāloṭu cintaiyum piṟpaṭa maṉṟaṉ mānakar mantiram eytiṉār.

Report an error

மந்தி ரத்துறை மன்னை வணங்கிநீ தந்த அக்கும ரன்சமர்க் காற்றலன் உய்ந்தி டக்கொல் உவரையொர் சூழச்சியால் சிந்தி டக்கொல் அகன்றனன் சிந்துவில்.

manti rattuṟai maṉṉai vaṇaṅkinī tanta akkuma raṉcamark kāṟṟalaṉ uynti ṭakkol uvaraiyor cūḻacciyāl cinti ṭakkol akaṉṟaṉaṉ cintuvil.

Report an error

என்று தூதர் இசைத்தலும் மன்னவன் குன்றி வெள்கிக் கொடுஞ்சினம் கொண்டிடா ஒன்று மாற்றம் உரைத்திலன் அவ்வழிச் சென்ற னன்கனல் மாமுகச் செம்மலே.

eṉṟu tūtar icaittalum maṉṉavaṉ kuṉṟi veḷkik koṭuñciṉam koṇṭiṭā oṉṟu māṟṟam uraittilaṉ avvaḻic ceṉṟa ṉaṉkaṉal māmukac cemmalē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).