Skip to content

யுத்த காண்டம் — அக்கினிமுகாசுரன் வதைப் படலம் · அக்கினிமுகாசுரன் வதைப் படலம்

akkiṉimukācuraṉ vataip paṭalam

akkiṉimukācuraṉ vataip paṭalam

akkiṉimukācuraṉ vataip paṭalam, from Yutta Kāṇṭam; poems 4.1304–4.1545.

242 versesTamil with transliteration

A spear and lotus for chapter 105 of Kanda Puranam.

Invocation

4.1304.opening

உ செந்திலாண்டவன் துணை திருச்சிற்றம்பலம்

u centilāṇṭavaṉ tuṇai tirucciṟṟampalam

Editor's note: Traditional opening, separate from the numbered poems.

எட்டாசையு ளோர்களை எண்கரியைக் கட்டாவுறு சில்கதி ரைப்பரியை முட்டாவரு தேரினை முன்கொணரா வட்டாடிய தோர்வலி பெற்றுடையான்.

eṭṭācaiyu ḷōrkaḷai eṇkariyaik kaṭṭāvuṟu cilkati raippariyai muṭṭāvaru tēriṉai muṉkoṇarā vaṭṭāṭiya tōrvali peṟṟuṭaiyāṉ.

Report an error

கருவாயுறு கின்றதொர் காலைமுதல் திருமாதுடன் முற்றழல் சிந்திடலும் பெருமாயவள் வந்துபி றந்திடுவோன் எரிமாமுகன் என்ற இயற்பெயரான்.

karuvāyuṟu kiṉṟator kālaimutal tirumātuṭaṉ muṟṟaḻal cintiṭalum perumāyavaḷ vantupi ṟantiṭuvōṉ erimāmukaṉ eṉṟa iyaṟpeyarāṉ.

Report an error

பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர் பொன்னார்சிறை கொண்டதொர் புள்ளினுடன் அந்நான்முக னூர்தியும் ஆடுறுவான் முன்னாட்கொடு வந்ததொர் மொய்ம்புடையான்.

paṉṉāka micaittuyil paṇṇavaṉūr poṉṉārciṟai koṇṭator puḷḷiṉuṭaṉ annāṉmuka ṉūrtiyum āṭuṟuvāṉ muṉṉāṭkoṭu vantator moympuṭaiyāṉ.

Report an error

முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன் தன்னைச்சிறை யிட்டது தான்வினவா மன்னுற்றிடு சோமதனை வைகல்பல இன்னற்பட வேசிறை இட்டுடையான்.

muṉṉuṟṟavaṉ vāṉeḻu moykatirōṉ taṉṉaicciṟai yiṭṭatu tāṉviṉavā maṉṉuṟṟiṭu cōmataṉai vaikalpala iṉṉaṟpaṭa vēciṟai iṭṭuṭaiyāṉ.

Report an error

தெய்வப்படை தாங்கிய செங்கையினான் ஐவர்க்குள தாகிய ஆற்றலுளான் மைவைத்திடும் வஞ்சனை மாயம்வலான் எவ்வெப்படை தன்னையும் ஈறுசெய்வான்.

teyvappaṭai tāṅkiya ceṅkaiyiṉāṉ aivarkkuḷa tākiya āṟṟaluḷāṉ maivaittiṭum vañcaṉai māyamvalāṉ evveppaṭai taṉṉaiyum īṟuceyvāṉ.

Report an error

அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம் வந்தானடி தன்னை வணங்கியிவண் எந்தாய்மெலி வுற்றனை என்னெனலுஞ் சிந்தாகுல மோடிது செப்பிடுவான்.

antārmuṭi koṇṭiṭum aiyaṉmuṉam vantāṉaṭi taṉṉai vaṇaṅkiyivaṇ entāymeli vuṟṟaṉai eṉṉeṉaluñ cintākula mōṭitu ceppiṭuvāṉ.

Report an error

உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால் விண்ணாடர் பொருட்டிவண் மேவியுளான் கண்ணாரெயில் வேலி கடந்துநமை எண்ணாது புரத்திடை ஏகினால்.

uṇṇāṭiya māyaiko ṭoṟṟumaiyāl viṇṇāṭar poruṭṭivaṇ mēviyuḷāṉ kaṇṇāreyil vēli kaṭantunamai eṇṇātu purattiṭai ēkiṉāl.

Report an error

ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம் வேகும்படி செந்தழல் வீசிடலும் மாகொண்டல்கள் ஏவினன் மற்றவைமா றாகும்புனல் சிந்தி அவித்தனவே.

ēkuntoḻil veyyavaṉ innakaram vēkumpaṭi centaḻal vīciṭalum mākoṇṭalkaḷ ēviṉaṉ maṟṟavaimā ṟākumpuṉal cinti avittaṉavē.

Report an error

மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண் டுடல்கொண்ட சினத்தொ டொருங்குலகங கடைகொண்டிடு கின்ற கனற்படைதொட் டடல்கொண்ட முகிற்றிறல் அட்டனனே.

maṭalkoṇṭiṭu tāriṉaṉ maṟṟatukaṇ ṭuṭalkoṇṭa ciṉatto ṭoruṅkulakaṅa kaṭaikoṇṭiṭu kiṉṟa kaṉaṟpaṭaitoṭ ṭaṭalkoṇṭa mukiṟṟiṟal aṭṭaṉaṉē.

Report an error

அட்டானது கேட்டனம் ஆடகனை விட்டாம்அனி கத்தொடு வெஞ்சமர்செய் தொட்டார்வலி நோக்கி உடைந்தவனும் நெட்டாழி புகுந்து நிமிர்ந்தனனால்.

aṭṭāṉatu kēṭṭaṉam āṭakaṉai viṭṭāmaṉi kattoṭu veñcamarcey toṭṭārvali nōkki uṭaintavaṉum neṭṭāḻi pukuntu nimirntaṉaṉāl.

Report an error

நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும் தஅங்குற்றிடு கின்றன மாநகரை உங்குற்றிடு தூதன் ஒறுத்தனால் இங்குற்ற நிகழ்சியி தென்றனனே.

naṅkoṟṟa mikuttiṭu nāṟpaṭaiyum taaṅkuṟṟiṭu kiṉṟaṉa mānakarai uṅkuṟṟiṭu tūtaṉ oṟuttaṉāl iṅkuṟṟa nikaḻciyi teṉṟaṉaṉē.

Report an error

செங்கோன்முறை கோடிய தீயவுணன் அங்கோதிய கேட்டலும் ஆரழல்கால் வெங்கோரமு கத்து வியன்புதல்வன் தங்கோமுக மாவிது சாற்றிடுவான்.

ceṅkōṉmuṟai kōṭiya tīyavuṇaṉ aṅkōtiya kēṭṭalum āraḻalkāl veṅkōramu kattu viyaṉputalvaṉ taṅkōmuka māvitu cāṟṟiṭuvāṉ.

Report an error

மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ உன்னுற்றள மீதில் உருத்திடவே முன்னுற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ என்னுக்கவன் ஆற்றலை எண்ணுதிநீ.

maṉṉarkkiṟai yākiya maṉṉavanī uṉṉuṟṟaḷa mītil uruttiṭavē muṉṉuṟṟiṭu tūtuvaṉ moympiṉaṉō eṉṉukkavaṉ āṟṟalai eṇṇutinī.

Report an error

மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப் புடைகொண்டமர் செய்திடு பூதர்தமை அடல்கொண்டிவண் நின்னை அடைந்திடுவன் விடைதந்தரு ளென்று விளம்பினனே.

miṭalkoṇṭiṭu tūtaṉai mikkavaraip puṭaikoṇṭamar ceytiṭu pūtartamai aṭalkoṇṭivaṇ niṉṉai aṭaintiṭuvaṉ viṭaitantaru ḷeṉṟu viḷampiṉaṉē.

Report an error

நன்றேயிது செப்பினை நண்ணலனை வென்றேவரு கென்று விடுத்திடலும் நின்றேதொழு தவ்விடை நீங்கினனால் குன்றேநிகர் தோள்வலி கொண்டுடையோன்.

naṉṟēyitu ceppiṉai naṇṇalaṉai veṉṟēvaru keṉṟu viṭuttiṭalum niṉṟētoḻu tavviṭai nīṅkiṉaṉāl kuṉṟēnikar tōḷvali koṇṭuṭaiyōṉ.

Report an error

கார்க்கோலமும் வெய்ய கருங்கடலின் நீர்க்கோலமும் அன்னவன் நீடியதன் சீர்க்கோநக ரத்திடை சென்றனனால் போர்க்கோலம் அமைந்து புறம்படர்வான்.

kārkkōlamum veyya karuṅkaṭaliṉ nīrkkōlamum aṉṉavaṉ nīṭiyataṉ cīrkkōnaka rattiṭai ceṉṟaṉaṉāl pōrkkōlam amaintu puṟampaṭarvāṉ.

Report an error

மைக்கொண்டல் படர்ந்திடு மால்வரைபோல் மொய்க்கொண்டணி புட்டில் விரற்பரியாக் கைக்கொண்டனன் விண்ணவர் கைப்படையே.

maikkoṇṭal paṭarntiṭu mālvaraipōl moykkoṇṭaṇi puṭṭil viraṟpariyāk kaikkoṇṭaṉaṉ viṇṇavar kaippaṭaiyē.

Report an error

தன்றுதைமீனத்தரு தாயுதவும் பொன்றாழ்சிலை கைக்கொடு பொள்ளெனவே ஒன்றாகிய தேரிடை யொல்லைபுகாச் சென்றான்விழி யிற்கனல் சிந்திடுவான்.

taṉṟutaimīṉattaru tāyutavum poṉṟāḻcilai kaikkoṭu poḷḷeṉavē oṉṟākiya tēriṭai yollaipukāc ceṉṟāṉviḻi yiṟkaṉal cintiṭuvāṉ.

Report an error

அறமற்றிடு தீயன் அகன்றுநகர்ப் புறமுற்றனன் அங்கது போழ்துதனில் திறமற்றது தூதுவர் செப்புதல்முன் மறமுற்றிடு தானைகள் வந்தனவே.

aṟamaṟṟiṭu tīyaṉ akaṉṟunakarp puṟamuṟṟaṉaṉ aṅkatu pōḻtutaṉil tiṟamaṟṟatu tūtuvar cepputalmuṉ maṟamuṟṟiṭu tāṉaikaḷ vantaṉavē.

Report an error

ஓராயிர வெள்ளம் ஒருத்தலினம் தேரானவும் அத்தொகை திண்டிறல்மா ஈராயிர வெள்ள மியாவர்களும் ஆராய்வரி தலாவு ணக்கடலே.

ōrāyira veḷḷam oruttaliṉam tērāṉavum attokai tiṇṭiṟalmā īrāyira veḷḷa miyāvarkaḷum ārāyvari talāvu ṇakkaṭalē.

Report an error

ஆன காலையில் அங்கி முகாசுரன் மான மேற்கொண்டு மாற்றலர் யாரையும் யானொர் கன்னல்முன் ஈறுசெய் வேனெனாச் சேனை தன்னொடுஞ் சென்றிடல் மேயினான்.

āṉa kālaiyil aṅki mukācuraṉ māṉa mēṟkoṇṭu māṟṟalar yāraiyum yāṉor kaṉṉalmuṉ īṟucey vēṉeṉāc cēṉai taṉṉoṭuñ ceṉṟiṭal mēyiṉāṉ.

Report an error

நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே மல்கு காதலர் வந்து கலந்துழப் பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர் அல்கு லென்ன அசைந்தகல் வுற்றதேர்.

nalku māṟiṉṟi nāḷpala nīṅkiyē malku kātalar vantu kalantuḻap pilku kāmattup peyvaḷaip pētaiyar alku leṉṉa acaintakal vuṟṟatēr.

Report an error

அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுழல் விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல் எருத்த மீதில் இடிப்பவர் தம்முரைக் கருத்தின் நிற்கில காய்சின வேழமே.

arutti melliyar ārataṅ koṇṭuḻal viruttar kūṭṭam veṟuttiṭu māṟupōl erutta mītil iṭippavar tammuraik karuttiṉ niṟkila kāyciṉa vēḻamē.

Report an error

மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன எண்ணிற் பல்பொருள் இச்சைகொள் வேசியர் கண்ணிற் கொப்பன கந்துக ராயியே.

maṇṇiṟ pāyvaṉa mātirañ cūḻvaṉa viṇṇiṟ ṟāvuva vītiyiṟ celvaṉa eṇṇiṟ palporuḷ iccaikoḷ vēciyar kaṇṇiṟ koppaṉa kantuka rāyiyē.

Report an error

வஞ்சம் நீடி அருளற்று மாயமே எஞ்ச லின்றி இருள்கெழு வண்ணமாய் விஞ்சு தம்மல்குல் விற்றுணும் மங்கையர் நெஞ்ச மொத்தனர் நீள்படை வீரரே.

vañcam nīṭi aruḷaṟṟu māyamē eñca liṉṟi iruḷkeḻu vaṇṇamāy viñcu tammalkul viṟṟuṇum maṅkaiyar neñca mottaṉar nīḷpaṭai vīrarē.

Report an error

தார்த்த டம்புயத் தானவர் பல்லியம் ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால் தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி வார்த்தை எங்கணும் வல்லையிற் சேறல்போல்.

tārtta ṭampuyat tāṉavar palliyam ārtta ōtai akilamum pukkatāl tūrtta maṅkaiyar cōrviṉiṟ ceypaḻi vārttai eṅkaṇum vallaiyiṟ cēṟalpōl.

Report an error

சோதி மெய்யெழில் தூயன மாற்றியே மீது செல்லரும் வெவ்வியருள் உய்த்தலால் ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர் காதல் போன்ற கடிதெழும் பூழியே.

cōti meyyeḻil tūyaṉa māṟṟiyē mītu cellarum vevviyaruḷ uyttalāl ētiṉ mātarai eytiṭum puṉmaiyōr kātal pōṉṟa kaṭiteḻum pūḻiyē.

Report an error

பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய மோட்டின் ஒட்டக முந்திய கந்தரம் நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முன்தலை காட்டி வாங்குங் கணிகையர் போலவே.

pīṭṭiṉ mikka perumpaṇai tāṅkiya mōṭṭiṉ oṭṭaka muntiya kantaram nīṭṭi vāṅkuva nērntavar muṉtalai kāṭṭi vāṅkuṅ kaṇikaiyar pōlavē.

Report an error

சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண் ஆற ளாவிநின் றாடுவ கேதனம் ஊறு காதல் ஒருவன்கண் வைகினாள் வேறு ளாரையும் வெஃகிவி ளித்தல்போல்.

cīṟu mālkari tērmicaip pūṇṭuviṇ āṟa ḷāviniṉ ṟāṭuva kētaṉam ūṟu kātal oruvaṉkaṇ vaikiṉāḷ vēṟu ḷāraiyum veḵkivi ḷittalpōl.

Report an error

வீழு மும்மத வேழங்கள் மத்தகம் சூழி காலின் அசைதொறும் தோன்றுவ மாழை நோக்கியர் மைந்தர்க்கு மாலுறக் காழ கத்தனம் காட்டி மறைத்தல்போல்.

vīḻu mummata vēḻaṅkaḷ mattakam cūḻi kāliṉ acaitoṟum tōṉṟuva māḻai nōkkiyar maintarkku māluṟak kāḻa kattaṉam kāṭṭi maṟaittalpōl.

Report an error

தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே.

tōma rañcilai cūlam maḻuppaṭai nāma veṅkatai nāñcil mucalamvēl nēmi tāṉavar nīḻkaram velavaṉa kāmar maṅkaiyar kaṭṭoḻil tāṅkiyē.

Report an error

எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம் வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும் செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைக ளெல்லாம்.

eṟṟiṉa paṟaiyiṉ vīḻnta eḻilikaḷ eḻunta pūḻi cuṟṟiṉa vāṉa mīppōyt tūrttaṉa kaṅkai nīttam vaṟṟiṉa paṭaiyum pūṇum vayaṅkiṉa mayaṅki eṅkum ceṟṟiṉa patākai īṭṭam iruṇṭaṉa ticaika ḷellām.

Report an error

சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன் காமர்பிங் கலனே ஆதிக் கடிதெழு தானை வீரர் மாமருங் கதனிற் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன் ஏமரு பூத சேனைக் கெதிருற எய்யித னானால்.

cōmakaṇ ṭakaṉē cōmaṉ cūriyaṉ pakaiñaṉ mēkaṉ kāmarpiṅ kalaṉē ātik kaṭiteḻu tāṉai vīrar māmaruṅ kataṉiṟ cella maṉṉavar maṉṉaṉ maintaṉ ēmaru pūta cēṉaik ketiruṟa eyyita ṉāṉāl.

Report an error

எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி அதிர்ந்தன துடியுஞ் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள் உதிர்ந்தன அனையர் கூடி உடன்றுபோர் புரிய வையம் பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்த தன்றே.

etirntaṉar pūtar tāmum avuṇarum iṭippiṟ pēri atirntaṉa tuṭiyuñ caṅkum ārttaṉa aṇṭa mīṉkaḷ utirntaṉa aṉaiyar kūṭi uṭaṉṟupōr puriya vaiyam pitirntaṉa potinta aṇṭap pittikai piḷanta taṉṟē.

Report an error

தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி மாரி விட்டனர் பிண்டி பாலம் வியன்மழுத் தண்ட மோச்சிக் கிட்டினர் சூலம் வீசிக் கிளர்ந்தனர் அவுணர் பூதர் பட்டனர் அளப்பி லோர்கள் பரந்தன குருதி நீத்தம்.

toṭṭaṉar vēlum vāḷun tūṇṭiṉar pakaḻi māri viṭṭaṉar piṇṭi pālam viyaṉmaḻut taṇṭa mōccik kiṭṭiṉar cūlam vīcik kiḷarntaṉar avuṇar pūtar paṭṭaṉar aḷappi lōrkaḷ parantaṉa kuruti nīttam.

Report an error

முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக் கைத்தலத் திருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல் தன்னை எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை அத்தலை அவுணர் வீரர் அளப்பிலர் பட்டா ரம்மா.

muttalaik kaḻuvait taṇṭai mucalattai nēmi taṉṉaik kaittalat tirunta kūrvāyk kaṇicciyaip piṟaṅkal taṉṉai ettiṟat tavarum pūtar eṟintaṉar eṟinta kālai attalai avuṇar vīrar aḷappilar paṭṭā rammā.

Report an error

தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சும் முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண் மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும் செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய்.

taṟintaṉa puravit tāḷun talaikaḷun taṭantēr accum muṟintaṉa tuvacam aṟṟa mummatak kōṭṭu mākkaṇ maṟintaṉa uṭalam vēṟā maṭintaṉar vayavar eṅkum ceṟintaṉa kaḻuku kākam tiraṇṭaṉa kūḷi tiṇpēy.

Report an error

இருபெபம் படையும் இவ்வா றேற்றிகல் புரியும் வேலை வெருவரு வேற்கண் மாதர் வியர்ப்பின்வந் துதித்த வீரர் பொருவருஞ் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ ஒருவரும் அவுணர் நில்லா தோடினர் உடைந்து போனார்.

irupepam paṭaiyum ivvā ṟēṟṟikal puriyum vēlai veruvaru vēṟkaṇ mātar viyarppiṉvan tutitta vīrar poruvaruñ cilaikaḷ vāṅkip puṅkavam poḻintu cūḻa oruvarum avuṇar nillā tōṭiṉar uṭaintu pōṉār.

Report an error

உடைதலும் அவுணன் மைந்தன் ஒய்யென விடுப்ப மேகன் கடுமுரட் சோமன் சோம கண்டகன் முதலா வுள்ள படையுறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி அடுசிலை வீரர் மேற்சென் றமரினை யிழைத்தா ரன்றே.

uṭaitalum avuṇaṉ maintaṉ oyyeṉa viṭuppa mēkaṉ kaṭumuraṭ cōmaṉ cōma kaṇṭakaṉ mutalā vuḷḷa paṭaiyuṟu talaivar pallōr pakaḻiyiṉ māri tūvi aṭucilai vīrar mēṟceṉ ṟamariṉai yiḻaittā raṉṟē.

Report an error

இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில் வீரக் கழற்புனை கின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத் தழற்பெருங் கடவுள் போல்வான் அசனியே ரஞ்ச ஆர்க்கும் முழக்கினன் ஒருதன் சேனை முன்னுறக் கடிது வந்தான்.

iḻaittiṭa ataṉai nōkki ilaṅkeḻil tāḷil vīrak kaḻaṟpuṉai kiṉṟa vīra purantaraṉ kaṭiya cīṟṟat taḻaṟperuṅ kaṭavuḷ pōlvāṉ acaṉiyē rañca ārkkum muḻakkiṉaṉ orutaṉ cēṉai muṉṉuṟak kaṭitu vantāṉ.

Report an error

வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி இந்துகண் டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர் உந்திய சேமத் தேர்மேல் உற்றிகல் புரிந்து சூழ்ந்தார்.

vantaṉaṉ aṅkaic cāpam vāṅkiṉaṉ vāḷi māri cintiṉaṉ talaivar tēraic citaittaṉaṉ ceṉṉi taḷḷi intukaṇ ṭakaṉai vāṉil ēṟṟiṉaṉ ēṉai vīrar untiya cēmat tērmēl uṟṟikal purintu cūḻntār.

Report an error

சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல் முற்றுறு பகழ தூவ முழங்கழ லென்னச் சீறி மற்றவர் சிலையுந் தேரும் மண்மிசை வீட்டி வல்லே நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கணை பலவும் உய்த்தான்.

cuṟṟiṉar vīraṉ mēṉi cōrinī roḻukum āṟṟal muṟṟuṟu pakaḻa tūva muḻaṅkaḻa leṉṉac cīṟi maṟṟavar cilaiyun tērum maṇmicai vīṭṭi vallē neṟṟiyiṉ urattiṉ tōḷiṉ neṭuṅkaṇai palavum uyttāṉ.

Report an error

உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற மெய்த்திற லாற்ற லாளன் மேகனென் பவனோர் தண்டங் கைத்தல மிசையி லேந்திக் கணப்படை வீரன் தேர்மேல் மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி ஆர்த்தான்.

uyttalum avuṇar vēntaṟ kuṟṟuḻi yutava niṉṟa meyttiṟa lāṟṟa lāḷaṉ mēkaṉeṉ pavaṉōr taṇṭaṅ kaittala micaiyi lēntik kaṇappaṭai vīraṉ tērmēl mattikai muṭkōl koṇṭa valavaṉai mōti ārttāṉ.

Report an error

மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ மேதகு தலைவன் வீர புரந்தரன் வேலொன் றேந்தி ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவ லோடும் பூதல மிசையே வீழப் பொன்றினன் புயலின் பேரோன்.

mōtalun taṉatu pākaṉ muṭintiṭu taṉmai kāṇūu mētaku talaivaṉ vīra purantaraṉ vēloṉ ṟēnti ītiṉiṉ muṭiti eṉṟē ēviṉaṉ ēva lōṭum pūtala micaiyē vīḻap poṉṟiṉaṉ puyaliṉ pērōṉ.

Report an error

புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை நாடி அயலுறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக இயலது தன்னை நோக்கி எரிமுகன் எரியிற் சீறிப் பயிலுறு சிலையொன் றேந்திப் படையொடுங் கடிது வந்தான்.

puyaluṟu nāmat taṇṇal poṉṟalum ataṉai nāṭi ayaluṟu tāṉai vīrar añciṉar akaṉṟu pōka iyalatu taṉṉai nōkki erimukaṉ eriyiṟ cīṟip payiluṟu cilaiyoṉ ṟēntip paṭaiyoṭuṅ kaṭitu vantāṉ.

Report an error

வளைத்தான்தனிப் பெருவில்லினை மருவார்மனம் வளைய விளைத்தான்அவட் சிறுநாணொலி மிகவார்த்தனன் விண்மேல் முளைத்தார்தரு பிறைபோல்வதொர் முனைவாளிகள் தெரியாக் கிளைத்தார்தரு பூதப்படை கேடுற்றிடப் பொழிந்தான்.

vaḷaittāṉtaṉip peruvilliṉai maruvārmaṉam vaḷaiya viḷaittāṉavaṭ ciṟunāṇoli mikavārttaṉaṉ viṇmēl muḷaittārtaru piṟaipōlvator muṉaivāḷikaḷ teriyāk kiḷaittārtaru pūtappaṭai kēṭuṟṟiṭap poḻintāṉ.

Report an error

தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர் தோளா மலையற்றனர் மார்பற்றனர் வாயற்றனர் செய்யுங் கொலையற்றனர் செவியற்றனர் கூறுற்றிடு நாவின் நிலையற்றனர் படையற்றனர் நெடும்பூதர்கள் எவரும்.

talaiyaṟṟaṉar karamaṟṟaṉar tāḷaṟṟaṉar tōḷā malaiyaṟṟaṉar mārpaṟṟaṉar vāyaṟṟaṉar ceyyuṅ kolaiyaṟṟaṉar ceviyaṟṟaṉar kūṟuṟṟiṭu nāviṉ nilaiyaṟṟaṉar paṭaiyaṟṟaṉar neṭumpūtarkaḷ evarum.

Report an error

ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன சிடுகின் ஏரிற்றன கொடியிற்றன முடியிற்றன ஈர்க்கும் மூரிப்பரி மாவிற்றன முருகன்படை வீரர் தேரிற்றன படையிற்றன செருவிற்றன அன்றே.

āriṟṟaṉa cakaṭiṟṟaṉa acciṟṟaṉa ciṭukiṉ ēriṟṟaṉa koṭiyiṟṟaṉa muṭiyiṟṟaṉa īrkkum mūrippari māviṟṟaṉa murukaṉpaṭai vīrar tēriṟṟaṉa paṭaiyiṟṟaṉa ceruviṟṟaṉa aṉṟē.

Report an error

ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற வொலியா ஆடுற்றன கவந்தக்குறை அலகைக்குல மிகவே பாடுற்றன ஞமலித்தொகை பரவுற்றன கொடிமேற் கூடுற்றன பாறுற்றனகுறுகுற்றன கழுகே.

ōṭuṟṟaṉa kurutippuṉal ulakaccuṟa voliyā āṭuṟṟaṉa kavantakkuṟai alakaikkula mikavē pāṭuṟṟaṉa ñamalittokai paravuṟṟaṉa koṭimēṟ kūṭuṟṟaṉa pāṟuṟṟaṉakuṟukuṟṟaṉa kaḻukē.

Report an error

அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட நகையா மைக்காலனும் வெருவுற்றிடு வலிசேர்திறல் மகவான் கைக்கார்முகந் தனைவாங்குபு கணைமாரிகள் சொரியாப் புக்கான்அவு ணனுமாங்கெதிர் பொழிந்தாச்ர மழையே.

akkālaiyiṉ atukaṇṭaṉaṉ aḻalkāṉṟiṭa nakaiyā maikkālaṉum veruvuṟṟiṭu valicērtiṟal makavāṉ kaikkārmukan taṉaivāṅkupu kaṇaimārikaḷ coriyāp pukkāṉavu ṇaṉumāṅketir poḻintācra maḻaiyē.

Report an error

கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல் வருகின்ற உறுகின்றன மன்னன்மகன் முன்னம் பொருகின்றநம் வீரன்விடு புகர்வெங்கணை பலவும் இரிகின்றன படுகின்றன விருவோர்பக ழியுமே.

karavaṉviṭu neṭuvāḷikaḷ kantaṉpaṭai ñaṉmēl varukiṉṟa uṟukiṉṟaṉa maṉṉaṉmakaṉ muṉṉam porukiṉṟanam vīraṉviṭu pukarveṅkaṇai palavum irikiṉṟaṉa paṭukiṉṟaṉa viruvōrpaka ḻiyumē.

Report an error

போரிவ்வகை புரிகின்றுழிப் புரைதீர்விறல் மகவான் தேரும்பொரு சிலையுங்கணை செறியாவமுஞ் சிதையா ஈரைம்பது சரமார்புற எய்தேயிகல் அவுணர் ஆரும்படி புகழும்படி ஆர்த்தான்அறம் பேர்த்தான்.

pōrivvakai purikiṉṟuḻip puraitīrviṟal makavāṉ tērumporu cilaiyuṅkaṇai ceṟiyāvamuñ citaiyā īraimpatu caramārpuṟa eytēyikal avuṇar ārumpaṭi pukaḻumpaṭi ārttāṉaṟam pērttāṉ.

Report an error

மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான் வீறானவை இழந்திட்டதும் விழிதீயுற நோக்கிச் சீறாச்சிலை வளையாக்கணை சிதறாவசை பலவுங் கூறாவெதிர் புகுந்தாரவன் துணையாமெழு குமரர்.

māṟākiya avuṇarkkiṟai valiyuntiṟal makavāṉ vīṟāṉavai iḻantiṭṭatum viḻitīyuṟa nōkkic cīṟāccilai vaḷaiyākkaṇai citaṟāvacai palavuṅ kūṟāvetir pukuntāravaṉ tuṇaiyāmeḻu kumarar.

Report an error

இடிகாலுறு முகிலாமென எழுவீரரும் ஏகிக் கடிதேமுனி வொடுசிந்திய கணையாவையும் விலக்கா விடமாகிய எரிமாமுகன் விறலோர்புய வரைமேல் வடிவார்கணை பலசிந்துபு மழையாமென மறைத்தான்.

iṭikāluṟu mukilāmeṉa eḻuvīrarum ēkik kaṭitēmuṉi voṭucintiya kaṇaiyāvaiyum vilakkā viṭamākiya erimāmukaṉ viṟalōrpuya varaimēl vaṭivārkaṇai palacintupu maḻaiyāmeṉa maṟaittāṉ.

Report an error

சகத்தானவர் புகழப்படு தலைவன்மகன் சரங்கள் மிகத்தான்விட மெலிவுற்றிடும் எழுவீரரும் வெய்யோன் முகத்தாயிரங் கரத்தாயிரம் உரத்தாயிரம் மொய்ம்பின் அகத்தாயிரங் கணைபாய்ச்சினர் அவன்றேரையும் அறுத்தார்.

cakattāṉavar pukaḻappaṭu talaivaṉmakaṉ caraṅkaḷ mikattāṉviṭa melivuṟṟiṭum eḻuvīrarum veyyōṉ mukattāyiraṅ karattāyiram urattāyiram moympiṉ akattāyiraṅ kaṇaipāycciṉar avaṉṟēraiyum aṟuttār.

Report an error

அறுத்திடும் எல்லையின் அழலின் மாமுகன் மறித்துமொர் தேரிடை வாவி வல்லைபோய் எறித்தரு கதிருடை யெழுவர் தம்மையுஞ் செறுத்தெரி விழித்திவை செப்பல் மேயினான்.

aṟuttiṭum ellaiyiṉ aḻaliṉ māmukaṉ maṟittumor tēriṭai vāvi vallaipōy eṟittaru katiruṭai yeḻuvar tammaiyuñ ceṟutteri viḻittivai ceppal mēyiṉāṉ.

Report an error

ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத் தென்றிசை மறலியார் தெவிட்ட நல்கியே வென்றிகொள் மொய்ம்புடை விடலை தன்னையுங் கொன்றிடு கின்றனன் என்று கூறினான்.

oṉṟoru paṭaiyiṉāl uṅkaḷ āviyait teṉṟicai maṟaliyār teviṭṭa nalkiyē veṉṟikoḷ moympuṭai viṭalai taṉṉaiyuṅ koṉṟiṭu kiṉṟaṉaṉ eṉṟu kūṟiṉāṉ.

Report an error

கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர் வேறுவே றடுகணை வீசி வெய்யவன் ஏறுதேர் தன்னையும் இவுளி தன்னையும் நூறினார் அவனுடல் நூழை யாக்கினார்.

kūṟupō tattiṉiṟ kumaraṉ tāṉaiyōr vēṟuvē ṟaṭukaṇai vīci veyyavaṉ ēṟutēr taṉṉaiyum ivuḷi taṉṉaiyum nūṟiṉār avaṉuṭal nūḻai yākkiṉār.

Report an error

ஆயது காலையில் அவுணன் வேறொரு பாயிருந் தேரிடைப் பாய்ந்து கண்ணுதல் தூயவன் படையினை எடுத்துத் துண்ணென நேயமொ டருச்சனை நிரப்பித் தூண்டினான்.

āyatu kālaiyil avuṇaṉ vēṟoru pāyirun tēriṭaip pāyntu kaṇṇutal tūyavaṉ paṭaiyiṉai eṭuttut tuṇṇeṉa nēyamo ṭaruccaṉai nirappit tūṇṭiṉāṉ.

Report an error

அடலெரி முகத்தினான் ஆதி நாயகன் படைதொட அன்னது படியும் வானமும் வடவையின் உருவமாய் வரலும் அச்செயல் விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார்.

aṭaleri mukattiṉāṉ āti nāyakaṉ paṭaitoṭa aṉṉatu paṭiyum vāṉamum vaṭavaiyiṉ uruvamāy varalum acceyal viṭalaikaḷ eḻuvarum vekuṇṭu nōkkiṉār.

Report an error

அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப் புனற்படை விடுக்குவ மென்று புந்திகொண் டினப்படு துணைவர்கள் யாரும் வாருண முனைப்டை தூண்டினர் முடியுஞ் செய்கையார்.

aṉaṟpaṭai aṉṉatāl ataṟku māṟatāp puṉaṟpaṭai viṭukkuva meṉṟu puntikoṇ ṭiṉappaṭu tuṇaivarkaḷ yārum vāruṇa muṉaipṭai tūṇṭiṉar muṭiyuñ ceykaiyār.

Report an error

தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை சேண்டொடர்ந் திடுதலும் தேவன் தீப்படை ஆண்டெதி ராகியே அவற்றை நுங்கிற்றால் ஈண்டொரு முனிகடல் ஏழும் உண்டென.

tūṇṭiya vāruṇat tollai māppaṭai cēṇṭoṭarn tiṭutalum tēvaṉ tīppaṭai āṇṭeti rākiyē avaṟṟai nuṅkiṟṟāl īṇṭoru muṉikaṭal ēḻum uṇṭeṉa.

Report an error

சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத் துலகுளோர் வெருவர ஊழி யான்படை வலியுட னேகிஏழ் வயவர் தம்மையும் மெலிவுசெய் துயிர்கொடு மீண்டு போயதே.

calapati paṭaikaḷait taṭintu vāymaṭut tulakuḷōr veruvara ūḻi yāṉpaṭai valiyuṭa ṉēkiēḻ vayavar tammaiyum melivucey tuyirkoṭu mīṇṭu pōyatē.

Report an error

மீண்டது போதலும் வீரர் அவ்விடை மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார் மூண்டிடு பொருங்கனல் முகத்தன் அங்கது காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான்.

mīṇṭatu pōtalum vīrar avviṭai māṇṭaṉar kayilaiyiṉ maruṅku pōyiṉār mūṇṭiṭu poruṅkaṉal mukattaṉ aṅkatu kāṇṭalum ārttaṉaṉ kaḷippil umparāṉ.

Report an error

ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும் மருங்குற நோக்கிய வயவெம் பூதர்கள் கரங்களை மறித்தனர் கலங்கி வாய்புடைத் திரங்கினர் வெருவினர் இந்து போயினார்.

oruṅkuṟa vīrarkaḷ ulantu vīṭalum maruṅkuṟa nōkkiya vayavem pūtarkaḷ karaṅkaḷai maṟittaṉar kalaṅki vāypuṭait tiraṅkiṉar veruviṉar intu pōyiṉār.

Report an error

நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா துற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வந் தெற்றென நோக்கினன் செயிர்த்து விம்மினான் வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே.

neṟṟiyil vīrartam viḷivu nīṅkalā tuṟṟiṭu pūtarkaḷ ulaintu cāyvan teṟṟeṉa nōkkiṉaṉ ceyirttu vimmiṉāṉ veṟṟiyiṉ kiḻavaṉām vīra vākuvē.

Report an error

வீரமொய்ம் புடையவன் வெருவ ரெனப் பாரிடக் கணங்களைப் பாணி யாலமைத் தோரிறை முன்னரே ஒருதன் தேரொடும் ஆரழல் முகத்தன்முன் அணுகப் போயினான் .

vīramoym puṭaiyavaṉ veruva reṉap pāriṭak kaṇaṅkaḷaip pāṇi yālamait tōriṟai muṉṉarē orutaṉ tēroṭum āraḻal mukattaṉmuṉ aṇukap pōyiṉāṉ .

Report an error

போய்க்குறு குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின் வீக்கிய கனைகழல் வீர வாகுவைத் தாக்கெரி முகமுடைத் தறுகண் வெய்யவன் நோக்கினன் வெகுண்டிவை நுவறல் செய்குவான்.

pōykkuṟu kuṟṟuḻip porunart tēyttaliṉ vīkkiya kaṉaikaḻal vīra vākuvait tākkeri mukamuṭait taṟukaṇ veyyavaṉ nōkkiṉaṉ vekuṇṭivai nuvaṟal ceykuvāṉ.

Report an error

எதிரா கியபூ தரைஏ னையரை மதியேன் நினையே அடவந் தனன்நீ அதுகா லையின்இங் ஙன்அடைந் தினையால் விதியே உனைஎன் முன்விடுத் ததுவே.

etirā kiyapū taraiē ṉaiyarai matiyēṉ niṉaiyē aṭavan taṉaṉnī atukā laiyiṉiṅ ṅaṉaṭain tiṉaiyāl vitiyē uṉaieṉ muṉviṭut tatuvē.

Report an error

கொன்றாய் பலரைக் கொடுவெஞ் சமரின் வென்றாய் பலரை மிகைசெய் தனையாய் நின்றாய் வருவாய் நினதா யிருருக் கின்ற குவதோ இறுதிப் பகலே.

koṉṟāy palaraik koṭuveñ camariṉ veṉṟāy palarai mikaicey taṉaiyāy niṉṟāy varuvāy niṉatā yiruruk kiṉṟa kuvatō iṟutip pakalē.

Report an error

முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல் என்னைக் கருதேல் இனிஓ ரிறையில் உன்னைக் தலைகொய் தொருவன் னியையும் மன்னர்க் கிறைசே வடிவைத்தி திடுவேன்.

muṉṉarp porutē murivuṟ ṟavarpōl eṉṉaik karutēl iṉiō riṟaiyil uṉṉaik talaikoy toruvaṉ ṉiyaiyum maṉṉark kiṟaicē vaṭivaitti tiṭuvēṉ.

Report an error

பூண்பால் முலைமா தர்புணர்ச் சியெனும் ஆண்போர் தனிலே வலியற் றழியும் ஆண்பால் ஒருவன் அவனே அலனோ ஏண்பால் உனையர்இவண்வென் றிலனேல்.

pūṇpāl mulaimā tarpuṇarc ciyeṉum āṇpōr taṉilē valiyaṟ ṟaḻiyum āṇpāl oruvaṉ avaṉē alaṉō ēṇpāl uṉaiyarivaṇveṉ ṟilaṉēl.

Report an error

என்னா எதிரா இவையொப் பனசொற் சொன்னான் அதுகேட் டிடுதொல் விறலோன் பொன்னார் தருசெங் கைபுடைத் துநகைத் தொன்னான் முகநோக் கியுரைத் திடுவான்.

eṉṉā etirā ivaiyop paṉacoṟ coṉṉāṉ atukēṭ ṭiṭutol viṟalōṉ poṉṉār taruceṅ kaipuṭait tunakait toṉṉāṉ mukanōk kiyurait tiṭuvāṉ.

Report an error

முளையார் தரும்பொன் னவன்முந் துசமர் விளையா வடிவந் தனைவிட் டகலா வளையார் புனல்புக் கனன்அன் னவனுக் கிளையாய் ஒருநீ எவணுய் குதியோ.

muḷaiyār tarumpoṉ ṉavaṉmun tucamar viḷaiyā vaṭivan taṉaiviṭ ṭakalā vaḷaiyār puṉalpuk kaṉaṉaṉ ṉavaṉuk kiḷaiyāy orunī evaṇuy kutiyō.

Report an error

மூண்டார் அமர்செய் திடுமொய்ம் பரெலாம் மாண்டார் கதிரோன் பகைமற் ரொருவன் மீண்டான் அவனும் விளிவுற் றிடுநீ ஈண்டா ருயிர்தோற் றிடவே கினையோ.

mūṇṭār amarcey tiṭumoym parelām māṇṭār katirōṉ pakaimaṟ roruvaṉ mīṇṭāṉ avaṉum viḷivuṟ ṟiṭunī īṇṭā ruyirtōṟ ṟiṭavē kiṉaiyō.

Report an error

வீடிச் செருவில் விளிவா குதியோ பேடித் தொழில்கற் றிடுபிள் ளையென ஓடிக் கடல்புக் குயிருய் குதியோ நாடிக் கடிதொன் றைநவிற் றுதியே.

vīṭic ceruvil viḷivā kutiyō pēṭit toḻilkaṟ ṟiṭupiḷ ḷaiyeṉa ōṭik kaṭalpuk kuyiruy kutiyō nāṭik kaṭitoṉ ṟainaviṟ ṟutiyē.

Report an error

பார்காத் திடினும் பலதா னவரும் நேர்காத் திடினும் நிலைபெற் றழியாச் சூர்காத் திடினுந் தொலைவில் விறலோர் ஆர்காத் திடினும் அடுவேன் உனையே.

pārkāt tiṭiṉum palatā ṉavarum nērkāt tiṭiṉum nilaipeṟ ṟaḻiyāc cūrkāt tiṭiṉun tolaivil viṟalōr ārkāt tiṭiṉum aṭuvēṉ uṉaiyē.

Report an error

என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங் குன்றன் னசினத் தழல்கொம் மெனவே சென்றுள் ளமலைத் துழிதீ முகவன் வன்றிண் சிலையொன் றைவளைத் தனனே.

eṉṟiṅ kivaivī raṉicait tiṭaluṅ kuṉṟaṉ ṉaciṉat taḻalkom meṉavē ceṉṟuḷ ḷamalait tuḻitī mukavaṉ vaṉṟiṇ cilaiyoṉ ṟaivaḷait taṉaṉē.

Report an error

நடுத்தான்அகன் றிடுசூர்மகன் நாணோதையைச் சிலைநின் றெடுத்தான்எடுத் தலும்வெய்யவன் இரவோனுடன் இரிந்தான் உடுத்தான்உதிர்ந் தனசேடனும் உலைந்தான்உல கனைத்துங் கெடுத்தான்இவ னெனவானவார் கிளையோடின அன்றே.

naṭuttāṉakaṉ ṟiṭucūrmakaṉ nāṇōtaiyaic cilainiṉ ṟeṭuttāṉeṭut talumveyyavaṉ iravōṉuṭaṉ irintāṉ uṭuttāṉutirn taṉacēṭaṉum ulaintāṉula kaṉaittuṅ keṭuttāṉiva ṉeṉavāṉavār kiḷaiyōṭiṉa aṉṟē.

Report an error

அக்காலையின் முகமாறுடை அமலன்றனக் கன்பன் கைக்கார்முகம் இருகால்வளைத் தொருகாலொலி காட்டத் திக்கானன முடையான்முதல் தேவாசுரர் துளங்கி இக்காலம தோபார்முழு திறுங்காலம தென்றார்

akkālaiyiṉ mukamāṟuṭai amalaṉṟaṉak kaṉpaṉ kaikkārmukam irukālvaḷait torukāloli kāṭṭat tikkāṉaṉa muṭaiyāṉmutal tēvācurar tuḷaṅki ikkālama tōpārmuḻu tiṟuṅkālama teṉṟār

Report an error

என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன் ஈஅருழ் கொன்னார்கணை விடுத்தார்த்தனன் குறுகுற்றது வருமுன் மின்னாமெனப் பதினாற்கணை விடுத்தேயவை விலக்கிப் பொன்னார்தரு திறல்மொய்ம்பினன் புயலேறெனத் தெழித்தான்.

eṉṉāvicait tiṭumellaiyil erimāmukaṉ īaruḻ koṉṉārkaṇai viṭuttārttaṉaṉ kuṟukuṟṟatu varumuṉ miṉṉāmeṉap patiṉāṟkaṇai viṭuttēyavai vilakkip poṉṉārtaru tiṟalmoympiṉaṉ puyalēṟeṉat teḻittāṉ.

Report an error

செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன் ஐஞ்ஞான்கெனுந் தொகைபெற்றிடும் அயில்வெங்கணை தொடுப்ப எஞ்ஞான்றுமுற் றிடுசீர்த்தியன் இருபான்கணை துரந்து மைஞ்ஞான்றிடு முகில்மேற்செலு மருத்தாமெனத் தடுத்தான்.

ceññāyiṟu katirkāṉṟeṉat tīmāmukat tavuṇaṉ aiññāṉkeṉun tokaipeṟṟiṭum ayilveṅkaṇai toṭuppa eññāṉṟumuṟ ṟiṭucīrttiyaṉ irupāṉkaṇai turantu maiññāṉṟiṭu mukilmēṟcelu maruttāmeṉat taṭuttāṉ.

Report an error

கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து புண்டங்கிய தனிவேலுடைப் புனிதன்றன் திளவல் முண்டம்புக உய்த்தேதிறல் முதுவால்வளை அதனை அண்டங்கிழ படஊதினன் அவுணப்படை புகழ.

kaṇṭaṅkatu kaṉalmāmukaṉ kaṇaiyāyiran turantu puṇṭaṅkiya taṉivēluṭaip puṉitaṉṟaṉ tiḷaval muṇṭampuka uyttētiṟal mutuvālvaḷai ataṉai aṇṭaṅkiḻa paṭaūtiṉaṉ avuṇappaṭai pukaḻa.

Report an error

ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண் ஓராயிரம் வடிவாளிகள் ஒருங்கேதொடுத் துய்த்துச் சூராகிய அவுணன்தரு தொல்லைத்தனி மைந்தன் தேரானதும் பரியானதும் சிலையானதுஞ் சிதைத்தான்.

ārārum viyakkuntiṟal aṭalmoympiṉaṉ aṅkaṇ ōrāyiram vaṭivāḷikaḷ oruṅkētoṭut tuyttuc cūrākiya avuṇaṉtaru tollaittaṉi maintaṉ tērāṉatum pariyāṉatum cilaiyāṉatuñ citaittāṉ.

Report an error

சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக் கதையொன்றினை விடுத்தான்எரி கனல்மாமுகன் அதன்மேல் குதையொன்றினைத் துரந்தேயருட் குமரேசனுக் கிளையோன் சுதையொன்றியக் களத்தேவிழத் துண்டம்பல கண்டான்.

citaiyumpoḻu tayalvēṟoru tēriṉmicaip pāyāk kataiyoṉṟiṉai viṭuttāṉeri kaṉalmāmukaṉ ataṉmēl kutaiyoṉṟiṉait turantēyaruṭ kumarēcaṉuk kiḷaiyōṉ cutaiyoṉṟiyak kaḷattēviḻat tuṇṭampala kaṇṭāṉ.

Report an error

மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன் காற்றோன்படை துரக்கின்றுழ இவனும்மது கடவக் கூற்றோன்படை தொடுத்தானவன் குமரன்றனக் கிளையோன் வேற்றோர்படை துரந்திட்டிலன் அதுவேசெல விட்டான்.

māṟṟōrcilai yiṉaivāṅki vaḷaittēkaṉal mukattōṉ kāṟṟōṉpaṭai turakkiṉṟuḻa ivaṉummatu kaṭavak kūṟṟōṉpaṭai toṭuttāṉavaṉ kumaraṉṟaṉak kiḷaiyōṉ vēṟṟōrpaṭai turantiṭṭilaṉ atuvēcela viṭṭāṉ.

Report an error

மாகத்தறு கதிர்வெம்படை மன்னன்தரு மதலை வேகத்தினில் விடவாங்கது விடுத்தேயது விலக்கி நாகத்தமர் கறைநீவிய நவிகூரிய கணைநூ றாகத்திடை படவேதுரந் தடல்மொய்ம்பினன் ஆர்த்தான்.

mākattaṟu katirvempaṭai maṉṉaṉtaru matalai vēkattiṉil viṭavāṅkatu viṭuttēyatu vilakki nākattamar kaṟainīviya navikūriya kaṇainū ṟākattiṭai paṭavēturan taṭalmoympiṉaṉ ārttāṉ.

Report an error

தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள் மருமத்தினிற் படுகின்றுழி வானோரமு தருந்தும் கருமத்தினில் விரவிக்கடல் கடையக்கவிழ்ந் திட்ட பெருமத்தென நிலைசோர்ந்துதன் பெருந்தேர்மிசை வீழ்ந்தான்.

tarumattiyal niṟuvuṟṟiṭu takkōṉviṭu caraṅkaḷ marumattiṉiṟ paṭukiṉṟuḻi vāṉōramu taruntum karumattiṉil viravikkaṭal kaṭaiyakkaviḻn tiṭṭa perumatteṉa nilaicōrntutaṉ peruntērmicai vīḻntāṉ.

Report an error

விழுகின்றதொ ரெரிமாமுகன் வியன்மார்பெனும் வரைநின் றிழிகின்றன நதியாமென எருவைப்புனல் உயிரும் ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம் அழிகின்றது வருமந்தகன் அச்சுற்றனன் அணுக.

viḻukiṉṟato rerimāmukaṉ viyaṉmārpeṉum varainiṉ ṟiḻikiṉṟaṉa natiyāmeṉa eruvaippuṉal uyirum oḻikiṉṟatu varukiṉṟatu lāvuṟṟatu tēṟṟam aḻikiṉṟatu varumantakaṉ accuṟṟaṉaṉ aṇuka.

Report an error

விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூர்உரும் ஏற்றால் நெளிந்தாடர வசைந்தாலென நெடுந்தேர்மிசைப் பெயராத் தெளிந்தாயிடை யிரங்கிப்பொரு திறல்வன்மைய திலனாய் எளிந்தான்எளிந் திடுகின்றவன் இத்தன்மைசிந் தித்தான்.

viḷintāṉeṉa mayaṅkuṟṟavaṉ veñcūrurum ēṟṟāl neḷintāṭara vacaintāleṉa neṭuntērmicaip peyarāt teḷintāyiṭai yiraṅkipporu tiṟalvaṉmaiya tilaṉāy eḷintāṉeḷin tiṭukiṉṟavaṉ ittaṉmaicin tittāṉ.

Report an error

மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான் அழிபட்டிடின் வருவாயென அந்நாட்சிறு காலைப் பழிபட்டிடும் வெறியாட்டினைப் பயின்றேபலி யூட்டி வழிபட்டதன் நகர்க்காளியை மனத்தின்மிசை நினைத்தான்.

moḻipaṭṭiṭu tiṟalmāṟṟalar muṉaiveñcerut taṉilyāṉ aḻipaṭṭiṭiṉ varuvāyeṉa annāṭciṟu kālaip paḻipaṭṭiṭum veṟiyāṭṭiṉaip payiṉṟēpali yūṭṭi vaḻipaṭṭataṉ nakarkkāḷiyai maṉattiṉmicai niṉaittāṉ.

Report an error

விஞ்சுந் தொல்விறல் மேவு சூர்தரு மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும் நஞ்சுந துண்ணென நண்ணு காளிதன் நெஞ்சந் தன்னில் நினைத்தல் மேயினாள்.

viñcun tolviṟal mēvu cūrtaru maiñcaṉ taṉṉai maṉattil uṉṉalum nañcuna tuṇṇeṉa naṇṇu kāḷitaṉ neñcan taṉṉil niṉaittal mēyiṉāḷ.

Report an error

சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள் சூலங் கொண்ட லமர்ந்த தோளினாள் கோலம் பெற்ற குலிங்க வேணியாள் கோலம் பெற்ற குறுங்கொ லைக்கணாள்.

cūlaṅ koṇṭa lamarntu tōṉṟuvāḷ cūlaṅ koṇṭa lamarnta tōḷiṉāḷ kōlam peṟṟa kuliṅka vēṇiyāḷ kōlam peṟṟa kuṟuṅko laikkaṇāḷ.

Report an error

போதங் கொன்று பொறாமை மிக்குளாள் போதங் கொன்று பொலஞ்செய் தாளினாள் ஏதந் தீர்ந்திடும் எண்ண லார்சிரம் ஏதந் தீர்ந்திடும் ஏம வாளினாள்.

pōtaṅ koṉṟu poṟāmai mikkuḷāḷ pōtaṅ koṉṟu polañcey tāḷiṉāḷ ētan tīrntiṭum eṇṇa lārciram ētan tīrntiṭum ēma vāḷiṉāḷ.

Report an error

சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள் சங்கா ரத்தணி தந்த செங்கையாள் உங்கா ரத்தின் உரத்த ஆடையாள் உங்கா ரத்தின் உரப்பும் ஓதையாள்.

caṅkā rattaṇi tāṅku koṅkaiyāḷ caṅkā rattaṇi tanta ceṅkaiyāḷ uṅkā rattiṉ uratta āṭaiyāḷ uṅkā rattiṉ urappum ōtaiyāḷ.

Report an error

ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும் ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள் காலத் தீயர்க ளிற்றின் மேலையோர் காலத் தீயர் கலங்கு காட்சியாள்.

ñālat tēvarum nākar vēntarum ñālat tēvarum ētta naṇṇuvāḷ kālat tīyarka ḷiṟṟiṉ mēlaiyōr kālat tīyar kalaṅku kāṭciyāḷ.

Report an error

அஞ்சத் தானடி யான வானவர் அஞ்சத் தானடி பேர்த்து லாவுவாள் நஞ்சத் தானவர் நைய வெம்மைசெய் நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள்.

añcat tāṉaṭi yāṉa vāṉavar añcat tāṉaṭi pērttu lāvuvāḷ nañcat tāṉavar naiya vemmaicey nañcat tāṉavar cuṟṟam nalkuvāḷ.

Report an error

அங்கத் தன்மை யளாய மர்ந்திடும் அங்கத் தன்மை யளாய் காளிமால் சிங்கத் தேறிய செல்வன் மைந்தன்முன் சிங்கத் தேறினள் செல்லல் மேயினாள்.

aṅkat taṉmai yaḷāya marntiṭum aṅkat taṉmai yaḷāy kāḷimāl ciṅkat tēṟiya celvaṉ maintaṉmuṉ ciṅkat tēṟiṉaḷ cellal mēyiṉāḷ.

Report an error

வில்லுச் சூலம் வியன்ம ழுக்கதை எல்லைப் பல்படை யாவை யுங்கொளா மல்லற் காளிகள் மாப்பெ ரும்படை செல்லக் கூறி செறிந்து சூழ்தர.

villuc cūlam viyaṉma ḻukkatai ellaip palpaṭai yāvai yuṅkoḷā mallaṟ kāḷikaḷ māppe rumpaṭai cellak kūṟi ceṟintu cūḻtara.

Report an error

மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற வேதக் கூளிகள் ஏறு கேதனம் ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம் மேதக் கோசை மிகுத்து மேவவே.

mūtak kārppoṭu viṇṇai muṭṭuṟa vētak kūḷikaḷ ēṟu kētaṉam ūtac caṅkam oḻinta palliyam mētak kōcai mikuttu mēvavē.

Report an error

விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்தயர் எரிமுக மதலையை எய்தி நோக்கியான் உரமிகும் ஒன்னலர் உயிரை உண்பன்நீ பரிவுறல் என்றனள் அமைத்த பாணியாள்.

viraivoṭu paṟantalai mēvi vīḻntayar erimuka matalaiyai eyti nōkkiyāṉ uramikum oṉṉalar uyirai uṇpaṉnī parivuṟal eṉṟaṉaḷ amaitta pāṇiyāḷ.

Report an error

இவ்வகை அருளியே இளவல் பாற்படும் தெய்வதப் பூதர்தஞ் சேனை மேற்செலாக் கவ்வைகொள் செருத்தொழில் கருதி ஆர்த்தனள் ஐவகைப் பூதமும் அச்சங் கொள்ளவே.

ivvakai aruḷiyē iḷaval pāṟpaṭum teyvatap pūtartañ cēṉai mēṟcelāk kavvaikoḷ ceruttoḻil karuti ārttaṉaḷ aivakaip pūtamum accaṅ koḷḷavē.

Report an error

ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்தென ஆர்த்திடும் எல்லையில் அடல்வெம் பூதரும் வேர்த்தனர் அழுங்கினர் மேற்சென் றேற்றனர் வேர்த்தனர் அழுங்கினர் விண்ணு ளோரெலாம்.

ārttiṭum ellaiyil aḷakkar cūḻnteṉa ārttiṭum ellaiyil aṭalvem pūtarum vērttaṉar aḻuṅkiṉar mēṟceṉ ṟēṟṟaṉar vērttaṉar aḻuṅkiṉar viṇṇu ḷōrelām.

Report an error

காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம் வாளிகள் சிந்தினர் வரைநெ டுந்தரு நீளிகள் எழுக்கதை நேமி இன்னன கூளிகள் வீசினர் குறுகிப் போர்செய்தார்.

kāḷikaḷ cūlamvēl kaṇicci kārmukam vāḷikaḷ cintiṉar varaine ṭuntaru nīḷikaḷ eḻukkatai nēmi iṉṉaṉa kūḷikaḷ vīciṉar kuṟukip pōrceytār.

Report an error

அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள் எத்திறத் தவரையும் ஈறு செய்கெனாக் கைத்தலத் திருந்ததோர் கழுமுள் வீசினாள் பத்திரை தன்னருள் படைத்த காளியே.

attiṟaṉ nōkkiyē āṭaṟ pūtarkaḷ ettiṟat tavaraiyum īṟu ceykeṉāk kaittalat tiruntatōr kaḻumuḷ vīciṉāḷ pattirai taṉṉaruḷ paṭaitta kāḷiyē.

Report an error

வீசிய முத்தலை வெய்ய வேற்படை காய்சின எரிபுகை கான்று காளிகள் மாசகல் உருப்பல வகுத்துப் பாரிடர் பாசன மருளுறப் படர்தல் உற்றதே.

vīciya muttalai veyya vēṟpaṭai kāyciṉa eripukai kāṉṟu kāḷikaḷ mācakal uruppala vakuttup pāriṭar pācaṉa maruḷuṟap paṭartal uṟṟatē.

Report an error

சண்டிகை விடுபடை தனது வன்மையைக் கண்டனன் இளையவன் கணங்கள் ஆருயிர் உண்டிடும் இஃதென உன்னி யேழிரு புண்டரு சிலீமுகம் பொள்ளென் றேவினான்.

caṇṭikai viṭupaṭai taṉatu vaṉmaiyaik kaṇṭaṉaṉ iḷaiyavaṉ kaṇaṅkaḷ āruyir uṇṭiṭum iḵteṉa uṉṉi yēḻiru puṇṭaru cilīmukam poḷḷeṉ ṟēviṉāṉ.

Report an error

தீக்கலுழ் வேலினான் செலுத்தும் ஆசுகம் மேக்குறு முத்தலை வேலை நுண்டுகள் ஆக்கிய தாக்கலும் அனைய தன்மையை நோக்கினள் காளியென் றைக்கும் நோன்மையாள்.

tīkkaluḻ vēliṉāṉ celuttum ācukam mēkkuṟu muttalai vēlai nuṇṭukaḷ ākkiya tākkalum aṉaiya taṉmaiyai nōkkiṉaḷ kāḷiyeṉ ṟaikkum nōṉmaiyāḷ.

Report an error

துண்ணென யான்விடு சூலந் தன்னையும் அண்ணலம் பகழியால் அறுத்தென் னாற்றலை எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கவன் உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள்.

tuṇṇeṉa yāṉviṭu cūlan taṉṉaiyum aṇṇalam pakaḻiyāl aṟutteṉ ṉāṟṟalai eṇṇalaṉ niṟpaṉāl iṉṉum aṅkavaṉ uṇṇikaḻ uyiriṉai uṇkuvēṉ eṉṟāḷ.

Report an error

என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற நின்றிடு சேனையங் கடலை நீக்கியே வென்றிடு வயப்புலி மிசைககொண் டார்த்திடாச் சென்றனள் வீரன்முன் செப்பல் மேயினாள்.

eṉṟiṭu kāḷiyō rimaippiṉ muntuṟa niṉṟiṭu cēṉaiyaṅ kaṭalai nīkkiyē veṉṟiṭu vayappuli micaikakoṇ ṭārttiṭāc ceṉṟaṉaḷ vīraṉmuṉ ceppal mēyiṉāḷ.

Report an error

முன்னுற யான்விடு மூவி லைப்படை தன்னைவெங் கணைகளால் தடுத்து நின்றனை இன்னுமொர் சூலமுண் டெறிவன் வீகுதி அன்னது காத்திடல் அரிது காணென்றாள்.

muṉṉuṟa yāṉviṭu mūvi laippaṭai taṉṉaiveṅ kaṇaikaḷāl taṭuttu niṉṟaṉai iṉṉumor cūlamuṇ ṭeṟivaṉ vīkuti aṉṉatu kāttiṭal aritu kāṇeṉṟāḷ.

Report an error

என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங் கொன்றல ஆயிரம் ஒருங்கு வீசினும் நின்றவை முழுவதும் நீறு செய்வனென் வன்றிறல் தெரிந்திலை மாதுநீ யென்றான்.

eṉṟalum muṟuvalcey tilaṅku cūlamāṅ koṉṟala āyiram oruṅku vīciṉum niṉṟavai muḻuvatum nīṟu ceyvaṉeṉ vaṉṟiṟal terintilai mātunī yeṉṟāṉ.

Report an error

கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ் செற்றம தாகியே தெழித்துச் சண்டிகை மற்றுமொர் சூலவேல் வல்லை வீசினாள் சுற்றிய பாரிடத் தொகுதி யுட்கவே.

koṟṟamoym piṉaṉivai kūṟak kēṭṭuḷañ ceṟṟama tākiyē teḻittuc caṇṭikai maṟṟumor cūlavēl vallai vīciṉāḷ cuṟṟiya pāriṭat tokuti yuṭkavē.

Report an error

அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென் றரிந்தனர் பணியெனா இன்னும் இந்துவும் வருந்தினர் சூலமுன் வந்த தன்மையைத் தெரிந்தனன் வீரமொய்ம் புடைய செம்மலே.

aruntiṟal amararkaḷ atukol ālameṉ ṟarintaṉar paṇiyeṉā iṉṉum intuvum varuntiṉar cūlamuṉ vanta taṉmaiyait terintaṉaṉ vīramoym puṭaiya cemmalē.

Report an error

எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ கைப்படு நெட்டிரும் பகழிகள் நிகரத் தூண்டியே அட்டனன் துணிபட அரியின் மேலவள் தொட்டிட வருவதோர் சூலந் தன்னையே.

eṭṭuṭaṉ iraṇṭunū ṟeṉunto kaippaṭu neṭṭirum pakaḻikaḷ nikarat tūṇṭiyē aṭṭaṉaṉ tuṇipaṭa ariyiṉ mēlavaḷ toṭṭiṭa varuvatōr cūlan taṉṉaiyē.

Report an error

எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ் செறுத்தனள் இங்கிவன் சிரத்தை வாளினால் அறுத்துதி ரப்புனல் சுவைத்திட் டாவியைப் பறித்திடு வேனெனப் பகர்ந்திட் டாளரோ.

eṟittaru cūlama tiṟṟu vīḻtaluñ ceṟuttaṉaḷ iṅkivaṉ cirattai vāḷiṉāl aṟuttuti rappuṉal cuvaittiṭ ṭāviyaip paṟittiṭu vēṉeṉap pakarntiṭ ṭāḷarō.

Report an error

நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன் வாலுளை மடங்கனன் இருத்தல் மாண்பொரீஇப் பாலுறு திரைக்கடற் பரப்பை விட்டகல் ஆலம தாமென ஆர்த்திட் டேகினாள்.

nāliru tōḷuṭai naṅkai tōṉṟalmuṉ vāluḷai maṭaṅkaṉaṉ iruttal māṇporīip pāluṟu tiraikkaṭaṟ parappai viṭṭakal ālama tāmeṉa ārttiṭ ṭēkiṉāḷ.

Report an error

ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர் கூர்த்திடும் வாட்படை கொண்டு கொம்மெனத் தீர்த்தனுக் கினியதோர் செம்மல் நிற்புறுந் தார்த்தடந் தேர்மிசைத் தனிவந் தெய்தினாள்.

ārttiṭu caṇṭikai aṅkai taṉṉilōr kūrttiṭum vāṭpaṭai koṇṭu kommeṉat tīrttaṉuk kiṉiyatōr cemmal niṟpuṟun tārttaṭan tērmicait taṉivan teytiṉāḷ.

Report an error

நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை பூண்டுளான் தாக்கணங் காம்இவள் தன்ன தாவியை நீக்குதல் செய்வது நீர்மைத் தன்றெனாத் தூக்கினன் அவள்வலி தொலைக்க உன்னுவான்.

nōkkiṉaṉ moympiṉāṉ nōṉmai pūṇṭuḷāṉ tākkaṇaṅ kāmivaḷ taṉṉa tāviyai nīkkutal ceyvatu nīrmait taṉṟeṉāt tūkkiṉaṉ avaḷvali tolaikka uṉṉuvāṉ.

Report an error

இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும் ஒடித்தன னாமென ஒருகை யாலுறப் பிடித்தனன் மற்றொரு பெருங்கை யாலுரத் தடித்தனன் காளிவீழ்ந் தவச மாயினாள்.

iṭitteṉa urappiṉaṉ eṇkai taṉṉaiyum oṭittaṉa ṉāmeṉa orukai yāluṟap piṭittaṉaṉ maṟṟoru peruṅkai yālurat taṭittaṉaṉ kāḷivīḻn tavaca māyiṉāḷ.

Report an error

கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும் உரங்கிழி வுற்றனள் உமிழ்ந்த சோரிநீர் தரங்கம தெறிகடல் தன்னைப் போன்றுலாய் இரங்கிய தவள்துயர் யாவர் கூறுவார்.

karaṅkoṭu cēvakaṉ kalleṉ ṟeṟṟalum uraṅkiḻi vuṟṟaṉaḷ umiḻnta cōrinīr taraṅkama teṟikaṭal taṉṉaip pōṉṟulāy iraṅkiya tavaḷtuyar yāvar kūṟuvār.

Report an error

எண்கையும் ஒருகையால் ஏந்தல் பற்றியோர் ஒண்கையின் நீலிதன் உரத்தில் எற்றலும் மண்கிழி வுற்றன வரைகள் கீண்டன விண்கிளர் அண்டபித் திகையும் விண்டதே.

eṇkaiyum orukaiyāl ēntal paṟṟiyōr oṇkaiyiṉ nīlitaṉ urattil eṟṟalum maṇkiḻi vuṟṟaṉa varaikaḷ kīṇṭaṉa viṇkiḷar aṇṭapit tikaiyum viṇṭatē.

Report an error

திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல் வரைபெறு தனதுமெய் மறைத்த லால்துயர்க் கரைபெறல் இல்லவள் காளி என்றுமுன் உரைபெறு பெயரையும் ஒழிவுற் றாளரோ.

tiraipeṟu kaṭaleṉak kāṉṟa cempuṉal varaipeṟu taṉatumey maṟaitta lāltuyark karaipeṟal illavaḷ kāḷi eṉṟumuṉ uraipeṟu peyaraiyum oḻivuṟ ṟāḷarō.

Report an error

இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின ஐவகை உணர்ச்சியும் அனாதி யானவுஞ் செவ்விது தொன்மைபோற் சேரச் சூர்மகள் வெவ்வலி இழந்துகண் விழித்து விம்மினாள்.

ivvakai avacamāy impar vīḻntapiṉa aivakai uṇarcciyum aṉāti yāṉavuñ cevvitu toṉmaipōṟ cērac cūrmakaḷ vevvali iḻantukaṇ viḻittu vimmiṉāḷ.

Report an error

ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது நீண்மய லானது நினைந்து நெஞ்சிடை நாண்மலி வுற்றனள் நடுங்கும் ஆவியாள்.

āṇmaiyiṉ mēlavaṉ akalat teṟṟiṭa ēṇmaiyum vīramum iḻantu vīḻntatu nīṇmaya lāṉatu niṉaintu neñciṭai nāṇmali vuṟṟaṉaḷ naṭuṅkum āviyāḷ.

Report an error

அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால் வந்தவ னொடுபொரின் வாகை எய்துமோ புந்தியி லாதிவட் புக்க னன்எனாச் சிந்தைசெய் தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள்.

antamil aṟumukat tamalaṉ ēvalāl vantava ṉoṭuporiṉ vākai eytumō puntiyi lātivaṭ pukka ṉaṉeṉāc cintaicey teḻuntaṉaḷ vaṉmai tīrntuḷāḷ.

Report an error

இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர்நகத் தகழ்ந்துயி ருண்டிடும் அணங்கு தேர்மிசைத் திகழ்ந்தனன் நின்றிடு திறலி னான்றனைப் புகழ்ந்தனள் இனையன புகல்வ தாயினாள்.

ikaḻntavar urattiṉai ikaḻntu kūrnakat takaḻntuyi ruṇṭiṭum aṇaṅku tērmicait tikaḻntaṉaṉ niṉṟiṭu tiṟali ṉāṉṟaṉaip pukaḻntaṉaḷ iṉaiyaṉa pukalva tāyiṉāḷ.

Report an error

கன்றிய கற்புடைக் கனலி மாமுகன் இன்றெனை அருச்சனை இயற்றி ஏத்தியே ஒன்றல வுயிர்ப்பலி யுதவி வேண்டினான் நன்றிய தயர்த்திலன் நானிங் கெய்தினேன்.

kaṉṟiya kaṟpuṭaik kaṉali māmukaṉ iṉṟeṉai aruccaṉai iyaṟṟi ēttiyē oṉṟala vuyirppali yutavi vēṇṭiṉāṉ naṉṟiya tayarttilaṉ nāṉiṅ keytiṉēṉ.

Report an error

உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ் சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்துறீஇ நின்னுடன் இகலியிந் நிலைமை யாயின இன்னினி ஏகுவன் இருந்த தொல்லிடை.

uṉṉuṭai vaṉmaiyum uṉatu vīramuñ ciṉṉamum uṇarntilaṉ ceruviṉ muntuṟīi niṉṉuṭaṉ ikaliyin nilaimai yāyiṉa iṉṉiṉi ēkuvaṉ irunta tolliṭai.

Report an error

கறுத்தினி வல்லையில் கனன்மு கத்தனை ஒறுத்துயிர் உண்குதி ஒழிந்து ளாரையும் அறுத்தனை நிற்குதி அலரி தன்னைமுன் செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மல்நீ.

kaṟuttiṉi vallaiyil kaṉaṉmu kattaṉai oṟuttuyir uṇkuti oḻintu ḷāraiyum aṟuttaṉai niṟkuti alari taṉṉaimuṉ ceṟuttavaṉ taṉṉaiyum aṭuti cemmalnī.

Report an error

அடையலர் தம்மைவென் றாறு மாமுகம் உடையவன் கருணைபெற் றுவகை மேவுதி நெடிதுபல் லூழியும் நீடி வாழ்தியால் கடைமுறை இவையெலாங் காண்டி நீயென்றாள்.

aṭaiyalar tammaiveṉ ṟāṟu māmukam uṭaiyavaṉ karuṇaipeṟ ṟuvakai mēvuti neṭitupal lūḻiyum nīṭi vāḻtiyāl kaṭaimuṟai ivaiyelāṅ kāṇṭi nīyeṉṟāḷ.

Report an error

இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர் வித்தகன் விடைகொடு மீண்டு கோளரிச் சித்திர வெருத்தமேற் சேர்ந்து தொல்படை மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி.

ittiṟam yōkiṉi icaittu veñcamar vittakaṉ viṭaikoṭu mīṇṭu kōḷaric cittira veruttamēṟ cērntu tolpaṭai moyttiṭap pōyiṉaḷ muntu vantuḻi.

Report an error

சண்டிகை போந்த காலைத் தழல்முகன் அனைய வெல்லாங் கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வன தாற்றல் என்னாத் திண்டிறல் ஆற்றல் சான்று சேண்கிடந் துருமுக் கான்று கொண்டல தெழுந்தா லென்னக் கொம்மென எழுந்து சொல்வான்.

caṇṭikai pōnta kālait taḻalmukaṉ aṉaiya vellāṅ kaṇṭaṉaṉ vekuṇṭu naṉṟik kaḷvaṉa tāṟṟal eṉṉāt tiṇṭiṟal āṟṟal cāṉṟu cēṇkiṭan turumuk kāṉṟu koṇṭala teḻuntā leṉṉak kommeṉa eḻuntu colvāṉ.

Report an error

கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி ஒன்றுதன் னகடுதூரா துலப்புறாப் பசிநோய் மிக்குச் சென்றிடு காளி யாலோ தெவ்வர்தஞ் செருவை யான்முன் வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டு மோதான்.

koṉṟuyir palavum nuṅkik kurutiyum vaṭiyum mānti oṉṟutaṉ ṉakaṭutūrā tulappuṟāp pacinōy mikkuc ceṉṟiṭu kāḷi yālō tevvartañ ceruvai yāṉmuṉ veṉṟaṉaṉ cūraṉ cēykkut tuṇaikaḷum vēṇṭu mōtāṉ.

Report an error

சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக் கோலமுங் கொண்டு பாங்கிற் கூறிகள் சூழ வைகும் நீலிதன் வன்மை காண்பான் நினைந்திவண் விளித்த தன்றி வேலவன் படையை அன்னாள் வெல்லுமென் றுளங்கொண்டேனோ.

cūlamun taṇṭum vāḷuñ cuṭarmaḻup paṭaiyuñ cīṟṟak kōlamuṅ koṇṭu pāṅkiṟ kūṟikaḷ cūḻa vaikum nīlitaṉ vaṉmai kāṇpāṉ niṉaintivaṇ viḷitta taṉṟi vēlavaṉ paṭaiyai aṉṉāḷ vellumeṉ ṟuḷaṅkoṇṭēṉō.

Report an error

வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந் தூவுநுண் பனியா லன்றே துளும்புவ அஃதே போலத் தேவரை ஏவல் கொண்ட சிறப்புடைத் தமியேன் இங்ஙன் மேவிய காளி யாலோ எய்துவன் வீரத் தன்மை.

vāviyuṅ kuḷaṉum poytīr natikaḷum maṟṟu mellān tūvunuṇ paṉiyā laṉṟē tuḷumpuva aḵtē pōlat tēvarai ēval koṇṭa ciṟappuṭait tamiyēṉ iṅṅaṉ mēviya kāḷi yālō eytuvaṉ vīrat taṉmai.

Report an error

இன்னினிக் கணம தொன்றின் இளவலா ருயிரை வௌவி முன்னுற அகன்ற ஒற்றன் முரண்வலி அதனைச் சிந்தி அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான் மன்னன்முன் போவ தில்லை வஞ்சினம் இஃதே என்றான்.

iṉṉiṉik kaṇama toṉṟiṉ iḷavalā ruyirai vauvi muṉṉuṟa akaṉṟa oṟṟaṉ muraṇvali ataṉaic cinti aṉṉavaṉ āvi kūṟṟuk kaṭicilā aḷippaṉ allāṉ maṉṉaṉmuṉ pōva tillai vañciṉam iḵtē eṉṟāṉ.

Report an error

கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர் அனிகம்வந் தயலின் ஈண்ட ஆழியந் தேரிற் சென்று வனைதரு சிலையொன் றேந்தி வன்மையால் வாங்கி நூறு முனையிரும் பகழி வீர மொய்ம்பன்மேல் தூண்டி ஆர்த்தான்.

kaṉalmukaṉ iṉaiya māṟṟaṅ kaḻaṟiyē avuṇat tolpēr aṉikamvan tayaliṉ īṇṭa āḻiyan tēriṟ ceṉṟu vaṉaitaru cilaiyoṉ ṟēnti vaṉmaiyāl vāṅki nūṟu muṉaiyirum pakaḻi vīra moympaṉmēl tūṇṭi ārttāṉ.

Report an error

கொடுந்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா முடிந்திட வந்தாய் போலும் முயற்சியீ தழகி தென்னா நெடுந்தனிச் சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்துத் தானும் அடுந்திறற் கணைநூ றோச்சி அறுத்தனன் அவுணன் வாளி.

koṭuntoḻi lāḷaṉ ceykai kuraikaḻal vīraṉ kāṇā muṭintiṭa vantāy pōlum muyaṟciyī taḻaki teṉṉā neṭuntaṉic cilaikā lūṉṟi ñerēleṉa vaḷaittut tāṉum aṭuntiṟaṟ kaṇainū ṟōcci aṟuttaṉaṉ avuṇaṉ vāḷi.

Report an error

அறுத்தபொழு தத்தில்அவு ணர்க்கரசன் அமைந்தன் மறத்தினொடு நூறுசரம் வாலியன் பூட்டிச் சிறப்புடைய செம்மலுறு தேரினை யழித்துக் குறித்தவிறல் கொண்டுசமர் வால்வளை குறித்தான்.

aṟuttapoḻu tattilavu ṇarkkaracaṉ amaintaṉ maṟattiṉoṭu nūṟucaram vāliyaṉ pūṭṭic ciṟappuṭaiya cemmaluṟu tēriṉai yaḻittuk kuṟittaviṟal koṇṭucamar vālvaḷai kuṟittāṉ.

Report an error

தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ் கூரிய நெடும்பகழி கொம்மென விடுத்தே ஆரழல் முகத்தவுணன் அங்கையிடை கொண்ட மூரிவரி வெஞ்சிலை முரித்தமர் விளைத்தான்.

tēraḻita lumvekuḷi ceytiḷaval īrēḻ kūriya neṭumpakaḻi kommeṉa viṭuttē āraḻal mukattavuṇaṉ aṅkaiyiṭai koṇṭa mūrivari veñcilai murittamar viḷaittāṉ.

Report an error

வில்லது முரிந்திடலும் வேறோர்சிலை வாங்கிக கல்லென வெயிற்றணி கறித்திவனை இன்னே கொல்வனெனும் வெய்யமொழி கூறிமண நாறும் அல்லிமல ரோன்படையை அண்ணல்மிசை உய்த்தான்.

villatu murintiṭalum vēṟōrcilai vāṅkika kalleṉa veyiṟṟaṇi kaṟittivaṉai iṉṉē kolvaṉeṉum veyyamoḻi kūṟimaṇa nāṟum allimala rōṉpaṭaiyai aṇṇalmicai uyttāṉ.

Report an error

அத்தகைமை நோக்கினன் அயன்படையை யானும் உய்த்திடின் எனக்குவரும் ஊதியம்என் என்னாச் சித்தமுறு பூசனை செலுத்திவிறல் வீர பத்திர நெடும்படையொர் பாணிகொடு விட்டான்.

attakaimai nōkkiṉaṉ ayaṉpaṭaiyai yāṉum uyttiṭiṉ eṉakkuvarum ūtiyameṉ eṉṉāc cittamuṟu pūcaṉai celuttiviṟal vīra pattira neṭumpaṭaiyor pāṇikoṭu viṭṭāṉ.

Report an error

வாரிதி வளாகம்அரை மாத்திரையின் உண்ணும் வீரனெடு வெம்படை விரைந்துபடர் காலை நாரணன் மகன்படை நடுங்கிநனி தாழா யாருநகை செய்திட இரிந்துளதை யன்றே.

vāriti vaḷākamarai māttiraiyiṉ uṇṇum vīraṉeṭu vempaṭai viraintupaṭar kālai nāraṇaṉ makaṉpaṭai naṭuṅkinaṉi tāḻā yārunakai ceytiṭa irintuḷatai yaṉṟē.

Report an error

அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன் தன்னது நெடும்படை தடுப்பில்வகை யேகி வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி மின்னுவென வீரனிடை மீண்டுபடர்ந் தன்றே.

aṉṉamicai yōṉpaṭai aḻintiṭalum vīraṉ taṉṉatu neṭumpaṭai taṭuppilvakai yēki vaṉṉimukaṉ āvikoṭu māmuṭikaḷ taḷḷi miṉṉuveṉa vīraṉiṭai mīṇṭupaṭarn taṉṟē.

Report an error

வெய்யஅக் கனல்முகன் விளிந்து வீழ்ந்தனன் ஒய்யென அச்செயல் உம்பர் நோக்குறா ஐயனை வாழ்த்திநின் றலரின் மாரிதூய் மெய்யணி துகிலெலாம் வீசி யாடினார்.

veyyaak kaṉalmukaṉ viḷintu vīḻntaṉaṉ oyyeṉa acceyal umpar nōkkuṟā aiyaṉai vāḻttiniṉ ṟalariṉ māritūy meyyaṇi tukilelām vīci yāṭiṉār.

Report an error

புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும் துறந்தனர் உவகையால் சொல்லும் ஆடலர் சிறந்துடன் ஆர்த்தனர் தேவர் அற்றைநாட் பிறந்திடு மைந்தர்தம் பெற்றி எய்தினார்.

puṟantaru kaliṅkamum pūṇum nāṇamum tuṟantaṉar uvakaiyāl collum āṭalar ciṟantuṭaṉ ārttaṉar tēvar aṟṟaināṭ piṟantiṭu maintartam peṟṟi eytiṉār.

Report an error

எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன் பெரும்படை வீரர்கள் புலம்பி யாமெலாம் ஒருசிறு தூதனுக் குடைது மோவெனாச் செருவினைக் குறித்தனர் உலப்பில் தீமையோர்.

erimukaṉ avviṭai iṟappa āṅkavaṉ perumpaṭai vīrarkaḷ pulampi yāmelām oruciṟu tūtaṉuk kuṭaitu mōveṉāc ceruviṉaik kuṟittaṉar ulappil tīmaiyōr.

Report an error

முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர் பொற்புடை இளையவன் புடையிற் சுற்றிடாக் கப்பணந் திகிரிகோல் கணிச்சி வேல்கதை சொற்படு படையெலாஞ் சொரிந்து போர்செய்தார்.

muṟpaṭun talaivarkaḷ mūveṇ ṇāyirar poṟpuṭai iḷaiyavaṉ puṭaiyiṟ cuṟṟiṭāk kappaṇan tikirikōl kaṇicci vēlkatai coṟpaṭu paṭaiyelāñ corintu pōrceytār.

Report an error

செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன் கைதனில் இருந்ததோர் கார்மு கம்வளைஇ நொய்தினில் ஆயிர நூறு கோடிகோல் எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே.

ceytatu nōkkiyē ceyirttuc cēvakaṉ kaitaṉil iruntatōr kārmu kamvaḷaii noytiṉil āyira nūṟu kōṭikōl eytaṉaṉ teḻittaṉaṉ avuṇar ēṅkavē.

Report an error

இத்திறங் கணமதொன் றிடைய றாமலே கைத்தனு உமிழ்ந்திடுங் கணையின் மாமழை உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும் மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே.

ittiṟaṅ kaṇamatoṉ ṟiṭaiya ṟāmalē kaittaṉu umiḻntiṭuṅ kaṇaiyiṉ māmaḻai uyttaṉaṉ tirintaṉaṉ ulakam pērttiṭum meyttiṟal maruttiṉum viraiviṉ mēviyē.

Report an error

எறிந்திடு படைகளும் எய்த கோல்களும் முறிந்தன துணிந்தன மொய்ம்பு மார்பமுஞ் செறிந்திடு கரங்களும் சிரமும் தாள்களும் தறிந்தன அவுணர்தந் தலைவர் வீடினார்.

eṟintiṭu paṭaikaḷum eyta kōlkaḷum muṟintaṉa tuṇintaṉa moympu mārpamuñ ceṟintiṭu karaṅkaḷum ciramum tāḷkaḷum taṟintaṉa avuṇartan talaivar vīṭiṉār.

Report an error

வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன வாழியம் தேர்நிரை அனைத்தும் இற்றன சூழுறும் அவுணரும் தோலைந்து போயினார் பாழியம் தோளினான் பகழித் தன்மையால்.

vēḻamum puraviyum tuṇintu vīḻntaṉa vāḻiyam tērnirai aṉaittum iṟṟaṉa cūḻuṟum avuṇarum tōlaintu pōyiṉār pāḻiyam tōḷiṉāṉ pakaḻit taṉmaiyāl.

Report an error

பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை வீறொழுக் குற்றதொல் படைகள் வீந்திடச் சேறொழுக் குற்றன தசைகள் செம்புனல் ஆறொழுக் குற்றதால் அமர்செய் ஆறெலால்.

pāṟoḻuk kuṟṟaṉa kakaṉam pārmicai vīṟoḻuk kuṟṟatol paṭaikaḷ vīntiṭac cēṟoḻuk kuṟṟaṉa tacaikaḷ cempuṉal āṟoḻuk kuṟṟatāl amarcey āṟelāl.

Report an error

பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும் நிலவுடை எயிற்றிடை நிவந்த தீக்கனல் புலவுடை விழுநிணம் புழுக்கல் செய்ததால் கலிகெழு கொடியொடு கணமுந் துய்க்கவே.

palavuṭai neṭuntalaip patakar tuñcalum nilavuṭai eyiṟṟiṭai nivanta tīkkaṉal pulavuṭai viḻuniṇam puḻukkal ceytatāl kalikeḻu koṭiyoṭu kaṇamun tuykkavē.

Report an error

மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி தாமயிர்ப் புறவடி தடக்கை வன்றலை ஏமயிர்த் தோகையோ டிற்று நீங்குற ஆமையிற் போவன குருதி ஆற்றினே.

māmaiyil ceṟintaṉa vaṭiviṉ mālkari tāmayirp puṟavaṭi taṭakkai vaṉṟalai ēmayirt tōkaiyō ṭiṟṟu nīṅkuṟa āmaiyiṟ pōvaṉa kuruti āṟṟiṉē.

Report an error

கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின் தாரைகள் நீத்தமாய் எழுந்து தக்கவர் பேருட லுட்கொடு பெயர்ந்த பின்னுற வாரிதி வடவையுண் டுலவு மாண்பென.

kārkeḻum avuṇaruṭ kalanta cōriyiṉ tāraikaḷ nīttamāy eḻuntu takkavar pēruṭa luṭkoṭu peyarnta piṉṉuṟa vāriti vaṭavaiyuṇ ṭulavu māṇpeṉa.

Report an error

கரியினும் பரியினுங் கால்கொண் டோங்கிய குருதியம் புனல்மழை குலாவும் வைகலின் வரைதொறும் வரைதொறும் மாறு மாறெழா அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால்.

kariyiṉum pariyiṉuṅ kālkoṇ ṭōṅkiya kurutiyam puṉalmaḻai kulāvum vaikaliṉ varaitoṟum varaitoṟum māṟu māṟeḻā aruvikaḷ ceṉṟeṉa aḻuṅkic cellumāl.

Report an error

மீளிகள் குருதிநீர் வெள்ள மாயதில் வாளுறு வேல்களும் வாளும் மற்றவுங் கோளுறு மயிலையிற் கலவக் கண்டுதங் கேளிரென றெதிர்வன கெழும வேலைமீன்.

mīḷikaḷ kurutinīr veḷḷa māyatil vāḷuṟu vēlkaḷum vāḷum maṟṟavuṅ kōḷuṟu mayilaiyiṟ kalavak kaṇṭutaṅ kēḷireṉa ṟetirvaṉa keḻuma vēlaimīṉ.

Report an error

அழல்பொரு செக்கர்வா னகத்தின் மாமதிக் குழுவினர் சேர்ந்துறக் குலவுங் கொள்கைபோல் நிழல்பொதி கவிதைதந் நெடிய தாளற ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே.

aḻalporu cekkarvā ṉakattiṉ māmatik kuḻuviṉar cērntuṟak kulavuṅ koḷkaipōl niḻalpoti kavitaitan neṭiya tāḷaṟa oḻukiya kurutiyiṉ oruṅku celvavē.

Report an error

அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால் தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக் கொலைபுரி மறவர்தங் குடரிற் பின்னியே வலையெறிந் தீர்த்தனர் வயவெம் பூதரே.

alaikeḻu kurutiyā ṟaḻuṅkuṟ ṟēkalāl talaikaḷum uṭalkaḷum tacaiyum vāriṭak kolaipuri maṟavartaṅ kuṭariṟ piṉṉiyē valaiyeṟin tīrttaṉar vayavem pūtarē.

Report an error

ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங் கூளிகள் திரிவதோர் மருங்கு கூளியாம் மீளிகள் திரிவதோர் மருங்கு வென்றிடும் காளிகள் திரிவதோர் மருங்கு கண்ணெலாம்.

ñāḷikaḷ tirivatōr maruṅku nāmaveṅ kūḷikaḷ tirivatōr maruṅku kūḷiyām mīḷikaḷ tirivatōr maruṅku veṉṟiṭum kāḷikaḷ tirivatōr maruṅku kaṇṇelām.

Report an error

தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய சாரதி தலையினும் புரவி தம்மினுஞ் சோரிகள் இழிவன தொலைந்த வையமும் ஆருயிர் எய்தியாங் கதுபெற் றென்னவே.

tēriṭai ulantavaṉ cirattun tuñciya cārati talaiyiṉum puravi tammiṉuñ cōrikaḷ iḻivaṉa tolainta vaiyamum āruyir eytiyāṅ katupeṟ ṟeṉṉavē.

Report an error

சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு துனைவரு கேசரி துஞ்சச் சோரிநீர் கனைகட லிடைசெலக் கண்டு தேரைதம் இனமென எதிர்தழீஇ யிரங்கு கின்றவே.

ciṉavali avuṇartan tikiri pūṇṭiṭu tuṉaivaru kēcari tuñcac cōrinīr kaṉaikaṭa liṭaicelak kaṇṭu tēraitam iṉameṉa etirtaḻīi yiraṅku kiṉṟavē.

Report an error

விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை இரிந்திடு தானவர் இறந்து நீங்கினார் கருந்தலை அடுக்கலிற் கழல்கள் தாக்குறத் திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார்.

virintait tiṟamiyal veṅka ḷattiṭai irintiṭu tāṉavar iṟantu nīṅkiṉār karuntalai aṭukkaliṟ kaḻalkaḷ tākkuṟat tirintaṉar ayarntaṉar cilavar tuñciṉār.

Report an error

மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக் கழுக்களுங் கால்படக் கவலுற் றார்சிலர் விழுக்கொடு வள்ளுரம் விராய பூழியில் இழுக்கினர் அழுந்தினர் இறந்துற் றார்சிலர்.

maḻukkaḷum ayilkaḷum vāḷum muttalaik kaḻukkaḷuṅ kālpaṭak kavaluṟ ṟārcilar viḻukkoṭu vaḷḷuram virāya pūḻiyil iḻukkiṉar aḻuntiṉar iṟantuṟ ṟārcilar.

Report an error

பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை நீந்தினர் ஒருசிலர் நீத்திக் காலெழா தோய்ந்தனர் ஒருசிலர் ஓடி னார் மாய்ந்தனர் ஒருசிலர் மாய வீரரே.

pāyntiṭu kurutiyam paravai āṟṟiṭai nīntiṉar orucilar nīttik kāleḻā tōyntaṉar orucilar ōṭi ṉār māyntaṉar orucilar māya vīrarē.

Report an error

காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை ஈண்டிய வெள்ளிடை இளவல் மேனியாய் நீண்டதொர் பையுளாய் நிகழ ஏங்கியே மாண்டனர் சிலர்சிலர் வாய்வெ ரீஇயினார்.

kāṇṭoṟuṅ kāṇṭoṟum avuṇar kaṇṇiṭai īṇṭiya veḷḷiṭai iḷaval mēṉiyāy nīṇṭator paiyuḷāy nikaḻa ēṅkiyē māṇṭaṉar cilarcilar vāyve rīiyiṉār.

Report an error

துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா மெய்ப்படை முழுவதும் வீசி ஆயிடைத் தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர் கைப்படை வாங்கியே கடிதுற் றார்சிலர்.

tuppuṟu pūtarpiṉ toṭarat tāṭoḻā meyppaṭai muḻuvatum vīci āyiṭait tappiṉar iṟutiyil cāyntu māyntavar kaippaṭai vāṅkiyē kaṭituṟ ṟārcilar.

Report an error

எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே தண்ணுமை வரிதுடி தக்கை பேரியாம் பண்ணமை இயம்பல பற்றி ஆர்த்திடா நண்ணினர் நடுவனை நடுக்குந் தானவர்.

eṇṇamil paṭaikkalam yāvum vīciyē taṇṇumai varituṭi takkai pēriyām paṇṇamai iyampala paṟṟi ārttiṭā naṇṇiṉar naṭuvaṉai naṭukkun tāṉavar.

Report an error

பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத் திரக்கமில் அவுணர்கள் இரத்தத் தில்தம நெருக்குறு சிரத்தொகை நீட்டி மெய்யெலாங் கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார்.

parikkuvai arikkuvai paṭaitta māmukat tirakkamil avuṇarkaḷ irattat tiltama nerukkuṟu cirattokai nīṭṭi meyyelāṅ karakkunar orucilar uyiriṉ kātalār.

Report an error

சூளுறு போரிடைத் தொலைந்து போகியே நீளிகல் உறுகிலா நிருதர் சம்புவாய் ஆளுடை வயவர்ஊன் அருந்த ஆயிடை ஞாளிகள் கவர்தலும் நடுக்குற் றார்சிலர்.

cūḷuṟu pōriṭait tolaintu pōkiyē nīḷikal uṟukilā nirutar campuvāy āḷuṭai vayavarūṉ arunta āyiṭai ñāḷikaḷ kavartalum naṭukkuṟ ṟārcilar.

Report an error

தீயினை முருக்குறுந் திறல்வெம் பூதர்கள் தாயினர் தொடர்தலுஞ் சாய்ந்து ளோர்சிலர் நாயின துருக்கொடு நடக்க ஞாளிகள் ஆயின அடர்த்தலும் அஞ்சி னார்சிலர்.

tīyiṉai murukkuṟun tiṟalvem pūtarkaḷ tāyiṉar toṭartaluñ cāyntu ḷōrcilar nāyiṉa turukkoṭu naṭakka ñāḷikaḷ āyiṉa aṭarttalum añci ṉārcilar.

Report an error

விசையொடு சாரதர் விரவ வேற்றுரு இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார் தசைகவர் ஞமலிகள் தலைச்சென் றீர்க்கவும் அசைவில ராகியே அழுங்கி னார்சிலர்.

vicaiyoṭu cāratar virava vēṟṟuru icaikilar iṟantavar iṉattuḷ mēyiṉār tacaikavar ñamalikaḷ talaicceṉ ṟīrkkavum acaivila rākiyē aḻuṅki ṉārcilar.

Report an error

புண்டரு குருதிநீர் புறத்துச் சிந்திட மண்டமர் தன்னிடை மாண்ட கேள்வரைக் கண்டிலர் சிரந்தெரீஇக் கவன்ற ரற்றிய ஒண்டொடி மாதரின் உலவி னார்சிலர்.

puṇṭaru kurutinīr puṟattuc cintiṭa maṇṭamar taṉṉiṭai māṇṭa kēḷvaraik kaṇṭilar ciranterīik kavaṉṟa raṟṟiya oṇṭoṭi mātariṉ ulavi ṉārcilar.

Report an error

சூர்த்திடு நோக்கொடுந் துண்ணென் றெய்தியே ஆர்த்திடு பூதர்வந் தணுக வாய்வெரீஇ வேர்த்துடல் பனிப்பவீழ்ந் துதைத்தும் வெய்யதாள் பேர்த்திடல் இன்றியும் பேதுற் றார்சிலர்.

cūrttiṭu nōkkoṭun tuṇṇeṉ ṟeytiyē ārttiṭu pūtarvan taṇuka vāyverīi vērttuṭal paṉippavīḻn tutaittum veyyatāḷ pērttiṭal iṉṟiyum pētuṟ ṟārcilar.

Report an error

அழிதரு வோர்தமை அவரின் முன்னரே கழிதரும் உயிரினர் கணங்க ளாகிவிண் வழிதரு செலவினில் வந்து பற்றியெம் பழிதரு வீரெனப் பணிக்கின் றார்சிலர்.

aḻitaru vōrtamai avariṉ muṉṉarē kaḻitarum uyiriṉar kaṇaṅka ḷākiviṇ vaḻitaru celaviṉil vantu paṟṟiyem paḻitaru vīreṉap paṇikkiṉ ṟārcilar.

Report an error

வல்விரை புறவையை நோக்கி மற்றவட் செல்லுதிர் பூதர்கள் தெரியக் கண்டிரேல் இல்லையிந் நெறிதனில் இறந்து ளோரெனச் சொல்லுதிர் நீரெனத் தொழுகின் றார்சிலர்.

valvirai puṟavaiyai nōkki maṟṟavaṭ cellutir pūtarkaḷ teriyak kaṇṭirēl illaiyin neṟitaṉil iṟantu ḷōreṉac collutir nīreṉat toḻukiṉ ṟārcilar.

Report an error

காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை ஆசையி னொடுதழீஇ அலமந் தேங்கிய பாசிழை மாதரிற் பரவப் பூதர்கள் நாசியீர்ந் திடுதலும் நாணுற் றார்சிலர்.

kāciṉi ataṉiṭaik kaviḻnta kēḷvarai ācaiyi ṉoṭutaḻīi alaman tēṅkiya pāciḻai mātariṟ paravap pūtarkaḷ nāciyīrn tiṭutalum nāṇuṟ ṟārcilar.

Report an error

அடல்கெழு தூதனால் அவுணர் யாவருங் கெடுவது திண்ணம்யாங் கெடுகி லோமெனாக் குடர்கெழு சோரியங் குடிஞைக் கண்ணுறீஇக் கடலுறு வரையினுட் கலந்து ளார்சிலர்.

aṭalkeḻu tūtaṉāl avuṇar yāvaruṅ keṭuvatu tiṇṇamyāṅ keṭuki lōmeṉāk kuṭarkeḻu cōriyaṅ kuṭiñaik kaṇṇuṟīik kaṭaluṟu varaiyiṉuṭ kalantu ḷārcilar.

Report an error

சாரதர் குழுவினைத் தப்பித் தத்தம தாருயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர் சோரிய துரமிசை துதையப் பூசியே வீரர்கள் இவரென மேவு வார்சிலர்.

cāratar kuḻuviṉait tappit tattama tāruyir uyntapiṉ aṅkaṇ māṇṭavar cōriya turamicai tutaiyap pūciyē vīrarkaḷ ivareṉa mēvu vārcilar.

Report an error

இவ்வகை துஞ்சினர் அன்றி எண்ணிலா வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும் மைவரு நெறிமுயல் மகேந்தி ரப்புரங் கௌவையின் அரற்றின கடலு டைந்தபோல்.

ivvakai tuñciṉar aṉṟi eṇṇilā vevvali avuṇarkaḷ veruvi ōṭalum maivaru neṟimuyal makēnti rappuraṅ kauvaiyiṉ araṟṟiṉa kaṭalu ṭaintapōl.

Report an error

அங்கது பொழுதினில் ஆடல் முற்றியே செங்களம் நடுவுறு செம்மல் தன்புடை எங்கணும் நீங்கிய இலக்க வேந்தருஞ் சங்கையில் பூதருந் தலைச்சென் றீண்டினார்.

aṅkatu poḻutiṉil āṭal muṟṟiyē ceṅkaḷam naṭuvuṟu cemmal taṉpuṭai eṅkaṇum nīṅkiya ilakka vēntaruñ caṅkaiyil pūtarun talaicceṉ ṟīṇṭiṉār.

Report an error

எரிந்திடு கனல்முகன் எய்த வெஞ்சரம் உரந்தனை யகழ்ந்திட ஒருதன் வன்மைபோய் அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா புரந்தரன் எழுந்தொரு புடையில் எய்தினான்.

erintiṭu kaṉalmukaṉ eyta veñcaram urantaṉai yakaḻntiṭa orutaṉ vaṉmaipōy arantaiyiṉ mūḻkiyē aḻinta vīramā purantaraṉ eḻuntoru puṭaiyil eytiṉāṉ.

Report an error

புண்டர நீறணி புனிதன் பாங்கரின் மிண்டினர் இவரலாம் மேவி நிற்றலும் எண்டகும் இளையவர் எழுவர் தம்மையுங் கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான்.

puṇṭara nīṟaṇi puṉitaṉ pāṅkariṉ miṇṭiṉar ivaralām mēvi niṟṟalum eṇṭakum iḷaiyavar eḻuvar tammaiyuṅ kaṇṭilaṉ kavaṉṟaṉaṉ kaḻaṟal mēyiṉāṉ.

Report an error

ஆண்டகை வீரர்கள் அடைய லார்க்கெதிர் மூண்டமர் இயற்றிய மூவர் நால்வரும் மாண்டன ரேகொலோ மயங்கி னார்கொலோ ஆண்டவர் கிடந்தனர் இயம்பு வீரென்றான்.

āṇṭakai vīrarkaḷ aṭaiya lārkketir mūṇṭamar iyaṟṟiya mūvar nālvarum māṇṭaṉa rēkolō mayaṅki ṉārkolō āṇṭavar kiṭantaṉar iyampu vīreṉṟāṉ.

Report an error

என்றலும் உக்கிரன் என்னுஞ் சாரதன் உன்றுணை யார்களை ஒன்ன லன்மகன் கொன்றனன் அவருயிர் கூற்றும் வௌவினான் பொன்றிய வைப்பினைப் புகலக் கேட்டியால்.

eṉṟalum ukkiraṉ eṉṉuñ cārataṉ uṉṟuṇai yārkaḷai oṉṉa laṉmakaṉ koṉṟaṉaṉ avaruyir kūṟṟum vauviṉāṉ poṉṟiya vaippiṉaip pukalak kēṭṭiyāl.

Report an error

இம்பரின் முன்னுற இயம்பும் யோசனை ஐம்பதிற் றிரண்டின்மேல் ஆலம் ஒன்றுள தும்பருஞ் சிறிதென ஓங்கும் ஆயிடைத் தம்பியர் மாய்ந்தனர் சரத மேயென்றான்.

impariṉ muṉṉuṟa iyampum yōcaṉai aimpatiṟ ṟiraṇṭiṉmēl ālam oṉṟuḷa tumparuñ ciṟiteṉa ōṅkum āyiṭait tampiyar māyntaṉar carata mēyeṉṟāṉ.

Report an error

உக்கிரன் இனையன உரைப்ப யாரினும் மிக்கவன் வினவியே விழும நோயுறீஇப் பக்கம தாயினர் படர ஏகினான் தொக்குறும் இளைஞர்கள் துஞ்சும் எல்லைகளாய்.

ukkiraṉ iṉaiyaṉa uraippa yāriṉum mikkavaṉ viṉaviyē viḻuma nōyuṟīip pakkama tāyiṉar paṭara ēkiṉāṉ tokkuṟum iḷaiñarkaḷ tuñcum ellaikaḷāy.

Report an error

ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப் பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள் காய்சின அங்கி செங்கண் கான்றிடக் ளேவ ரத்து வாசமென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான்.

ōcaṉai nūṟu nīṅki olikaḻal vīraṉ eytap pācilai vaṭattiṉ pāṅkē parivuṭait tampi mārkaḷ kāyciṉa aṅki ceṅkaṇ kāṉṟiṭak ḷēva rattu vācameṉ paḷḷi mītu māyntaṉar kiṭappak kaṇṭāṉ.

Report an error

கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக் கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச் செவ்வான் விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி உண்டில தென்னச் சோர்ந்தான் உணர்ந்துபின் இரங்க லுற்றான்.

kaṇṭaṉaṉ viḻikaḷ cennīr kāṉṟiṭa vīḻntu pullik koṇṭaṉaṉ iḷaiñar tammaik kūviṉaṉ araṟṟic cevvāṉ viṇṭaṉaṉ uyirttu mēṉi viyarttaṉaṉ vīraṉ āvi uṇṭila teṉṉac cōrntāṉ uṇarntupiṉ iraṅka luṟṟāṉ.

Report an error

தம்பிமீர் தம்பி மீர்என் றுரைத்திடும் தழுவிக் கொள்வீர் எம்பிமீ ரென்னும் ஐயோ எங்ஙனஞ் சென்றி ரென்னும் வெம்பினேன் என்னும் என்னை விட்டகன் றீரோ என்னும் நம்பினேன் உம்மை என்னும் நானுமக் கயலோ என்னும்.

tampimīr tampi mīreṉ ṟuraittiṭum taḻuvik koḷvīr empimī reṉṉum aiyō eṅṅaṉañ ceṉṟi reṉṉum vempiṉēṉ eṉṉum eṉṉai viṭṭakaṉ ṟīrō eṉṉum nampiṉēṉ ummai eṉṉum nāṉumak kayalō eṉṉum.

Report an error

அங்கிமா முகனே நும்மை அடல்செய வல்லான் என்னும் இங்குநீர் வடிந்தீர் என்றால் என்செய்வன் தமியேன் என்னும் துங்கவெம் படைகள் ஏந்திச் சூழந்துடன் துணையாய் வந்த உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும்.

aṅkimā mukaṉē nummai aṭalceya vallāṉ eṉṉum iṅkunīr vaṭintīr eṉṟāl eṉceyvaṉ tamiyēṉ eṉṉum tuṅkavem paṭaikaḷ ēntic cūḻantuṭaṉ tuṇaiyāy vanta uṅkaḷait tōṟṟi yāṉē uyntaṉaṉ pōlum eṉṉum.

Report an error

அம்மவேவ விதியே என்னும் ஆதகா துனக்கீ தென்னும் இம்மெனச் செல்லா தின்னும் இருத்தியோ உயிரே என்னும் செம்மைகொள் குணத்தா ரோடு பிறப்பரே சிலரிங் கென்னும் எம்மையா ளுடைய வள்ளற் கென்னினி உரைக்கேன் என்னும்.

ammavēva vitiyē eṉṉum ātakā tuṉakkī teṉṉum immeṉac cellā tiṉṉum iruttiyō uyirē eṉṉum cemmaikoḷ kuṇattā rōṭu piṟapparē cilariṅ keṉṉum emmaiyā ḷuṭaiya vaḷḷaṟ keṉṉiṉi uraikkēṉ eṉṉum.

Report an error

சீரிள மைந்தர் துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின் ஆரெனக் கொப்புண் டம்மா அழகிதென் னாற்றல் என்னும் சூரர்தங் கிளையை எல்லாந் துண்ணெனச் சென்று சுற்றி வேரொடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி யென்னும்.

cīriḷa maintar tuñcac cilaiyoṭu tirivēṉ eṉṉiṉ āreṉak koppuṇ ṭammā aḻakiteṉ ṉāṟṟal eṉṉum cūrartaṅ kiḷaiyai ellān tuṇṇeṉac ceṉṟu cuṟṟi vēroṭu muṭittāl aṉṟi akalumō vekuḷi yeṉṉum.

Report an error

துப்புடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச வெப்படை தூண்டி னானோ எரிமுகத் தவுணன் என்னும் அப்படை நல்கு தேவர் ஆர்கொலோ அறியேன் என்னும் மெய்ப்படை வேலி னாருக் கடியரோ வினையேம் என்னும்.

tuppuṭai villiṉ kalvit tuṇaivarkaḷ īṇṭu tuñca veppaṭai tūṇṭi ṉāṉō erimukat tavuṇaṉ eṉṉum appaṭai nalku tēvar ārkolō aṟiyēṉ eṉṉum meyppaṭai vēli ṉāruk kaṭiyarō viṉaiyēm eṉṉum.

Report an error

அடுவனோ அவுணர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச் சூர்மேல் விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினன் வேலுக் கென்னும் படுவனோ துயரத் தென்னுஞ் செய்வதென் பாவி என்னும்.

aṭuvaṉō avuṇar cūḻvai eṉṟiṭum aṉali uṇṇa viṭuvaṉō ivvūr eṉṉum entaitaṉ paṭaiyaic cūrmēl viṭuvaṉō eṉṉum antō añciṉaṉ vēluk keṉṉum paṭuvaṉō tuyarat teṉṉuñ ceyvateṉ pāvi eṉṉum.

Report an error

ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்குடன் படுத்த நீரால் இன்றமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ வென்றிய தென்னும் என்றன் வீரமா சுணட தென்னும் பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே என்னும்.

oṉṟiya tuṇaivar tammai oruṅkuṭaṉ paṭutta nīrāl iṉṟamar ceytu paṭṭa erimukaṉ taṉpāl aṉṟō veṉṟiya teṉṉum eṉṟaṉ vīramā cuṇaṭa teṉṉum poṉṟilaṉ aḷiyaṉ pōlap pulampiṉaṉ vaṟitē eṉṉum.

Report an error

வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் வீரச் சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும் எல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலு மன்றே.

villiṉaip pārkkum ceṅkēḻ vēliṉaip pārkkum ēṉai mallalam paṭaiyaip pārkkum vāḷiyaip pārkkum vīrac colliṉaip pārkkum vantu cūḻtaru paḻiyaip pārkkum elleṉa eyiṟṟiṉ panti kaṟittiṭum kavalu maṉṟē.

Report an error

அருந்துயர் எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி இருந்தனன் அல்லன் ஏங்கி யாதுமோர் செயலும் இன்றி வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக் குழன்றான் அல்லன் விரைந்துதன் இளையர் தம்மை எழுப்பவோர் வினையங் கொண்டான்.

aruntuyar eyti ivvā ṟaḻuṅkiṉōṉ eḷiya ṉāki iruntaṉaṉ allaṉ ēṅki yātumōr ceyalum iṉṟi varuntiṉaṉ allaṉ kāṉiṉ maruntiṉuk kuḻaṉṟāṉ allaṉ viraintutaṉ iḷaiyar tammai eḻuppavōr viṉaiyaṅ koṇṭāṉ.

Report an error

நாற்றலை யுடைய அண்ணல் நாரணன் முதலோர் நல்க ஏற்றிடு படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி உண்டோன் கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்திவை கூற லுற்றான்.

nāṟṟalai yuṭaiya aṇṇal nāraṇaṉ mutalōr nalka ēṟṟiṭu paṭaiyil oṉṟai iḷaiyarkaḷ eḻuvar mītu māṟṟalaṉ viṭuttāṉ eṉṉiṉ maṟṟavar āvi uṇṭōṉ kūṟṟuvaṉ aṉṟō eṉṉāk kuṟittivai kūṟa luṟṟāṉ.

Report an error

ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற வானோ ரேபோல் தானவ ரேபோல் வழசெல்லா ஏனோ ரேபோல் எண்ணின னேகொல் எமர்ஆவி தானே உண்பான் கூற்றுவன் என்னும் மியோனே.

ūṉō ṭāvik kiṉpam virumpi uḻalkiṉṟa vāṉō rēpōl tāṉava rēpōl vaḻacellā ēṉō rēpōl eṇṇiṉa ṉēkol emarāvi tāṉē uṇpāṉ kūṟṟuvaṉ eṉṉum miyōṉē.

Report an error

விரியுமு ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள் ஒருபடை தானும் நங்கள் இனத்தை உயிருண்ணா தெரிமுக னென்பான் அட்டனன் அன்றே இளையோரைத் தரியல னாகிக் கொன்றவ னம்மா தானன்றோ.

viriyumu ṇarcciyai māṟṟuva tallāl viṇṇōrkaḷ orupaṭai tāṉum naṅkaḷ iṉattai uyiruṇṇā terimuka ṉeṉpāṉ aṭṭaṉaṉ aṉṟē iḷaiyōrait tariyala ṉākik koṉṟava ṉammā tāṉaṉṟō.

Report an error

போதத் துக்கோர் வைப்பிட மாயோர் பொறியாகி மூதக் கோர்எண் டாரக மூல மொழிக்கேட்டு வேதத் தோனை வெஞ்சிறை பூட்டி விதியாற்றும் ஆதித் தேவன் தம்பியர் என்ப தறியானோ.

pōtat tukkōr vaippiṭa māyōr poṟiyāki mūtak kōreṇ ṭāraka mūla moḻikkēṭṭu vētat tōṉai veñciṟai pūṭṭi vitiyāṟṟum ātit tēvaṉ tampiyar eṉpa taṟiyāṉō.

Report an error

ஆறுபட் பட்ட ஐயிரு காலத் தரன்நாமங் கூறிட் டேவாச் சேய்உயிர் வவ்வக் குறுகுங்கால் சீறித் தாளால் தாக்கிய சின்னஞ் சிறிதுந்தான் மாறிற் றில்லைக் கூற்றது தானும் மறந்தானோ.

āṟupaṭ paṭṭa aiyiru kālat taraṉnāmaṅ kūṟiṭ ṭēvāc cēyuyir vavvak kuṟukuṅkāl cīṟit tāḷāl tākkiya ciṉṉañ ciṟituntāṉ māṟiṟ ṟillaik kūṟṟatu tāṉum maṟantāṉō.

Report an error

சீலந் தன்னால் ஓர்விழு போதைச் சிவனுக்கென் றோலங் கொண்டே விண்ணிடை புக்கோன் உயிர்வௌவிச் சூலந் தன்னிற் கண்ணுதல் ஏற்றச் சுழலுற்றுக் காலன் பன்னாள் தூங்கிய வண்ணங் காணானோ.

cīlan taṉṉāl ōrviḻu pōtaic civaṉukkeṉ ṟōlaṅ koṇṭē viṇṇiṭai pukkōṉ uyirvauvic cūlan taṉṉiṟ kaṇṇutal ēṟṟac cuḻaluṟṟuk kālaṉ paṉṉāḷ tūṅkiya vaṇṇaṅ kāṇāṉō.

Report an error

நஞ்சிற் றீயன் வேட்டுவன் அன்றோர் நாள்முற்றும் துஞ்சற் றுணற் றரன்மிசை வில்வந் தூர்த்தோனை வெஞ்சொற் கூறிப் பற்றலும் யாங்கண் மிகஎற்ற அஞ்சித் தன்தூ தாயினர் போன தறியானோ.

nañciṟ ṟīyaṉ vēṭṭuvaṉ aṉṟōr nāḷmuṟṟum tuñcaṟ ṟuṇaṟ ṟaraṉmicai vilvan tūrttōṉai veñcoṟ kūṟip paṟṟalum yāṅkaṇ mikaeṟṟa añcit taṉtū tāyiṉar pōṉa taṟiyāṉō.

Report an error

அக்கா லத்தின் எல்லையின் மைந்தற் கரவென்றே முக்கா லோதித் தீமை குறித்தே முடிவோனை மெய்க்கா லன்தூ தாயினர் பற்ற விடுவித்தேம் இக்கால் கொண்டே அவரை உரைத்ததேன் யானன்றோ.

akkā lattiṉ ellaiyiṉ maintaṟ karaveṉṟē mukkā lōtit tīmai kuṟittē muṭivōṉai meykkā laṉtū tāyiṉar paṟṟa viṭuvittēm ikkāl koṇṭē avarai uraittatēṉ yāṉaṉṟō.

Report an error

மெச்சியல் கொள்ளாத் துன்மதி யாலும் மிகவெய்ய துச்சக னாலும் ஏனைய ராலுந் தொன்னாளின் இச்சக மாற்றுந் தன்னிறை நீங்கி இடரெய்தி அச்ச முழந்தே பட்டது சண்டன் அயர்த்தானே.

mecciyal koḷḷāt tuṉmati yālum mikaveyya tuccaka ṉālum ēṉaiya rālun toṉṉāḷiṉ iccaka māṟṟun taṉṉiṟai nīṅki iṭareyti acca muḻantē paṭṭatu caṇṭaṉ ayarttāṉē.

Report an error

நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன்பேர் கூறு முகத்தார் தம்புடை செல்லக் குலைகூற்றன் ஆறு முகத்தான் அடியவர் ஆவி யலைத்தானே சேறு முகத்தாழ் கரியை யடாதோ சிறுபுள்ளும்.

nīṟu mukattār kaṇṭikai pūṇṭār nimalaṉpēr kūṟu mukattār tampuṭai cellak kulaikūṟṟaṉ āṟu mukattāṉ aṭiyavar āvi yalaittāṉē cēṟu mukattāḻ kariyai yaṭātō ciṟupuḷḷum.

Report an error

என்னு மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து பின்னர் யாத்திடு தூணியில் ஒருசரம் பிடுங்கித் தன்ன கங்கொடே யன்னதன் தலைதனில் தரும மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான்.

eṉṉu māṟṟaṅkaḷ iyampiyē iḷaiyavaṉ eḻuntu piṉṉar yāttiṭu tūṇiyil orucaram piṭuṅkit taṉṉa kaṅkoṭē yaṉṉataṉ talaitaṉil taruma maṉṉar maṉṉavaṉ kaṇṭiṭa ittiṟam varaivāṉ.

Report an error

வேலு டைத்தனி நாயகற் கிளையவன் விடுத்தேன் கால நாடுறு கூற்றுவ னென்பவன் காண்க கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய் வாலி தோவிது விடுக்குதி கடிதென வரைந்தான்.

vēlu ṭaittaṉi nāyakaṟ kiḷaiyavaṉ viṭuttēṉ kāla nāṭuṟu kūṟṟuva ṉeṉpavaṉ kāṇka kōla veñcilait tuṇaivartam āruyir koṇṭāy vāli tōvitu viṭukkuti kaṭiteṉa varaintāṉ.

Report an error

செந்ந லங்கிளர் தன்னகத் தின்னவா தீட்டிப் பொன்னெ டுஞ்சிலை வாங்கியப் பகழியைப் பூட்டிப் பன்னி ரண்டுதோள் விமலனை மனங்கொடு பரவி மின்னெ னச்சென்றி யமபுரம் புகும்வகை விடுத்தான்.

cenna laṅkiḷar taṉṉakat tiṉṉavā tīṭṭip poṉṉe ṭuñcilai vāṅkiyap pakaḻiyaip pūṭṭip paṉṉi raṇṭutōḷ vimalaṉai maṉaṅkoṭu paravi miṉṉe ṉacceṉṟi yamapuram pukumvakai viṭuttāṉ.

Report an error

கரந்தை சூடுவான் திருமகற் கிளையவன் கணைமுன் விரைந்து தெண்கடல் ஏழையுங் கடந்துவிண் ணோங்கி இருந்த மானேசோத் தரகிரித் தென்புறத் தியம புரந்த னிற்சென்று மறலிதன் முன்புபோந் ததுவே.

karantai cūṭuvāṉ tirumakaṟ kiḷaiyavaṉ kaṇaimuṉ viraintu teṇkaṭal ēḻaiyuṅ kaṭantuviṇ ṇōṅki irunta māṉēcōt tarakirit teṉpuṟat tiyama puranta ṉiṟceṉṟu maṟalitaṉ muṉpupōn tatuvē.

Report an error

தொடுத்த அக்கணை அந்தகன் முன்புதுண் ணெனப்போய் அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன்சென் றெடுத்து நோக்கினன் வீரவா குப்பெயர் இளவல் விடுத்த தாகலு முற்றுற உணர்ந்தனன் விரைவில்.

toṭutta akkaṇai antakaṉ muṉputuṇ ṇeṉappōy aṭuttu vīḻtalum vimmitam eytiyē avaṉceṉ ṟeṭuttu nōkkiṉaṉ vīravā kuppeyar iḷaval viṭutta tākalu muṟṟuṟa uṇarntaṉaṉ viraivil.

Report an error

அயில்நெ டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து துயரு ழந்தஞ்சி ஈண்டிலர் இளையவன் துணைவர் பயில எங்ஙனஞ் சென்றன ரோவெனப் பார்த்தான் கயிலை யேகியே இருப்பதா உணர்ச்சியிற் கண்டான்.

ayilne ṭuṅkaṇaip pācurat takalama tuṇarntu tuyaru ḻantañci īṇṭilar iḷaiyavaṉ tuṇaivar payila eṅṅaṉañ ceṉṟaṉa rōveṉap pārttāṉ kayilai yēkiyē iruppatā uṇarcciyiṟ kaṇṭāṉ.

Report an error

கண்டு தேறினன் கடாமிசை ஏறினன் கடுங்கால் கொண்ட தானைகள் சூறையங் காலெனக் குழுமப் பண்டு தானுறை பதியினை நீங்கினன் படரா அண்டர் நாயகன் கயிலையஞ் சாரலை யடைந்தான்.

kaṇṭu tēṟiṉaṉ kaṭāmicai ēṟiṉaṉ kaṭuṅkāl koṇṭa tāṉaikaḷ cūṟaiyaṅ kāleṉak kuḻumap paṇṭu tāṉuṟai patiyiṉai nīṅkiṉaṉ paṭarā aṇṭar nāyakaṉ kayilaiyañ cāralai yaṭaintāṉ.

Report an error

ஆன காலையில் ஆயிடைப் பொதும்பரொன் றதனின் மான வேற்படை அவுணர்தம் படைகளின் மாண்ட சேனை வீரர்கள் சூழ்தர எழுவருஞ் சிறந்து கான விஞ்சையர் பாடல்கேட் டிரப்பது கண்டான்.

āṉa kālaiyil āyiṭaip potumparoṉ ṟataṉiṉ māṉa vēṟpaṭai avuṇartam paṭaikaḷiṉ māṇṭa cēṉai vīrarkaḷ cūḻtara eḻuvaruñ ciṟantu kāṉa viñcaiyar pāṭalkēṭ ṭirappatu kaṇṭāṉ.

Report an error

தொழு மற்றவர் முன்னுற மறலிபோய்த் துன்னி முழுது ணர்ந்துளீர் நுங்களை நாடுவான் முன்னோன் ஆழகி தென்றிவண் இருப்பதென் என்னையும் அயிர்ப்பான் எழுவி ருங்கடி தெழுவிர்இப் பூதரோ டென்றான்.

toḻu maṟṟavar muṉṉuṟa maṟalipōyt tuṉṉi muḻutu ṇarntuḷīr nuṅkaḷai nāṭuvāṉ muṉṉōṉ āḻaki teṉṟivaṇ iruppateṉ eṉṉaiyum ayirppāṉ eḻuvi ruṅkaṭi teḻuvirip pūtarō ṭeṉṟāṉ.

Report an error

என்ற காலையில் எழுவரும் எழுந்திரு மருங்கு நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி ஒன்றொர் மாத்திரை ஒடுங்குமுன் அவுணர்கோன் உறையும் மன்றல் மாநகர் அடுகளம் புக்கனர் மன்னோ.

eṉṟa kālaiyil eḻuvarum eḻuntiru maruṅku niṉṟa pūtarkaḷ yāvarum pōntiṭa nīṅki oṉṟor māttirai oṭuṅkumuṉ avuṇarkōṉ uṟaiyum maṉṟal mānakar aṭukaḷam pukkaṉar maṉṉō.

Report an error

புக்க காலையின் எழுவரும் தம்முடன் புகுந்தார் மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில் தொக்கு வீழ்தரு மியாக்கைகள் உற்றனர் சுரர்கள் அக்க ணந்தனிற் பூமழை தூவிநின் றார்த்தார்.

pukka kālaiyiṉ eḻuvarum tammuṭaṉ pukuntār mikka pāriṭat talaivarkaḷ yāvarum viraivil tokku vīḻtaru miyākkaikaḷ uṟṟaṉar curarkaḷ akka ṇantaṉiṟ pūmaḻai tūviniṉ ṟārttār.

Report an error

இன்ன வேலையின் எழுவரும் பதைபதைத் தெழுந்து முன்ன வன்றன தடிக்கம லங்களை முறையால் சென்னி தாழ்வுற வணங்கினர் செங்கையால் எடுத்துப் பொன்னின் மார்புறப் புல்லினன் எல்லைதீர் புகழோன்.

iṉṉa vēlaiyiṉ eḻuvarum pataipatait teḻuntu muṉṉa vaṉṟaṉa taṭikkama laṅkaḷai muṟaiyāl ceṉṉi tāḻvuṟa vaṇaṅkiṉar ceṅkaiyāl eṭuttup poṉṉiṉ mārpuṟap pulliṉaṉ ellaitīr pukaḻōṉ.

Report an error

புல்லி னான்இள வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த எல்லி னானென விளங்கினான் அவுணரை இனிநான் வில்லி னால்அடல் செய்வதோ அரிதென விறலும் சொல்லி னான்மகிழ் வாயினான் புன்கணும் தொலைந்தான்.

pulli ṉāṉiḷa vīraraip puyaṅkamuṇ ṭumiḻnta elli ṉāṉeṉa viḷaṅkiṉāṉ avuṇarai iṉināṉ villi ṉālaṭal ceyvatō ariteṉa viṟalum colli ṉāṉmakiḻ vāyiṉāṉ puṉkaṇum tolaintāṉ.

Report an error

எண்ட குந்திறல் எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல் கண்டு வீரமா புரந்தர னுங்கணத் தவரும் திண்டி றற்புனை இலக்கரும் உவகையிற் சிறந்து கொண்டல் கண்டிடு சாதகம் போல்உளங் குளிர்ந்தார்.

eṇṭa kuntiṟal eḻuvarum piṟarumuyn teḻutal kaṇṭu vīramā purantara ṉuṅkaṇat tavarum tiṇṭi ṟaṟpuṉai ilakkarum uvakaiyiṟ ciṟantu koṇṭal kaṇṭiṭu cātakam pōluḷaṅ kuḷirntār.

Report an error

அன்ன தாகிய எல்லையில் கூற்றனும் அனகம் துன்ன தாகிய வந்தனன் இளவலைத் தொழுது மின்னு லாவிய வேலினாய் தமியனை வெகுண்டாய் முன்னி கழ்ந்திடு வரன்முறை கேளென மொழிவான்.

aṉṉa tākiya ellaiyil kūṟṟaṉum aṉakam tuṉṉa tākiya vantaṉaṉ iḷavalait toḻutu miṉṉu lāviya vēliṉāy tamiyaṉai vekuṇṭāy muṉṉi kaḻntiṭu varaṉmuṟai kēḷeṉa moḻivāṉ.

Report an error

எழுதி றத்தரும் இங்ஙனம் தம்முடல் விட்டுக் குழுவி னோடுபோய்க் கயிலையஞ் சாரலில் குறுகி வழிப டுஞ்சில பூதரும் சுற்றிட வதிந்தார் அழிபெ ருந்துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை.

eḻuti ṟattarum iṅṅaṉam tammuṭal viṭṭuk kuḻuvi ṉōṭupōyk kayilaiyañ cāralil kuṟuki vaḻipa ṭuñcila pūtarum cuṟṟiṭa vatintār aḻipe runtuyar uḻattalil terintilai ataṉai.

Report an error

அங்க மீதினில் நீறுகண் டிகையினை அணிந்தார் தங்கள் பாலினுஞ் செல்லுதற் கஞ்சுறுந் தமியேன் இங்கு நின்இளை யார்உயிர் கொள்வனோ எவரும் வெங்க கனற்பொறி யுண்பரோ பசிப்பிணி மிகினும்.

aṅka mītiṉil nīṟukaṇ ṭikaiyiṉai aṇintār taṅkaḷ pāliṉuñ cellutaṟ kañcuṟun tamiyēṉ iṅku niṉiḷai yāruyir koḷvaṉō evarum veṅka kaṉaṟpoṟi yuṇparō pacippiṇi mikiṉum.

Report an error

வினைய முன்னிநீ விடுகணை நோக்கியான் வெள்ளித் தனிவ ரைப்பெருஞ் சாரலில் போந்துசா ரதரோ டுனது தம்பியர் தங்களை விளித்திவண் உய்த்தேன் முனிவு கொள்ளலை ஐயஎன் னிடையென மொழிந்தான்.

viṉaiya muṉṉinī viṭukaṇai nōkkiyāṉ veḷḷit taṉiva raipperuñ cāralil pōntucā ratarō ṭuṉatu tampiyar taṅkaḷai viḷittivaṇ uyttēṉ muṉivu koḷḷalai aiyaeṉ ṉiṭaiyeṉa moḻintāṉ.

Report an error

அந்த கன்மொழி வினவலும் ஐயனுக் கிளவல் நந்து யர்க்கடல் சுவற்றினை கயிலையின் நமர்கள் வந்த தன்மையைத் தேற்றில மயங்கியீண் டுற்றாம் புந்தி கொள்ளலை யாவது நீயெனப் புகன்றான்.

anta kaṉmoḻi viṉavalum aiyaṉuk kiḷaval nantu yarkkaṭal cuvaṟṟiṉai kayilaiyiṉ namarkaḷ vanta taṉmaiyait tēṟṟila mayaṅkiyīṇ ṭuṟṟām punti koḷḷalai yāvatu nīyeṉap pukaṉṟāṉ.

Report an error

புகல லுற்றபின் விடைகொண்டு கூற்றெனும் புத்தேள் உவகை தன்னொடு தன்புரத் தேகினன் ஒன்னார் இகலை வெஃகியே பூதரும் துணைவரும் ஏத்த நிகரி லாதவன் அன்னதோர் களத்திடை நின்றான்.

pukala luṟṟapiṉ viṭaikoṇṭu kūṟṟeṉum puttēḷ uvakai taṉṉoṭu taṉpurat tēkiṉaṉ oṉṉār ikalai veḵkiyē pūtarum tuṇaivarum ētta nikari lātavaṉ aṉṉatōr kaḷattiṭai niṉṟāṉ.

Report an error

நின்று மற்றிவை நாடிய ஒற்றர்நீள் நகரில் சென்று சூரனைத் தொழுதுநின் மதலைபோர் செய்து வென்றி மொய்ம்பினன் விடுத்திடு வீரன்மாப் படையால் பொன்றி னான்பொடி யாகிவீழ்ந் தனனெனப் புகன்றார்.

niṉṟu maṟṟivai nāṭiya oṟṟarnīḷ nakaril ceṉṟu cūraṉait toḻutuniṉ matalaipōr ceytu veṉṟi moympiṉaṉ viṭuttiṭu vīraṉmāp paṭaiyāl poṉṟi ṉāṉpoṭi yākivīḻn taṉaṉeṉap pukaṉṟār.

Report an error

அக்கா லைதனில் அவுணர்க் குளெலாம் மிக்கான் புவியின் மிசைவீழ்ந் தயரா எக்கா லுமுறா தவிடர்க் கடலுட் புக்கான் மெலிவோ டுபுலம் புறுவான்.

akkā laitaṉil avuṇark kuḷelām mikkāṉ puviyiṉ micaivīḻn tayarā ekkā lumuṟā taviṭark kaṭaluṭ pukkāṉ melivō ṭupulam puṟuvāṉ.

Report an error

உண்ணே யமதாம் உயிரே உறவே கண்ணே மணியே கனல்மா முகனே விண்ணே கினையோ இவண்மீள் கிலையால் எண்ணேன் உயிர்வாழ்க் கையையிங் கினியே.

uṇṇē yamatām uyirē uṟavē kaṇṇē maṇiyē kaṉalmā mukaṉē viṇṇē kiṉaiyō ivaṇmīḷ kilaiyāl eṇṇēṉ uyirvāḻk kaiyaiyiṅ kiṉiyē.

Report an error

எந்தைக் கிளையான் தனையிந் நகரின் வந்துற் றதொர்தூ தன்மலைந் திடலான் நொந்துற் றனைமெய் யுநுடங் கினையால் அந்தத் துயர்இங் ஙனமா றியதோ.

entaik kiḷaiyāṉ taṉaiyin nakariṉ vantuṟ ṟatortū taṉmalain tiṭalāṉ nontuṟ ṟaṉaimey yunuṭaṅ kiṉaiyāl antat tuyariṅ ṅaṉamā ṟiyatō.

Report an error

தேறா இகல்செய் திடுதே வரெலாம் மாறா மகிழ்வுற் றிடவைத் துமனத் தாறா இடர்என் வயின்ஆக் கினையால் கூறாய் இதுவுங் குமரற் கியல்போ.

tēṟā ikalcey tiṭutē varelām māṟā makiḻvuṟ ṟiṭavait tumaṉat tāṟā iṭareṉ vayiṉāk kiṉaiyāl kūṟāy ituvuṅ kumaraṟ kiyalpō.

Report an error

காரோ திமருங் குளகா ரணனோ சீரோ திமனோ திருமா லவனோ நேரோ தியவொற் றடநீ முடிகென் றாரோ தினரோ அதறிந் திலனே.

kārō timaruṅ kuḷakā raṇaṉō cīrō timaṉō tirumā lavaṉō nērō tiyavoṟ ṟaṭanī muṭikeṉ ṟārō tiṉarō ataṟin tilaṉē.

Report an error

பொய்விட் டிடுதூ துவர்போ ரிடைநீ மெய்விட் டனையென் றுவிளம் பினரால் நெய்விட் டவயிற் படைநே ரலன்முன் கைவிட் டெனையே குவதுன் கடனோ.

poyviṭ ṭiṭutū tuvarpō riṭainī meyviṭ ṭaṉaiyeṉ ṟuviḷam piṉarāl neyviṭ ṭavayiṟ paṭainē ralaṉmuṉ kaiviṭ ṭeṉaiyē kuvatuṉ kaṭaṉō.

Report an error

தூதா னவன்வா ளிதுணித் திடவிண் மீதே கினையென் றுவிளம் பினர்அப் போதே அதுணர்ந் துபொறுத் தனனால் ஏதே துபொறா தினமென் னுயிரே.

tūtā ṉavaṉvā ḷituṇit tiṭaviṇ mītē kiṉaiyeṉ ṟuviḷam piṉarap pōtē atuṇarn tupoṟut taṉaṉāl ētē tupoṟā tiṉameṉ ṉuyirē.

Report an error

ஆவா தமியேன் அயர்வுற் றிடவே மூவா இளமைந் தமுடிந் தனையே ஓவா துமகப் பெறவோங் குதவத் தேய்வார் களுமுண் டுகொல்இன் னமுமே.

āvā tamiyēṉ ayarvuṟ ṟiṭavē mūvā iḷamain tamuṭin taṉaiyē ōvā tumakap peṟavōṅ kutavat tēyvār kaḷumuṇ ṭukoliṉ ṉamumē.

Report an error

எல்லே உனைநம் புவதென் அகல்வாய் சொல்லே துமுரைத் திலைதுன் புறுவேன் கல்லே புரைநின் கவின்மார் பதனை வல்லே தழுவிக் கொளவந் தருளே.

ellē uṉainam puvateṉ akalvāy collē tumurait tilaituṉ puṟuvēṉ kallē purainiṉ kaviṉmār pataṉai vallē taḻuvik koḷavan taruḷē.

Report an error

செய்யாய் கரியாய் திருவே சிறுவா மெய்யா ருயிரே விடலாய் அடல்வேற் கையாய் அரசே களிறே தமியேற் கையா வெனைநீ யும்அயர்த் தனையோ.

ceyyāy kariyāy tiruvē ciṟuvā meyyā ruyirē viṭalāy aṭalvēṟ kaiyāy aracē kaḷiṟē tamiyēṟ kaiyā veṉainī yumayart taṉaiyō.

Report an error

என்றின் னனபன் னியிரங் குதலும் நன்றன் னையதோர்ந் துநடுக் கமுறாத் துன்றுந் துயரக் கடல்துன் னினளால் அன்றந் நகர்மிக் கதழுங் குரலே.

eṉṟiṉ ṉaṉapaṉ ṉiyiraṅ kutalum naṉṟaṉ ṉaiyatōrn tunaṭuk kamuṟāt tuṉṟun tuyarak kaṭaltuṉ ṉiṉaḷāl aṉṟan nakarmik kataḻuṅ kuralē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).