Skip to content

அசுர காண்டம் — திக்குவிசயப் படலம் · திக்குவிசயப் படலம்

tikkuvicayap paṭalam

tikkuvicayap paṭalam

tikkuvicayap paṭalam, from Acura Kāṇṭam; poems 2.790–2.925.

136 versesTamil with transliteration

A spear and lotus for chapter 45 of Kanda Puranam.

குணங்கள் பற்பல உணர்த்திய குரவன்றன் கழல்கள் வணங்கி வாளரி முகனொடு விடைகொண்டு வயமான் அணங்கு வைகிய திறலுடைச் சூரர்கோன் அவுணர் இணங்கு தானையங் கடலிடைப் புக்கனன் இமைப்பில்.

kuṇaṅkaḷ paṟpala uṇarttiya kuravaṉṟaṉ kaḻalkaḷ vaṇaṅki vāḷari mukaṉoṭu viṭaikoṇṭu vayamāṉ aṇaṅku vaikiya tiṟaluṭaic cūrarkōṉ avuṇar iṇaṅku tāṉaiyaṅ kaṭaliṭaip pukkaṉaṉ imaippil.

Report an error

சேனை யின்றலை புகுதலுந் தாரகன் சென்று கோனை வந்தனை செய்துதன் முன்னவற் குறுகி ஆன பான்மையின் வணங்கிமுன் னின்றிட ஆசான் போன எல்லையிற் புகன்றன பரிசெலாம் புகன்றான்.

cēṉai yiṉṟalai pukutalun tārakaṉ ceṉṟu kōṉai vantaṉai ceytutaṉ muṉṉavaṟ kuṟuki āṉa pāṉmaiyiṉ vaṇaṅkimuṉ ṉiṉṟiṭa ācāṉ pōṉa ellaiyiṟ pukaṉṟaṉa paricelām pukaṉṟāṉ.

Report an error

ஆவ தாகிய பரிசெலாங் கேட்டுணர்ந் தவனுந் தாவி லாததன் மனங்கொடு நன்றிது தலைவ மேவ லார்களை யாமினி வென்றிட விரைவில் போவ தேகடன் என்றனன் அன்னதோர் பொழுதின்.

āva tākiya paricelāṅ kēṭṭuṇarn tavaṉun tāvi lātataṉ maṉaṅkoṭu naṉṟitu talaiva mēva lārkaḷai yāmiṉi veṉṟiṭa viraivil pōva tēkaṭaṉ eṉṟaṉaṉ aṉṉatōr poḻutiṉ.

Report an error

அந்தி வார்சடைக் கண்ணுதற் கடவுள்தன் அருளான் மைந்தர் மூவரும் பெற்றதொல் வரங்களும் வலியுஞ் சிந்தை யுள்ளுற நாடியே யளியொடுஞ் சேணில் வந்து தோன்றினள் தொல்லைநாள் நோற்றிடு மாயை.

anti vārcaṭaik kaṇṇutaṟ kaṭavuḷtaṉ aruḷāṉ maintar mūvarum peṟṟatol varaṅkaḷum valiyuñ cintai yuḷḷuṟa nāṭiyē yaḷiyoṭuñ cēṇil vantu tōṉṟiṉaḷ tollaināḷ nōṟṟiṭu māyai.

Report an error

தோன்று மெலலையின் முந்துறக் கண்டுவெஞ் சூரன் ஆன்ற தம்பியர் தம்மொடும் அசமுகி யோடும் ஊன்றும் அன்பொடு பணிதலும் அன்னைதன் உள்ளம் ஈன்ற ஞான்றினும் உவந்தனள் ஆசிகள் இசைத்தாள்.

tōṉṟu melalaiyiṉ muntuṟak kaṇṭuveñ cūraṉ āṉṟa tampiyar tammoṭum acamuki yōṭum ūṉṟum aṉpoṭu paṇitalum aṉṉaitaṉ uḷḷam īṉṟa ñāṉṟiṉum uvantaṉaḷ ācikaḷ icaittāḷ.

Report an error

ஆசி கூறியே வேள்வியிற் செய்கையும் அதனுக் கீசன் நல்கிய வரங்களுங் கேட்டனன் ஈண்டு நேச மோடுமைக் காணிய வந்தனன் நீவிர் வாச வன்முத லோர்தமை வெல்லுதி வலியால்.

āci kūṟiyē vēḷviyiṟ ceykaiyum ataṉuk kīcaṉ nalkiya varaṅkaḷuṅ kēṭṭaṉaṉ īṇṭu nēca mōṭumaik kāṇiya vantaṉaṉ nīvir vāca vaṉmuta lōrtamai velluti valiyāl.

Report an error

வென்ற பின்னர்எவ் வுலகமும் புரந்துமே தினியில் என்றும் வாழுதிர் மாயைகள் வேண்டிடின் என்னை ஒன்றும் அன்புடன் உன்னுதிர் உன்னிய பொழுதே சென்று வெஃகிய தன்மைகள் செய்தியான் முடிப்பேன்.

veṉṟa piṉṉarev vulakamum purantumē tiṉiyil eṉṟum vāḻutir māyaikaḷ vēṇṭiṭiṉ eṉṉai oṉṟum aṉpuṭaṉ uṉṉutir uṉṉiya poḻutē ceṉṟu veḵkiya taṉmaikaḷ ceytiyāṉ muṭippēṉ.

Report an error

ஈத லால்உமைப் பிரியலன் பன்முறை யானே காத லோடுமைக் காணிய செல்குவன் கலந்து பேத நீரற இருத்திரால் ஈண்டெனப் பேசி மாதும் ஏகினள் மைந்தர்கள் மூவரும் வணங்க.

īta lālumaip piriyalaṉ paṉmuṟai yāṉē kāta lōṭumaik kāṇiya celkuvaṉ kalantu pēta nīraṟa iruttirāl īṇṭeṉap pēci mātum ēkiṉaḷ maintarkaḷ mūvarum vaṇaṅka.

Report an error

தோடு லாவிழிப் பொற்றொடி ஏகலுஞ் சூரன் கோடி தேருடன் தானவர் தங்களைக் கூவி நீடு நம்பெருந் தானைகள் நிதிபதிக் கேகப் பாடல் மாமுர சறைமினோ கடிதெனப் பணித்தான்.

tōṭu lāviḻip poṟṟoṭi ēkaluñ cūraṉ kōṭi tēruṭaṉ tāṉavar taṅkaḷaik kūvi nīṭu namperun tāṉaikaḷ nitipatik kēkap pāṭal māmura caṟaimiṉō kaṭiteṉap paṇittāṉ.

Report an error

அரசன் ஏவலும் அவுணர்கள் அன்னவா றறைந்து அரசம் எறறினர் கேட்டலும் அத்திசை முன்னி உரைசெய் நான்முகன் உறங்குழிப் புவிகொள ஒருங்கே திரைசெய் வான்கடல் சென்றெனச் சென்றது சேனை.

aracaṉ ēvalum avuṇarkaḷ aṉṉavā ṟaṟaintu aracam eṟaṟiṉar kēṭṭalum atticai muṉṉi uraicey nāṉmukaṉ uṟaṅkuḻip puvikoḷa oruṅkē tiraicey vāṉkaṭal ceṉṟeṉac ceṉṟatu cēṉai.

Report an error

பத்து நூறுடன் ஆயிர மாதியாய்ப் பலவாங் கொத்து நீடிய சென்னியர் கொடுமைசேர் குணத்தோர் மெத்து பல்படை ஏந்திய கரத்தினர் விறலோர் கத்து வார்கடல் ஆர்ப்பினர் அவுணர்தங் கணத்தோர்.

pattu nūṟuṭaṉ āyira mātiyāyp palavāṅ kottu nīṭiya ceṉṉiyar koṭumaicēr kuṇattōr mettu palpaṭai ēntiya karattiṉar viṟalōr kattu vārkaṭal ārppiṉar avuṇartaṅ kaṇattōr.

Report an error

விண்ணிற் பாய்வன இரவிதேர் பாய்வன வேலைக் கண்ணிற் பாய்வன திசைகளிற் பாய்வன கனல்மேற் பண்ணிற் பாய்வன வரைகளிற் பாய்வன பரவை மண்ணிற் பாய்வன புரவிகள் அளப்பில மாதோ.

viṇṇiṟ pāyvaṉa iravitēr pāyvaṉa vēlaik kaṇṇiṟ pāyvaṉa ticaikaḷiṟ pāyvaṉa kaṉalmēṟ paṇṇiṟ pāyvaṉa varaikaḷiṟ pāyvaṉa paravai maṇṇiṟ pāyvaṉa puravikaḷ aḷappila mātō.

Report an error

பாறு சென்றிடக் கொடியினஞ் சென்றிடப் பலபேய் வேறு சென்றிடப் பாரிடஞ் சென்றிட விண்மேல் மாறு சென்றிடப் பிளிறொலி சென்றிட மதநீர் ஆறு சென்றிடச் சென்றன யானையின் அனிகம்.

pāṟu ceṉṟiṭak koṭiyiṉañ ceṉṟiṭap palapēy vēṟu ceṉṟiṭap pāriṭañ ceṉṟiṭa viṇmēl māṟu ceṉṟiṭap piḷiṟoli ceṉṟiṭa matanīr āṟu ceṉṟiṭac ceṉṟaṉa yāṉaiyiṉ aṉikam.

Report an error

மேருச் சையமுங் கயிலையும் அல்லது வேறு நேரற் கொத்திடு கிரிமிசைச் செல்வன நீலக் காரிற் செல்வன விண்மிசைச் செல்வன கடல்சூழ் பாரிற் செல்வன செல்வன ஆழியம் பஃறேர்.

mēruc caiyamuṅ kayilaiyum allatu vēṟu nēraṟ kottiṭu kirimicaic celvaṉa nīlak kāriṟ celvaṉa viṇmicaic celvaṉa kaṭalcūḻ pāriṟ celvaṉa celvaṉa āḻiyam paḵṟēr.

Report an error

மூன்று கோடியோ சனையதாய் நாற்றிசை முற்றும் ஆன்ற வெல்லையின் அவ்வகைத் தாகிய அனிகம் ஏன்று சென்றன சென்றதோர் அளவையின் இனன்போல் தோன்று பொன்சுடர் அளகையை அடைந்தன தூசி.

mūṉṟu kōṭiyō caṉaiyatāy nāṟṟicai muṟṟum āṉṟa vellaiyiṉ avvakait tākiya aṉikam ēṉṟu ceṉṟaṉa ceṉṟatōr aḷavaiyiṉ iṉaṉpōl tōṉṟu poṉcuṭar aḷakaiyai aṭaintaṉa tūci.

Report an error

பூதம் ஐந்தினும் மிகவலி யுடையது பொலன்சேர் ஆத வன்றனித் தேரினுஞ் சிறப்புற்ற தவனில் சோதி பெற்றது பேருணர் வுள்ளது தொல்சீர் மாதி ரங்களை அகற்சியான் மறைப்பது மன்னோ.

pūtam aintiṉum mikavali yuṭaiyatu polaṉcēr āta vaṉṟaṉit tēriṉuñ ciṟappuṟṟa tavaṉil cōti peṟṟatu pēruṇar vuḷḷatu tolcīr māti raṅkaḷai akaṟciyāṉ maṟaippatu maṉṉō.

Report an error

என்று மேயழி வில்லது மேருவோ டிகலுங் குன்று போலுவ தகிலமும் இமைப்பினிற் குறுகிச் சென்று மீள்வது குறப்பினிற் செல்வது சிதையா ஒன்று கோடிய வாம்பரி பூண்டுள தொருங்கே.

eṉṟu mēyaḻi villatu mēruvō ṭikaluṅ kuṉṟu pōluva takilamum imaippiṉiṟ kuṟukic ceṉṟu mīḷvatu kuṟappiṉiṟ celvatu citaiyā oṉṟu kōṭiya vāmpari pūṇṭuḷa toruṅkē.

Report an error

அழிவி லாப்பல சாரதி உள்ளதங் களப்பில் விழுமி தாகிய படையெலாங் கொண்டது மேவார் ஒழிய அன்னவர் தேர்மிசைச் செல்வலுவ துருமேற் றெழிலி அச்சுறப் பன்மணி கறங்குவ தென்றும்.

aḻivi lāppala cārati uḷḷataṅ kaḷappil viḻumi tākiya paṭaiyelāṅ koṇṭatu mēvār oḻiya aṉṉavar tērmicaic celvaluva turumēṟ ṟeḻili accuṟap paṉmaṇi kaṟaṅkuva teṉṟum.

Report an error

பாரை நேர்தரு பரப்பின துலகெலாம் படைத்த நாரி பாதியன் அளித்தருள் இந்திர ஞாலத் தேரின் மால்வரை மிசையுறும் வயப்புலி செலல்போல் சூரன் ஏறியே போந்தனன் அவுணர்கள் தொழவே.

pārai nērtaru parappiṉa tulakelām paṭaitta nāri pātiyaṉ aḷittaruḷ intira ñālat tēriṉ mālvarai micaiyuṟum vayappuli celalpōl cūraṉ ēṟiyē pōntaṉaṉ avuṇarkaḷ toḻavē.

Report an error

ஆண்டவ் வெல்லையில் ஆயிர மாயிரம் யாளி தாண்டு வெம்பரி ஆயிர மாயிரந் தடந்தோள் நீண்ட பாரிடம் ஆயிர மாயிர நிரலே பூண்ட தேர்மிசை ஏறியே அரிமுகன் போந்தான்.

āṇṭav vellaiyil āyira māyiram yāḷi tāṇṭu vempari āyira māyiran taṭantōḷ nīṇṭa pāriṭam āyira māyira niralē pūṇṭa tērmicai ēṟiyē arimukaṉ pōntāṉ.

Report an error

காலும் உள்ளமும் பின்னுற முன்னுறு கவனக் கோல மாப்பதி னாயிரம் பூண்டதோர் கொடிஞ்சிச் சால மார்தரு வையமேற் புகுந்துதா ரகனும் ஆல மென்பது சென்றென நடந்தனன் அன்றே.

kālum uḷḷamum piṉṉuṟa muṉṉuṟu kavaṉak kōla māppati ṉāyiram pūṇṭatōr koṭiñcic cāla mārtaru vaiyamēṟ pukuntutā rakaṉum āla meṉpatu ceṉṟeṉa naṭantaṉaṉ aṉṟē.

Report an error

அன்ன தாரக வீரனும் அரிமுகத் தவனும் மன்ன னோர்இரு பாங்கரு மாயினர் வந்தார் துன்னு தானவத் தானையந் தலைவர்கள் தொலையாய் பொன்னின் மாமணித் தேரொடும் ஏகினர் புடையில்.

aṉṉa tāraka vīraṉum arimukat tavaṉum maṉṉa ṉōriru pāṅkaru māyiṉar vantār tuṉṉu tāṉavat tāṉaiyan talaivarkaḷ tolaiyāy poṉṉiṉ māmaṇit tēroṭum ēkiṉar puṭaiyil.

Report an error

விரவு கின்றதோர் ஏனையர் சேனையின் வீரர் கரியெ னுங்கடல் மீதினுங் கலினமார் கவனப் பரியெ னுங்கடல் மீதினும் முதல்வனைப் பரவி இரும ருங்கினும் போயினர் கூற்றனும் இரங்க.

viravu kiṉṟatōr ēṉaiyar cēṉaiyiṉ vīrar kariye ṉuṅkaṭal mītiṉuṅ kaliṉamār kavaṉap pariye ṉuṅkaṭal mītiṉum mutalvaṉaip paravi iruma ruṅkiṉum pōyiṉar kūṟṟaṉum iraṅka.

Report an error

அடல்செ றிந்திடும் ஒன்பதிற் றிருவகை யாகும் படைக ளேந்தியே அளவிலா அவுணர்கள் பரவிக் கடல்கி ளர்ந்தவண் சூழ்வன போன்றுகா வலர்தம் புடையில் வந்தனர் அசனியும் அச்சுறப் புகல்வார்.

aṭalce ṟintiṭum oṉpatiṟ ṟiruvakai yākum paṭaika ḷēntiyē aḷavilā avuṇarkaḷ paravik kaṭalki ḷarntavaṇ cūḻvaṉa pōṉṟukā valartam puṭaiyil vantaṉar acaṉiyum accuṟap pukalvār.

Report an error

இன்ன தன்மையி னாற்படை சூழ்தர இதன்பாற் துன்னு தேரென உள்ளவுந் துரகமுள் ளனவும் பன்னெ டுங்கரி உள்ளவும் அவுணர்கள் பலரும் மன்னி வந்திட நடுவுற ஏகினன் மன்னன்.

iṉṉa taṉmaiyi ṉāṟpaṭai cūḻtara itaṉpāṟ tuṉṉu tēreṉa uḷḷavun turakamuḷ ḷaṉavum paṉṉe ṭuṅkari uḷḷavum avuṇarkaḷ palarum maṉṉi vantiṭa naṭuvuṟa ēkiṉaṉ maṉṉaṉ.

Report an error

வயங்க ளார்த்திடு தானவ ரோதையும் மான்தேர் அயங்க ளார்த்திடு மோதையும் அன்னவை அணித்தாய்க் கயங்க ளார்த்திடு மோதையுங் கண்டையின் கலிப்பும் இயங்க ளார்த்திடு மோதையும் மிக்கன வெங்கும்.

vayaṅka ḷārttiṭu tāṉava rōtaiyum māṉtēr ayaṅka ḷārttiṭu mōtaiyum aṉṉavai aṇittāyk kayaṅka ḷārttiṭu mōtaiyuṅ kaṇṭaiyiṉ kalippum iyaṅka ḷārttiṭu mōtaiyum mikkaṉa veṅkum.

Report an error

அரியெ னுந்திறல் அவுணர்கள் அங்கையி லேந்தும் உரிய வெம்படை முழுவதும் ஒன்றொடொன் றுரிஞ்ச எரிபி றந்தன செறிந்தன எம்பிரான் முனிந்த புரமெ னும்படி யாகிய வரைகளும் புவியும்.

ariye ṉuntiṟal avuṇarkaḷ aṅkaiyi lēntum uriya vempaṭai muḻuvatum oṉṟoṭoṉ ṟuriñca eripi ṟantaṉa ceṟintaṉa empirāṉ muṉinta purame ṉumpaṭi yākiya varaikaḷum puviyum.

Report an error

நிரந்த தானவர் எழுந்திடப் பூழிகள் நிலமேற் பரந்து வானகம் புகுதலும் அனையது பாரா விரிந்து போவதை நீங்கியே அவைதனை எய்தக் கரந்து வைகினன் ஆழியந் தேருடைக் கதிரோன்.

niranta tāṉavar eḻuntiṭap pūḻikaḷ nilamēṟ parantu vāṉakam pukutalum aṉaiyatu pārā virintu pōvatai nīṅkiyē avaitaṉai eytak karantu vaikiṉaṉ āḻiyan tēruṭaik katirōṉ.

Report an error

பூந டுங்கின பணிக்குலம் நடுங்கின புரைதீர் வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள் தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகட் டீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல.

pūna ṭuṅkiṉa paṇikkulam naṭuṅkiṉa puraitīr vāṉa ṭuṅkiṉa mātiram naṭuṅkiṉa varaikaḷ tāna ṭuṅkiṉa puṇarikaḷ naṭuṅkiṉa taṟukaṭ ṭīna ṭuṅkiṉa nirutarkōṉ perumpaṭai cella.

Report an error

இனைய தன்மையிற் சேனைகள் தம்மொடும் இறைவன் தனதன் மாநகர் வளைந்தனன் அன்னதோர் தன்மை வினவி யோடியே தூதுவர் இயக்கர்கோன் மேவுங் கனக மாமணிக் கோநகர் சென்றனர் கடிதின்.

iṉaiya taṉmaiyiṟ cēṉaikaḷ tammoṭum iṟaivaṉ taṉataṉ mānakar vaḷaintaṉaṉ aṉṉatōr taṉmai viṉavi yōṭiyē tūtuvar iyakkarkōṉ mēvuṅ kaṉaka māmaṇik kōnakar ceṉṟaṉar kaṭitiṉ.

Report an error

சென்றிடும் ஒற்றர் தங்கோன் சேவடிக் கமலந் தாழ்ந்து வன்றிறற் சூர பன்மன் மாநகர் வளைந்து கொண்டான் இன்றினி யழியும் போலும் ஈண்டுநீ யிருத்தல் சால நன்றல அனிகத் தோடு நடத்தியால் அமருக் கென்றார்.

ceṉṟiṭum oṟṟar taṅkōṉ cēvaṭik kamalan tāḻntu vaṉṟiṟaṟ cūra paṉmaṉ mānakar vaḷaintu koṇṭāṉ iṉṟiṉi yaḻiyum pōlum īṇṭunī yiruttal cāla naṉṟala aṉikat tōṭu naṭattiyāl amaruk keṉṟār.

Report an error

தூதுவர் உரைத்தல் துன்புகூர் துளக்க மெய்தி கூதமில் அவுணர் யாம் வெலற் கரிது முக்கண் ஆதிதன் வரங்கொண் டுள்ளார் அவர்ப்புகழ்ந் தாசி செய்வான் போதுதல் கடனே யென்னாப் பொருக்கென எழுந்து போனான்.

tūtuvar uraittal tuṉpukūr tuḷakka meyti kūtamil avuṇar yām velaṟ karitu mukkaṇ ātitaṉ varaṅkoṇ ṭuḷḷār avarppukaḻn tāci ceyvāṉ pōtutal kaṭaṉē yeṉṉāp porukkeṉa eḻuntu pōṉāṉ.

Report an error

போயினன் அளகை அண்ணல் புட்பக மீது சென்று தூயதோர் இயக்க ரோடுஞ் சூரனைத் தொழுது போற்றி ஏயின ஆசி கூறி யான்நுமக் கடிய னென்ன நீயினி திருத்தி யென்றே விடுத்தனன் நிருதர் போற்றி.

pōyiṉaṉ aḷakai aṇṇal puṭpaka mītu ceṉṟu tūyatōr iyakka rōṭuñ cūraṉait toḻutu pōṟṟi ēyiṉa āci kūṟi yāṉnumak kaṭiya ṉeṉṉa nīyiṉi tirutti yeṉṟē viṭuttaṉaṉ nirutar pōṟṟi.

Report an error

அன்னது கண்டுழி அவுணர் மாப்படை மின்னவிர் முகிலினம் வெரவ ஆர்த்தன துன்னுறும் இனையவ ரோடுஞ் சூரனும் மன்னவன் அவ்வழி மகிழ்ச்சி எய்தினான்.

aṉṉatu kaṇṭuḻi avuṇar māppaṭai miṉṉavir mukiliṉam verava ārttaṉa tuṉṉuṟum iṉaiyava rōṭuñ cūraṉum maṉṉavaṉ avvaḻi makiḻcci eytiṉāṉ.

Report an error

அதுபொழு தவுணர்கள் அளவை யூடுபோய் நிதிகளும் மணிகளும் நீடு மானமுஞ் சிதைவறு படைகளுந் தேரும் மாக்களுங் கதிகெழு களிறுடன் கவர்ந்து மேவினார்.

atupoḻu tavuṇarkaḷ aḷavai yūṭupōy nitikaḷum maṇikaḷum nīṭu māṉamuñ citaivaṟu paṭaikaḷun tērum mākkaḷuṅ katikeḻu kaḷiṟuṭaṉ kavarntu mēviṉār.

Report an error

மைம்மலி தானவர் வலிந்து வவ்வலாற் பொய்ம்மையில் பெருவளம் யாவும் போக்கிய செம்மையில் அந்நகர் திருவும் நீங்கிய கைம்மைதன் வடிவெனுங் காட்சித் தாயதே.

maimmali tāṉavar valintu vavvalāṟ poymmaiyil peruvaḷam yāvum pōkkiya cemmaiyil annakar tiruvum nīṅkiya kaimmaitaṉ vaṭiveṉuṅ kāṭcit tāyatē.

Report an error

ஆறலை கள்வரின் அவுணர் யாவருஞ் சூறைகொண் டந்நகர் தொலைத்து போதலும் ஊறுகொள் நிதிபதி உள்ளம் நாணியே வீறகல் அளகையின் மீண்டும் ஏகினான்.

āṟalai kaḷvariṉ avuṇar yāvaruñ cūṟaikoṇ ṭannakar tolaittu pōtalum ūṟukoḷ nitipati uḷḷam nāṇiyē vīṟakal aḷakaiyiṉ mīṇṭum ēkiṉāṉ.

Report an error

ஆண்டுறு தனதனை அடித்தொண் டாற்றுவான் மாண்டனன் இவனென மனத்தி லுன்னியே ஈண்டிய தானையொ டிமைப்பிற் பாகரைத் தூண்டுதிர் தேரெனச் சூரன் போயினான்.

āṇṭuṟu taṉataṉai aṭittoṇ ṭāṟṟuvāṉ māṇṭaṉaṉ ivaṉeṉa maṉatti luṉṉiyē īṇṭiya tāṉaiyo ṭimaippiṟ pākarait tūṇṭutir tēreṉac cūraṉ pōyiṉāṉ.

Report an error

அளகையை நீங்கியே ஆசைக் கீறதாய் உளநகர் எய்தினன் ஒளிரு நீலமார் களனுரு வெய்திய கடவுள் வைகிய வளநகர் ஈதென மன்னன் உன்னினான்.

aḷakaiyai nīṅkiyē ācaik kīṟatāy uḷanakar eytiṉaṉ oḷiru nīlamār kaḷaṉuru veytiya kaṭavuḷ vaikiya vaḷanakar īteṉa maṉṉaṉ uṉṉiṉāṉ.

Report an error

அந்தமா நகரைவிட் டவுணர் கோமகன் முந்துதன் படையொடு முனிந்து கீழ்த்திசை இந்திரன் நகர்புக இதனை நாடியே வெந்துயர் அமரர்கோன் விண்ணிற் போயினான்.

antamā nakaraiviṭ ṭavuṇar kōmakaṉ muntutaṉ paṭaiyoṭu muṉintu kīḻtticai intiraṉ nakarpuka itaṉai nāṭiyē ventuyar amararkōṉ viṇṇiṟ pōyiṉāṉ.

Report an error

போயதை நாடிஅப் புரத்தை முற்றவுங் காயெரி கைக்கொளக் கடிதின் நல்கியே ஆயிடை அனிகமோ டகன்று வெய்யசெந் தீயுறு நகரிடைச் சேறல் மேயினான்.

pōyatai nāṭiap purattai muṟṟavuṅ kāyeri kaikkoḷak kaṭitiṉ nalkiyē āyiṭai aṉikamō ṭakaṉṟu veyyacen tīyuṟu nakariṭaic cēṟal mēyiṉāṉ.

Report an error

சேறலும் நாடியத் தீயின் பேரினான் ஈறகல் வெஞ்சினம் எய்தி ஆயிர நூறெனுங் கோடியர் நொய்திற் சூழ்தர மாறிகல் புரிந்திட வந்து நேர்ந்தனன்.

cēṟalum nāṭiyat tīyiṉ pēriṉāṉ īṟakal veñciṉam eyti āyira nūṟeṉuṅ kōṭiyar noytiṟ cūḻtara māṟikal purintiṭa vantu nērntaṉaṉ.

Report an error

நேர்தலும் அங்கிதன் நீடு தானையுஞ் சார்தரும் அவுணர்தம் படையுந் தாமுறாப் போர்தலை மயக்குறப் பொருத எல்லையிற் சூர்தரு கனல்படை தொலைந்து போயதே.

nērtalum aṅkitaṉ nīṭu tāṉaiyuñ cārtarum avuṇartam paṭaiyun tāmuṟāp pōrtalai mayakkuṟap poruta ellaiyiṟ cūrtaru kaṉalpaṭai tolaintu pōyatē.

Report an error

தன்படை உடைதலுந் தழலின் பண்ணவன் துன்படை மனத்தனாய்த் தொல்லை ஊழிநா ளின்படை உலகெலாம் ஈறு செய்திடு வன்படை பேருரு வல்லை தாங்கினான்.

taṉpaṭai uṭaitalun taḻaliṉ paṇṇavaṉ tuṉpaṭai maṉattaṉāyt tollai ūḻinā ḷiṉpaṭai ulakelām īṟu ceytiṭu vaṉpaṭai pēruru vallai tāṅkiṉāṉ.

Report an error

சிறந்திடும் அவுணர்கோன் சேனை மாக்கடல் வறந்திட இப்பகல் மாய்ப்பன் யானெனா நிறைந்திடும் அவுணமா நீத்தம் எங்கணுஞ் செறிந்தனன் வளைந்தனன் சிதைத்தல் மேயினான்.

ciṟantiṭum avuṇarkōṉ cēṉai mākkaṭal vaṟantiṭa ippakal māyppaṉ yāṉeṉā niṟaintiṭum avuṇamā nīttam eṅkaṇuñ ceṟintaṉaṉ vaḷaintaṉaṉ citaittal mēyiṉāṉ.

Report an error

கடல்கெழு சேனையைக் கலந்து பாவகன் சடசட முதிரொலி தழங்கப் புக்குலாய் அடலுறு மெல்லையில் அதுகண் டாழிவாய் விடமென உருத்தனன் வீரன் தாரகன்.

kaṭalkeḻu cēṉaiyaik kalantu pāvakaṉ caṭacaṭa mutiroli taḻaṅkap pukkulāy aṭaluṟu mellaiyil atukaṇ ṭāḻivāy viṭameṉa uruttaṉaṉ vīraṉ tārakaṉ.

Report an error

உருத்திடு தாரகன் ஒருதன் தேரொடு மருத்தினும் விசையுற வந்து தானையை எரித்திடும் அங்கியை எதிர்ந்து செங்கையில் தரித்திடு கார்முகந் தன்னை வாங்கினான்.

uruttiṭu tārakaṉ orutaṉ tēroṭu maruttiṉum vicaiyuṟa vantu tāṉaiyai erittiṭum aṅkiyai etirntu ceṅkaiyil tarittiṭu kārmukan taṉṉai vāṅkiṉāṉ.

Report an error

வானவர் தமையும்இவ் வன்னி தன்னையும் ஏனையர் தம்மையும் முடிப்பன் இன்றெனாத் தேனிவர் இதழியந் தேவன் மாப்படை ஆனதை எடுத்தனன் அருச்சித் தேத்தியே.

vāṉavar tamaiyumiv vaṉṉi taṉṉaiyum ēṉaiyar tammaiyum muṭippaṉ iṉṟeṉāt tēṉivar itaḻiyan tēvaṉ māppaṭai āṉatai eṭuttaṉaṉ aruccit tēttiyē.

Report an error

எடுத்திடு மெல்லையில் எரிகண் டிங்கிது தொடுத்திடின் உலகெலாந் தொலைக்கும் என்னையும் முடித்திடும் நான்முகன் முதலி னோரையும் படுத்திடும் இன்றெனப் பையுள் எய்தினான்.

eṭuttiṭu mellaiyil erikaṇ ṭiṅkitu toṭuttiṭiṉ ulakelān tolaikkum eṉṉaiyum muṭittiṭum nāṉmukaṉ mutali ṉōraiyum paṭuttiṭum iṉṟeṉap paiyuḷ eytiṉāṉ.

Report an error

சுடுங்கனற் கடவுளுஞ் சுருக்கித் தன்னுரு ஒடுங்கினன் ஆகுலம் உற்றுச் சிந்தையும் நடுங்கினன் தாரகன் முன்னர் நண்ணினான் கடுங்கதி அதனொடுங் கரங்கள் கூப்பியே.

cuṭuṅkaṉaṟ kaṭavuḷuñ curukkit taṉṉuru oṭuṅkiṉaṉ ākulam uṟṟuc cintaiyum naṭuṅkiṉaṉ tārakaṉ muṉṉar naṇṇiṉāṉ kaṭuṅkati ataṉoṭuṅ karaṅkaḷ kūppiyē.

Report an error

தோற்றுவித் துலகெலாந் தொலைக்கும் எம்பிரான் மாற்றரும் படைக்கலம் மற்றென் மேவிடப் போற்றினை எடுத்திஎப் புவனத் துள்ளவர் ஆற்றலும் உயிர்களும் அதன்முன் நிற்குமோ.

tōṟṟuvit tulakelān tolaikkum empirāṉ māṟṟarum paṭaikkalam maṟṟeṉ mēviṭap pōṟṟiṉai eṭuttiep puvaṉat tuḷḷavar āṟṟalum uyirkaḷum ataṉmuṉ niṟkumō.

Report an error

கழிதரு சினங்கொளல் கடவுள் மாப்படை விழுமிய தன்னதை விடுத்து ளாயெனின் அழிதரும் உலகெலாம் அதுவும் அன்றியே பழிபெறும் அன்னதோர் படையின் வேந்துமே.

kaḻitaru ciṉaṅkoḷal kaṭavuḷ māppaṭai viḻumiya taṉṉatai viṭuttu ḷāyeṉiṉ aḻitarum ulakelām atuvum aṉṟiyē paḻipeṟum aṉṉatōr paṭaiyiṉ vēntumē.

Report an error

பொறுத்தியென் பிழையெனப் போற்றி நிற்றலும் கறுத்திடு மிடறுடைக் கடவுள் மாப்படை செறுத்தவன் மீமிசைச் செல்ல விட்டிலன் மறுத்தனன் சினத்தினை மகிழ்ச்சி எய்தினான்.

poṟuttiyeṉ piḻaiyeṉap pōṟṟi niṟṟalum kaṟuttiṭu miṭaṟuṭaik kaṭavuḷ māppaṭai ceṟuttavaṉ mīmicaic cella viṭṭilaṉ maṟuttaṉaṉ ciṉattiṉai makiḻcci eytiṉāṉ.

Report an error

எற்றிடும் எற்றிடும் இவனை வல்லையிற் செற்றிடுஞ் செற்றிடுந் தீயன் சாலவுங் குற்றிடுங் குற்றிடு மென்று கூறியே சுற்றினர் அவுணர்கள் தீயைச் சூழவே.

eṟṟiṭum eṟṟiṭum ivaṉai vallaiyiṟ ceṟṟiṭuñ ceṟṟiṭun tīyaṉ cālavuṅ kuṟṟiṭuṅ kuṟṟiṭu meṉṟu kūṟiyē cuṟṟiṉar avuṇarkaḷ tīyaic cūḻavē.

Report an error

தானவர் யாரையும் விலக்கித் தாரகன் நீநம தேவலின் நிற்றி நின்னுயிர் போனதை உதவினம் போதி போதிநின் மாநக ரிடையென வல்லை கூறினான்.

tāṉavar yāraiyum vilakkit tārakaṉ nīnama tēvaliṉ niṟṟi niṉṉuyir pōṉatai utaviṉam pōti pōtiniṉ mānaka riṭaiyeṉa vallai kūṟiṉāṉ.

Report an error

விடுத்தனன் அங்கியை விடுக்கு முன்னரே அடுத்திடு தானவர் அவன்றன் ஊர்புகா மடுத்திடு வளனெலாம் வாரி வாரிமீன் படுத்திடு கொலைஞர்தம் பரிசின் மீண்டனர்.

viṭuttaṉaṉ aṅkiyai viṭukku muṉṉarē aṭuttiṭu tāṉavar avaṉṟaṉ ūrpukā maṭuttiṭu vaḷaṉelām vāri vārimīṉ paṭuttiṭu kolaiñartam pariciṉ mīṇṭaṉar.

Report an error

மீண்டனர் அவுணர் அங்கி வெள்கியே தன்னூர் புக்கான் ஆண்டவண் அகன்று போனான் தாரகன் அவ்வா றெல்லாங் காண்டலுஞ் சூர னென்போன் கலினமான் தேரைப் பாக தூண்டுதி நடுவன் மேவுந் தொல்லைமா நகரத் தென்றான்.

mīṇṭaṉar avuṇar aṅki veḷkiyē taṉṉūr pukkāṉ āṇṭavaṇ akaṉṟu pōṉāṉ tārakaṉ avvā ṟellāṅ kāṇṭaluñ cūra ṉeṉpōṉ kaliṉamāṉ tēraip pāka tūṇṭuti naṭuvaṉ mēvun tollaimā nakarat teṉṟāṉ.

Report an error

கடவுதி தேரை என்னக் கைதொழு தைய நொய்தின் அடுதொழில் அவன்பால் உய்ப்பன் அன்னது காண்டி யென்னாப் படர்தரும் வலவ ரோடும் பலிங்கன்என் றுரைக்கு மேலோன் சுடர்மலி கதிரும் நாணத் தண்ணெனத் தூண்டி ஆர்த்தான்.

kaṭavuti tērai eṉṉak kaitoḻu taiya noytiṉ aṭutoḻil avaṉpāl uyppaṉ aṉṉatu kāṇṭi yeṉṉāp paṭartarum valava rōṭum paliṅkaṉeṉ ṟuraikku mēlōṉ cuṭarmali katirum nāṇat taṇṇeṉat tūṇṭi ārttāṉ.

Report an error

ஆர்த்தன படருஞ் சேனை அதிர்ந்தன முரச மெங்கும் போர்த்தன கரிதேர் வாசி புகுந்தன பூழி வேலை தூர்த்தன துவசம் விண்ணைத் தொடர்ந்தன தூசி யென்னுந் தார்த்தொகை முன்ன மேகித் தண்டனூர் உடைந்த வன்றே.

ārttaṉa paṭaruñ cēṉai atirntaṉa muraca meṅkum pōrttaṉa karitēr vāci pukuntaṉa pūḻi vēlai tūrttaṉa tuvacam viṇṇait toṭarntaṉa tūci yeṉṉun tārttokai muṉṉa mēkit taṇṭaṉūr uṭainta vaṉṟē.

Report an error

அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கொர்தூ தெய்தி நந்தங் கடிநகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர் கொடியவெஞ் சேனை யென்னக் கூற்றெனுங் கடவுள் கேளா இடியுறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான்.

aṭaitalum naṭuvaṉ taṉpāl āṅkortū teyti nantaṅ kaṭinakar kalanta antak kācipa muṉivaṉ maintar koṭiyaveñ cēṉai yeṉṉak kūṟṟeṉuṅ kaṭavuḷ kēḷā iṭiyuṟum aravam eṉṉa ēṅkiṉaṉ iraṅku kiṉṟāṉ.

Report an error

முன்னுறு தனதனும் முளரித் தேவனும் மன்னனை யெதிர்கொளா வழுத்திப் போயினார் அன்னது புரிவதே அழகி தாமென உன்னினன் நடுவனும் உணர்வி னும்பரான்.

muṉṉuṟu taṉataṉum muḷarit tēvaṉum maṉṉaṉai yetirkoḷā vaḻuttip pōyiṉār aṉṉatu purivatē aḻaki tāmeṉa uṉṉiṉaṉ naṭuvaṉum uṇarvi ṉumparāṉ.

Report an error

தேற்றமொ டெழுந்துதன் மகிடஞ் சேர்ந்தனன் ஏற்றமில் படைஞரும் ஈண்ட ஏகியே கூற்றுவன் இமைப்பினிற் குறுகிச் சூரனைப் போற்றினன் தொழுதனன் புகலும் ஆசியான்.

tēṟṟamo ṭeḻuntutaṉ makiṭañ cērntaṉaṉ ēṟṟamil paṭaiñarum īṇṭa ēkiyē kūṟṟuvaṉ imaippiṉiṟ kuṟukic cūraṉaip pōṟṟiṉaṉ toḻutaṉaṉ pukalum āciyāṉ.

Report an error

திருத்தகு மறலிதன் செய்கை நோக்கியே அருத்தியின் மகிழ்வுறும் அவுணன் நம்பணி பரித்தனை யீண்டுநின் பரிச னத்தொடும் இருத்தியென் றனையனை ஏவிப் போயினான்.

tiruttaku maṟalitaṉ ceykai nōkkiyē aruttiyiṉ makiḻvuṟum avuṇaṉ nampaṇi parittaṉai yīṇṭuniṉ parica ṉattoṭum iruttiyeṉ ṟaṉaiyaṉai ēvip pōyiṉāṉ.

Report an error

இறுதியை இயற்றுவான் இருக்கை யென்பதோர் மறிகடல் அதனிடை வளங்கொள் வாரியைத் திறலுறும் அவுணர்தஞ் சேனை சென்றரோ முறைமுறை கவர்ந்தன முகிலின் தன்மைபோல்.

iṟutiyai iyaṟṟuvāṉ irukkai yeṉpatōr maṟikaṭal ataṉiṭai vaḷaṅkoḷ vāriyait tiṟaluṟum avuṇartañ cēṉai ceṉṟarō muṟaimuṟai kavarntaṉa mukiliṉ taṉmaipōl.

Report an error

கூற்றுவன் பெருவலி குறைந்த வண்ணமும் போற்றினன் போயதும் புந்தி உன்னியே ஆற்றவும் மகிழ்வுறீஇ அனிக மோடுதென் மேற்றிசை நிருதிமேல் விரைவின் ஏகினான்.

kūṟṟuvaṉ peruvali kuṟainta vaṇṇamum pōṟṟiṉaṉ pōyatum punti uṉṉiyē āṟṟavum makiḻvuṟīi aṉika mōṭuteṉ mēṟṟicai nirutimēl viraiviṉ ēkiṉāṉ.

Report an error

நிருதியும் இஃதெலாம் நேடி யாமிவர்ப் பொருவதும் அரியதாற் போரி யற்றினும் வருதிறல் இல்லையால் வசைய தேயெனாக் கருதினன் அவரொடு கலத்தற் குன்னினான்.

nirutiyum iḵtelām nēṭi yāmivarp poruvatum ariyatāṟ pōri yaṟṟiṉum varutiṟal illaiyāl vacaiya tēyeṉāk karutiṉaṉ avaroṭu kalattaṟ kuṉṉiṉāṉ.

Report an error

உன்னினன் தானையோ டொருங்கு மேவியே மன்னவன் எதிர்புகா வழுத்தி மற்றவன் தன்னடி வணங்கியுன் தமரி யானெனாப் பன்னினன் தாரகன் பாங்கர் ஏகினான்.

uṉṉiṉaṉ tāṉaiyō ṭoruṅku mēviyē maṉṉavaṉ etirpukā vaḻutti maṟṟavaṉ taṉṉaṭi vaṇaṅkiyuṉ tamari yāṉeṉāp paṉṉiṉaṉ tārakaṉ pāṅkar ēkiṉāṉ.

Report an error

அருகுற வருதலும் அவுணர் கோமகன் நிருதியின் நகரினை நீங்கி யேகலும் வருணனும் மருத்துவும் வாரி தன்னினும் இருவ்செறி உலகினும் இமைப்பிற் போயினார்.

arukuṟa varutalum avuṇar kōmakaṉ nirutiyiṉ nakariṉai nīṅki yēkalum varuṇaṉum maruttuvum vāri taṉṉiṉum iruvceṟi ulakiṉum imaippiṟ pōyiṉār.

Report an error

போதலும் அவரவர் புரத்தைச் சூறைகொண் டேதம தியற்றுவித் தெழுவ கைத்தெனும் பாதல வுலகினிற் படர்ந்து தானவ ராதியர் போற்றிட அருள்செய் தேகினான்.

pōtalum avaravar purattaic cūṟaikoṇ ṭētama tiyaṟṟuvit teḻuva kaitteṉum pātala vulakiṉiṟ paṭarntu tāṉava rātiyar pōṟṟiṭa aruḷcey tēkiṉāṉ.

Report an error

உற்றனன் நாகர்கோன் உலகில் அன்னவன் செற்றமொ டேசெருச் செய்யத் தானையால் வெற்றிகொண் டேயவன் வியந்து போற்றிட மற்றவன் இருக்கையோர் வைகல் வைகினான்.

uṟṟaṉaṉ nākarkōṉ ulakil aṉṉavaṉ ceṟṟamo ṭēceruc ceyyat tāṉaiyāl veṟṟikoṇ ṭēyavaṉ viyantu pōṟṟiṭa maṟṟavaṉ irukkaiyōr vaikal vaikiṉāṉ.

Report an error

அத்தலை உரகர்கோன் அமரர் தந்திட வைத்திடும் அமுதினை வலிதின் வாங்கியே மெய்த்தகு தம்பிய ரோடு மேன்மையால் துய்த்தனன் அகன்றனன் சூர பன்மனே.

attalai urakarkōṉ amarar tantiṭa vaittiṭum amutiṉai valitiṉ vāṅkiyē meyttaku tampiya rōṭu mēṉmaiyāl tuyttaṉaṉ akaṉṟaṉaṉ cūra paṉmaṉē.

Report an error

ஏனைய பிலந்தொறும் ஏகி அவ்வயின் மேனதோர் விருந்தினை வியப்பின் நாடியே மானவர் படையொடும் வல்லை மீண்டனன் போனதோர் நிலைதொறும் புகழை நாட்டினான்.

ēṉaiya pilantoṟum ēki avvayiṉ mēṉatōr viruntiṉai viyappiṉ nāṭiyē māṉavar paṭaiyoṭum vallai mīṇṭaṉaṉ pōṉatōr nilaitoṟum pukaḻai nāṭṭiṉāṉ.

Report an error

பூவுல கிடையே போந்து புணரியொன் றகன்று மற்றைத் தீவினை யொருவிச் சூரன் சேனைமா நீத்தஞ் சூழ மாவொடு புவனி போற்ற வரியரா அணையின் நேமிக் காவலன் துயில்கூர் பாலின் கடலிடைக் கடிது புக்கான்

pūvula kiṭaiyē pōntu puṇariyoṉ ṟakaṉṟu maṟṟait tīviṉai yoruvic cūraṉ cēṉaimā nīttañ cūḻa māvoṭu puvaṉi pōṟṟa variyarā aṇaiyiṉ nēmik kāvalaṉ tuyilkūr pāliṉ kaṭaliṭaik kaṭitu pukkāṉ

Report an error

புக்கதோர் வேலை யன்னான் போர்ப்படை அவுணர் யாரும் மைக்கடன் மேனி மாயோன் மன்னினன் ஈண்டை யென்னா அக்கடல் அதனைத் தொன்னாள் அமரர்கள் கடைந்த தேபோல் மிக்கதோர் ஆர்ப்பி னோடும் விரைவுடன் கலக்க லுற்றார்.

pukkatōr vēlai yaṉṉāṉ pōrppaṭai avuṇar yārum maikkaṭaṉ mēṉi māyōṉ maṉṉiṉaṉ īṇṭai yeṉṉā akkaṭal ataṉait toṉṉāḷ amararkaḷ kaṭainta tēpōl mikkatōr ārppi ṉōṭum viraivuṭaṉ kalakka luṟṟār.

Report an error

ஆர்த்திடு முழக்கங் கேளா அம்புயத் திருவும் பாரும் வேர்த்துடல் பதைப்ப அஞ்சி வெருக்கொடு கரிய மேனித் தீர்த்தன தகலத் தூடு சேர்ந்தனர் தழுவ அன்னோன் பார்த்தனன் அஞ்சல் என்று பகர்ந்தனன் துயிலை நீங்கி.

ārttiṭu muḻakkaṅ kēḷā ampuyat tiruvum pārum vērttuṭal pataippa añci verukkoṭu kariya mēṉit tīrttaṉa takalat tūṭu cērntaṉar taḻuva aṉṉōṉ pārttaṉaṉ añcal eṉṟu pakarntaṉaṉ tuyilai nīṅki.

Report an error

இம்மெனப் பணியின் மீதும் எழுந்தனன் இறுதி செய்யும் வெம்மைகொள் கடவுட் டீயும் வெருவர உருத்துச் சீறி நம்மையும் பொரவுந் தீயோர் நண்ணினர் போலும் அன்னார் தம்வலி காண்டும் என்னாத் தடக்கைகள் புடைத்து நக்கான்.

immeṉap paṇiyiṉ mītum eḻuntaṉaṉ iṟuti ceyyum vemmaikoḷ kaṭavuṭ ṭīyum veruvara uruttuc cīṟi nammaiyum poravun tīyōr naṇṇiṉar pōlum aṉṉār tamvali kāṇṭum eṉṉāt taṭakkaikaḷ puṭaittu nakkāṉ.

Report an error

சிந்தையில் உன்னும் முன்னந் திறல்மிகும் உவணர்கோமான் வந்தனன் அவன்பொற் றோள்மேல் மடங்கலே றென்னப் புக்குச் சந்திரன் அனைய சங்கஞ் சக்கரங் கதைவாள் சாபம் ஐந்தெனும் படையும் ஏந்தி அவுணர்தம் படைமுற் சென்றான்.

cintaiyil uṉṉum muṉṉan tiṟalmikum uvaṇarkōmāṉ vantaṉaṉ avaṉpoṟ ṟōḷmēl maṭaṅkalē ṟeṉṉap pukkuc cantiraṉ aṉaiya caṅkañ cakkaraṅ kataivāḷ cāpam ainteṉum paṭaiyum ēnti avuṇartam paṭaimuṟ ceṉṟāṉ.

Report an error

கோட்டினன் சார்ங்க மென்னுங் குனிசிலை யினைநாண் ஓதை காட்டினன் அவுணர் உள்ளங் கலக்கினன் கொண்ட செற்றம் வீட்டினன் தானை யாவும் விலக்கினன் பகழி மேன்மேற் பூட்டினன் சோனைக் கொண்மூ வாமெனப் பொழித லுற்றான்.

kōṭṭiṉaṉ cārṅka meṉṉuṅ kuṉicilai yiṉaināṇ ōtai kāṭṭiṉaṉ avuṇar uḷḷaṅ kalakkiṉaṉ koṇṭa ceṟṟam vīṭṭiṉaṉ tāṉai yāvum vilakkiṉaṉ pakaḻi mēṉmēṟ pūṭṭiṉaṉ cōṉaik koṇmū vāmeṉap poḻita luṟṟāṉ.

Report an error

பொழிந்திடு கின்ற காலைப் போர்கெழும் அவுணர் தானை அழிந்தன தேரும் மாவும் ஆடலங் கரிகள் தாமும் ஒழிந்தன விறலும் போரின் ஊக்கமும் படையு மெல்லாங் கழிந்தன சூறை யுற்ற காரெனல் ஆய வன்றே.

poḻintiṭu kiṉṟa kālaip pōrkeḻum avuṇar tāṉai aḻintaṉa tērum māvum āṭalaṅ karikaḷ tāmum oḻintaṉa viṟalum pōriṉ ūkkamum paṭaiyu mellāṅ kaḻintaṉa cūṟai yuṟṟa kāreṉal āya vaṉṟē.

Report an error

சூழ்ந்திடும் அவுணர் சென்னி துணிந்தன தோளுந் தாளும் வீழ்ந்தன கரங்கள் சிந்தி விரவின குருதி நீத்தம் ஆழ்ந்திடு புணரி யெல்லாம் ஆயின அவனி தானுந் தாழ்ந்தன பிணத்தின் குன்றந் தகைந்தன தபனன் தேரை.

cūḻntiṭum avuṇar ceṉṉi tuṇintaṉa tōḷun tāḷum vīḻntaṉa karaṅkaḷ cinti viraviṉa kuruti nīttam āḻntiṭu puṇari yellām āyiṉa avaṉi tāṉun tāḻntaṉa piṇattiṉ kuṉṟan takaintaṉa tapaṉaṉ tērai.

Report an error

ஒடிந்தன இரதம் ஆழி உருண்டன கவனப் பாய்மா மடிந்தன களிறு நொந்து மாண்டன வயவர் பல்லோர் முடிந்தனர் குருதி நீத்தம் மூடின அதனுள் மூழ்கிப் படிந்தன அலகை ஈட்டம் பாரிடம் பரந்த வன்றே.

oṭintaṉa iratam āḻi uruṇṭaṉa kavaṉap pāymā maṭintaṉa kaḷiṟu nontu māṇṭaṉa vayavar pallōr muṭintaṉar kuruti nīttam mūṭiṉa ataṉuḷ mūḻkip paṭintaṉa alakai īṭṭam pāriṭam paranta vaṉṟē.

Report an error

சுடர்கெழு நேமி அண்ணல் துயிலுறு பாலின் வேலை இடையொரு சிறிது மின்றி எங்கணும் எருவை யாகி அடைவது கடவு ளாடும் ஆரழல் அதனை உண்ணக் கடையுகம் விரவு கின்ற காட்சியைப் போன்ற தம்மா.

cuṭarkeḻu nēmi aṇṇal tuyiluṟu pāliṉ vēlai iṭaiyoru ciṟitu miṉṟi eṅkaṇum eruvai yāki aṭaivatu kaṭavu ḷāṭum āraḻal ataṉai uṇṇak kaṭaiyukam viravu kiṉṟa kāṭciyaip pōṉṟa tammā.

Report an error

விண்ணுலாம் படிவ மாயோன் மேதகும் உவணத் தோடு மண்ணுலாம் கடலா மென்ன அவுணரை வளைந்து சுற்றி எண்ணிலா உருவங் காட்டி யாவரும் போகா வண்ணம் அண்ணல்வாம் பகழி சிந்தி அமர்செய்தான் அமரர் ஆர்ப்பு.

viṇṇulām paṭiva māyōṉ mētakum uvaṇat tōṭu maṇṇulām kaṭalā meṉṉa avuṇarai vaḷaintu cuṟṟi eṇṇilā uruvaṅ kāṭṭi yāvarum pōkā vaṇṇam aṇṇalvām pakaḻi cinti amarceytāṉ amarar ārppu.

Report an error

அடுசமர் புரியும் எல்லை ஆங்கவை உருத்து நோக்கி உடைவதோர் அனிகந் தன்னை யொன்றுநீர் அஞ்ச லென்னா வடவரை யனைய ஆற்றல் மாபெருந் தனுவொன் றேந்தி இடியுறழ் கலிமான் தேர்மேல் தாரகன் இமைப்பின் வந்தான்.

aṭucamar puriyum ellai āṅkavai uruttu nōkki uṭaivatōr aṉikan taṉṉai yoṉṟunīr añca leṉṉā vaṭavarai yaṉaiya āṟṟal māperun taṉuvoṉ ṟēnti iṭiyuṟaḻ kalimāṉ tērmēl tārakaṉ imaippiṉ vantāṉ.

Report an error

வானில மளவு செய்த மலர்ப்பதத் தண்ணல் முன்னந் தானெதிர் புகுந்து வெய்யோன் தன்பெருந் தனுவை வாங்கி மேனகு சரங்கள் கண்ணன் மிசையுற வேலை மீதில் சோனைவிண் பொழிவ தென்னத் துண்ணெனத் தூவி ஆர்த்தான்.

vāṉila maḷavu ceyta malarppatat taṇṇal muṉṉan tāṉetir pukuntu veyyōṉ taṉperun taṉuvai vāṅki mēṉaku caraṅkaḷ kaṇṇaṉ micaiyuṟa vēlai mītil cōṉaiviṇ poḻiva teṉṉat tuṇṇeṉat tūvi ārttāṉ.

Report an error

ஆர்த்திடும் அளவை தன்னில் அச்சுதன் அயில்வே லென்னக் கூர்த்திடும் உலப்பில் வாளி கொடியதா ரகன்றன் மேனி தூர்த்தனன் தேரும் பாகுந் தொலைத்தலுஞ் சோர்வி லாதான் பேர்த்தொரு தடந்தேர் உற்றுப் பெருஞ்சிலை வாங்கி னானால்.

ārttiṭum aḷavai taṉṉil accutaṉ ayilvē leṉṉak kūrttiṭum ulappil vāḷi koṭiyatā rakaṉṟaṉ mēṉi tūrttaṉaṉ tērum pākun tolaittaluñ cōrvi lātāṉ pērttoru taṭantēr uṟṟup peruñcilai vāṅki ṉāṉāl.

Report an error

உற்றிடும் அவுணன் மால்மேல் ஒராயிரம் பகழி ஓச்சி அற்றமில் கருடன் மீதும் ஆயிரம் விசிக முய்ப்ப மற்றவை அவன்பால் தீய மாசுணம் பலவுந் தங்கள் பற்றலன் தன்னை வவ்வும் பரிசெனச் செறிந்த வன்றே.

uṟṟiṭum avuṇaṉ mālmēl orāyiram pakaḻi ōcci aṟṟamil karuṭaṉ mītum āyiram vicika muyppa maṟṟavai avaṉpāl tīya mācuṇam palavun taṅkaḷ paṟṟalaṉ taṉṉai vavvum pariceṉac ceṟinta vaṉṟē.

Report an error

ஆயிடை உவணர் கோமான் அலக்கணுற் றதனை நோக்கி மாயவன் உலப்பி லாத வடிவினை யெய்தி அந்தத் தீயவற் சூழ்ந்து வெம்போர் செய்துழி அவனுந் தங்கள் தாயருள் மனுவை உன்னித் தானுமந் நிலைய னானான்.

āyiṭai uvaṇar kōmāṉ alakkaṇuṟ ṟataṉai nōkki māyavaṉ ulappi lāta vaṭiviṉai yeyti antat tīyavaṟ cūḻntu vempōr ceytuḻi avaṉun taṅkaḷ tāyaruḷ maṉuvai uṉṉit tāṉuman nilaiya ṉāṉāṉ.

Report an error

தாரக வசுரன் தானுந் தணப்பில்பல் லுருவங் கொள்ளா ஈரிரு வைகல் காறும் இந்திரை கேள்வ னோடு பேரமர் புரிந்த வெல்லைப் பிதாமகன் இதனை நோக்கி யாரிவன் எதிர்நிற் பாரென் றதிசய நீர னானான்.

tāraka vacuraṉ tāṉun taṇappilpal luruvaṅ koḷḷā īriru vaikal kāṟum intirai kēḷva ṉōṭu pēramar purinta vellaip pitāmakaṉ itaṉai nōkki yārivaṉ etirniṟ pāreṉ ṟaticaya nīra ṉāṉāṉ.

Report an error

எல்லையங் கதனின் மாயோன் எறுழ்வலி அவுணன் ஏறுஞ் சில்லியந் தேரும் மாவுந் திறன்மிகு வலவன் தானும் வில்லொடு துணிந்துவீழ விசிகமோர் கோடி உய்த்தான் ஒல்லையின் அதனை நாடி உம்பர்கோன் உவகை பூத்தான்.

ellaiyaṅ kataṉiṉ māyōṉ eṟuḻvali avuṇaṉ ēṟuñ cilliyan tērum māvun tiṟaṉmiku valavaṉ tāṉum villoṭu tuṇintuvīḻa vicikamōr kōṭi uyttāṉ ollaiyiṉ ataṉai nāṭi umparkōṉ uvakai pūttāṉ.

Report an error

திண்டிறற் பரியுந் சிலையொடு வலவன் தானுந் துண்டம தடைத லோடுஞ் சூரனுக் கிளைய தோன்றல் தண்டமொன் றெடுத்துக் கீழ்போய்த் தலைபனித் தமரர் அஞ்ச அண்டமுங் குலுங்க ஆர்த்தங் கரிதனை யெதிர்ந்து சென்றான்.

tiṇṭiṟaṟ pariyun cilaiyoṭu valavaṉ tāṉun tuṇṭama taṭaita lōṭuñ cūraṉuk kiḷaiya tōṉṟal taṇṭamoṉ ṟeṭuttuk kīḻpōyt talaipaṉit tamarar añca aṇṭamuṅ kuluṅka ārttaṅ karitaṉai yetirntu ceṉṟāṉ.

Report an error

எதிர்வரும் அவுணன் தன்மேல் எண்ணிலாப் பகழி மாரி விதியினை அளித்த மாயன் வீசலும் அவற்றை யெல்லாங் கதைகொடு விலக்கிச் சிந்திக் கனன்றுமுற் கடிதிற் செல்ல அதுதனை நோக்கி மாலும் ஆழியம் படையை உய்த்தான்.

etirvarum avuṇaṉ taṉmēl eṇṇilāp pakaḻi māri vitiyiṉai aḷitta māyaṉ vīcalum avaṟṟai yellāṅ kataikoṭu vilakkic cintik kaṉaṉṟumuṟ kaṭitiṟ cella atutaṉai nōkki mālum āḻiyam paṭaiyai uyttāṉ.

Report an error

ஓரிமை யொடுங்கு முன்னர் உலகெலாந் தொலைக்குந் தன்மைப் போரயில் நேமி தானும் புராரிதன் வரத்தாற் சென்று தாரக வசுரன் கண்டந் தன்னைவந் தணுகிச் செம்பொன் ஆரம தாயிற் றம்மா தவத்தினும் ஆக்க முண்டோ.

ōrimai yoṭuṅku muṉṉar ulakelān tolaikkun taṉmaip pōrayil nēmi tāṉum purāritaṉ varattāṟ ceṉṟu tāraka vacuraṉ kaṇṭan taṉṉaivan taṇukic cempoṉ ārama tāyiṟ ṟammā tavattiṉum ākka muṇṭō.

Report an error

பணியுறு கடவுள் நேமிப் படையுமாங் கவுணன் கண்டத் தணியதா யிருத்த லோடும் அரனருள் வரத்தை யுன்னித் தணிவிலற் புதத்த னாகித் தாரகன் வலிய னென்னா மணிகிளர் மேனி மாயோன் மற்றிது புகலல் உற்றான்.

paṇiyuṟu kaṭavuḷ nēmip paṭaiyumāṅ kavuṇaṉ kaṇṭat taṇiyatā yirutta lōṭum araṉaruḷ varattai yuṉṉit taṇivilaṟ putatta ṉākit tārakaṉ valiya ṉeṉṉā maṇikiḷar mēṉi māyōṉ maṟṟitu pukalal uṟṟāṉ.

Report an error

அயனொடு ததீசி யென்னும் அருந்தவத் தோனும் வெம்போர் முயலுறும் அவுணர் யாரும் மொழிந்திடின் உனக்கொப் பல்லார் செயலுரை யின்றி உண்டாற் சிறுவிதி மகத்தைச் செற்ற வயமிகு கழற்கால் வீரன் மற்றுனக் கிணையா மென்றான்.

ayaṉoṭu tatīci yeṉṉum aruntavat tōṉum vempōr muyaluṟum avuṇar yārum moḻintiṭiṉ uṉakkop pallār ceyalurai yiṉṟi uṇṭāṟ ciṟuviti makattaic ceṟṟa vayamiku kaḻaṟkāl vīraṉ maṟṟuṉak kiṇaiyā meṉṟāṉ.

Report an error

வன்றிறற் கடவு ளாழி மணிப்பணி யாயிற் றென்றால் வென்றியும் உனதே யன்றோ வேறினிப் போரும் உண்டோ உன்றிறம் இதுவே என்னின் உனக்குமுன் னவராய் அங்கண் நின்றவர் பெருமை தன்னை யாவர்கொல் நிகழத்தற் பாலார்.

vaṉṟiṟaṟ kaṭavu ḷāḻi maṇippaṇi yāyiṟ ṟeṉṟāl veṉṟiyum uṉatē yaṉṟō vēṟiṉip pōrum uṇṭō uṉṟiṟam ituvē eṉṉiṉ uṉakkumuṉ ṉavarāy aṅkaṇ niṉṟavar perumai taṉṉai yāvarkol nikaḻattaṟ pālār.

Report an error

சங்கரன் மகிழும் ஆற்றல் தழல்மகம் பன்னாள் ஆற்றி உங்களின் வலிபெற் றுள்ளார் அவுணரில் ஒருவர் இல்லை இங்குமை வெல்வார் யாரே எமக்குநீர் தமரே யென்னா மங்கல மரபின் ஆசி வரம்பில புகன்று போனான்.

caṅkaraṉ makiḻum āṟṟal taḻalmakam paṉṉāḷ āṟṟi uṅkaḷiṉ valipeṟ ṟuḷḷār avuṇaril oruvar illai iṅkumai velvār yārē emakkunīr tamarē yeṉṉā maṅkala marapiṉ āci varampila pukaṉṟu pōṉāṉ.

Report an error

பார்த்தனர் அனைய தெல்லாம் பாயிருள் கான்ற மேனி நீர்த்திரை அனைய செங்கை நிருதராம் புணரி யாயோர் ஆர்த்தனர் அமரர் யாரும் அகன்றனர் அஞ்சி அங்கம் வேர்த்தனர் விளிவோ ரென்ன மெலிந்தனர் விழுமத் துள்ளார்.

pārttaṉar aṉaiya tellām pāyiruḷ kāṉṟa mēṉi nīrttirai aṉaiya ceṅkai nirutarām puṇari yāyōr ārttaṉar amarar yārum akaṉṟaṉar añci aṅkam vērttaṉar viḷivō reṉṉa melintaṉar viḻumat tuḷḷār.

Report an error

மாதவன் அகன்ற காலை மற்றுமோர் வையத் தேறித் தாதவிழ் தொடையல் வாகைத் தாரகன் தம்முன் நேராய்ப் போதலும் அவனு மீண்டு புகுந்தவா றுணர்ந்து புல்லி ஆதர மகிழ்ச்சி எய்தி அனிகமோ டகன்றான் அப்பால்.

mātavaṉ akaṉṟa kālai maṟṟumōr vaiyat tēṟit tātaviḻ toṭaiyal vākait tārakaṉ tammuṉ nērāyp pōtalum avaṉu mīṇṭu pukuntavā ṟuṇarntu pulli ātara makiḻcci eyti aṉikamō ṭakaṉṟāṉ appāl.

Report an error

ஆழியங் கிரியின் காறும் அகலிட வரைப்பு முற்றச் சூழுற நாடிப் போந்து தொல்லிரு விசும்பின் ஏகித் தாழுறு நிலையிற் செல்லுந் தபனனே முதலோர் யாரும் வாழியென் றாசி கூற வானுயர் துறக்கம் புக்கான்.

āḻiyaṅ kiriyiṉ kāṟum akaliṭa varaippu muṟṟac cūḻuṟa nāṭip pōntu tolliru vicumpiṉ ēkit tāḻuṟu nilaiyiṟ cellun tapaṉaṉē mutalōr yārum vāḻiyeṉ ṟāci kūṟa vāṉuyar tuṟakkam pukkāṉ.

Report an error

இந்தவா றவுணர்கோன் துறக்கத் தேகலும் முந்திய ஒற்றரில் சிலவ ரோடியே வந்தனன் சூரனாம் வலியன் தானெனா அந்தர நாயகன் அறியக் கூறவே.

intavā ṟavuṇarkōṉ tuṟakkat tēkalum muntiya oṟṟaril cilava rōṭiyē vantaṉaṉ cūraṉām valiyaṉ tāṉeṉā antara nāyakaṉ aṟiyak kūṟavē.

Report an error

அஞ்சினன் உயிர்த்தனன் அலந்து தேம்பினன் துஞ்சின னேயென உணர்வு சோர்ந்துளான் எஞ்சலில் வன்மைய திகந்து தன்னுடை நெஞ்சினில் இனையன நினைத்தல் மேயினான்.

añciṉaṉ uyirttaṉaṉ alantu tēmpiṉaṉ tuñciṉa ṉēyeṉa uṇarvu cōrntuḷāṉ eñcalil vaṉmaiya tikantu taṉṉuṭai neñciṉil iṉaiyaṉa niṉaittal mēyiṉāṉ.

Report an error

அவ்வயிற் போந்திடும் அவுணர் தன்னெதிர் செவ்விதிற் சென்றியான் செருவில் நேர்வனேல் இவ்வுயிர்க் கிறுதியாம் இருப்ப னேல்இடர்ப் பவ்வமுற் றிறந்திடப் பழியில் மூழ்குவேன்.

avvayiṟ pōntiṭum avuṇar taṉṉetir cevvitiṟ ceṉṟiyāṉ ceruvil nērvaṉēl ivvuyirk kiṟutiyām iruppa ṉēliṭarp pavvamuṟ ṟiṟantiṭap paḻiyil mūḻkuvēṉ.

Report an error

புன்செய லாய்இவட் புகுந் திடுஞ்செயல் என்செய லால்வரும் இயற்கை யல்லது பின்செயல் ஒன்றிலை பிறர்செய் கின்றதுந் தன்செயல் என்பரால் சார்பின் மேலையோர்.

puṉceya lāyivaṭ pukun tiṭuñceyal eṉceya lālvarum iyaṟkai yallatu piṉceyal oṉṟilai piṟarcey kiṉṟatun taṉceyal eṉparāl cārpiṉ mēlaiyōr.

Report an error

திருவுறு கின்றுழி மகிழ்ந்துந் தீர்வுழிப் பருவரல் எய்தியும் பாசந் தன்னிடை அரிதுணர் கேள்வியர் அழுங்கு வார்கொலோ வருவது வரும்அது மறுக்க லாகுமோ.

tiruvuṟu kiṉṟuḻi makiḻntun tīrvuḻip paruvaral eytiyum pācan taṉṉiṭai arituṇar kēḷviyar aḻuṅku vārkolō varuvatu varumatu maṟukka lākumō.

Report an error

ஆதலின் அமர்இழைத் தாவி நீங்கலன் பேதுறு கின்றிலன் பீழை யுற்றுளோர் ஓதரு மகிழ்ச்சியும் உறுவர் ஆங்கது தீதுசெய் அவுணர்தந் திறத்துக் காண்பனால்.

ātaliṉ amariḻait tāvi nīṅkalaṉ pētuṟu kiṉṟilaṉ pīḻai yuṟṟuḷōr ōtaru makiḻcciyum uṟuvar āṅkatu tītucey avuṇartan tiṟattuk kāṇpaṉāl.

Report an error

நாணொடும் ஒன்னலர் நகையுங் கொள்ளலன் தூணம துறழ்புயச் சூர பன்மனைக் காணுவன் என்னினுங் கறுவு சிந்தையான் ஏணுறு தளையிடும் எனையென் றெண்ணினான்.

nāṇoṭum oṉṉalar nakaiyuṅ koḷḷalaṉ tūṇama tuṟaḻpuyac cūra paṉmaṉaik kāṇuvaṉ eṉṉiṉuṅ kaṟuvu cintaiyāṉ ēṇuṟu taḷaiyiṭum eṉaiyeṉ ṟeṇṇiṉāṉ.

Report an error

இம்முறை வாசன் எண்ணி யேயெழீஇக் கொம்மென மனையுடன் குயிலு ருக்கொடே விம்முறு பீழையன் விண்ணிற் போயினான் தெம்முனை அவுணர்கள் தேடிக் காண்கிலார்.

immuṟai vācaṉ eṇṇi yēyeḻīik kommeṉa maṉaiyuṭaṉ kuyilu rukkoṭē vimmuṟu pīḻaiyaṉ viṇṇiṟ pōyiṉāṉ temmuṉai avuṇarkaḷ tēṭik kāṇkilār.

Report an error

ஒன்னலர் நாடுவ துணர்ந்து வானவர் மன்னவன் ஆக்கமும் மாயும் போலுமால் என்னினிச் செய்வதென் றிரக்க மெய்தியே பொன்னகர் எங்கணும் பொலிவு மாய்ந்ததே.

oṉṉalar nāṭuva tuṇarntu vāṉavar maṉṉavaṉ ākkamum māyum pōlumāl eṉṉiṉic ceyvateṉ ṟirakka meytiyē poṉṉakar eṅkaṇum polivu māyntatē.

Report an error

பிடித்தனர் அமரரை அவுணர் பேதுற அடித்தனர் குற்றினர் அனையர் தானையால் தடித்திடுந் தோள்களைத் தமது கைகளால் ஒடித்தன ராமென ஒல்லை வீக்கினார்.

piṭittaṉar amararai avuṇar pētuṟa aṭittaṉar kuṟṟiṉar aṉaiyar tāṉaiyāl taṭittiṭun tōḷkaḷait tamatu kaikaḷāl oṭittaṉa rāmeṉa ollai vīkkiṉār.

Report an error

தண்ணளி யாவுமின் றாய தானவர் விணணவர் தங்களை விழுமஞ் செய்திடா அண்ணலந் திருவுறும் அரசன் முன்னுறத் துண்ணென உய்த்தலுந் தொழுது போற்றுவார்.

taṇṇaḷi yāvumiṉ ṟāya tāṉavar viṇaṇavar taṅkaḷai viḻumañ ceytiṭā aṇṇalan tiruvuṟum aracaṉ muṉṉuṟat tuṇṇeṉa uyttalun toḻutu pōṟṟuvār.

Report an error

அவுணரில் உதித்தனை ஆற்று நோன்புறீஇச் சிவனருள் பெற்றனை திசையி னோர்முதல் எவரையும் வென்றனை என்னின் இங்கெமை நவைபடச் செய்வதே நன்று போலுமால்.

avuṇaril utittaṉai āṟṟu nōṉpuṟīic civaṉaruḷ peṟṟaṉai ticaiyi ṉōrmutal evaraiyum veṉṟaṉai eṉṉiṉ iṅkemai navaipaṭac ceyvatē naṉṟu pōlumāl.

Report an error

மறலியும் இருக்குமோ மற்றை மாதிரத் திறைவரும் இமையவர் யாரும் உய்வரோ இறுதியின் றாகுமே உலகம் ஈங்கொரு சிறிதுநீ வெஞ்சினஞ் சிந்தை செய்யினே.

maṟaliyum irukkumō maṟṟai mātirat tiṟaivarum imaiyavar yārum uyvarō iṟutiyiṉ ṟākumē ulakam īṅkoru ciṟitunī veñciṉañ cintai ceyyiṉē.

Report an error

இற்றையிப் பகல்முதல் என்றும் எங்களுக் குற்றதோர் கடவுள்நீ ஓம்பும் வேந்துநீ பற்றுள தமரும்நீ பலரும் யாம்இனி மற்றுன தேவலை மரபிற் செய்துமால்.

iṟṟaiyip pakalmutal eṉṟum eṅkaḷuk kuṟṟatōr kaṭavuḷnī ōmpum vēntunī paṟṟuḷa tamarumnī palarum yāmiṉi maṟṟuṉa tēvalai marapiṟ ceytumāl.

Report an error

என்றிவை புகன்று போற்றும் இமையவர் தம்மை நோக்கி நன்றுநுஞ் செய்கை யென்னா நகைசெய்து யாப்பு நீக்கி மன்றநம் பணிமேல் கொண்டு வைகுதிர் இனிநீ ரென்னா அன்றவர் தம்மை விட்டான் அழல்மகத் தாவி விட்டான்.

eṉṟivai pukaṉṟu pōṟṟum imaiyavar tammai nōkki naṉṟunuñ ceykai yeṉṉā nakaiceytu yāppu nīkki maṉṟanam paṇimēl koṇṭu vaikutir iṉinī reṉṉā aṉṟavar tammai viṭṭāṉ aḻalmakat tāvi viṭṭāṉ.

Report an error

வாசவன் வளத்தை யெல்லாம் அவுணர்கள் வவ்விச் செல்லப் பேசரு மகிழ்ச்சி கொண்டு பின்னவர் பாங்கர் ஏகக் காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகஞ் சூழ ஓசைகொள் மறைகள் ஆர்க்கும் உயர்மக லோகம் புக்கான்.

vācavaṉ vaḷattai yellām avuṇarkaḷ vavvic cellap pēcaru makiḻcci koṇṭu piṉṉavar pāṅkar ēkak kācipaṉ aḷitta mēṉmaik kātalaṉ aṉikañ cūḻa ōcaikoḷ maṟaikaḷ ārkkum uyarmaka lōkam pukkāṉ.

Report an error

கற்றுணர் கேள்வி யான்மாக் கண்டேய னாதி வானோர் உற்றிடும் பதமாந் தொல்பேர் உலகமே முதல மூன்றும் மற்றவர் பரவ நீங்கி மலரயன் பதத்திற் போகத் தெற்றென அதனைத் தேர்ந்து திசைமுகன் துணுக்கமுற்றான்.

kaṟṟuṇar kēḷvi yāṉmāk kaṇṭēya ṉāti vāṉōr uṟṟiṭum patamān tolpēr ulakamē mutala mūṉṟum maṟṟavar parava nīṅki malarayaṉ patattiṟ pōkat teṟṟeṉa ataṉait tērntu ticaimukaṉ tuṇukkamuṟṟāṉ.

Report an error

வசையில் நோன்புடை வாலறி வுள்ளோர் இசைகொள் வேதம் இயம்பினர் சூழ நசையி னீரொடு நான்முக வேதா அசுரர் கோனைய டைந்தன னன்றே.

vacaiyil nōṉpuṭai vālaṟi vuḷḷōr icaikoḷ vētam iyampiṉar cūḻa nacaiyi ṉīroṭu nāṉmuka vētā acurar kōṉaiya ṭaintaṉa ṉaṉṟē.

Report an error

ஆழி மால்கடல் அன்னதொர் சேனை சூழ வேவரு சூரனை யெய்தி வாழி வாழிய வைகலும் என்னாக் கேழி லாசி கிளத்திய பின்னர்.

āḻi mālkaṭal aṉṉator cēṉai cūḻa vēvaru cūraṉai yeyti vāḻi vāḻiya vaikalum eṉṉāk kēḻi lāci kiḷattiya piṉṉar.

Report an error

மன்ன நீயிவண் வந்திட மேனாள் என்ன நோன்பை இயற்றின னோயான் அன்ன வாறுண ரேன்சிவன் அல்லால் அன்னி நாடி யுணர்ந்துளர் யாரே.

maṉṉa nīyivaṇ vantiṭa mēṉāḷ eṉṉa nōṉpai iyaṟṟiṉa ṉōyāṉ aṉṉa vāṟuṇa rēṉcivaṉ allāl aṉṉi nāṭi yuṇarntuḷar yārē.

Report an error

கற்றை வார்சடை யான்கழல் பேணி அற்றம் நீங்கி அருந்தவம் ஆற்றி மற்றிவ் வாறு வளத்தியல் யாவும் பெற்று ளாய்பெரு வன்மை பிடித்தாய்.

kaṟṟai vārcaṭai yāṉkaḻal pēṇi aṟṟam nīṅki aruntavam āṟṟi maṟṟiv vāṟu vaḷattiyal yāvum peṟṟu ḷāyperu vaṉmai piṭittāy.

Report an error

பொன்னை மேவு பொலன்கெழு மார்பன் தன்னை வானவர் தங்களை யெல்லாம் இன்ன நாள்இளை யோற்கொடு வென்றாய் உன்னை நேருள ரோவுல கத்தில்.

poṉṉai mēvu polaṉkeḻu mārpaṉ taṉṉai vāṉavar taṅkaḷai yellām iṉṉa nāḷiḷai yōṟkoṭu veṉṟāy uṉṉai nēruḷa rōvula kattil.

Report an error

காத லான்மிகு காசிபன் மைந்தன் ஆத லால்அவு ணர்க்கிறை நின்மூ தாதை யான்சர தம்மிது நின்சீர் ஏதும் என்புகழ் யான்பிறன் அன்றே.

kāta lāṉmiku kācipaṉ maintaṉ āta lālavu ṇarkkiṟai niṉmū tātai yāṉcara tammitu niṉcīr ētum eṉpukaḻ yāṉpiṟaṉ aṉṟē.

Report an error

என்று பன்முக மன்கள் இசைத்தே நின்று தம்பியர் தங்களை நேர்ந்து பொன்றி டாதபொ லஞ்சிலை திண்டேர் ஒன்று தன்படை யும்முத வுற்றான்.

eṉṟu paṉmuka maṉkaḷ icaittē niṉṟu tampiyar taṅkaḷai nērntu poṉṟi ṭātapo lañcilai tiṇṭēr oṉṟu taṉpaṭai yummuta vuṟṟāṉ.

Report an error

வெருவ ரச்சுரர் வீற்றுறு பான்மை இருவ ருக்கும் அளித்தலும் யாரும் பரவு கொற்றவன் அன்னது பாராப் பெரும கிழ்ச்சிகொள் பெற்றியன் ஆனான்.

veruva raccurar vīṟṟuṟu pāṉmai iruva rukkum aḷittalum yārum paravu koṟṟavaṉ aṉṉatu pārāp peruma kiḻccikoḷ peṟṟiyaṉ āṉāṉ.

Report an error

அருத்தி யெய்தி அயன்றனை யங்கண் இருத்தி மாயைமுன் ஈந்தருள் மைந்தன் மருத்து ழாய்முடி மன்னவன் வைகுந் திருத்த கும்முல கத்திடை சென்றான்.

arutti yeyti ayaṉṟaṉai yaṅkaṇ irutti māyaimuṉ īntaruḷ maintaṉ maruttu ḻāymuṭi maṉṉavaṉ vaikun tirutta kummula kattiṭai ceṉṟāṉ.

Report an error

அந்த வேலையில் ஆண்டுறும் மாலோன் வந்து சூரபன் மாவினை யெய்தி நந்தல் இல்லதொர் நாளொடு வாழ்கென் றந்த மில்பல ஆசி புகன்றான்.

anta vēlaiyil āṇṭuṟum mālōṉ vantu cūrapaṉ māviṉai yeyti nantal illator nāḷoṭu vāḻkeṉ ṟanta milpala āci pukaṉṟāṉ.

Report an error

ஆசி கூறினன் ஆற்றவும் இன்சொற் பேச வேபெரு மாமகிழ வெய்தி மாசில் அவ்வுல கெங்கணும் வல்லே பாச னத்தொடு பார்த்தனன் அன்றே.

āci kūṟiṉaṉ āṟṟavum iṉcoṟ pēca vēperu māmakiḻa veyti mācil avvula keṅkaṇum vallē pāca ṉattoṭu pārttaṉaṉ aṉṟē.

Report an error

பார்த்த பின்பணி யின்மிசை வைகுந் தீர்த்தன் ஆண்டு திகழந்துற நல்கிக் கார்த்தி லங்குறு கந்தர முக்கண் மூர்த்த வைகிய மூதுல குற்றான்.

pārtta piṉpaṇi yiṉmicai vaikun tīrttaṉ āṇṭu tikaḻantuṟa nalkik kārtti laṅkuṟu kantara mukkaṇ mūrtta vaikiya mūtula kuṟṟāṉ.

Report an error

அரியயன் முதலா வுள்ள அமரர்கள் யார்க்குந் தத்தம் உரியதோ ராணை யெல்லாம் உலப்புறா துதவி வைகும் பரமன துலகம் நண்ணிப் பரிசனம் யாவும் நீங்கிச் சுரர்புகழ சூர பன்மன் துணைவாக ளோடு போனான்.

ariyayaṉ mutalā vuḷḷa amararkaḷ yārkkun tattam uriyatō rāṇai yellām ulappuṟā tutavi vaikum paramaṉa tulakam naṇṇip paricaṉam yāvum nīṅkic curarpukaḻa cūra paṉmaṉ tuṇaivāka ḷōṭu pōṉāṉ.

Report an error

போந்தனன் அமலன் கோயிற் புறங்கடை வாயில் நின்றே ஆய்ந்திடு நந்தி யெந்தை அருள்முறை உய்ப்பச் சென்று காந்தளை யனைய செங்கைக் கவுரியோ டுறையும் முக்கண் ஏந்தல்முன் அணுகி ஆர்வத் திறைஞ்சியே ஏத்தி நின்றான்.

pōntaṉaṉ amalaṉ kōyiṟ puṟaṅkaṭai vāyil niṉṟē āyntiṭu nanti yentai aruḷmuṟai uyppac ceṉṟu kāntaḷai yaṉaiya ceṅkaik kavuriyō ṭuṟaiyum mukkaṇ ēntalmuṉ aṇuki ārvat tiṟaiñciyē ētti niṉṟāṉ.

Report an error

கண்டநஞ் சுடைய அண்ணல் கருணைசெய் தினிநீ யேனை அண்டமுஞ் சென்று நாடி ஆணையால் அகிலம் யாவும் எண்டிசை புகழும் ஆற்றால் இறைபுரிந் திருத்தி யென்னப் புண்டரீ கத்தாள் போற்றி விடைகொண்டு புறத்து வந்தான்.

kaṇṭanañ cuṭaiya aṇṇal karuṇaicey tiṉinī yēṉai aṇṭamuñ ceṉṟu nāṭi āṇaiyāl akilam yāvum eṇṭicai pukaḻum āṟṟāl iṟaipurin tirutti yeṉṉap puṇṭarī kattāḷ pōṟṟi viṭaikoṇṭu puṟattu vantāṉ.

Report an error

புறந்தனில் வந்து சூரன் பொம்மெனத் தானை யெய்திச் சிறந்திடு கின்ற அண்ட கோளகை சேர்த லோடு மறந்தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பி லோர்கள் உறைந்தனர் அனைய ரெல்லாம் உமாபதி யருளுட் கொண்டார்.

puṟantaṉil vantu cūraṉ pommeṉat tāṉai yeytic ciṟantiṭu kiṉṟa aṇṭa kōḷakai cērta lōṭu maṟantaru ñamali mēlōr uruttirar varampi lōrkaḷ uṟaintaṉar aṉaiya rellām umāpati yaruḷuṭ koṇṭār.

Report an error

பாங்குறும் அண்டஞ் செல்லும் பான்மையில் வாயில் காட்டி ஆங்கவர் விடுப்ப மற்றை அண்டத்துச் சூர பன்மன் ஓங்கிய தானை யோடும் ஒல்லையிற் போகி யாண்டும் ஈங்கிது போல நாடி யாரையும் வென்று போனான்.

pāṅkuṟum aṇṭañ cellum pāṉmaiyil vāyil kāṭṭi āṅkavar viṭuppa maṟṟai aṇṭattuc cūra paṉmaṉ ōṅkiya tāṉai yōṭum ollaiyiṟ pōki yāṇṭum īṅkitu pōla nāṭi yāraiyum veṉṟu pōṉāṉ.

Report an error

ஏனையண் டங்க ளெல்லாம் எம்பிரான் கணமா யுள்ளோ ரானவர் அருளிற் போகி அகிலமும் நாடி அங்கண் வானவர் தம்மை வென்று வளமெலாங் கவர்ந்து தன்பால் தானவர் பலரை அங்கண் தன்னர சளிப்ப உய்த்தான்.

ēṉaiyaṇ ṭaṅka ḷellām empirāṉ kaṇamā yuḷḷō rāṉavar aruḷiṟ pōki akilamum nāṭi aṅkaṇ vāṉavar tammai veṉṟu vaḷamelāṅ kavarntu taṉpāl tāṉavar palarai aṅkaṇ taṉṉara caḷippa uyttāṉ.

Report an error

இத்திறம் வீற்று வீற்றா எல்லையில் அண்டந் தோறும் மெய்த்தம ராகி யுள்ள அவுணரை வேந்த ராக வைத்தனன் துணைவ ரோடு மீண்டனன் மற்றிவ் வண்டப் பித்திகை அதனுட் சென்று பெறலருந் துறக்க முற்றான்.

ittiṟam vīṟṟu vīṟṟā ellaiyil aṇṭan tōṟum meyttama rāki yuḷḷa avuṇarai vēnta rāka vaittaṉaṉ tuṇaiva rōṭu mīṇṭaṉaṉ maṟṟiv vaṇṭap pittikai ataṉuṭ ceṉṟu peṟalarun tuṟakka muṟṟāṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).