உ செந்திலாண்டவன் துணை திருச்சிற்றம்பலம்
u centilāṇṭavaṉ tuṇai tirucciṟṟampalam
Editor's note: Traditional opening, separate from the numbered poems.
அசுர காண்டம் — எதிர்கொள் படலம் · எதிர்கொள் படலம்
etirkoḷ paṭalam
etirkoḷ paṭalam, from Acura Kāṇṭam; poems 2.926–2.950.
25 versesTamil with transliteration
Invocation
உ செந்திலாண்டவன் துணை திருச்சிற்றம்பலம்
u centilāṇṭavaṉ tuṇai tirucciṟṟampalam
Editor's note: Traditional opening, separate from the numbered poems.
திண்டிறன் மாயையின் செம்மல் இத்திறம் அண்டர்தந் துறக்கமேல் அடைந்த காலையிற் பண்டிமை யோர்களாற் படருந் தானவர் கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார்.
tiṇṭiṟaṉ māyaiyiṉ cemmal ittiṟam aṇṭartan tuṟakkamēl aṭainta kālaiyiṟ paṇṭimai yōrkaḷāṟ paṭarun tāṉavar kaṇṭaṉar makiḻntaṉar kaḷippiṉ mūḻkiṉār.
ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு நாயகற் கொற்றர்போய் நவில அன்னவன் தூயநல் லமுதினைக் கிடைத்துத் துண்ணென மேயின னாமெனக் களிப்பின் மேயினான்.
āyavaṉ varuvatai avuṇar tamperu nāyakaṟ koṟṟarpōy navila aṉṉavaṉ tūyanal lamutiṉaik kiṭaittut tuṇṇeṉa mēyiṉa ṉāmeṉak kaḷippiṉ mēyiṉāṉ.
தானையம் படையொடு தகுவர் கோமக னானவெஞ் சூர்பெறும் அளப்பில் ஆக்கமுங் கூனலம் பிறைதவழ குடுமிச் செஞ்சடை வானவன் கருணையும் மணங்கொண் டேகினான்.
tāṉaiyam paṭaiyoṭu takuvar kōmaka ṉāṉaveñ cūrpeṟum aḷappil ākkamuṅ kūṉalam piṟaitavaḻa kuṭumic ceñcaṭai vāṉavaṉ karuṇaiyum maṇaṅkoṇ ṭēkiṉāṉ.
அன்னவன் புகர்தனை யடைந்து நங்குல மன்னனை உற்றிட வல்லை செல்லுவன் முன்னுற ஏகியெம் முறையுஞ் செய்கையும் பன்னுதி யென்றுமுன் படர்வ தாக்கினான்.
aṉṉavaṉ pukartaṉai yaṭaintu naṅkula maṉṉaṉai uṟṟiṭa vallai celluvaṉ muṉṉuṟa ēkiyem muṟaiyuñ ceykaiyum paṉṉuti yeṉṟumuṉ paṭarva tākkiṉāṉ.
அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன் முன்னுற மானமேல் முடுகி ஏகலுந தன்னுறு கிளைஞருந் தானும் ஆங்கவன் பின்னுற மன்னவன் பெயர்ந்து போயினான்.
aṉṉatōr kālaiyil avuṇar tēcikaṉ muṉṉuṟa māṉamēl muṭuki ēkaluna taṉṉuṟu kiḷaiñarun tāṉum āṅkavaṉ piṉṉuṟa maṉṉavaṉ peyarntu pōyiṉāṉ.
மாசறு பேரொளி மான மீமிசைத் தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில் காசிபன் அருள்மகன் கண்டு சேணிடை ஈசனை யெதிர்ந்தென எதிர்கொண் டேகினான்.
mācaṟu pēroḷi māṉa mīmicait tēcikaṉ viraivoṭu cellum ellaiyil kācipaṉ aruḷmakaṉ kaṇṭu cēṇiṭai īcaṉai yetirnteṉa etirkoṇ ṭēkiṉāṉ.
அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை நெஞ்சக மகிழவொடு நின்று தேசிகன் விஞ்சுக திருவொடு விசயந் தானெனா எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான்.
añcali ceytaṉaṉ avuṇaṉ attuṇai neñcaka makiḻavoṭu niṉṟu tēcikaṉ viñcuka tiruvoṭu vicayan tāṉeṉā eñcalil ācikaḷ eṭuttuk kūṟiṉāṉ.
ஆயது காலையில் அனையன் பாங்கரின் மேயின அரிமுகன் வேழ மாமுகத் தீயவன் இருவருந் தேரொ டேகியே தூயதோர் புகர்அடி தொழுது போற்றினார்.
āyatu kālaiyil aṉaiyaṉ pāṅkariṉ mēyiṉa arimukaṉ vēḻa māmukat tīyavaṉ iruvarun tēro ṭēkiyē tūyatōr pukaraṭi toḻutu pōṟṟiṉār.
ஏத்திடும் அவர்தமக் கியலு ஆற்றினால் மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப் பார்த்தனன் உனக்கியாம் படுத்து கின்றதோர் வார்த்தையுண் டன்னது வகுத்துங் கேட்டிநீ.
ēttiṭum avartamak kiyalu āṟṟiṉāl mīttakum ācikaḷ viḷampi vēntaṉaip pārttaṉaṉ uṉakkiyām paṭuttu kiṉṟatōr vārttaiyuṇ ṭaṉṉatu vakuttuṅ kēṭṭinī.
பங்கமில் காசிபன் பன்னி யாகிய நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான் சங்கையற் றிருந்ததா னவரைத் தாங்கினான் எங்களுக் கோர்துணை யென்னுந் தன்மையான்.
paṅkamil kācipaṉ paṉṉi yākiya nuṅkaiyaip payantuḷāṉ nuṉitta kēḷviyāṉ caṅkaiyaṟ ṟiruntatā ṉavarait tāṅkiṉāṉ eṅkaḷuk kōrtuṇai yeṉṉun taṉmaiyāṉ.
ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல் மூண்டிடு வெஞ்சமர் முற்றி வீரத்தைப் பூண்டனன் ஆதலிற் புழுங்கி மாரிநாள் மாண்டிடு கதிரென மாழ்கி வைகினான்.
īṇṭaiyil vācavaṉ etirntu paṟpakal mūṇṭiṭu veñcamar muṟṟi vīrattaip pūṇṭaṉaṉ ātaliṟ puḻuṅki mārināḷ māṇṭiṭu katireṉa māḻki vaikiṉāṉ.
அத்தகு மேலையோன் அவனி மீமிசை வித்திடு நாறுசெய் விளைவு காணுறா எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே.
attaku mēlaiyōṉ avaṉi mīmicai vittiṭu nāṟucey viḷaivu kāṇuṟā eyttiṭu nirappiṉaṉ eṉṉa niṉṉaiyē nittalum nōkkiṉāṉ ciṟumai nīṅkavē.
தவங்கொடு முந்துநீ தழலை வேட்டதுஞ் சிவன்புரி வரங்களுஞ் செப்பக் கேட்டனன் உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான் நிவந்தன ஆங்கவன் நெடிய தோள்களே.
tavaṅkoṭu muntunī taḻalai vēṭṭatuñ civaṉpuri varaṅkaḷuñ ceppak kēṭṭaṉaṉ uvantaṉaṉ ākulam oḻittu vaikiṉāṉ nivantaṉa āṅkavaṉ neṭiya tōḷkaḷē.
பற்றலர் புரமடு பரமன் ஈந்திடப் பெற்றதோர் வரத்தொடு பெயர்ந்திடு யாரையும் வெற்றிகொண் டிவண்வரும் மேன்மை கேட்புறா மற்றுனை அடைந்திட வருகின் றானெனா.
paṟṟalar puramaṭu paramaṉ īntiṭap peṟṟatōr varattoṭu peyarntiṭu yāraiyum veṟṟikoṇ ṭivaṇvarum mēṉmai kēṭpuṟā maṟṟuṉai aṭaintiṭa varukiṉ ṟāṉeṉā.
வன்றிறல அவுணர்கோன் வருதல் காட்டியே புன்றொழில் படுத்திய புகரு ரைத்தலுந் துன்றிய கனைகழற் சூர னென்பவன் நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான்.
vaṉṟiṟala avuṇarkōṉ varutal kāṭṭiyē puṉṟoḻil paṭuttiya pukaru raittalun tuṉṟiya kaṉaikaḻaṟ cūra ṉeṉpavaṉ niṉṟaṉaṉ uvakaiyāl niṟainta neñciṉāṉ.
ஆர்ந்ததொல் கிளையொடும் அவுணர் காவலன் சேர்ந்தனன் சூரனைச் செங்கையால் தொழாப் பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்த தோருடல் சார்ந்திடு கின்றதோர் தன்மை என்னவே.
ārntatol kiḷaiyoṭum avuṇar kāvalaṉ cērntaṉaṉ cūraṉaic ceṅkaiyāl toḻāp pērntiṭum āviyaip pirinta tōruṭal cārntiṭu kiṉṟatōr taṉmai eṉṉavē.
ஆயிடை வெய்யசூர் அவுணர் கோவினை நீயினி திருத்திகொல் என்ன நீயுளை தீயன அடையுமோ சிறுமை எய்துமோ மேயநுங் குலமுறை விளங்கத் தோன்றினாய்.
āyiṭai veyyacūr avuṇar kōviṉai nīyiṉi tiruttikol eṉṉa nīyuḷai tīyaṉa aṭaiyumō ciṟumai eytumō mēyanuṅ kulamuṟai viḷaṅkat tōṉṟiṉāy.
என்றிவை நயமொழி இயம்பி யேபுடை சென்றன மாயையின் செய்ய காதலன் துன்றிய தகுவர்தம் அனிகஞ் சூழதர வென்றியொ டவனிமேல் விரைவின் மீளவே.
eṉṟivai nayamoḻi iyampi yēpuṭai ceṉṟaṉa māyaiyiṉ ceyya kātalaṉ tuṉṟiya takuvartam aṉikañ cūḻatara veṉṟiyo ṭavaṉimēl viraiviṉ mīḷavē.
மண்ணுல கத்தில் வெஞ்சூர் வந்தனன் எனுஞ்சொற் கேளா அண்ணலங் கமலத் தேவும் அமரர் மானும் ஏனை விண்ணவ ராயுள் ளோரும் வியத்தகு முனிவர் யாருந் துண்ணென வந்து மாயோன் துயில்கொளுங் கடலிற் புக்கார்.
maṇṇula kattil veñcūr vantaṉaṉ eṉuñcoṟ kēḷā aṇṇalaṅ kamalat tēvum amarar māṉum ēṉai viṇṇava rāyuḷ ḷōrum viyattaku muṉivar yārun tuṇṇeṉa vantu māyōṉ tuyilkoḷuṅ kaṭaliṟ pukkār.
கொய்துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று கைதொழு திறைஞ்சித் தாங்கள் கனைகழற் சூரன் தன்னால் எய்திடு கின்ற தென்கொல் செப்புதி பெரும வென்றார்.
koytuḻāy alaṅkal mōlik kuḻakaṉaik kuṟuki niṉṟu kaitoḻu tiṟaiñcit tāṅkaḷ kaṉaikaḻaṟ cūraṉ taṉṉāl eytiṭu kiṉṟa teṉkol cepputi peruma veṉṟār.
அன்றவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப் புன்றொழில் தக்கன் வேள்வி புகுந்திடுந் தீமை தன்னால் இன்றிது பொருந்திற் றம்மா யாரிது விலக்கற் பாலார் ஒன்றினிச் செய்யுந் தன்மை கேண்மின்என் றோத லுற்றான்.
aṉṟavar uraitta māṟṟam accutak kaṭavuḷ kēḷāp puṉṟoḻil takkaṉ vēḷvi pukuntiṭun tīmai taṉṉāl iṉṟitu poruntiṟ ṟammā yāritu vilakkaṟ pālār oṉṟiṉic ceyyun taṉmai kēṇmiṉeṉ ṟōta luṟṟāṉ.
பண்டெயின் மூன்றும் அட்ட பராபரன் வரம்பெற் றுள்ளான் அண்டமெங் கெவையும் வென்றான் ஆதலால் நம்மால் வென்றி கொண்டிடு திறத்தான் அல்லன் கொடியவச் சூரன் தன்னைக் கண்டுசென் றிடுதும் ஈதே காரியம் போலு மென்றான்.
paṇṭeyiṉ mūṉṟum aṭṭa parāparaṉ varampeṟ ṟuḷḷāṉ aṇṭameṅ kevaiyum veṉṟāṉ ātalāl nammāl veṉṟi koṇṭiṭu tiṟattāṉ allaṉ koṭiyavac cūraṉ taṉṉaik kaṇṭuceṉ ṟiṭutum ītē kāriyam pōlu meṉṟāṉ.
செங்கம லத்தோ னாதி தேவரும் முனிவர் யாரும் இங்கிது கரும மென்றே இசைந்தன ராகி நிற்ப அங்கவ ரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித் துங்கம துடைய தொல்சீர் சூரனைக் காண வந்தான்.
ceṅkama lattō ṉāti tēvarum muṉivar yārum iṅkitu karuma meṉṟē icaintaṉa rāki niṟpa aṅkava rōṭu māyōṉ aravaṇaip paḷḷi nīṅkit tuṅkama tuṭaiya tolcīr cūraṉaik kāṇa vantāṉ.
மருத்துழாய் மவுலி யாதி வானவர் முனிவர் யாருந் திருத்தகு சூரன் நேரே சென்றுநின் றாசி கூறி அருத்திய தாகப் போற்ற அவர்களுட் பதினோர் கோடி உருத்திரர் தொகுதி யானோர் ஒருங்குடன் நிற்பக் கண்டான்.
maruttuḻāy mavuli yāti vāṉavar muṉivar yārun tiruttaku cūraṉ nērē ceṉṟuniṉ ṟāci kūṟi aruttiya tākap pōṟṟa avarkaḷuṭ patiṉōr kōṭi uruttirar tokuti yāṉōr oruṅkuṭaṉ niṟpak kaṇṭāṉ.
கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண் அண்டர்தம் பெருமான் என்ன அமைந்ததொல் வடிவ முள்ளார் எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கிவர் யாவ ரென்னத் தண்டுள வலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல் உற்றான்.
kaṇṭiṭum avuṇar taṅkaḷ kāvalaṉ imaiyā mukkaṇ aṇṭartam perumāṉ eṉṉa amaintatol vaṭiva muḷḷār eṇṭaru tokaiyiṉ mikkār īṅkivar yāva reṉṉat taṇṭuḷa valaṅkal mōlip paṇṇavaṉ cāṟṟal uṟṟāṉ.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).