Skip to content

பாயிரம் / உற்பத்திக் காண்டம் — திருநாட்டுப்படலம் · திருநாட்டுப்படலம்

tirunāṭṭuppaṭalam

tirunāṭṭuppaṭalam

tirunāṭṭuppaṭalam, from Pāyiram and Uṟpatti Kāṇṭam; poems 1.90–1.146.

57 versesTamil with transliteration

A spear and lotus for chapter 5 of Kanda Puranam.

அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண் மைவரு கடலுடை மங்கை தன்னிடை மெய்வளங் கொள்வதை வேண்டி யந்நிலச் செய்விக ணாடியே யினைய செய்குவார்.

avviyal peṟṟiṭu māṟṟaṉ maḷḷarkaṇ maivaru kaṭaluṭai maṅkai taṉṉiṭai meyvaḷaṅ koḷvatai vēṇṭi yannilac ceyvika ṇāṭiyē yiṉaiya ceykuvār.

Report an error

சேட்டிளந் திமிலுடைச் செங்க ணேற்றொடுங் கோட்டுடைப் பகட்டினம் விரவிக் கோன்முறை காட்டினர் நிரைபட வுழுப காசினி பூட்டுறு பொலன்மணி யாரம் போலவே.

cēṭṭiḷan timiluṭaic ceṅka ṇēṟṟoṭuṅ kōṭṭuṭaip pakaṭṭiṉam viravik kōṉmuṟai kāṭṭiṉar niraipaṭa vuḻupa kāciṉi pūṭṭuṟu polaṉmaṇi yāram pōlavē.

Report an error

காற்றினு மனத்தினுங் கடுமை சான்றன கோற்றொழில் வினைஞர்தங் குறிப்பிற் செல்லுவ ஏற்றினஞ் சேறலு மிரிந்த சேலினம் பாற்றின மருளவிண் படர்ந்து பாயுமால்.

kāṟṟiṉu maṉattiṉuṅ kaṭumai cāṉṟaṉa kōṟṟoḻil viṉaiñartaṅ kuṟippiṟ celluva ēṟṟiṉañ cēṟalu mirinta cēliṉam pāṟṟiṉa maruḷaviṇ paṭarntu pāyumāl.

Report an error

சால்வளை தரவுழும் வயலிற் றங்கிய வால்வளை யினம்வெரீஇ யலவன் மாப்பெடைச் சூல்வளை புகுவதங் கறிஞர் சூழ்விலைக் கோல்வளை மகளிர்பாற் கூட்ட மொத்ததே.

cālvaḷai taravuḻum vayaliṟ ṟaṅkiya vālvaḷai yiṉamverīi yalavaṉ māppeṭaic cūlvaḷai pukuvataṅ kaṟiñar cūḻvilaik kōlvaḷai makaḷirpāṟ kūṭṭa mottatē.

Report an error

உலத்தொடு முறழ்புயத் துழவர் பொன்விளை புலத்தினும் வியத்தகு வயலிற் போக்கிய வலத்திடைப் பிறழ்மணி வேள்வி யாற்றிடும் நிலத்திடைப் பிறந்தமின் னிகர்க்கும் நீர்மைய.

ulattoṭu muṟaḻpuyat tuḻavar poṉviḷai pulattiṉum viyattaku vayaliṟ pōkkiya valattiṭaip piṟaḻmaṇi vēḷvi yāṟṟiṭum nilattiṭaip piṟantamiṉ ṉikarkkum nīrmaiya.

Report an error

நாறுசெய் குநர்சிலர் நார நீர்வயல் ஊறுசெய் குநர்சில ரொத்த பான்மையிற் சேறுசெய் குநர்சிலர் வித்திச் செல்லுநீர்க் காறுசெய் குநர்சில ரளப்பின் மள்ளரே.

nāṟucey kunarcilar nāra nīrvayal ūṟucey kunarcila rotta pāṉmaiyiṟ cēṟucey kunarcilar vittic cellunīrk kāṟucey kunarcila raḷappiṉ maḷḷarē.

Report an error

குச்செனப் பரிமிசைக் குலாய கொய்யுளை வைச்செனத் தளிர்த்தெழு நாற்றின் மாமுடி அச்செனப் பதித்தனர் கடைஞ ராவியா நச்சின மகளிரை நினைந்து நைந்துளார்.

kucceṉap parimicaik kulāya koyyuḷai vaicceṉat taḷirtteḻu nāṟṟiṉ māmuṭi acceṉap patittaṉar kaṭaiña rāviyā nacciṉa makaḷirai niṉaintu naintuḷār.

Report an error

வாக்குறு தேறலை வள்ள மீமிசைத் தேக்கின ருழவர்தந் தெரிவை மாதரார் நோக்குறு மாடியி னுனித்து நோக்கினர் மேக்குறு காதலின் மிசைதன் மேயினார்.

vākkuṟu tēṟalai vaḷḷa mīmicait tēkkiṉa ruḻavartan terivai mātarār nōkkuṟu māṭiyi ṉuṉittu nōkkiṉar mēkkuṟu kātaliṉ micaitaṉ mēyiṉār.

Report an error

வாடுகின் றார்சிலர் மயங்கி நெஞ்சொடு மூடுகின் றார்சில ருயிர்க்கின் றார்சிலர் பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர் ஆடுகின் றார்சிலர் நறவ மார்ந்துளார்.

vāṭukiṉ ṟārcilar mayaṅki neñcoṭu mūṭukiṉ ṟārcila ruyirkkiṉ ṟārcilar pāṭukiṉ ṟārcilar paṇikiṉ ṟārcilar āṭukiṉ ṟārcilar naṟava mārntuḷār.

Report an error

அந்தரப் புள்ளடு மளிக டம்மொடும் வந்தடுத் தவரொடு மயக்கு தேறலை இந்திரத் தெய்வத மிறைஞ்சி வாமமாந் தந்திரக் கிளைஞர்போற் றாமு மேயினார்.

antarap puḷḷaṭu maḷika ṭammoṭum vantaṭut tavaroṭu mayakku tēṟalai intirat teyvata miṟaiñci vāmamān tantirak kiḷaiñarpōṟ ṟāmu mēyiṉār.

Report an error

விள்ளுறு நாணினர் விரகத் தீயினர் உள்ளுறு முயிர்ப்பின ருலையு நெஞ்சினர் தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார் கள்ளினு முளதுகொல் கருத்த ழிப்பதே.

viḷḷuṟu nāṇiṉar virakat tīyiṉar uḷḷuṟu muyirppiṉa rulaiyu neñciṉar taḷḷuṟu tammuṇar viṉṟic cāmpiṉār kaḷḷiṉu muḷatukol karutta ḻippatē.

Report an error

பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுந் தளிர்ப்புறு செறுவினுந் தவறுற் றேகுவார் தெளிப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர் களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ.

paḷikkaṟai yaṉṉatōr paṭukarp pāṅkiṉun taḷirppuṟu ceṟuviṉun tavaṟuṟ ṟēkuvār teḷippava riṉmaiyi ṉeṟiyiṟ ceṉṟilar kaḷippavar tamakkumōr katiyuṇ ṭākumō.

Report an error

இன்னன பற்பல வியற்றி யீண்டினர் உன்னருந் தொல்லையி லுணர்வு வந்துழிக் கன்னெடுந் திரள்புயக் கணவ ரேவலில் துன்னின ரவரோடுந் துவன்றிச் சூழ்ந்துளார்.

iṉṉaṉa paṟpala viyaṟṟi yīṇṭiṉar uṉṉarun tollaiyi luṇarvu vantuḻik kaṉṉeṭun tiraḷpuyak kaṇava rēvalil tuṉṉiṉa ravarōṭun tuvaṉṟic cūḻntuḷār.

Report an error

மள்ளர்தம் வினைபுரி மழலைத் தீஞ்சொலார் கள்ளுறு புதுமணங் கமழும் வாலிதழ் உள்ளுறு நறுவிரை யுயிர்த்து வீசிய வெள்ளிய குமுதமென் மலரின் மேவுமே.

maḷḷartam viṉaipuri maḻalait tīñcolār kaḷḷuṟu putumaṇaṅ kamaḻum vālitaḻ uḷḷuṟu naṟuvirai yuyirttu vīciya veḷḷiya kumutameṉ malariṉ mēvumē.

Report an error

நட்டதோர் குழுவினை நடாத தோர்குழு ஒட்டலர் போலநின் றொறுத்த லுன்னியே அட்டன ராமென வடாத வான்களை கட்டனர் வேற்றுமை யுணருங் காட்சியார்.

naṭṭatōr kuḻuviṉai naṭāta tōrkuḻu oṭṭalar pōlaniṉ ṟoṟutta luṉṉiyē aṭṭaṉa rāmeṉa vaṭāta vāṉkaḷai kaṭṭaṉar vēṟṟumai yuṇaruṅ kāṭciyār.

Report an error

ஏயின செயலெலா மியற்றி வேறுவே றாயிடை வேண்டுவ தமைய வாற்றியே மாயிரும் புவிமிசை மகவைப் போற்றிடுந் தாயென வளர்த்தனர் சாலி யீட்டமே.

ēyiṉa ceyalelā miyaṟṟi vēṟuvē ṟāyiṭai vēṇṭuva tamaiya vāṟṟiyē māyirum puvimicai makavaip pōṟṟiṭun tāyeṉa vaḷarttaṉar cāli yīṭṭamē.

Report an error

மன்சுடர் கெழுமிய வயிர வான்கணை மின்சுடர் தூணியின் மேல கீழுறத் தன்சுடர் பொலிதரச் செறித்த தன்மைபோற் பொன்சுட ரிளங்கதிர் புறத்துக் கான்றவே.

maṉcuṭar keḻumiya vayira vāṉkaṇai miṉcuṭar tūṇiyiṉ mēla kīḻuṟat taṉcuṭar politarac ceṟitta taṉmaipōṟ poṉcuṭa riḷaṅkatir puṟattuk kāṉṟavē.

Report an error

பச்சிளங் காம்புடைப் பணையின் மீமிசை வச்சிரத் தியற்றுமோ ரிலைகொள் வான்படை உச்சிமே லுறநிறீஇ யொருங்கு செய்தெனக் குச்சுறு சாலிமென் கதிர்கு லாவுமால்.

pacciḷaṅ kāmpuṭaip paṇaiyiṉ mīmicai vaccirat tiyaṟṟumō rilaikoḷ vāṉpaṭai uccimē luṟaniṟīi yoruṅku ceyteṉak kuccuṟu cālimeṉ katirku lāvumāl.

Report an error

சுற்றுறு பஃறலைச் சுடிகை மாசுணம் பெற்றுறு குழவிகள் பெயர்த லின்றியே முற்றுறு நிவப்பொடு முறையி னிற்றல்போ நெற்றுறு பசுங்கதிர் நிமிர்தல் மிக்கவே.

cuṟṟuṟu paḵṟalaic cuṭikai mācuṇam peṟṟuṟu kuḻavikaḷ peyarta liṉṟiyē muṟṟuṟu nivappoṭu muṟaiyi ṉiṟṟalpō neṟṟuṟu pacuṅkatir nimirtal mikkavē.

Report an error

மையுறு கணிகையர் மகிழ்நர் வந்துழிப் பொய்யுறு மளியெனப் பயனில் புன்கதிர் கையுறு முவகையாற் பணியுங் கற்பினோர் மெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே.

maiyuṟu kaṇikaiyar makiḻnar vantuḻip poyyuṟu maḷiyeṉap payaṉil puṉkatir kaiyuṟu muvakaiyāṟ paṇiyuṅ kaṟpiṉōr meyyuṟu pariveṉa viḷaintu cāyntavē.

Report an error

மாலுறு பொன்னகர் மருவு மன்னற்குப் பாலுறு தீம்பதம் பலவு மார்த்தியே மேலுறு சாலியின் விளைவு நோக்கியே கோலிநின் றரிந்தனர் குழாங்கொண் மள்ளரே.

māluṟu poṉṉakar maruvu maṉṉaṟkup pāluṟu tīmpatam palavu mārttiyē mēluṟu cāliyiṉ viḷaivu nōkkiyē kōliniṉ ṟarintaṉar kuḻāṅkoṇ maḷḷarē.

Report an error

அரிந்திடு சுமைகளா லவனிப் பேருடல் நெரிந்திடச் சேடனு நெளிந்து நீங்கிடத் தெரிந்திடும் போர்கள்சே ணளவுஞ் சேறலால் விரிந்திடு கதிர்சுலா மேரு வாயவே.

arintiṭu cumaikaḷā lavaṉip pēruṭal nerintiṭac cēṭaṉu neḷintu nīṅkiṭat terintiṭum pōrkaḷcē ṇaḷavuñ cēṟalāl virintiṭu katirculā mēru vāyavē.

Report an error

ஏற்றொடு பகட்டின மிசைத்துப் போருரு மாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்தொலி சான்றினர் பரனொடு தமது தெய்வதம் போற்றினர் மீமிசை பொலிகென் றோதுவார்.

ēṟṟoṭu pakaṭṭiṉa micaittup pōruru māṟṟiṉar valamuṟai tirittu vāḻttoli cāṉṟiṉar paraṉoṭu tamatu teyvatam pōṟṟiṉar mīmicai polikeṉ ṟōtuvār.

Report an error

தொங்கலம் பூமுடித் தொழுவர் போரினை அங்குறப் படுத்துவை யகற்றி யாக்கிய பொங்கழிப் பதடிகள் புறத்து வீசியே எங்கணு நெற்குவை யியற்று வாரரோ.

toṅkalam pūmuṭit toḻuvar pōriṉai aṅkuṟap paṭuttuvai yakaṟṟi yākkiya poṅkaḻip pataṭikaḷ puṟattu vīciyē eṅkaṇu neṟkuvai yiyaṟṟu vārarō.

Report an error

களப்படு கைவலோர் கால்க ளான்முகந் தளப்புறு நெற்குழா மவற்றுண் மன்னவற். குளப்படு கடன்முறை யுதவி மள்ளருக் களித்தனர் வேண்டிய தனைய நாட்டுளோர்.

kaḷappaṭu kaivalōr kālka ḷāṉmukan taḷappuṟu neṟkuḻā mavaṟṟuṇ maṉṉavaṟ. kuḷappaṭu kaṭaṉmuṟai yutavi maḷḷaruk kaḷittaṉar vēṇṭiya taṉaiya nāṭṭuḷōr.

Report an error

சொற்குவை வழிபடப் புகழிற் றோன்றுதம் மிற்குவை வேண்டுவ தேவி யெஞ்சிய நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர் பொற்குவை யரிந்தனர் பொதிவித் தென்னவே.

coṟkuvai vaḻipaṭap pukaḻiṟ ṟōṉṟutam miṟkuvai vēṇṭuva tēvi yeñciya neṟkuvai kurampaiyi ṉirappu vittaṉar poṟkuvai yarintaṉar potivit teṉṉavē.

Report an error

தலத்திடை வேறிடத் தொதுங்குந் தண்ணிய குலத்திடைப் பிறந்தவர் கூட்ட மாமென நலத்திடை வந்திடு முதிரை நல்வளம் நிலத்திடை யொருசிறை விளையு நீரவே.

talattiṭai vēṟiṭat totuṅkun taṇṇiya kulattiṭaip piṟantavar kūṭṭa māmeṉa nalattiṭai vantiṭu mutirai nalvaḷam nilattiṭai yoruciṟai viḷaiyu nīravē.

Report an error

பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந் திறப்பதும் வைகலு முலகி லேய்ந்தெனச் சிறப்புட னடுவதும் பருவஞ் செய்வதும் மறுப்பதுந் தொகுப்பது முலப்பின் றாயவே.

piṟappatum vaḷarvatum piṉṉar mūppuvan tiṟappatum vaikalu mulaki lēynteṉac ciṟappuṭa ṉaṭuvatum paruvañ ceyvatum maṟuppatun tokuppatu mulappiṉ ṟāyavē.

Report an error

முழவொல விண்ணவர் முதல்வற் காக்குறும் விழவொலி கிணையொலி விரும்பு மென்சிறார் மழவொலி கடைசியர் வள்ளைப் பாட்டொலி உழவொலி யல்கலு முலப்பு றாதவே.

muḻavola viṇṇavar mutalvaṟ kākkuṟum viḻavoli kiṇaiyoli virumpu meṉciṟār maḻavoli kaṭaiciyar vaḷḷaip pāṭṭoli uḻavoli yalkalu mulappu ṟātavē.

Report an error

காலுற நிமிர்ந்திடு காமர் சோலையும் நீலமுங் கமலமு நிறைந்த பொய்கையும் ஆலையங் கழனியும் கநங்கற் காயுத சாலைக ளிவையெனச் சாற்ற நின்றவே.

kāluṟa nimirntiṭu kāmar cōlaiyum nīlamuṅ kamalamu niṟainta poykaiyum ālaiyaṅ kaḻaṉiyum kanaṅkaṟ kāyuta cālaika ḷivaiyeṉac cāṟṟa niṉṟavē.

Report an error

நெறியிடை யொழுகலா விழுதை நீரரை மறலிதன் னகரிடை வருத்தல் போலுமால் குறைபடத் துணித்தவண் குவைசெய் கன்னலை அறைபடு மாலைக ளிடையிட் டாட்டலே.

neṟiyiṭai yoḻukalā viḻutai nīrarai maṟalitaṉ ṉakariṭai varuttal pōlumāl kuṟaipaṭat tuṇittavaṇ kuvaicey kaṉṉalai aṟaipaṭu mālaika ḷiṭaiyiṭ ṭāṭṭalē.

Report an error

ஏறுகாட் டியதிற லிளைஞ ரெந்திரங் கூறுகாட் டியகழை யழுங்கக் கோறலுஞ் சாறுகாட் டியதரோ யாதுந் தம்மிடை ஊறுகாட் டினர்க்கலால் உலோப ரீவரோ.

ēṟukāṭ ṭiyatiṟa liḷaiña rentiraṅ kūṟukāṭ ṭiyakaḻai yaḻuṅkak kōṟaluñ cāṟukāṭ ṭiyatarō yātun tammiṭai ūṟukāṭ ṭiṉarkkalāl ulōpa rīvarō.

Report an error

மட்டுறு கழையினும் வலிதிற் கொண்டபின் இட்டகொள் கலங்களி னிருந்த தீம்புனல் தொட்டிடு கடலெனத் தொன்று மன்னவை அட்டதோர் புகைமுகி லளாவிற் றொக்குமே.

maṭṭuṟu kaḻaiyiṉum valitiṟ koṇṭapiṉ iṭṭakoḷ kalaṅkaḷi ṉirunta tīmpuṉal toṭṭiṭu kaṭaleṉat toṉṟu maṉṉavai aṭṭatōr pukaimuki laḷāviṟ ṟokkumē.

Report an error

கூடின தேனிசை யிளமென் கோகிலம் பாடின மயில்சிறை பறைய டித்தன வாடின வஞ்சிதந் தலைய சைத்திடா நாடின பாதவம் புகழ்வ நாரையே.

kūṭiṉa tēṉicai yiḷameṉ kōkilam pāṭiṉa mayilciṟai paṟaiya ṭittaṉa vāṭiṉa vañcitan talaiya caittiṭā nāṭiṉa pātavam pukaḻva nāraiyē.

Report an error

காசொடு நித்திலப் பொதியுங் காட்டியே பாசடை மாதுளை சினையிற் பைங்குயில் பேசிட நிற்பன பெறீஇயர் வம்மென வீசுதல் கருதியே விளித்தல் போன்றவே.

kācoṭu nittilap potiyuṅ kāṭṭiyē pācaṭai mātuḷai ciṉaiyiṟ paiṅkuyil pēciṭa niṟpaṉa peṟīiyar vammeṉa vīcutal karutiyē viḷittal pōṉṟavē.

Report an error

சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி துய்த்திட வரும்பய னுதவுந் தோற்றத்தால் உத்தம முதலிய குணத்தி னோங்கிய முத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே.

cittirak katalimā varukkait tīṅkaṉi tuyttiṭa varumpaya ṉutavun tōṟṟattāl uttama mutaliya kuṇatti ṉōṅkiya muttiṟat tavarkoṭai moḻiya niṉṟavē.

Report an error

வீசுகால் பொரவசை விசும்பிற் றாழைகள் தேசுலாம் பரிதிமெய் தீண்டுஞ் செய்கைய காசினி தன்கையாற் கலைவெண் டிங்கள்போல் மாசுறா வகைதுடைத் திடுதல் மானுமே.

vīcukāl poravacai vicumpiṟ ṟāḻaikaḷ tēculām paritimey tīṇṭuñ ceykaiya kāciṉi taṉkaiyāṟ kalaiveṇ ṭiṅkaḷpōl mācuṟā vakaituṭait tiṭutal māṉumē.

Report an error

வாசநீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள் காசுநூன் மேகலை பரியக் கைவளை பூசலிட் டலமரப் புணருஞ் செய்கைகண் டாசைமிக் கழுங்குவ பிரிந்த அன்றிலே.

vācanīḷ potumpariṉ maintar mātarkaḷ kācunūṉ mēkalai pariyak kaivaḷai pūcaliṭ ṭalamarap puṇaruñ ceykaikaṇ ṭācaimik kaḻuṅkuva pirinta aṉṟilē.

Report an error

கானுலா நந்தன வனமுங் காரென வானுலாந் தண்டலை மருங்கும் வைகலும் வேனிலா னன்னவர் மகளிர் மேயினார் ஊனுலாங் குரம்பையு ளுயிருற் றென்னவே.

kāṉulā nantaṉa vaṉamuṅ kāreṉa vāṉulān taṇṭalai maruṅkum vaikalum vēṉilā ṉaṉṉavar makaḷir mēyiṉār ūṉulāṅ kurampaiyu ḷuyiruṟ ṟeṉṉavē.

Report an error

அசும்புறு மகன்புன லறாத சூழலின் விசும்புற வோச்சிய விரைமென் றாதினாற் பசும்பொனிற் குயிற்றிய பதியிற் றூபிகைத் தசும்பெலாம் வெள்ளிய தாக்குந் தாழையே.

acumpuṟu makaṉpuṉa laṟāta cūḻaliṉ vicumpuṟa vōcciya viraimeṉ ṟātiṉāṟ pacumpoṉiṟ kuyiṟṟiya patiyiṟ ṟūpikait tacumpelām veḷḷiya tākkun tāḻaiyē.

Report an error

உற்றிட வரிதவ ணுழவர் நீத்ததார் சுற்றிடுந் தாண்மிசை யிடறுஞ் சூல்வளை தெற்றிடும் பூங்கொடி புடைக்குஞ் சேலினம் எற்றிடுந் தேம்பழ மிழுக்குந் தேன்களே.

uṟṟiṭa varitava ṇuḻavar nīttatār cuṟṟiṭun tāṇmicai yiṭaṟuñ cūlvaḷai teṟṟiṭum pūṅkoṭi puṭaikkuñ cēliṉam eṟṟiṭun tēmpaḻa miḻukkun tēṉkaḷē.

Report an error

கானிமிர் கந்திகள் கான்ற பாளைமேன் மீனினம் பாய்தலுஞ் சிதறி வீழ்வுறா வானதோர் மருதவைப் படையுந் தன்மைய வானுறு தாரகை வழுக்கிற் றொக்குமால்.

kāṉimir kantikaḷ kāṉṟa pāḷaimēṉ mīṉiṉam pāytaluñ citaṟi vīḻvuṟā vāṉatōr marutavaip paṭaiyun taṉmaiya vāṉuṟu tārakai vaḻukkiṟ ṟokkumāl.

Report an error

மாகுல வல்லியின் மஞ்ஞை யாடல்போல் கோகில மார்தருக் குழத்தி னூசன்மேற் பாகுல வின்சொலார் பணிக்கு மெல்லிடைக் காகுலம் பிறர்கொள மகிழ்வி னாடுவார்.

mākula valliyiṉ maññai yāṭalpōl kōkila mārtaruk kuḻatti ṉūcaṉmēṟ pākula viṉcolār paṇikku melliṭaik kākulam piṟarkoḷa makiḻvi ṉāṭuvār.

Report an error

ஊசலுற்றவர் குழைக்குடைந் திடுதலா லுவரை வீச லொப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப் பேச லொப்பன வீழ்ந்திலர் பிழைத்ததீ தென்னா ஏச லொப்பன கோகிலப் பறவைக ளிசைத்தல்.

ūcaluṟṟavar kuḻaikkuṭain tiṭutalā luvarai vīca loppaṉa vāṭutal kiḷimoḻi veruvip pēca loppaṉa vīḻntilar piḻaittatī teṉṉā ēca loppaṉa kōkilap paṟavaika ḷicaittal.

Report an error

கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர் ஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச் சார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப் பார்ப்புக் கொண்டுகொண் டெழுவன தோலடிப் பறவை.

kūrppuk koṇṭakaṭ koṭicciyar kuḷirpuṉaṅ kāppōr ārppuk koṇṭukai vicaitteṟi maṇikkalvan taṇaiyac cārppuk koṇṭatañ ciṟakarāl vilakkiyat taṭattup pārppuk koṇṭukoṇ ṭeḻuvaṉa tōlaṭip paṟavai.

Report an error

கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல் அடற்பெரு மேதிக ளனைத்தும் புக்குராய்த் தடப்பனல் வறிதெனப் பருகித் தம்முலைக் குடத்திழி பாலினாற் குறையைத் தீர்க்குமே.

kaṭaṟparu kiyamukil peyyuṅ kāṭcipōl aṭaṟperu mētika ḷaṉaittum pukkurāyt taṭappaṉal vaṟiteṉap parukit tammulaik kuṭattiḻi pāliṉāṟ kuṟaiyait tīrkkumē.

Report an error

பாட்டிய லளிமுரல் பதுமக் கோயிலில் நாட்டிய நிமலன்மு னந்தி நீரிடை மாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமாற் கோட்டுயர் தடந்தொறுங் குவளை பூத்தவே.

pāṭṭiya laḷimural patumak kōyilil nāṭṭiya nimalaṉmu ṉanti nīriṭai māṭṭiya palperuñ cuṭarai māṉumāṟ kōṭṭuyar taṭantoṟuṅ kuvaḷai pūttavē.

Report an error

கலனிடைத் தருவதுங் கானத் துள்ளதும் பொலனுடைப் பொருப்பிடைப் பொருளு மல்லது நலனுடை நாட்டவர் நயதத லின்றிய்ந் நிலனிடைப் பொருள்பகர் வழக்க நீத்ததே.

kalaṉiṭait taruvatuṅ kāṉat tuḷḷatum polaṉuṭaip poruppiṭaip poruḷu mallatu nalaṉuṭai nāṭṭavar nayatata liṉṟiyn nilaṉiṭaip poruḷpakar vaḻakka nīttatē.

Report an error

யாழ்க்கையர் பொருநருக் கிறைவ ரேழிசை வாழ்க்கைய ரளவையின் வகுத்த பாடலைக் கேட்குநர் நன்றென மருப்புக் கிம்புரிப் பூட்கைக ளுதவுவார் பொதுவி றோறுமே.

yāḻkkaiyar porunaruk kiṟaiva rēḻicai vāḻkkaiya raḷavaiyiṉ vakutta pāṭalaik kēṭkunar naṉṟeṉa maruppuk kimpurip pūṭkaika ḷutavuvār potuvi ṟōṟumē.

Report an error

கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில் வஞ்சிதேய்ப் புண்டன மருங்கு லாரடி பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற் குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே.

kañcitēyp puṇṭakil kamaḻum pūntukil vañcitēyp puṇṭaṉa maruṅku lāraṭi pañcitēyp puṇṭaṉa paṇiyat tākkalāṟ kuñcitēyp puṇṭaṉa kumarar kūṭṭamē.

Report an error

அன்றிலம் பெடைகளை யணுகி யன்னைகேள் நன்றென வினையின்மே னடந்த நாயகர் இன்றுவந் திடுவரிங் கெமபொ ருட்டினால் ஒன்றுநீ யிரங்க்லென் றுரைக்கின் றார்சிலர்.

aṉṟilam peṭaikaḷai yaṇuki yaṉṉaikēḷ naṉṟeṉa viṉaiyiṉmē ṉaṭanta nāyakar iṉṟuvan tiṭuvariṅ kemapo ruṭṭiṉāl oṉṟunī yiraṅkleṉ ṟuraikkiṉ ṟārcilar.

Report an error

ஆடியல் கருங்கணுஞ் சிவப்புற் றங்கமும் வாடுவ தாகியே மதன வேர்வுறாக் கூடிய மகளிருங் குமரர் தங்களை ஊடிய மகளிரு முலப்பின் றாயினார்.

āṭiyal karuṅkaṇuñ civappuṟ ṟaṅkamum vāṭuva tākiyē mataṉa vērvuṟāk kūṭiya makaḷiruṅ kumarar taṅkaḷai ūṭiya makaḷiru mulappiṉ ṟāyiṉār.

Report an error

அகனமர் கணிகைய ரடிகள் சூடியே முகனுறு முவகையான் முயங்கி யன்னவர் நகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூல் தகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே.

akaṉamar kaṇikaiya raṭikaḷ cūṭiyē mukaṉuṟu muvakaiyāṉ muyaṅki yaṉṉavar nakaṉuṟu kuṟikoḷīi nāḷuṅ kāmanūl takaimaicey kāḷaiyar tokuti cāṉṟatē.

Report an error

வாளைக ளிகல்புரி வயலும் வாலியும் பாளையொ டுற்பலம் பதும நாறுமால் வேளயர் தடங்கணார் விரைமென் றாளினை காளையர் குஞ்சியுங் காரமு நாறுமால்.

vāḷaika ḷikalpuri vayalum vāliyum pāḷaiyo ṭuṟpalam patuma nāṟumāl vēḷayar taṭaṅkaṇār viraimeṉ ṟāḷiṉai kāḷaiyar kuñciyuṅ kāramu nāṟumāl.

Report an error

சேவக மணைவன கரிகள் சேனைகள் காவக மணைவன கலைகள் புள்ளினம் பூவக மணைவன பொறிவண் டாயிடைப் பாவக மணைவன பாட லாடலே.

cēvaka maṇaivaṉa karikaḷ cēṉaikaḷ kāvaka maṇaivaṉa kalaikaḷ puḷḷiṉam pūvaka maṇaivaṉa poṟivaṇ ṭāyiṭaip pāvaka maṇaivaṉa pāṭa lāṭalē.

Report an error

ஆடக மாமதி லம்பொற் கோபுரம் நீடிய மண்டப நெறிகொ ளரீவணம் பாடலொ டாடிடம் பிறவும் பாலிநன் னாடுள பதிதொறு நண்ணி யோங்குமே.

āṭaka māmati lampoṟ kōpuram nīṭiya maṇṭapa neṟiko ḷarīvaṇam pāṭalo ṭāṭiṭam piṟavum pālinaṉ ṉāṭuḷa patitoṟu naṇṇi yōṅkumē.

Report an error

தெண்டிரை யுலகினிற் சீர்பெற் றோங்கிய மண்டல மெங்கணு மதிக்க நின்றதோர் தொண்டைநன் னாட்டணி சொல்லி னாமினித் தண்டமிழ் வளநகர்த் தன்மை கூறுவாம்.

teṇṭirai yulakiṉiṟ cīrpeṟ ṟōṅkiya maṇṭala meṅkaṇu matikka niṉṟatōr toṇṭainaṉ ṉāṭṭaṇi colli ṉāmiṉit taṇṭamiḻ vaḷanakart taṉmai kūṟuvām.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).