திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் · ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
ēyarkōṉ kalikkāma nāyaṉār purāṇam
Sekkizhar’s Tamil account of Shiva’s devotees, in section 6.2 of Periya Puranam.
Part 1 of 2: verses 1–205 of 409Tamil with transliteration
Invocation
திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால்
nīṭu vaṇ pukaḻc cōḻar nīr nāṭṭu iṭai nilavum māṭu poṉ koḻi kāviri vaṭakaraik kīḻpāl āṭu pūṅkoṭi māṭam nīṭiya aṇi nakar tāṉ pīṭu taṅkiya tiru maṅkalap peyarttāl
இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம் பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு
iñci cūḻvaṉa entirap panti cūḻ ñāyil mañcu cūḻvaṉa varai eṉa uyar maṇi māṭam nañcu cūḻvaṉa nayaṉiyar naḷiṉa mellaṭic cem pañcu cūḻvaṉa kāḷaiyar kuñciyiṉ parappu
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள்
viḻavu aṟātaṉa viḷaṅku oḷi maṇi neṭuvīti muḻavu aṟātaṉa moy kuḻaliyar naṭa araṅkam maḻavu aṟātaṉa maṅkalam poli maṇi muṉṟil uḻavu aṟāta nal vaḷattaṉa ōṅkiruṅ kuṭikaḷ
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும் சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால்
nīriṉil poli caṭai muṭi neṟṟi nāṭṭattuk kāriṉil tikaḻ kaṇṭar tam kātalōr kuḻumi pāriṉ mikkatōr perumaiyāl paramartāḷ paravum cīriṉ mikkatu civapuri eṉat takum ciṟappāl
இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான் மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம் தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்
iṉṉa vāḻ pati ataṉ iṭai ēyar kōk kuṭitāṉ maṉṉiya nīṭiya vaḷavar cēṉāpatik kuṭiyām toṉmai mēviya toṭarcciyāl nikaḻvatu tūya poṉṉi nāṭṭu vēḷāṇmaiyil uyarnta poṟpiṉatāl
அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்
aṅkaṇ mikka ak kuṭiyiṉil avatarittu uḷḷār kaṅkai vāḻ muṭiyār toṇṭar kalikkāmar eṉpār taṅkaḷ nāyakar aṭi paṇivār aṭiccāntu poṅku kātaliṉ avar paṇi pōṟṟutal purintār
புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க் அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார்
putiya nāḷ matic caṭaimuṭiyār tirup puṉ kūrk atikam āyiṉa tiruppaṇi anēkamum ceytu nitiyam āvaṉa nīṟu ukantār kaḻal eṉṟu tutiyiṉāl paravit toḻutu iṉpuṟu kiṉṟār
நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன்
nāvalūr maṉṉar nātaṉait tūtu viṭṭu ataṉukku iyāvar ic ceyal purintaṉar eṉṟu avar iḻippat tēvar tam pirāṉ avar tiṟam tiruttiya ataṟku mēya vanta ac ceyaliṉai viḷampuvāṉ uṟṟēṉ
திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்
tirut toṇṭat tokai aruḷit tirunāvalur āḷi karuttu oṉṟu kātaliṉāl kaṉaka matil tiruvārūr oruttar kaḻal muppoḻutum urukiya aṉpoṭu paṇintu peruttu eḻum mey aṉpiṉāl piriyātu aṅku uṟaiyum nāḷ
தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்
tāḷ āṇmai uḻavu toḻil taṉmai vaḷam talai ciṟanta vēḷāḷar kuṇṭaiyūrak kiḻār eṉum mē takkōr vāḷār veṇ mati aṇintār maṟaivarāy vaḻakkiṉil veṉṟu āḷākak koṇṭavartāḷ aṭaintu aṉpāl oḻukuvār
செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின் இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள் மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல் பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்
cen nellum poṉṉaṉṉa ceḻum paruppum tīmkarum piṉ iṉṉalla amutum mutal eṇṇil perum vaḷaṅkaḷ maṉṉiya cīr vaṉ toṇṭarkku amutāka vaḻuvāmal paṉṉeṭu nāḷ paravaiyār māḷikaikkup paṭi camaittār
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்
āṉa ceyal aṉpiṉ varum ārvattāl makiḻntu āṟṟa vāṉa muṟai vaḻaṅkāmal mā nilattu vaḷam curuṅkap pōṉaka nel paṭi nirampa eṭuppataṟkup pō tāmai māṉam aḻi koḷkaiyiṉāl maṉam mayaṅki varuntuvār
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார்
vaṉ toṇṭar tiruvārūr māḷikaikku nel eṭukka iṉṟu kuṟai ākiṉṟatu eṉ ceykēṉ eṉa niṉaintu tuṉṟu perum kavalaiyiṉāl tuyar eyti uṇṇātē aṉṟu iravu tuyil koḷḷa aṅkaṇar vantu aruḷ purivār
ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப் பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல் காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல்
ārūraṉ taṉakku uṉpāl nel tantōm eṉṟu aruḷi nīrūrum caṭai muṭiyār nitik kōmāṉ taṉai ēvap pērūr maṟṟu ataṉ ellai aṭaṅkavum nel malaip piṟaṅkal kārūrum neṭum vicumpum karakka niṟaintu ōṅkiyatu āl
அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக் கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்
avviravu pular kālai uṇarntu eḻuvār atu kaṇṭē evvulakiṉ nel malaitāṉ itu eṉṟē aticayittu cevviya poṉ malai vaḷattār tiru aruḷiṉ ceyal pōṟṟik kovvai vāyp paravaiyār koḻunaraiyē toḻutu eḻuvār
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்
nāvalūr maṉṉaṉ ārkku nayaṉār aḷitta nel iṅku yāvarāl eṭukkal ākum icceyal avarkkuc collap pōvaṉ yāṉ eṉṟu pōntār pukuntavāṟu aruḷic ceytu tēvar tam perumāṉ ēva nampiyum etirē ceṉṟār
குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத் தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று
kuṇṭaiyūrk kiḻavar tāmum etir koṇṭu kōtil vāymait toṇṭaṉār pātam taṉṉil toḻutu vīḻntu eḻuntu niṉṟu paṇṭelām aṭiyēṉ ceyta paṇi eṉakku iṉṟu muṭṭa aṇṭar tam pirāṉār tāmē nel malai aḷittār eṉṟu
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்
maṉitarāl eṭukkum ellaittu aṉṟu nel malaiyiṉ ākkam iṉi eṉāl ceyyal ākum paṇi aṉṟu itu eṉṉak kēṭṭu paṉi mati muṭiyār aṉṟē parintu umakku aḷittār nel eṉṟu iṉiyaṉa moḻintu tāmum kuṇṭaiyūr eyta vantār
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் தண்ணிலவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று
viṇṇiṉai aḷakkum nelliṉ veṟpiṉai nampi nōkki aṇṇalait toḻutu pōṟṟi aticayam mikavum eyti eṇṇil cīrp paravai illattu in nellai eṭukka āḷum taṇṇilavu aṇintār tamē taril aṉṟi oṇṇātu eṉṟu
ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்
āḷiṭa vēṇṭik koḷvār aruku tiruppatiyāṉa kōḷiliyil tam perumāṉ kōyiliṉai vantu eyti vāṉ aḷavu kaṇ maṭavāḷ varuntāmē eṉum patikam mūḷa varum kātal uṭaṉ muṉ toḻutu pāṭutalum
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால்
pakal poḻutu kaḻintu ataṉ piṉ paravai maṉai aḷavu aṉṟi mikap perukum nel ulakil viḷaṅkiya ārūr niṟaiyap pukap peytu taruvaṉa nam pūtaṅkaḷ eṉa vicumpil nikarppu ariyatu oruvākku nikaḻntatu niṉ malaṉ aruḷāl
தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர்
tam pirāṉ aruḷ pōṟṟit taraiyiṉ micai viḻuntu eḻuntē umparāl uṇarvu ariya tirup pātam toḻutu ēttic cem poṉ nēr caṭaiyāraip piṟapatiyum toḻutu pōy nampar ārūr aṇaintār nāvalūr nāvalaṉ ār
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர்
pūṅkōyil makiḻntu aruḷum purātaṉaraip pukku iṟaiñci nīṅkāta perum makiḻcci uṭaṉ ēttip puṟam pōntu pāṅku āṉār puṭai cūḻntu pōṟṟi icaikka paravaiyār ōṅku tiru māḷikaiyiṉuḷ aṇaintār ārūrar
கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து
kōvai vāyp paravaiyār tām makiḻum paṭi kūṟi mēvi avar tam mōṭu mika iṉpuṟṟu iruntu ataṉpiṉ cēviṉ mēl umaiyōṭum varuvār tam tiru aruḷiṉ ēvaliṉāl avviravu pūtaṅkaḷ mikku eḻuntu
குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல்
kuṇṭaiyūr nel malaiyaik kuṟaḷ pūtap paṭai kavarntu vaṇṭulām kuḻal paravai māḷikaiyai niṟaivittē aṇṭarpirāṉ tiru ārūr aṭaṅkavum nel malai ākki kaṇṭavar aṟputam eytum kāṭci peṟa amaittaṉa āl
அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்
avviravu pular kālai ārūril vāḻvār kaṇṭu evvulakil viḷaintaṉa nel malai ivai eṉṟu aticayittu navvi matart tirunōkkiṉ naṅkai pukaḻp paravaiyārkku iv ulaku vāḻa varum nampi aḷittaṉa eṉpār
நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப் போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார்
nīkka ariya nel kuṉṟu taṉai nōkki neṟi palavum pōkka aritu āyiṭak kaṇṭu mīṇṭum tam il pukuvār pākkiyattiṉ tiru vaṭivām paravaiyārkku in nellup pōkkum iṭam aritākum eṉap palavum pukalkiṉṟār
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார்
vaṉ toṇṭar tamakku aḷitta nel kaṇṭu makiḻ ciṟappār iṉṟu uṅkaḷ maṉai ellaikku uḷpaṭum nel kuṉṟu ellām poṉ taṅku māḷikaiyil pukap peytu koḷka eṉa veṉṟi muracu aṟaivittār mikka pukaḻ paravaiyār
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்
aṇi ārūr maruku ataṉil āḷi aṅkup paṟai aṟainta paṇiyālē maṉai niṟaittup pāṅku eṅkum nel kūṭu aṇiyāmal kaṭṭi nakar kaḷi kūrap paravaiyār maṇiyāram puṉai mārpiṉ vaṉ toṇṭar tamaip paṇintār
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள் செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக் தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்
nampi ārūr tiruvārūril nayantu uṟaināḷ cem poṉ puṟṟu iṭam koṇṭu vīṟṟu irunta ceḻum tēṉaik tam periya viruppiṉoṭum tāḻntu uṇarviṉāl paruki imparuṭaṉ umparkaḷum aticayippa ēttiṉār
குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்ச பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்
kulavu pukaḻk kōṭṭiliyār kuṟai yirantu tam patikkaṇ alakil pukaḻ ārūrar eḻuntu aruḷa aṭi vaṇaṅki nilaviya vaṉ toṇṭar aḵtu icaintu ataṉpiṉ nēr iṟaiñca palar pukaḻum paṇpiṉār mīṇṭum tam pati aṇaintār
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்
tēvar otuṅka tiruttoṇṭar miṭaiyum celvat tiruvārūr kāval koṇṭu taṉiyāḷum kaṭavuḷ perumāṉ kaḻal vaṇaṅki nāvalūrar aruḷ peṟṟu nampar patikaḷ piṟa naṇṇip pāvai pākar tamaip paṇintu pāṭum viruppil ceṉṟu aṇaivār
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்
mālum ayaṉum uṇarvu ariyar makiḻum patikaḷ pala vaṇaṅki ñālam nikaḻ kōṭ puliyār tam nāṭṭiyattāṉ kuṭi naṇṇa ēlum vakaiyāl alaṅkarittu aṅku avarum etirkoṇṭu iṉitu iṟaiñcik kōla maṇi māḷikaiyiṉ kaṇ ārvam perukakkoṭu pukkār
தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால் சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால் மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்
tūya maṇip poṉ tavikil eḻuntu aruḷi irukkat tū nīrāl cēya malarc cēvaṭi viḷakkit teḷittuk koṇṭa ceḻum puṉalāl mēya cuṭar māḷikai eṅkum viḷaṅka vīci uḷam kaḷippa ēya ciṟappil arccaṉaikaḷ ellām iyalpiṉ muṟai purivār
பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி
pūntaṇ paṉinīr koṭu camaitta poruvu il viraiccantaṉak kalavai vāynta akiliṉ naṟum cāntu vācam niṟaimāṉ matac cēṟu tōynta pukai nāviyiṉ naṟu ney tūya pacum karppūram uṭaṉ ēynta aṭaikkāy amutu iṉaiya eṇṇil maṇip pācaṉattu ēnti
வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார்
vēṟu vēṟu tirup paḷḷit tāmap paṇikaḷ mika eṭuttu māṟilāta maṇittiru āparaṇa varukkam pala tāṅki īṟilvitattup parivaṭṭam ūḻiṉ niraittē etir iṟaiñci āṟu puṇaintār aṭit toṇṭar aḷavu il pūcai koḷa aḷittār
செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார் நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா
ceṅkōl aracaṉ aruḷ urimaic cēṉāpati ām kōṭpuliyār naṅkōmāṉai nāvalūr nakarār vēntai naṇpiṉāl taṅkō maṉaiyil tiru amutu ceyvittu iṟaiñcittalai ciṟanta poṅku ōtam pōl perum kātal purintār piṉṉum pōṟṟuvā
ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர் தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்
āṉa viruppiṉ maṟṟu avar tām arumaiyāl peṟṟu eṭutta tēṉār kōtaic ciṅkaṭiyār tamaiyum avarpiṉ tiru uyirtta māṉār nōkkiṉ vaṉappakaiyār tamaiyum koṇarntu vaṉ toṇṭar tū nāṇ malarttāḷ paṇivittut tāmum toḻutu colluvār
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக் கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத் தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப் படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார்
aṭiyēṉ peṟṟa makkaḷ ivar aṭimai ākak koṇṭu aruḷik kaṭicēr malart tāḷ toḻutu uyyak karuṇai aḷikka vēṇṭum eṉat toṭi cēr taḷikkai ivar eṉakkut tūya makkaḷ eṉak koṇṭap paṭiyē makaṇmai yāk koṇṭār paravaiyār tam koḻu naṉār
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர்
kōtai cūḻnta kuḻalāraik kuṟaṅkiṉ vaittu koṇṭu iruntu kātal niṟainta putalviyarām karuttu uṭkacivāl aṇaittu ucci mītu kaṇṇīr viḻa mōntu vēṇṭuvaṉavum koṭuttu aruḷi nātar kōyil ceṉṟu aṭaintār nampitampirāṉ tōḻar
வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும் சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை
veṉṟi veḷḷēṟu uyarttu aruḷum vimalar tirukkōpuram iṟaiñci oṉṟum uḷḷat toṭum aṉpāl uccikuvitta karattoṭum ceṉṟu pukkup paṇintu tiruppatikam pūṇāṇ eṉṟu eṭuttuk koṉṟai muṭiyār aruḷ urimai ciṟappittār kōṭpuliyārai
சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப் பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால் மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார்
ciṟappittu aruḷum tirukkaṭaik kāppu ataṉ iṭaic ciṅkaṭiyāraip piṟappittu eṭutta pitāvākat tammai niṉaitta peṟṟiyiṉāl maṟappil vakaic ciṅkaṭi appaṉ eṉṟē tammai vaittu aruḷi niṟap poṟpu uṭaiya icaipāṭi niṟainta aruḷ peṟṟu iṟaiñciṉār
அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச் செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்
aṅku niṉṟum eḻuntu aruḷi aḷavil aṉpiṉ uḷ makiḻac ceṅkaṇ nutalār mēvu tiruvalivalattaic cērntu iṟaiñci maṅkai pākar tammaip patikam valivalattuk kaṇṭēṉ eṉṟu eṅkum nikaḻnta tamiḻ mālai eṭuttut toṭutta icaipuṉaivār
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து
naṉṟu makiḻum campantar nāvuk karacar pāṭṭu ukantīr eṉṟu ciṟappittu iṟaiñci makiḻntu ētti aruḷ peṟṟu eḻuntu aruḷi maṉṟiṉ iṭaiyē naṭam purivār maruvu perumait tiruvārūr ceṉṟu kuṟukip pūṅkōyil perumāṉ cem poṉ kaḻal paṇintu
இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்
iṟaiñcip pōntu paravaiyār tiru māḷikaiyil eḻuntu aruḷi niṟainta viruppiṉ mēvum nāḷ nīṭu celvat tiruvārūrp puṟampu naṇiya kōyil kaḷum paṇintu pōṟṟip puṟṟu iṭamāy uṟainta perumāṉ kaḻal piriyātu ōvā iṉpam uṟṟu iruntār
செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார்
ceṟi puṉ caṭaiyār tiruvārūrp tirup paṅkuṉi uttarat tirunāḷ kuṟuka varalum paravaiyār koṭaikku viḻāvil kuṟaivaṟukka niṟaiyum poṉ koṇṭu aṇaivataṟku niṉaintu nampi tiruppukalūr iṟaivar pātam paṇiya eḻuntu aruḷic ceṉṟu aṅku eytiṉār
சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித் தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார்
ceṉṟu virumpit tiruppukalūr tēvar perumāṉ kōyil maṇi muṉṟil paṇintu valam koṇṭu mutalvar muṉpu vīḻntu iṟaiñcit toṉṟu marapiṉ aṭittoṇṭu tōynta aṉpil tutittu eḻuntu niṉṟu patika icaipāṭi niṉainta karuttu nikaḻ vippār
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால்
ciṟitu poḻutu kumpiṭṭuc cintai muṉṉam aṅku oḻiya vaṟitu puṟam pōntu aruḷi ayal maṭattil aṇaiyār vaṉ toṇṭar aṟivu kūrnta aṉpar uṭaṉ aṇi muṉṟiliṉ ōr aruku iruppa maṟi vaṇkaiyār aruḷēyō malarkaṇ tuyil vantu eytiyatāl
துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப் பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன் அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார்
tuyil vantu eytat tampirāṉ tōḻar aṅkut tiruppaṇikkup payilum cuṭumaṇ palakai pala koṇarvittu uyaram paṇṇit tēṉ ayilum curumpār malarc cikaḻi muṭimēl aṇiyā uttariya veyil untiya veṇ paṭṭu ataṉ mēl virittup paḷḷi mēviṉār
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண் பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம் பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி
cuṟṟum irunta toṇṭarkaḷum tuyilum aḷavil tuṇai malark kaṇ paṟṟum tuyil nīṅkiṭap paḷḷi uṇarntār paravai kēḷvaṉār veṟṟi viṭaiyār aruḷālē vēmaṇ kalvē viricuṭarc cem poṟṟiṇ kallāyiṉa kaṇṭu pukalūr iṟaivar aruḷ pōṟṟi
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல் கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து
toṇṭar uṇara makiḻntu eḻuntu tuṇaik kaik kamala mukai talai mēl koṇṭu kōyil uḷ pukkuk kuṟippil aṭaṅkāp pēr aṉpu maṇṭu kātal uṟa vaṇaṅki vāynta matura moḻimālai paṇṭu aṅku icaiyil tammaiyē pukaḻntu eṉṟu eṭuttu
பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர்
patikam pāṭit tiruk kaṭaik kāp paṇintu paravip puṟam pōntē etiril iṉpam immaiyē taruvār aruḷ peṟṟu eḻuntu aruḷi nitiyiṉ kuvaiyum uṭaṉ koṇṭu niṟaiyum natiyum kuṟai matiyum potiyum caṭaiyār tirup paṉaiyūr pukuvār purinūl maṇi mārpar
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார்
ceyya caṭaiyār tiruppaṉaiyūrp puṟattut tiruk kūttoṭum kāṭci eyta aruḷ etir ceṉṟu aṅku eḻunta viruppāl viḻuntu iṟaiñci aiyar tammai araṅku āṭa vallār avarē aḻakiyar eṉṟu uyya ulaku peṟum patikam pāṭi aruḷ peṟṟu uṭaṉpōntār
வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த் தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும் உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்
vaḷam malkiya cīrp paṉaiyūr vāḻvār ētta eḻuntu aruḷi aḷavil cempoṉ iṭṭikaikaḷ āḷmēl neruṅki aṇi ārūrt taḷava muṟuval paravaiyār tam māḷikaiyil pukat tāmum uḷamaṉṉiya tam perumāṉār tammai vaṇaṅki uvantu aṇaintār
வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார்
vantu paravaip pirāṭṭiyār makiḻa vaiki maruvum nāḷ antaṇ ārūr maruṅku aṇiya kōyil palavum aṇaintu iṟaiñcic cintai makiḻa viruppiṉoṭum teyvap perumāḷ tiruvārūr munti vaṇaṅki iṉitu iruntār muṉaip pāṭiyār tam kāvalaṉār
பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச் சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை
pala nāḷ amarvār paramar tiru aruḷāl aṅku niṉṟum pōyc cilai mā mēru vīraṉār tiru naṉṉilattuc ceṉṟu eyti valam māka vantu kōyiliṉ uḷ vaṇaṅki makiḻntu pāṭiṉār talamārkiṉṟa taṇ iyal vemmai yiṉāṉ eṉṉum tamiḻ mālai
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன் மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து
pāṭi aṅku vaikiya piṉ paramar vīḻi miḻalaiyiṉil nīṭu maṟaiyāl mēm paṭṭa antaṇ āḷar niṟaintu īṇṭi nāṭu makiḻa av aḷavu naṭaik kāvaṇam pāvāṭaiuṭaṉ māṭu katali pūkam nirai malka maṇit tōraṇam niraittu
வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார்
vantu nampi tammai etir koṇṭu pukkār maṟṟavarum cintai malarntu tiru vīḻi miḻalai iṟaiñcic cēṇ vicumpiṉ muntai iḻinta moy oḷi cēr kōyil taṉṉai muṉ vaṇaṅki pantam aṟukkum tam perumāṉ pātam paravi paṇikiṉṟār
படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்
paṭaṅkoḷ aravil tuyil vōṉum patumattōṉum paraviya viṭaṅkaṉ viṇṇēr perumāṉai viravum puḷakam uṭaṉ paravi aṭaṅkal vīḻi koṇṭu iruntīr aṭiyēṉukkum aruḷum eṉat taṭamkoḷ ceñcol tamiḻ mālai cātti aṅkuc cārum nāḷ
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால் தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார்
vāci aṟintu kācu aḷikka valla miḻalai vāṇarpāl tēcu mikka tiruaruḷ muṉ peṟṟu tiruvāñciyattu aṭikaḷ pācam aṟuttu āḷ koḷḷum tāḷ paṇintu poruvaṉār eṉṉum mācil patikam pāṭi amarntu aricil karaip puttūr aṇaintār
செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள்
ceḻu nīr naṟaiyūr nilavu tiruc cittīc caramum paṇintu ētti viḻunīr maiyiṉil perum toṇṭar viruppiṉ ōṭum etirkoḷḷa maḻuvōṭu iḷa māṉ karatalattil uṭaiyār tirup puttūr vaṇaṅki toḻu nīr maiyiṉil tutittu ēttit toṇṭar cūḻa uṟaiyum nāḷ
புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில் பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில்
puṉitaṉār muṉ pukaḻt tuṇaiyārkku aruḷum tiṟamum pōṟṟicaittu muṉivar pōṟṟa eḻuntu aruḷi mūri veḷḷak kaṅkaiyiṉil paṉi veṇ tiṅkaḷ aṇi caṭaiyār patikaḷ palavum paṇintu pōntu iṉiya niṉaivil eytiṉār iṟaivar tiruvā vaṭu tuṟaiyil
விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான் தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார்
viḷaṅkum tiruvāvaṭu tuṟaiyil mēyār kōyil puṭaivalam koṇṭu uḷam koṇṭu urukum aṉpiṉuṭaṉ uḷpukku iṟaiñci ēttuvār vaḷam koḷ patikam maṟaiyavaṉ eṉṟu eṭuttu cemkaṇāṉ taḷam koḷ piṟappum ciṟappittut tamiḻ col mālai cāttiṉār
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப் பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார் தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர்
cātti aṅku vaiku nāḷ tayaṅkum aṉparuṭaṉ kūṭap pērttum iṟaiñci aruḷ peṟṟum peṇṇōr pākattu aṇṇalār tīrtap poṉṉit teṉ karaimēl tikaḻum patikaḷ pala paṇintu mūrttiyār tam iṭai marutai aṭaintār muṉaip pāṭit talaivar
மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்
maṉṉu marutiṉ amarnta varai vaṇaṅki maturac col malarkaḷ paṉṉip puṉaintu paṇintu ēttip paravip pōntu toṇṭar uṭaṉ an nal patiyil iruntu akalvār araṉār tirunācēccarattai muṉṉi pukku valam koṇṭu mutalvar tiruttāḷ vaṇaṅkiṉār
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார்
perukum patikam piṟai aṇivāḷ nutalāḷ pāṭip peyarntu niṟai tiruviṉ maliyum civapurattut tēvar perumāṉ kaḻal vaṇaṅki urukum cintai uṭaṉ pōntē umaiyōr pākar tām makiḻntu maruvum patikaḷ piṟa paṇintu kalaiya nallūr maruṅku aṇaintār
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம் மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார்
cemmai maṟaiyōr tirukkalaiya nallūr iṟaivar cēvaṭikkīḻ mummai vaṇakkam peṟa iṟaiñci muṉpu paravit toḻutu eḻuvār kommai maruvu kurumpaimulai umaiyāḷ eṉṉum tiruppatikam meymmaip purāṇam palavum mikac ciṟappittu icaiyiṉ viḷampiṉār
அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார்
aṅku niṉṟu tiruk kuṭamūkku aṇaintu paṇintu pāṭippōy maṅkaip pākar valam cuḻiyai maruvip perukum aṉpu urukat taṅku kātal uṭaṉ vaṇaṅkit tamiḻāl paraci araciṉukkut tiṅkaḷ muṭiyār aṭi aḷitta tiru nallūraic ceṉṟu aṇaintār
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய சொல்லூதியமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார்
nallūr iṟaivar kaḻal pōṟṟi naviṉṟu naṭuvar nampar pati ellām iṟaiñci ēttip pōntu icaiyāl paravum tam uṭaiya collūtiyamā aṇintavar tam cōṟṟut tuṟaiyiṉ maruṅku eyti allūr kaṇṭar kōyiliṉ uḷ aṭaintu valam koṇṭu aṭi paṇivār
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக் கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின் கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்
aḻal nīr oḻuki aṉaiya eṉum am col patikam eṭuttu aruḷik kaḻal nīṭiya aṉpiṉil pōṟṟum kātal kūrap paraviya piṉ keḻu nīrmaiyiṉil aruḷ peṟṟup pōntu paravaiyār kēḷvar muḻu nīṟu aṇivār amarnta pati palavum paṇintu muṉṉuvār
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்
tēvar perumāṉ kaṇṭiyūr paṇintu tiru aiyāṟu ataṉai mēvi vaṇaṅkip pūnturutti vimalar pātam toḻutu iṟaiñcic cēvil varuvār tiru ālam poḻilil cērntu tāḻntu iravu pāvu cayaṉattu amarn aruḷip paḷḷi koḷḷak kaṉaviṉkaṇ
மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்
maḻapāṭi iṉil varuvataṟku niṉaikka maṟantāyō eṉṟu kuḻaku ākiya tam kōlam etirkāṭṭi aruḷak kuṟittu uṇarntu niḻalār cōlaik karaip poṉṉi vaṭapāl ēṟi neṭumāṭam aḻakār vīti maḻapāṭi aṇaintār nampi ārūrar
அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக் குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப் புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து
aṇaintu tiruk kōpuram iṟaiñci aṉpar cūḻa uṭaṉ pukuntu paṇam koḷ aravam aṇintār muṉ paṇintu vīḻntu param karuṇaik kuṇam koḷ aruḷiṉ tiṟam pōṟṟik koṇṭa puḷakattuṭaṉ urukip puṇarnta icaiyāl tiruppatikam poṉṉār mēṉi eṉṟu eṭuttu
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்
aṉṉē uṉṉai allal yāṉ ārai niṉaikkēṉ eṉa ētti taṉṉēr illāp patika malar cāttit toḻutu puṟampu aṇaintu maṉṉum patiyil cila nāḷ kaḷ vaikit toṇṭar uṭaṉ makiḻntu poṉṉik karaiyiṉ irumaruṅkum paṇintu mēlpāl pōtuvār
செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர் எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்
ceyya caṭaiyār tiru āṉaik kāvil aṇaintu tirut toṇṭar eyta muṉ vantu etir koḷḷa iṟaiñcik kōyil uḷ pukuntē aiyar kamalac cēvaṭik kīḻ ārvam peruka viḻuntu eḻuntu meyyum mukiḻppak kaṇ poḻinīr veḷḷam parappa vimmuvār
மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி
maṟaikaḷāya nāṉkum eṉa malarnta cem col tamiḻ patikam niṟaiyum kātal uṭaṉ eṭuttu nilavum aṉpar tamai nōkki iṟaiyum paṇivār emmaiyum āḷ uṭaiyār eṉṟu ēttuvār uṟaiyūrc cōḻaṉ maṇiyāram cāttum tiṟattai uṇarntu aruḷi
வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித் தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்
vaḷavar perumāṉ maṇiyāram cāttik koṇṭu varum poṉṉik kiḷarum tirai nīr mūḻkutalum vaḻuvip pōka ētam uṟa aḷavil tirumañcaṉak kuṭattuḷ atu pukku āṭṭa aṇintu aruḷit taḷarum avaṉukku aruḷ purinta taṉmai ciṟakkac cāṟṟiṉār
சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார்
cāṟṟi aṅkut taṅku nāḷ tayaṅkum pavaḷat tirumēṉi nīṟṟar kōyil emmaruṅkum ceṉṟu tāḻntu niṟai viruppāl pōṟṟi aṅku niṉṟum pōyp poruvil aṉpar maruviya toṇṭu āṟṟum perumai tiruppāccil ācciramam ceṉṟu aṭaintār
சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று
ceṉṟu tiruk kōpuram iṟaiñcit tēvar malinta tiruntu maṇi muṉṟil valam koṇṭu uḷ aṇaintu mutalvar muṉṉam vīḻntu iṟaiñci naṉṟu perukum poruḷ kātal nayappup peruka nātar etir niṉṟu paravi niṉainta poruḷ aruḷātu oḻiya nēr niṉṟu
அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால் பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்
aṉpu nīṅkā accam uṭaṉ tirut tōḻamaip paṇiyāl poṉ peṟāta tiru uḷḷam puḻuṅka aḻuṅkip puṟampu orupāl muṉpu niṉṟa tirut toṇṭar mukappē muṟaippāṭu uṭaiyārpōl eṉpu karaintu pirāṉār maṟṟu ilaiyō eṉṉa eṭukkiṉṟār
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால் உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர்
nittamum nīṅkā nilaimaiyiṉ nīṅki nilattu iṭaip pulam keḻum piṟappāl uytta kāraṇattai uṇarntu nontu aṭimai orumaiyām eḻumaiyum uṇartti ettaṉai aruḷātu oḻiyiṉum pirāṉār ivar alātu ilaiyō eṉpār vaittaṉaṉ taṉakkē talaiyum eṉ nāvum eṉa vaḻuttiṉār toṇṭar
இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்
iv vakai paravit tirukkaṭaik kāppum ēciṉa valla eṉṟu icaippa mey vakai virumpu tam perumāṉār viḻunitik kuvai aḷittu aruḷa mai vaḷar kaṇṭar karuṇaiyē paravi vaṇaṅki appati iṭai vaiki ev vakai maruṅkum iṟaivar tam patikaḷ iṟaiñci aṅku iruntaṉar cila nāḷ
அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார்
appati nīṅki aruḷiṉāl pōki āviṉ añcu āṭuvār nīṭum eppeyarp patiyum irumaruṅku iṟaiñci iṟaivar paiññīliyai eytip paip paṇi aṇivār kōpuram iṟaiñcip pāṅku amar puṭai valam koṇṭu tuppu uṟaḻ vēṇiyār kaḻal toḻuvār tōṉṟum kaṅkāḷaraik kaṇṭār
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்
kaṇṭavar kaṇkaḷ kātal nīr veḷḷam poḻitarak kai kuvittu iṟaiñci vaṇṭaṟai kuḻalār maṉam kavar palikku tiru vaṭivu kaṇṭavarkaḷ koṇṭatu ōr mayalal viṉavu kūṟṟu ākak kulavu col kār ulāviya eṉṟu aṇṭar nāyakaraip paravi āraṇiya viṭaṅkarām arun tamiḻ puṉaintār
பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக் கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக் குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில்
paravi ap patikat tiruk kaṭaik kappuc cātti muṉ paṇintu aruḷ peṟṟuk karavil aṉparkaḷ tam kūṭṭamum toḻutu kalantu iṉitu iruntu pōntu aruḷi viraviya īṅkōy malai mutal āka vimalar tam pati pala vaṇaṅkik kuravalar cōlai aṇi tirup pāṇṭik koṭu muṭi aṇaintaṉar koṅkil
கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன் குறுகிச் சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப
koṅkiṉil poṉṉit teṉ karaikkaṟaiyūrk koṭu muṭik kōyil muṉ kuṟukic caṅka veṇ kuḻaiyār uḻai valam ceytu cārntu aṭi aṉpiṉil tāḻntu poṅkiya vēṭkai perukiṭat toḻutu puṉitar poṉ mēṉiyai nōkki iṅku ivar tammai maṟakka oṇṇātu eṉṟu eḻunta meyk kuṟippiṉil eṭuppa
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும் எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத் திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்
aṇṇalār aṭikaḷ maṟakkiṉum nāma añcu eḻuttu aṟiya ep poḻutum eṇṇiya nāvē iṉ cuvai peruka iṭai aṟātu iyampum eṉṟum itaṉait tiṇṇiya uṇarvil koḷpavar maṟṟup paṟṟuilēṉ eṉac ceḻum tamiḻāl naṇṇiya aṉpil piṇippu uṟa naviṉṟār namaccivāyat tirup patikam
உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக் குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால்
ulaku elām uyya uṟuti āmpatikam uraittu mey uṇarvu aṟā orumai nilaviya cintai uṭaṉ tiru aruḷāl nīṅkuvār pāṅku nal patikaḷ palavum muṉ paṇintu paramar tāḷ pōṟṟip pōntu taṇ paṉi malarp paṭappaik kulavum ak koṅkil kāñcivāyp pērūr kuṟukiṉār muṟukum ātaravāl
அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக் கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார்
at tiruppatiyai aṇaintu muṉ āṇṭavar kōyil uḷ pukuntu meyttavar cūḻa valam koṇṭu muṉpu mēvuvār tam etir viḷaṅka nittaṉār tillai maṉṟuḷ niṉṟu āṭal nīṭiya kōlam nēr kāṭṭak kaittalam kuvittuk kaṇkaḷ āṉantak kaluḻi nīr poḻitarak kaṇṭār
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை உருக்கப் பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார்
kāṇṭalum toḻutu vīḻntu uṭaṉ eḻuntu karai il aṉpu eṉpiṉai urukkap pūṇṭa aim pulaṉil pulap paṭā iṉpam puṇarntu mey uṇarviṉil poṅkat tāṇṭavam puriyum tam pirāṉārait talaippaṭak kiṭaitta piṉ caiva āṇ takai yārukku aṭutta an nilaimai viḷaivai yār aḷavu aṟintu uraippār
அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பு அனார் இன்ப வெள்ளத்து மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவி பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால் என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்
an nilai nikaḻnta āraruḷ peṟṟa aṉpu aṉār iṉpa veḷḷattu maṉṉiya pāṭal makiḻntu uṭaṉ paravi vaḷam pati ataṉ iṭai maruvi poṉ maṇi maṉṟuḷ eṭutta cēvaṭiyār puri naṭam kumpiṭap peṟṟāl eṉ iṉip puṟam pōy eytuvatu eṉṟu mīṇṭu eḻuntu aruḷuvataṟku eḻuvār
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும் பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில்
āyiṭai nīṅki aruḷiṉāl celvār aruvaraic curaṅkaḷum piṟavum pāyum nīr natiyum pala pala kaṭantu paramar tam patipala paṇintu mēya vaṇ tamiḻāl virup poṭum paravi veñcamāk kūṭalum paṇintu cēyiṭai kaḻiyap pōntu vantu aṭaintār teṉ ticai kaṟkuṭimalaiyil
வீடு தரும் இக் கல் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப் பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார்
vīṭu tarum ik kal kuṭiyil viḻumiyāraip paṇintu iṟaiñci nīṭu viruppil tiruppatikam niṟainta cintai uṭaṉ pāṭip pāṭum viruppil toṇṭaruṭaṉ patikaḷ palavum aṇaintu iṟaiñci tēṭum iruvar kāṇpa ariyār tiruvāṟai mēl ceṉṟu aṇaintār
செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார்
cem poṉ mēru cilai vaḷaitta civaṉār āṟai mēl taḷiyil nampar pātam paṇintu iṟaiñci nāḷum makiḻ vārkku aruḷ kūṭa umpar pōṟṟum tāṉaṅkaḷ palavum paṇintu pōntu aṇaivār impar vāḻa iṉṉampar nakaraic cēra eytiṉār
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச் சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார்
ēriṉ maruvum iṉṉampar makiḻnta īcar kaḻal vaṇaṅki ārum aṉpil paṇintu ētti ārā aruḷāl aṅku amarvār pōriṉ maliyum kari urittār maruvum puṟam payam pōṟṟac cērum uḷḷam mikkueḻa meyp patikam pāṭic ceṉṟār
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே
aṅkam ōti ōr āṟai mēl taḷi eṉṟu eṭuttu amar kātalil poṅku centamiḻāl virumpu puṟam payantu toḻap pōtum eṉṟu eṅkum maṉṉiya iṉ icai patikam puṇaintu uṭaṉ eytiṉār tiṅkaḷ cūṭiya celvar mēvum tirup puṟam payam cēravē
அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில் ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்
ap patik kaṇ amarnta toṇṭarum aṉṟu veṇṇey nal ūriṉil opparum taṉi vētiyaṉ paḻa ōlai kāṭṭi niṉṟu āṇṭavar ippatik kaṇ vantu eyta eṉṉa tavaṅkaḷ eṉṟu etir koḷḷavē muppuraṅkaḷ eritta cēvakar kōyil vāyiliṉ muṉṉiṉār
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார்
nīṭu kōpuram muṉpu iṟaiñci nilāvu toṇṭaroṭuḷḷaṇaintu āṭal mēviya aṇṇalār aṭi pōṟṟi añcali kōli niṉṟu ēṭu ulām malar tūvi eṭṭiṉeṭu aintum ākum uṟuppiṉāl pīṭu nīṭu nilattiṉ mēl perukap paṇintu vaṇaṅkiṉār
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால் பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார்
aṅku nīṭu aruḷ peṟṟu uḷ ārvam mikap poḻintu eḻum aṉpiṉāl poṅku nāḷ malar pātam muṉ paṇintu ētti mīṇṭum puṟattu aṇaintu eṅkum āki niṟaintu niṉṟavar tām makiḻnta iṭaṅkaḷil taṅku kōlam iṟaiñcuvār aruḷ aṉparōṭu eytiṉār
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித் தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார
vampu nīṭu alaṅkal mārpiṉ vaṉ toṇṭar vaṉṉi koṉṟai tumpai veḷ aṭampu tiṅkaḷ tūya nīṟu aṇinta ceṉṉit tampirāṉ amarnta tāṉam pala pala cārntu tāḻntu kompaṉār āṭal nīṭu kūṭalai yāṟṟūr cāra
செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு
cepparum patiyil cērār tirumutu kuṉṟai nōkki opparum pukaḻār collum oruvaḻi umaiyāḷōṭu meyp param poruḷāy uḷḷār vētiyar āki niṉṟār muppuri nūlum tāṅki nampi ārūrar muṉpu
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல
niṉṟavar tammai nōkki nekiḻnta cintaiyarāyt tāḻvār iṉṟi yām mutu kuṉṟu eyta vaḻi emakku iyampum eṉṉa kuṉṟa villāḷi yārum kūṭalai yāṟṟūr ēṟac ceṉṟatu iv vaḻitāṉ eṉṟu celvaḻit tuṇaiyāyc cella
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார்
kaṇṭavar kaikaḷ kūppit toḻutu piṉ toṭarvārk kāṇār vaṇṭalar koṉṟaiyārai vaṭivuṭai maḻu eṉṟu ētti aṇṭar tam perumāṉ pōnta aticayam aṟiyēṉ eṉṟu koṇṭu eḻum viruppiṉēṭum kūṭalai yāṟṟūr pukkār
கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார்
kūṭalai āṟṟūr mēvum koṉṟai vār caṭaiyiṉārtam pīṭuyar kōyil pukkup perukiya ārvam poṅka āṭakap potuvil āṭum aṟaikaḻal vaṇaṅkip pōṟṟi nīṭu aruḷ peṟṟup pōntu tiru mutu kuṉṟil nērntār
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று
taṭa nilaik kōpurattait tāḻntu muṉ iṟaiñcik kōyil puṭaivalam koṇṭu pukkup pōṟṟiṉar toḻutu vīḻntu naṭam navilvārai nañci iṭai eṉum cem colmālait toṭai nikaḻ patikam pāṭit toḻutu kai cumantu niṉṟu
நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட
nātar pāl poruḷ tām vēṇṭi naṇṇiya vaṇṇam ellām kōtaṟu maṉattuḷ koṇṭa kuṟip poṭum paravum pōtu tātu aviḻ koṉṟai vēyntār tara aruḷ peṟuvār caiva vētiyar talaivar mīṇṭum meyyil veṇ poṭiyum pāṭa
பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன் நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்
paṉi matic caṭaiyār tāmum paṉṉiraṇṭāyiram poṉ naṉi aruḷ koṭukkum āṟṟāl nalkiṭa uṭaiya nampi taṉi varum makiḻcci poṅkat tāḻntu eḻuntu aruku ceṉṟu kaṉi viṭam miṭaṟṟiṉār muṉ piṉ oṉṟu kaḻaṟal uṟṟār
அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப் பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்
aruḷum ik kaṉakam ellām aṭiyaṉēṟku ārūr uḷḷōr maruḷuṟa viyappa aṅkē varap peṟa vēṇṭum eṉṉat teruḷuṟa eḻunta vākkāl ceḻu maṇi muttāṟṟil iṭṭip poruḷiṉai muḻutum ārūrk kuḷattil pōyk koḷka eṉṟār
என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில் பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று
eṉṟu tam pirāṉār iṉ aruḷ peṟṟa piṉṉar vaṉ toṇṭar maccam veṭṭik kaik koṇṭu maṇi muttu āṟṟil poṉ tiraḷ eṭuttu nīruḷ pukaviṭṭup pōtu kiṉṟār aṉṟu eṉai valintu āṭkoṇṭa aruḷ itil aṟivēṉ eṉṟu
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார்
mēviya kātal toṇṭu viravu mey virutti peṟṟār āviyiṉ virutti āṉa antaṇar puliyūr maṉṟil kāviyaṅ kaṇṭar kūttu kaṇṭu kumpiṭuvatu eṉṟu vāvi cūḻ tillai mūtūr vaḻik koḷvāṉ vaṇaṅkip pōntār
மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச் சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்
māṭuḷa patikaḷ ceṉṟu vaṇaṅkip pōy maṅkai pākar nīṭiya kaṭampūr pōṟṟi niṟainta āṉantak kūttar āṭiya tillai mūtūr aṇaintu aṇi vāyil pukkuc cēṭuyar māṭam maṉṉum ceḻum tiru vīti cārntār
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்
poṉ tiru vīti tāḻntu puṇṇiya viḷaivāy ōṅkum nal tiru vāyil naṇṇi naṟai mali alaṅkal mārpar maṟṟataṉ muṉpu maṇmēl vaṇaṅki uḷ pukuntu paim poṉ cuṟṟu māḷikai cūḻ vantu toḻutu kai talaimēl koḷvār
ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின் ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய
āṭiya tirumuṉpāṉa am poṉiṉ kōpurattiṉ ūṭu pukku iṟaiñci ōṅkum oḷi vaḷar kaṉaka maṉṟil nāṭakam ceyyatāḷai naṇṇuṟa uḷ niṟaintu nīṭum āṉanta veḷḷak kaṇkaḷ nīr niṟaintu pāya
பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள
paravuvāy kuḷaṟik kātil paṭi tirup paṭiyait tāḻntu viravu mey aṅkam aintum eṭṭiṉum vaṇaṅki vēṭkai uraṉuṟu tirukkūttu uḷḷam ārtarap peruki neñcil karavu ilāta avaraik kaṇṭa niṟaivu tam karuttil koḷḷa
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல் அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும் நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி
maṭittu āṭum aṭimaikkaṇ eṉṟu eṭuttu maṉ uyir kaṭku aruḷum āṟṟal aṭuttu āṟṟu nal neṟikkaṇ niṉṟārkaḷ vaḻuvi naraku aṇaiyā vaṇṇam taṭuppāṉaip pērūril kaṇṭa nilai ciṟappittut taṉik kūttu eṉṟum naṭippāṉai nām maṉamē peṟṟavāṟu eṉum kaḷippāl nayantu pāṭi
மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திரு வீதி மேவித் தாழ்ந்தே ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி மாளாத பேர் அன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத் தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்
mīḷāta aruḷ peṟṟup puṟam pōntu tiru vīti mēvit tāḻntē āḷāṉa vaṉ toṇṭar antaṇarkaḷ tām pōṟṟa amarntu vaiki māḷāta pēr aṉpāl poṉpatiyai vaṇaṅkip pōy maṟali vīḻat tāḷ āṇmai koṇṭavar tam karuppaṟiyalūr vaṇaṅkic ceṉṟu cārntār
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப் போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்
kūṟṟu utaittār tiruk kokuṭik kōyil naṇṇik kōpurattait toḻutu pukuntu aṉpar cūḻa ēṟṟa peru kātaliṉāl iṟaiñci ētti ellai ilāp peru makiḻcci maṉattil eytap pōṟṟicaittup puṟattu aṇaintap patiyil vaikip puṉitar avar tamai niṉaiyum iṉpam kūṟi cāṟṟiya meyt tirup patikam cimmāntu eṉṉum tamiḻ mālai puṉaintu āṅkuc cārum nāḷil
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும் மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி
kaṇ nutalār virumpu karup paṟiyalūraik kai toḻutu nīṅkip pōyk kayalkaḷ pāyum maṇṇi vaḷam paṭik karaiyai naṇṇi aṅku mātu oru pākattavar tāḷ vaṇaṅkip pōṟṟi eṇṇil pukaḻp patikamum muṉṉavaṉ eṉṟu ētti ēkuvār vāḻ koḷi puttūr eytātu puṇṇiyaṉār pōm poḻutu niṉaintu mīṇṭu pukukiṉṟār talaikkalaṉ eṉṟu eṭuttup pōṟṟi
திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில் உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென் கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது
tirup patikam pāṭiyē ceṉṟu aṅku eytit tēvar perumāṉār tam kōyil vāyil urup poliyum mayirp puḷakam viravat tāḻntē uḷ aṇaintu paṇintu ētti urukum aṉpāl porupparaiyaṉ maṭap pāvai iṭap pālāṉaip pōṟṟi icaittup puṟam pōntu taṅkip pū meṉ karuppu vayal vāḻ koḷi puttūrai nīṅkik kāṉ nāṭṭu muḷḷūril kalanta pōtu
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார்
kāṉ nāṭṭu muḷḷūraic cārum pōtu kaṇ nutalār etir kāṭci koṭuppak kaṇṭu tū nāṇ meṉ malark koṉṟaic caṭaiyār ceyya tuṇaip pāta malar kaṇṭu toḻutēṉ eṉṟu vāṉ āḷum tirup patikam vaḷvāy eṉṉum vaṉ tamiḻiṉ toṭaimālai malarac cāttit tēṉ ārum malarc cōlai maruṅku cūḻnta tiruetir koḷ pāṭiyiṉai eytac celvār
எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும் சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்
etticaiyum toḻutu ētta matta yāṉai eṭuttu etir koḷ pāṭiyiṉai aṭaivōm eṉṉum citta nilait tiruppatikam pāṭi vantu celvam miku ceḻum kōyil iṟaiñci naṇṇi attar tamai aṭi vaṇaṅki aṅku vaiki aruḷ peṟṟut tiru vēḷvik kuṭiyil eyti mutti tarum perumāṉait turutti kūṭa mūppatilai eṉum patikam moḻintu vāḻntār
காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து
kāṭṭu nal vēḷ vik kōlam karuttuṟa vaṇaṅkik kātal nāṭṭiya uḷḷattōṭu nampi ārūrar pōṟṟi īṭṭiya tavattōr cūḻa aṅku niṉṟu ēki aṉpu pūṭṭi āṭkoṇṭār maṉṉum tāṉaṅkaḷ iṟaiñcip pōntu
எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும் செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார்
eñcāta pēr aṉpil tirut toṇṭar uṭaṉ eyti nañcārum kaṟai miṭaṟṟār iṭam palavum nayantu ētti mañcārum poḻil uṭutta malart taṭaṅkaḷ puṭai cūḻum ceñcāli vayal marutat tiruvārūr ceṉṟu aṭaintār
செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும் மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார்
celvamali tiruvārūrt tēvarotu muṉivarkaḷum malku tiruk kōpurattu vantu iṟaiñci uḷpukku aṅku ellai ilāk kātal mika eṭutta malark kai kuvittup palku tirut toṇṭar uṭaṉ paramar tirumuṉ aṇaintār
மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார்
mūvāta mutal āki naṭuvāki muṭiyāta cēvārum koṭiyārait tiru mūlaṭṭāṉattuḷ ōvāta perum kātal uṭaṉ iṟaiñcip puṟam pōntu tāvāta pukaḻp paravaiyār tiru māḷikai cārntār
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப் பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்
poṅku peru viruppiṉoṭu puri kuḻalār palar pōṟṟap paṅkayak kaṇ ceṅkaṉivāyp paravaiyār aṭi vaṇaṅki eṅkaḷaiyum niṉaintu aruḷi eṉa iyampa iṉitu aḷittu maṅkai nallār avarōṭu makiḻntu uṟaintu vaikum nāḷ
நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல
nāyaṉār mutu kuṉṟar namakku aḷitta nal nitiyam tūya maṇi muttāṟṟil puka viṭṭēm tuṇaivar avar kōyiliṉ māḷikai mēl pāṟkuḷattil avar aruḷālē pōy eṭuttukkoṭu pōtap pōtuvāy eṉappukala
என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று
eṉṉa aticayam itu tāṉ eṉ coṉṉavāṟu eṉṟu miṉ iṭaiyār ciṟu muṟuval uṭaṉ viḷampa mey uṇarntār naṉ nutalāy eṉṉuṭaiya nātaṉ aruḷāl kuḷattil poṉ aṭaiya eṭuttu uṉakkut taruvatu poyyātu eṉṟu
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப் பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர்
āṅku avarum uṭaṉ pōta aḷavu iṟanta viruppiṉ uṭaṉ pūṅkōyil uḷ makiḻnta purātaṉaraip pukku iṟaiñci ōṅku tiru māḷikaiyai valam vantu aṅku uṭaṉ mēlaip pāṅku tiruk kuḷattu aṇaintār paravaiyār taṉittuṇaivar
மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்
maṟṟataṉil vaṭa kīḻ pāl karai mītu vantu aruḷi muṟṟu iḻaiyār tamai niṟutti muṉaip pāṭit tirunāṭar kaṟṟai vār caṭaiyāraik kai toḻutu kuḷattil iḻintu aṟṟai nāḷ iṭṭu eṭuppār pōl aṅkut taṭavutalum
நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர்
nīṟṟaḻakar pāṭṭu uvantu tiru viḷaiyāṭṭiṉil niṉṟu māṟṟuṟu cem poṉ kuḷattu varuviyātu oḻintu aruḷa āṟṟiṉil iṭṭuk kuḷattil tēṭuvīr aruḷ ituvō cāṟṟum eṉak kōl toṭiyār moḻintu aruḷat taṉit toṇṭar
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து
muṉ ceyta aruḷ vaḻiyē muruku alar pūṅkuḻal paravai taṉ ceyya vāyil nakai tārāmē tārum eṉa miṉ ceyta nūl mārpiṉ vētiyar tām mutu kuṉṟil poṉ ceyta mēṉi iṉīr eṉap patikam pōṟṟicaittu
முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள் சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்
muṭṭa imai yōr aṟiya mutu kuṉṟil tanta poruḷ caṭṭa nāṉ peṟātu oḻinta taḷarviṉāl kaiyaṟavām iṭṭaḷattai ivaḷ etirē koṭuttu aruḷum eṉum tiruppāṭṭu eṭṭaḷavum poṉ kāṭṭātu oḻintu aruḷa ēttuvār
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
ēttātē iruntu aṟiyēṉ eṉum tiruppāṭṭu evvulakum kāttāṭum ampalattuk kaṇṇuḷaṉām kaṇ nutalaik kūttātantu aruḷvāy ik kōmaḷattiṉ muṉ eṉṟu nīttārum toṭar ariya neṟi niṉṟār paravutalum
கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர் இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார்
kontu aviḻ pūṅkoṉṟai muṭik kūttaṉār tiru aruḷāl vantu eḻum poṉ tiraḷ eṭuttu varaṉ muṟaiyāl karai ēṟṟa antarattu malar māri poḻintu iḻintatu avaṉiyuḷōr inta aticayam eṉṉē yār peṟuvār eṉat toḻuvār
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர்
ñālam viyappu eyta varum nal kaṉaka miṭai eṭuttu mūlam eṉak koṭu pōnta āṇiyiṉ muṉ uraip pikka nīla miṭaṟṟavar aruḷāl urai tāḻap piṉṉum neṭu māl ayaṉukku ariya kaḻal vaḻuttiṉār vaṉtoṇṭar
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல் காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்
mīṭṭum avar paravutalum mey aṉpar aṉpil varum pāṭṭuvantu kūttu uvantār paṭuvāci muṭivu eytum ōṭṭaṟu cem poṉ ōkka oru māvum kuṟaiyāmal kāṭṭutalum makiḻntu eṭuttuk koṇṭu karai ēṟiṉār
கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித் திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்
karai ēṟip paravaiyār uṭaṉ kaṉaka āṉatu elām niraiyē āḷil cumatti neṭu nilai māḷikai pōkkit tirai yēṟum puṉal caṭilattiru mūlat tāṉattār virai yēṟu malar pātam toḻutu aṇaintār vītiyiṉil
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார் கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார்
vantu tiru māḷikaiyiṉ uḷ pukuntu maṅkala vāḻttu antamilā vakai ēttum aḷavu iṟantār oli ciṟappac cintai niṟai makiḻcci uṭaṉ cēyiḻaiyāruṭaṉ amarntār kanta mali malarc cōlai navalar tam kāvalaṉār
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்
aṇi ārūr maṇi puṟṟiṉ amarntaruḷum param poruḷaip paṇivār aṅku oru nāḷil pārāṭṭum tirup patikam taṇiyāta āṉantam talai ciṟappat toṇṭar uṭaṉ tuṇivu āya poruḷ viṉavit toḻutu āṭip pāṭuvār
பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
paṇṇiṟaiyum vakai pāṟu tāṅki eṉa eṭuttu aruḷi uṇṇiṟaiyum maṉak kaḷippāl uṟu puḷakam mayir mukiḻppa kaṇṇiṟaiyum puṉal poḻiyak karai ikanta āṉantam eṇṇiṟainta paṭi tōṉṟa ētti makiḻntu iṉpuṟṟār
இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும் வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும் பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார்
iṉpuṟṟu aṅku amarnāḷil īṟil aru maṟai paravum vaṉpuṟṟiṉ aravu aṇinta maṉṉavaṉār aruḷ peṟṟē aṉpuṟṟa kātal uṭaṉ aḷavu iṟanta piṟapatiyum poṉpuṟku eṉṟiṭa oḷirum caṭaiyārait toḻap pōvār
பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும் கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார்
paricaṉamum uṭaṉ pōtap pāṅku amainta patikaḷ toṟum kariyurivai puṉaintār tam kaḻal toḻutu makiḻntu ēttit turicaṟu nal perum toṇṭar naḷḷāṟu toḻuvataṟkup purivuṟu meyt toṇṭar etir koḷḷap pukku aṇaintār
விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக் கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார்
viṇ taṭavu kōpurattaip paṇintu karam mēl kuvittuk koṇṭu pukum taṇṇalār kōyiliṉai valam ceytu maṇṭiya pēr aṉpiṉoṭu maṉṉum tiru naḷḷāṟar puṇṭarikac cēvaṭik kīḻ porunta nilam micaip paṇintār
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி
aṅkaṇṇaraip paṇintu ētti aruḷiṉāl toḻutu pōy maṅkul aṇi maṇi māṭat tiruk kaṭavūr vantu eytit tiṅkaḷ vaḷar muṭiyār tam tirumayāṉamum paṇintu poṅkum icaip patikam maruvār koṉṟai eṉap pōṟṟi
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்
tiru vīraṭṭāṉattut tēvar pirāṉ ciṉak kūṟṟiṉ poru vīrantolaitta kaḻal paṇintu poṭiyār mēṉi maruīrat tamiḻ malai puṉaintu ētti malai vaḷatta peru vīrar valam purattup peruku ārvat toṭum ceṉṟār
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
varaiyōṭu nikar puricai valam purattār kaḻal vaṇaṅki urai ōcaip patikam eṉakku iṉi ōtip pōyc caṅkam niraiyōṭu tumit tūpa maṇit tīpam nittilap pūm tirai ōtam koṇṭu iṟaiñcum tiruccāykkāṭu eytiṉār
தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில்
tēvar perumāṉ taṉṉait tiruccāykkāṭṭiṉil paṇintu pāvalar cem tamiḻ mālait tirup patikam pāṭippōy mēvalar tam puram erittār veṇ kāṭu paṇintu ētti nāvalar kāvalar aṭaintār naṉi paḷḷit tiru nakaril
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்
naṉipaḷḷi amarntapirāṉ kaḻal vaṇaṅki nal tamiḻiṉ puṉita naṟum toṭai puṇaintu tiruc cempoṉ paḷḷi mutal paṉi mati cēr caṭaiyār tam patipalavum paṇintu pōyt taṉi viṭai mēl varuvār tam tiru niṉṟiyūr cārntār
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்
niṉṟiyūr mēyārai nēyattāl pukku iṟaiñci oṉṟiya aṉpu uḷ urukap pāṭuvār uṭaiya aracu eṉṟum ulaku iṭar nīṅkap pāṭiya ēḻ eḻunūṟum aṉṟu ciṟappittu am col tirup patikam aruḷ ceytār
அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார்
appatiyil aṉparuṭaṉ amarntu akalvār akal iṭattil ceppa ariya pukaḻ nīṭūr paṇiyātu cel poḻutil oppa ariya uṇarviṉāl niṉaintu aruḷi toḻal uṟuvār meyp poruḷ vaṇ tamiḻ malai viḷampiya mīṇṭu aṇaintār
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
maṭal ārum puṉal nīṭūr maruviṉar tāḷ vaṇaṅkātu viṭal āmē eṉum kātal viruppu uṟum attiruppatikam aṭal ār cūlap paṭaiyār tamaip pāṭi aṭivaṇaṅki uṭal ārum mayirp puḷakam mikap paṇintu aṅku uṟaikiṉṟār
அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக் கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்
am kaṇ iṉitu amarntu aruḷāl tiruppuṉ kūr aṇaintu iṟaiñcik koṅku alarum malarc cōlait tiruk kōlakkā aṇaiyak kaṅkai caṭaik karantavar tām etir kāṭci koṭuttu aruḷap poṅku viruppāl toḻutu tiruppatikam pōṟṟi icaippār
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
tiruñāṉa campantar tirukkaikaḷāl oṟṟip peruku ārvattuṭaṉ pāṭa piññakaṉār kaṇṭu iraṅki aruḷālē tiruttāḷam aḷittapaṭi ciṟappittup poruḷ mālait tiruppatikam pāṭiyē pōṟṟi icaittār
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய் மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்
mūvāta muḻu mutalār mutal kōlakkā akaṉṟu tāvāta pukaḻ caṇpai valam koṇṭu tāḻntu iṟaiñci nāvār muttamiḻ virakar naṟpataṅkaḷ paravip pōy mēvār tam puram ceṟṟār kurukāvūr mēvuvār
உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார்
uṇ nīriṉ vēṭkai uṭaṉ uṟupaciyāl mika varunti paṇ nīrmai moḻip paravaiyār koḻunar varum pāṅkark kaṇ nīṭu tiru nutalār kātal varak karuttu aṟintu taṇṇīrum poti cōṟum koṇṭu vaḻic cār kiṉṟār
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென் பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து
vēṉil uṟu veyil vemmai taṇippataṟku viraik kuḷir meṉ pāṉ nal malart taṭam pōlum pantar oru pāl amaittē āṉa maṟai vētiyarāy aruḷ vēṭam koṇṭiruntār māṉ amarum tiruk karattār vaṉ toṇṭar tamaip pārttu
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத் திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி
kurukāvūr amarntu aruḷum kuḻakar vaḻi pārt tiruppat tiruvārūrt tampirāṉ tōḻar tirut toṇṭar uṭaṉ varuvār appantar iṭaippukuntu tiru maṟaivar pāl peruku ārvam cela iruntār civāyanama eṉap pēci
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என
āla niḻal kīḻ iruntār avar tammai etir nōkkic cāla mikap pacittīr ip poti cōṟu tarukiṉṟēṉ kālam iṉit tāḻāmē kaik koṇṭu iṅku iṉitu arunti ēlam naṟum kuḷir taṇṇīr kuṭittu iṉaippu tīrum eṉa
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப் பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச் சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி
vaṉ toṇṭar atu kēṭṭu maṟai muṉivar tarum poti cōṟu iṉṟu namakku etir vilakkal ākātu eṉṟu icaintu aruḷip poṉ tayaṅku nūl mārpar tarum poti cōṟu atu vāṅkic ceṉṟu tirut toṇṭaruṭaṉ tiru amutu ceytu aruḷi
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால்
eṇ niṟainta paricaṉaṅkaḷ ellārum iṉitu aruntap paṇṇiyapiṉ am maruṅku pacittu aṇaintārkaḷum arunta uṇṇiṟainta āramutāy orukālum ulavātē puṇṇiyaṉār tām aḷitta poti cōṟu polintatāl
சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக் கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார்
caṅkaraṉār tiru aruḷ pōl taṇṇīriṉ cuvai ārntu poṅki varum ātaravāl avar nāmam pukaḻntu ētti aṅku ayar vāl paḷḷi amarntu aruku aṇaintār kaḷum tuyilak kaṅkai caṭaik karantār ap pantaroṭum tām karantār
சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்
citta nilai tiriyāta tiru nāvalur maṉṉar attakuti yiṉil paḷḷi uṇarntavarai kāṇāmai ittaṉaiyā māṟṟam aṟintilēṉ eṉa eṭuttu meyt takaiya tiruppatikam viḷampiyē ceṉṟu aṭaintār
குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார்
kurukavūr amarntu aruḷum kuḻakaṉār kōyiliṉukku arukār poṉ kōpurattai aṇaintu iṟaiñci uḷpukku varukātal kūra valam koṇṭu tiru muṉ vaṇaṅkip parukā iṉ amutattaik kaṇkaḷāl parukiṉār
கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்
kaṇṇārnta iṉ amutai kai ārat toḻutu iṟaiñcip paṇṇārnta tirup patikam pāṭiyē paṇintu ētti uṇṇāṭum perum kātal uṭaiyavartām puṟattu eyti naṇṇum ārvat toṇṭaruṭaṉ aṅku iṉitu nayantu iruntār
அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக் கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார்
an nāḷil tam perumāṉ aruḷ kūṭap paṇintu akaṉṟu miṉṉār ceñcaṭai muṭiyār virumpum iṭam pala vaṇaṅkik kaṉṉāṭum eyil puṭai cūḻ kaḻippālai toḻutu ētti teṉṉāvalūr maṉṉar tiruttillai vantu aṭaintār
சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்
cīr vaḷarum tiruttillait tiru vīti paṇintu pukuntu ēr valar poṉ tiru maṉṟuḷ eṭutta cēvaṭi iṟaiñcip pār vaḷara maṟai vaḷarkkum pati ataṉil paṇintu uṟaivār pōr vaḷar mēruccilaiyār tiruttiṉai mā nakar pukuntār
திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய் நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப் பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர் கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார்
tiruttiṉai mā nakar mēvum civak koḻuntaip paṇintu pōy niruttiṉār amarntu aruḷum niṟai patikaḷ pala vaṇaṅkip porutta mikum tiruttoṇṭar pōṟṟu tiru nāvalūr karuttil varum ātaravāl kai toḻac ceṉṟu eytiṉār
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார்
tirunāvalūr maṉṉar cērkiṉṟār eṉak kēṭṭup peru nāmap patiyōrum toṇṭarkaḷum peruvāḻvu varunāḷ eṉṟu alaṅkarittu vantu etirkoṇṭu uḷ aṇaiyac ceru nākattu uripuṉaintār ceḻuṅkōyil uḷ aṇaintār
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்
mēviya at toṇṭa kuḻām miṭaintu ara eṉṟu eḻum ōcai mūvulakum pōy olippa mutal vaṉār muṉpu eyti āviyiṉum aṭaivuṭaiyār aṭik kamalattu aruḷ pōṟṟik kōvalaṉ nāṉmukaṉ eṭuttup pāṭiyē kumpiṭṭār
நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார்
nalam perukum appatiyil nāṭi aṉpoṭu nayantu kulam perukum tiruttoṇṭar kuḻāttōṭum iṉitu amarntu calam perukum caṭaimuṭiyār tāḷ vaṇaṅki aruḷ peṟṟup polam purinūl maṇimārpar piṟapatiyum toḻap pōvār
தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார்
taṇṭakamān tiru nāṭṭut taṉi viṭaiyār makiḻ iṭaṅkaḷ toṇṭar etir koṇṭu aṇaiyat toḻutu pōyt tūya nati vaṇṭaṟai pūm puṟavu malai vaḷam marutam pala kaṭantē eṇ ticai yōr paravu tiruk kaḻuk kuṉṟai eytiṉār
தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார் ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித் தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார்
tēṉ ārnta malarc cōlai tirukkaḻuk kuṉṟattu aṭiyār āṉāta viruppiṉoṭum etir koḷḷa aṭaintu aruḷit tū nāḷ veṇ mati aṇinta cuṭark koḻuntait toḻutu iṟaiñci pā nāṭum iṉ icaiyiṉ tiruppatikam pāṭiṉār
பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக் கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்
pāṭiya ap patiyiṉ kaṇ iṉitu amarntu paṇintu pōy nāṭiya nalluṇarviṉ oṭum tiruk kaccūr taṉai naṇṇi āṭaka mā matil puṭai cūḻ ālakkōyiliṉ amutaik kūṭiya mey aṉpu urukak kumpiṭṭup puṟattu aṇaintār
அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக் கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார்
aṇaintu aruḷum avvēlai amutu ceyum poḻutākak koṇarnta amutu camaittu aḷikkum paricaṉamum kuṟukāmai taṇanta paci varuttattāl tampirāṉ tiruvāyil puṇarnta matil puṟattuiruntār muṉaippāṭi puravalaṉār
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார்
vaṉ toṇṭar paci tīrkka malaiyiṉ mēl maruntu āṉār miṉ taṅku veṇ talaiyōṭu oḻintu oru veṟṟōṭu ēnti aṉṟu aṅku vāḻvār ōr antaṇarāyp puṟappaṭṭuc ceṉṟu aṉpar mukam nōkki aruḷ kūṟac ceppuvār
மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன் அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார்
meyp paciyāl mika varunti iṉaittu iruntīr vēṭkaiviṭa ippoḻutē cōṟirantu iṅku yāṉ umakkuk koṇarkiṉṟēṉ appuṟam nīr akalātē ciṟitu poḻutu amarum eṉac ceppi avar kaccūr maṉai tōṟum ceṉṟirappār
வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார்
veṇ tiru nīṟu aṇi tikaḻa viḷaṅkunūl oḷi tuḷaṅkak kaṇṭavarkaḷ maṉam urukak kaṭum pakal pōtu iṭum palikkup puṇṭarikak kaḻal puvimēl porunta maṉai toṟum pukkuk koṇṭutām virumpi āṭ koṇṭavar muṉ koṭuvantār
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார்
irantu tām koṭu vanta iṉ aṭicilum kaṟiyum arantai tarum paci tīra aruntuvīr eṉa aḷippa peruntakaiyār maṟaiyavar tam pēr aruḷiṉ tiṟam pēṇa niranta perum kātaliṉāl nēr toḻutu vāṅkiṉār
வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார்
vāṅkiya attiru amutu vaṉ toṇṭar maruṅku aṇainta ōṅku tavat toṇṭaruṭaṉ uṇṭu aruḷi uvantu iruppa āṅku aruku niṉṟār avar tammai aṟiyāmē nīṅkiṉār ep poruḷum nīṅkāta nilaimaiyiṉār
திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி
tirunāvalūrāḷi civa yōkiyār nīṅka varu nāma maṟaiyavaṉār iṟaiyavaṉār eṉa matittē peru nātac cilampu aṇi cēvaṭi varunta perum pakal kaṇ urunāṭi eḻuntu aruḷiṟṟu eṉ poruṭṭām eṉa uruki
முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்
mutuvāyōri eṉṟu eṭuttu mutalvaṉār tam perum karuṇai atuvām eṉṟuaticayam vantu eytak kaṇṇīr maḻai aruvi putuvār puṉaliṉ mayir puḷakam putaiyap patikam pōṟṟi icaittu matuvār itaḻi muṭiyāraip pāṭi makiḻntu vaṇaṅkiṉār
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச் சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்
vantittu iṟaivar aruḷāl pōy maṅkai pākar makiḻnta iṭam muntit toṇṭar etir koḷḷap pukku muk kaṇ perumāṉaic cintittiṭa vantu aruḷ cey kaḻal paṇintu ceñcol toṭaipuṉaintē antic cekkarp peruku oḷiyār amarum kāñci maruṅku aṇaintār
அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம் இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார்
aṉṟu veṇṇey nallūril ariyum ayaṉum toṭar ariya veṉṟi maḻa veḷ viṭai uyarttār vēta mutalvarāy vantu niṉṟu capai muṉ vaḻakku uraittu nērē toṭarntu āṭkoṇṭavar tām iṉṟu iṅku eytap peṟṟōm eṉṟu eyil cūḻkāñci nakar vāḻvār
மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார்
malku makiḻcci mikap peruka maṟuku maṇit tōraṇam nāṭṭi alku tīpam niṟai kuṭaṅkaḷ akiliṉ tūpam koṭi eṭuttuc celva maṉaikaḷ alaṅkarittu teṟṟi āṭal muḻavu atirap palku toṇṭaruṭaṉ kūṭip patiyiṉ puṟam pōy etir koṇṭār
ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார்
āṇṭa nampi etir koṇṭa aṭiyār vaṇaṅka etirvaṇaṅki nīṇṭa matilkōpuram kaṭantu niṟai māḷikai vītiyil pōntu pūṇṭa kātal vāḻttiṉuṭaṉ puṉai maṅkala tūriyam olippa īṇṭu toṇṭar peruku tiru ēkāmparam ceṉṟu eytiṉār
ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச் சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர்
āḻi neṭumāl ayaṉ mutalām amarar neruṅku kōpuram muṉ pūḻiyuṟa maṇ micai mēṉi porunta vaṇaṅkip pukuntu aruḷic cūḻumaṇi māḷikai palavum toḻutu vaṇaṅki valam koṇṭu vāḻi maṇip poṉ kōyiliṉuḷ vantār aṇukka vaṉ toṇṭar
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ் செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார்
kaikaḷ kūppi muṉ aṇaivār kampai āṟu perukivara aiyar tamakku mika añci ārat taḻuvik koṇṭu irunta mai ulāvum karum neṭum kaṇ malaiyāḷ eṉṟum vaḻipaṭupūñ ceyya kamalac cēvaṭik kīḻt tiruntu kātaluṭaṉ vīḻntār
வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால் வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த் தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்
vīḻntu pōṟṟip paravacamāy vimmi eḻuntu meyyaṉpāl vāḻnta cintai uṭaṉ pāṭi māṟā viruppil puṟam pōntu cūḻnta toṇṭaruṭaṉ maruvum nāḷil tollaik kāñci nakart tāḻnta caṭaiyār ālayaṅkaḷ palavum cārntu vaṇaṅkuvār
சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம் பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
cīrār kāñci maṉṉum tiruk kāmak kōṭṭam ceṉṟu iṟaiñci nīrār caṭaiyār amarntu aruḷum nīṭu tiru mēṟṟaḷi mēvi ārā aṉpil paṇintu ēttum aḷavil nuntā oṇcuṭarām pārār perumait tirup patikam pāṭi makiḻntu paraviṉār
ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்
ōṇakāntaṉ taḷi mēvum oruvar tammai urimaiyuṭaṉ pēṇi amainta tōḻamaiyāl perukum aṭimait tiṟam pēcik kāṇa mōṭu poṉ vēṇṭi neyyum pālum kalai viḷaṅkum yāṇarp patikam eṭuttu ētti eṇṇil niti peṟṟu iṉitu iruntār
அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்
aṅkaṇ amarvār aṉē kataṅkā patattai eyti uḷḷaṇaintu ceṅkaṇ viṭaiyār tamaip paṇintu tēṉ ney purintu eṉṟu eṭuttatamiḻ taṅkum iṭamām eṉappāṭit tāḻntu piṟavum tāṉaṅkaḷ poṅku kātaluṭaṉ pōṟṟip purinta patiyil poruntum nāḷ
பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர் ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார் நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால் மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார்
pāṭal icaiyum pāṇiyiṉāl pāvait taḻuvak kuḻaik kampar āṭal maruvum cē aṭikaḷ paravip piriyātu amarkiṉṟār nīṭa mūtūrp puṟattu iṟaivar nilavum patikaḷ toḻaviruppāl māṭam neruṅku vaṉ pārttāṉ paṉam kāṭṭūril vantu aṭaintār
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம் நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்
celvam malku tirup paṉaṅ kāṭṭūril cem poṉ ceḻum cuṭarai allal aṟukkum aru maruntai vaṇaṅki aṉpupoḻi kaṇṇīr malka niṉṟu viṭaiyiṉ mēl varuvāṉ eṉum vaṇ tamiḻap patikam nalla icaiyiṉ uṭaṉ pāṭip pōntu puṟampu naṇṇuvār
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம் தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப் பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர் சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்
maṉṉum tirumāl pēṟu aṇaintu vaṇaṅkip paravit tiruvallam taṉṉuḷ eyti iṟaiñcip pōyccārum mēlpāl kaṟṟaip piṉṉal muṭiyār iṭam palavum pēṇi vaṉaṅkip perum toṇṭar ceṉṉi mukil tōy taṭam kuvaṭṭut tiruk tirukkāḷatti malaicērntār
தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும் அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்
taṭukkalākāp peruṅkātal talai niṉṟu aruḷum kaṇṇappar iṭukkaṇ kaḷaintu āṭ koṇṭu aruḷum iṟaivar makiḻnta kāḷatti aṭukkal cēra aṇaintu paṇintu aruḷāl ēṟi aṉpāṟum aṭuppat tirumuṉ ceṉṟu eyti malai mēl maruntai vaṇaṅkiṉār
வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
vaṇaṅki uḷḷam kaḷi kūra makiḻntu pōṟṟi matura icai aṇaṅku ceṇṭāṭu eṉum patikam pāṭi aṉpāl kaṇṇappar maṇam koḷ malarc cēvaṭi paṇintu vāḻntu pōntu maṉṉum pati iṇaṅkum toṇṭaruṭaṉ keḻumi iṉpuṟṟu irukkum annāḷil
வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல் இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார்
vaṭa mātirattup paruppatam tiruk kētāra malaiyum mutal iṭamā araṉār tām uvanta ellām iṅkē iruntu iṟaiñci naṭam āṭiya cēvaṭiyārai naṇṇiṉār pōl uḷ niṟaintu tiru mām karuttil tirup patikam pāṭik kātal ciṟantu iruntār
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப் பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத் திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார்
aṅku cila nāḷ vaikiya piṉ aruḷāl pōntu peru viṭaiyār taṅkum iṭaṅkaḷ eṉaip palavum cārntu tāḻntu tamiḻpāṭip poṅku puṇirik karai maruṅku puviyuḷ civalōkam pōlat tiṅkaḷ muṭiyār amarnta tiru oṟṟiyūraic ceṉṟu aṭaintār
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார் வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள் சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்
aṇṇal toṭarntu āvaṇam kāṭṭi āṇṭanampi eḻuntu aruḷa eṇṇil perumai āti puri iṟaivar aṭiyār etir koḷvār vaṇṇa vīti vāyil toṟum vāḻai kamuku tōraṇaṅkaḷ cuṇṇa niṟai poṉ kuṭam tīpam eṭuttut toḻa eḻuṅkāl
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர்
vara maṅkala nalliyam muḻaṅka vāca mālai aṇi araṅkil pura maṅkaiyarkaḷ naṭam āṭap poḻiyum veḷḷap pū māri ara maṅkaiyarum amararkaḷum vīca aṉpar uṭaṉ pukuntār piramaṉ talaiyil paliyuvanta pirāṉār virumpum toṇṭar
ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின் பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச் சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர் கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார்
oṟṟi ūriṉ umaiyōṭum kūṭa niṉṟār uyartavattiṉ paṟṟu mikka tirut toṇṭar paranta kaṭal pōl vantu īṇṭic cuṟṟam aṇaintu tuti ceyyat toḻutu tampirāṉ aṉpar koṟṟa maḻavēṟu uṭaiyavar tam kōyil vāyil eytiṉār
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன் ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர்
vāṉai aḷakkum kōpurattai makiḻntu paṇintu pukuntu vaḷar kūṉal iḷam veṇ piṟaic caṭaiyār kōyil valam koṇṭu etir kuṟuki ūṉum uyirum karaintu uruka ucci kuvitta kaiyiṉ uṭaṉ āṉa kātal uṭaṉ vīḻntār ārā aṉpiṉ ārūrar
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில் கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப் பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்
ēṭṭu variyil oṟṟiyūr nīṅkal eṉṉa eḻuttu aṟiyum nāṭṭa malarum tiru nutalār naṟum poṉ kamalac cēvaṭiyil kūṭṭum uṇarvu koṇṭu eḻuntu kōtil icai kūṭap pāṭṭum pāṭi paravi eṉum patikam eṭuttup pāṭiṉār
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்து நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத் தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம் கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார்
pāṭi aṟivu paravacamām parivu paṟṟap puṟam pōntu nīṭu viruppil perum kātal niṟainta aṉpar palar pōṟṟat tēṭum ayaṉum tirumālum aṟitaṟku ariya tiruppātam kūṭum kālaṅkaḷil aṇaintu paravik kumpiṭṭu iṉitu iruntār
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).