வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர
vaṇṭutāṉ mikaviṭaṅ koṇṭakā raḷakameṉ pantimā malarcorin ...... tuṭaicōra
பாடல் 1103 · பாடல் 1103
pāṭal 1103
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர
vaṇṭutāṉ mikaviṭaṅ koṇṭakā raḷakameṉ pantimā malarcorin ...... tuṭaicōra
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந் தந்தமா மதனலம் ...... விதமாக
vampucēr kaṉiporun tiṉpavā yamutarun tantamā mataṉalam ...... vitamāka
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண் டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம்
viṇṭumē ṉikaḷtuvaṇ ṭaṉṟilpō luḷamiraṇ ṭoṉṟumā yuṟavaḻin ...... tanupōkam
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந் துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே
viñcavē tarumiḷaṅ koṅkaiyār viṉaikaṭan tuṉṟaṉmē lurukaeṉ ...... ṟaruḷvāyē
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம் பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு
paṇṭupā riṉaiyaḷan tuṇṭamāl marukacem paimpoṉmā nakarilin ...... tiraṉvāḻvu
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந் தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே
paṇpelā mikutipoṅ kiṉpayā ṉaiyaimaṇan taṉpiṉō rakamamarn ...... tiṭuvōṉē
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந் தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன்
aṇṭartā matipayaṅ koṇṭuvā ṭiṭaneṭun taṇṭuvāḷ koṭunaṭan ...... tiṭucūraṉ
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண் டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
aṅkamā ṉatupiḷan teṅkumvī riṭavekuṇ ṭaṅkaivē luṟaviṭum ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).