Skip to content

பாடல் 1132 · பாடல் 1132

Song 1132

pāṭal 1132

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இரவினிடை வேள்தொ டுத்து டன்று முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே

iraviṉiṭai vēḷto ṭuttu ṭaṉṟu muṟukumalar vāḷi yaippi ṇaṅki yirukuḻaiyu mōti yappa ṭaṅku ...... kaṭalōṭē

Report an error

எதிர்பொருது மானி னைத்து ரந்து சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே

etirporutu māṉi ṉaittu rantu calatikiḻi vēlta ṉaippo runti yiṉiyamuta āla muṟṟa kaṇkaḷ ...... valaiyālē

Report an error

முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து விசிறிவளை மாத ரைக்க லந்து மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு

muraṇiḷaiña rāvi yaitto ṭarntu viciṟivaḷai māta raikka lantu moḻiyatara kōvai yikka runti ...... yamutāku

Report an error

முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து சுழிமிதுன வாவி யிற்பு குந்து முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும்

mukiḻmukuḷi tāra veṟpa ṇaintu cuḻimituṉa vāvi yiṟpu kuntu muḻukiyaḻi yāma ṉaṟpa taṅkaḷ ...... taravēṇum

Report an error

திரையுலகு சாக ரத்தி லங்கை நகரிலுறை ராவ ணற்கி யைந்த தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ்

tiraiyulaku cāka ratti laṅkai nakariluṟai rāva ṇaṟki yainta tecamuṭiyu mīru patto ḻuṅku ...... tiṇitōḷuñ

Report an error

சிதையவொரு வாளி யைத்து ரந்த அரிமருக தீத றக்க டந்து தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே

citaiyavoru vāḷi yaittu ranta arimaruka tīta ṟakka ṭantu teḷimaruvu kāra ṇatta marnta ...... murukōṉē

Report an error

அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து கருதுமொரு மூவ ருக்கி ரங்கி யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா

araṇamatiḷ cūḻpu ratti runtu karutumoru mūva rukki raṅki yaruḷumoru nāya kaṟpa ṇinta ...... kurunātā

Report an error

அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து இரவுபகலாக நெக்க விழ்ந்த அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே.

akalmuṭivai yāti yaitte ḷintu iravupakalāka nekka viḻnta aṭiyavarkaḷ pāṭa lukki cainta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).