இரவொ டும்பக லேமா றாதே அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி
iravo ṭumpaka lēmā ṟātē anuti ṉantuya rōyā tēyē yeriyu muntiyi ṉālē mālē ...... peritāki
பாடல் 1133 · பாடல் 1133
pāṭal 1133
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
இரவொ டும்பக லேமா றாதே அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி
iravo ṭumpaka lēmā ṟātē anuti ṉantuya rōyā tēyē yeriyu muntiyi ṉālē mālē ...... peritāki
இரைகொ ளும்படி யூடே பாடே மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி
iraiko ḷumpaṭi yūṭē pāṭē mikuti koṇṭoḻi yātē vātē yiṭaika ḷiṉcila nāḷē pōyē ...... vayatāki
நரைக ளும்பெரிதாயே போயே கிழவ னென்றொரு பேரே சார்வே நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி
naraika ḷumperitāyē pōyē kiḻava ṉeṉṟoru pērē cārvē naṭaika ḷumpala tāṟē māṟē ...... viḻalāki
நயன முந்தெரியாதே போனால் விடிவ தென்றடி யேனே தானே நடன் குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ
nayaṉa munteriyātē pōṉāl viṭiva teṉṟaṭi yēṉē tāṉē naṭaṉ kuñcita vīṭē kūṭā ...... taḻivēṉō
திருந லம்புரிதாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரி திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி
tiruna lampuritāḷī tūḷī makara kuṇṭali mārī cūri tiripu rantaḻa lēvī cārvī ...... yapirāmi
சிவனி டந்தரிநீலீ சூலீ கவுரிபஞ்சவி யாயீ மாயீ சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா
civaṉi ṭantarinīlī cūlī kavuripañcavi yāyī māyī civaipe ṇampikai vālā cīlā ...... aruḷpālā
அரவ கிங்கிணி வீரா தீரா கிரிபு ரந்தொளிர் நாதா பாதா அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா
arava kiṅkiṇi vīrā tīrā kiripu rantoḷir nātā pātā aḻaki ḷaṅkuṟa māṉār tēṉār ...... maṇavāḷā
அரிய ரன்பிர மாவோ டேமூ வகைய ரிந்திர கோமா னீள்வா னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே.
ariya raṉpira māvō ṭēmū vakaiya rintira kōmā ṉīḷvā ṉamarar kantaru vāṉō rēṉōr ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).