Skip to content

பாடல் 1189 · பாடல் 1189

Song 1189

pāṭal 1189

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும் வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல்

māṟuporu kāla ṉokkum vāṉileḻu māma tikkum vārituyi lāva taṟkum ...... vacaiyēcol

Report an error

மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும் வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே

māyamaṭa vārta makkum āyarkuḻa lūti caikkum vāyumiḷa vāṭai yiṟku ...... mataṉālē

Report an error

வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து வேறுபடு மேனி சற்று ...... மழியாதே

vēṟupaṭu pāya lukku mēyeṉatu pētai yeyttu vēṟupaṭu mēṉi caṟṟu ...... maḻiyātē

Report an error

வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து மேவுமிரு பாத முற்று ...... வரவேணும்

vēṭarkula māti ṉukku vēṭaikeṭa vēna ṭittu mēvumiru pāta muṟṟu ...... varavēṇum

Report an error

ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா

āṟumiṭai vāḷa rakkar nīṟupaṭa vēle ṭutta āṟumuka ṉēku ṟatti ...... maṇavāḷā

Report an error

ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே

āḻiyula kēḻa ṭakki vācukiyai vāya ṭakki ālumayi lēṟi niṟku ...... miḷaiyōṉē

Report an error

சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா

cīṟupaṭa mēru veṟpai nīṟupaṭa vēci ṉatta cēvalava nīpa moytta ...... tiraḷtōḷā

Report an error

சேருமட லால்மி குத்த சூரர்அகாடு போய டைத்த தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.

cērumaṭa lālmi kutta cūrarakāṭu pōya ṭaitta tēvarciṟai mīḷa viṭṭa ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).