மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார
miṉṉiṉilna ṭukka muṟṟa nuṇṇiyanu cuppil mutta veṇṇakaiyil vaṭṭa mottu ...... aḻakāra
பாடல் 1190 · பாடல் 1190
pāṭal 1190
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார
miṉṉiṉilna ṭukka muṟṟa nuṇṇiyanu cuppil mutta veṇṇakaiyil vaṭṭa mottu ...... aḻakāra
விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர்
vimmiyiḷa kikka titta kommaimulai yiṟku ṉitta viṉṉutali liṭṭa poṭṭil ...... vilaimātar
கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற்
kaṉṉalmoḻi yiṟci ṟakku maṉṉanaṭai yiṟka ṟutta kaṇṇiṉiṇai yiṟci vatta ...... kaṉivāyiṟ
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே
kaṇṇaḻivu vaitta putti ṣaṇmukani ṉaikka vaitta kaṉmavaca meppa ṭikku ...... maṟavēṉē
அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும்
aṉṉanaṭai yaippa ḻitta maññaimalai yiṟku ṟatti yammaiyaṭa vippu ṉattil ...... viḷaiyāṭum
அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில் அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப்
aṉṉaiyiṟu kappi ṇitta paṉṉiruti ruppu yattil aṉṉiyaa rakka ratta ...... ṉaiyumāḷap
பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப்
poṉṉulaki ṉaippu rakku maṉṉanalvra tattai viṭṭa puṉmaiyarpu ratra yattar ...... poṭiyākap
பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே.
poṉmalaiva ḷaitte ritta kaṇṇutali ṭatti luṟṟa puṇṇiyavo rutti peṟṟa ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).