Skip to content

பாடல் 152 · பாடல் 152

Song 152

pāṭal 152

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கோல குங்கும கற்புர மெட்டொன் றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின்

kōla kuṅkuma kaṟpura meṭṭoṉ ṟāṉa cantaṉa vitturu mattiṉ kōvai ceṇpaka taṭpama kiḻcceṅ ...... kaḻunīriṉ

Report an error

கோதை சங்கிலி யுற்றக ழுத்தும் பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங் கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்

kōtai caṅkili yuṟṟaka ḻuttum pūṣa ṇampala voppaṉai meccuṅ kūṟu koṇṭapa ṇaittaṉam viṟkum ...... potumātar

Report an error

பாலு டன்கனி சர்க்கரை சுத்தந் தேனெ னும்படி மெத்தரு சிக்கும் பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே

pālu ṭaṉkaṉi carkkarai cuttan tēṉe ṉumpaṭi mettaru cikkum pāta kampakar coṟkaḷi liṭṭam ...... payilāmē

Report an error

பாத பங்கய முற்றிட வுட்கொண் டோ து கின்றதி ருப்புகழ் நித்தம் பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே

pāta paṅkaya muṟṟiṭa vuṭkoṇ ṭō tu kiṉṟati ruppukaḻ nittam pāṭu maṉpatu ceyppati yiṟṟan ...... tavaṉīyē

Report an error

தால முன்புப டைத்தப்ர புச்சந் தேக மின்றிம திக்கவ திர்க்குஞ் சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச்

tāla muṉpupa ṭaittapra puccan tēka miṉṟima tikkava tirkkuñ cāka rañcuva ṟakkiri yeṭṭun ...... talaicāyac

Report an error

சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ் சூர னும்பொடி பட்டிட யுத்தஞ் சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா

cāṭu kuṉṟatu poṭṭeḻa maṟṟuñ cūra ṉumpoṭi paṭṭiṭa yuttañ cāta kañceyti rukkaivi tirkkun ...... taṉivēlā

Report an error

ஆல முண்டக ழுத்தினி லக்குந் தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென் றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா

āla muṇṭaka ḻuttiṉi lakkun tēva reṉpuni raitteri yiṟceṉ ṟāṭu kiṉṟata kappaṉu kakkuṅ ...... kurunātā

Report an error

ஆட கம்புனை பொற்குடம் வைக்குங் கோபு ரங்களி னுச்சியு டுத்தங் காவி னன்குடி வெற்பினை னிற்கும் ...... பெருமாளே.

āṭa kampuṉai poṟkuṭam vaikkuṅ kōpu raṅkaḷi ṉucciyu ṭuttaṅ kāvi ṉaṉkuṭi veṟpiṉai ṉiṟkum ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).