Skip to content

பாடல் 153 · பாடல் 153

Song 153

pāṭal 153

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கோல மதிவதனம் வேர்வு தரஅளக பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல் கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான

kōla mativataṉam vērvu taraaḷaka pāram nekiḻaviḻi vēlkaḷ cuḻalanuval kōvai yitaḻveḷiṟa vāymai pataṟiyiḷa ...... mukaiyāṉa

Report an error

கோக னகவுபய மேரு முலையசைய நூலி னிடைதுவள வீறு பறவைவகை கூற யினியகள மோல மிடவளைகள் ...... கரமீதே

kōka ṉakavupaya mēru mulaiyacaiya nūli ṉiṭaituvaḷa vīṟu paṟavaivakai kūṟa yiṉiyakaḷa mōla miṭavaḷaikaḷ ...... karamītē

Report an error

காலி னணிகனக நூபு ரமுமொலிக ளோல மிடஅதிக போக மதுமருவு காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார்

kāli ṉaṇikaṉaka nūpu ramumolika ḷōla miṭaatika pōka matumaruvu kālai vekucaraca līlai yaḷavuceyu ...... maṭamāṉār

Report an error

காதல் புரியுமநு போக நதியினிடை வீழு கினுமடிமை மோச மறவுனது காமர் கழலிணைக ளான தொருசிறிது ...... மறவேனே

kātal puriyumanu pōka natiyiṉiṭai vīḻu kiṉumaṭimai mōca maṟavuṉatu kāmar kaḻaliṇaika ḷāṉa toruciṟitu ...... maṟavēṉē

Report an error

ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக லாக வருமவுணர் சேர வுததியிடை நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே

ñāla muḻutumama rōrkaḷ puriyumika lāka varumavuṇar cēra vutatiyiṭai nāca muṟaamarcey vīra tarakumara ...... murukōṉē

Report an error

நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி நாணம் வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா

nāṭi yorukuṟamiṉ mēvu tiṉaiceypuṉa mīti liyalakalkal nīḻa liṭainilavi nāṇam varaviraka mōtu morucatura ...... purivēlā

Report an error

மேலை யமரர்தொழு மானை முகரரனை யோடி வலம்வருமுன் மோது திரைமகர வேலை யுலகைவல மாக வருதுரக ...... மயில்வீரா

mēlai yamarartoḻu māṉai mukararaṉai yōṭi valamvarumuṉ mōtu tiraimakara vēlai yulakaivala māka varuturaka ...... mayilvīrā

Report an error

வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு முதல்வவயல் வாவி புடைமருவு வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.

vīṟu kalicaivaru cēva kaṉatitaya mēvu mutalvavayal vāvi puṭaimaruvu vīrai varupaḻani ñāṉa malaiyilvaḷar ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).